இங்லீஸ்ல பேசுங்க ஈஸியா!
இங்கிலீஸ்ல பேசி இம்ப்ரஸ் பண்ணுங்க
இங்கிலீஸ்ல படிச்சா அறிவு வரும்
“டாடி மம்மி வீட்டில் இல்லை
தடைபோட யாருமில்ல”
திரும்பிய பக்கமெல்லாம்
இங்கீலீசு கப்’அடிக்க
தேடி வந்த தமிழ்த்தாய்க்கு
வெடிகுண்டு செக்கப்’
யாரோ தூய தமிழில்
ஆத்தா! ஆத்தா!
என்றழைக்க,
இங்கேயாவது இருக்குதே வாஞ்சையோடு
போனாள் தமிழத்தாய்
கண்மணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்
டேய் “ங்கோத்தா” “ங்கோத்தா”……
பின்னங்கால் பிடரியிலடிக்க
ஓடிய தமிழ்த்தாயை காணவில்லை
கண்டு பிடித்து தருவோருக்கு
அடுத்த செம்மொழி மாநாட்டில்
பொற்கிழியும் பன்னாடையும்
ச்சீ ச்சீ !!! ச்சீ !!!
பொன்னாடையும் நிச்சயம்.
செம்மொழி மாநாடு specia
http://kalagam.wordpress.com/2010/07/01/டேய்-இது-செம்மொழி-மாநாடு/