Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மொட்டைத்தலையன் விகடன் பிரசுரம் சார்பில் கடந்த செப்டம்பர் 2009 வெளிவந்த புத்தகம் தான் நக்சல் சவால். தண்டகாரண்யா பகுதிகளில் அரசு நடத்தும் போருக்கு முன்னோடியாக வெளிவந்த புத்தகம். 200 பக்கங்களுடைய இப்புத்தகம் மிகவும் எளிய மொழி நடையில் ஆளும் வர்க்க கருத்துக்களை சுமந்து வந்திருக்கிறது. உலக அளவில் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை என்ற வழிமுறையே தீவிரவாதம் என்ற அளவில் ஆளும் வர்க்கத்தின் மிகச்சிறந்த பிரச்சாரக்கருவி இது. முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி கேட்டால் தனது வாயை முடிக்கொள்ளும் ஆளும் வர்க்க ஊடகங்கள் நக்சல்பாரிகள் மீதும் மாவோயிஸ்டு இயக்கத்தினரின் மீதும் அவதூறினை அள்ளி வீசுகின்றன.

இப்புத்தகத்தில் ஒவ்வொரு கட்டுரையாளாரும் தனக்கு பிடித்தமான வகையில் தீர்வினை சொல்கிறார்கள் எப்படி நக்சலிசத்தை ஒழிப்பதென்று.ஆசிரியர் தனது முன்னுரையில் நக்சல்பாரிகள் குறித்து “ரத்தத்தை கண்டு பயப்படுவோரை பணிய வைக்க அதையே ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள்”, என்கிறார். “வேலையின்மையால் வறுமை ஏற்படுகின்றாது, வறுமையால் அவ நம்பிக்கை, அதிருப்தி பரவுகின்றது. கடைசியில் அது வன்முறையில் போய் முடிகிறது.” வேலையில்லாத்திண்டாட்டமும் மக்கள் தொகைப்பெருக்கமும் தான் நாட்டை எதி நோக்கியுள்ள தீவிரவாதத்திற்கு அடிப்படை என்கிறார் விகடன் ஆசிரியர்.

வேலையில்லா திண்டாட்டம் தான் நக்சலிசம் வளரக்காரணம் என்று கூறினால், நக்சல் அமைப்பில் பலகோடி வேலையற்ற இளைஞர்கள் சேர்ந்திருக்க வேண்டும், மக்கள் தொகைப்பெருக்கமோ வேலையில்லா திண்டாட்டமோ நக்சல்பாரியை வளர்க்க வில்லை, ஆளும் வர்க்க பயங்கரவாதமே மாவோயிஸ்டு இயக்கத்தை வளர்க்கிறது. “நீ எங்களோடு இல்லை என்றால் மாவோயிஸ்டோடு இருக்கிறாய்” என்று கட்டளையிடுகிறது. ஒன்று என்னுடன் சண்டை போடு இல்லையேல் அடிமையாயிரு என தீர்வுகளை முன் வைக்கிறது.

ஏன் இந்த அறிவு ஜீவிக்கப்பட்டவர்கள் தீவிரவாதத்திற்கும் வேலையில்லாதிண்டாட்டத்திற்கும், மக்கள் தொகைக்கும் முடிச்சு போடுகிறார்கள்?

அரசு பயங்கரவாதத்தை மூடி மறைப்பதற்கான அழகான வழி இது. ஏனென்றால் இந்த போலி சனனாயக அரசால் கடைசிவரை வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கமுடியாது அது மட்டுமல்ல, “உழுபவனுக்கு நிலம் உழைப்பவனுக்கு அதிகாரம்” என்ற தத்துவத்திற்குத்தான் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்ற உண்மையை மறைப்பதற்கு தேவையான உத்தி இது.

இந்த புத்தகத்தை தொகுத்து வெளியிட்டவர் பி.வி.ரமணா, இவர் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்,”இந்தியப்பாதுகாப்பில் ராணுவத்தின் பங்கு, ராணுவ ஆராய்ச்சிகள்” என்ற தலைப்புக்களில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆக இந்திய ராணுவ கைக்கூலியால் தயாரிக்கப்பட்ட இத்தொகுப்பு அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனத்தினால் 2005ஜனவரி 25 &29 ஆகிய நாட்களில் பயிலரங்கமாக நடத்தப்பட்டது.

இதன் முதல் கட்டுரையாளர் டி.ராஜா(சிபிஐ , தேசியச் செயலாளர்) பொறுத்தவரை “நக்சலைட் தீவிர வாதம் ஒழிக்கப்படவேண்டிய / வெல்லப்படவெண்டிய ஒரு குழப்பம், இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகமே அரசாங்கம் என்னும் கட்டுப்பாடு வளர்ந்து நிலைப்பெற்றுவிட்டது,ஆகவே தேர்தல்களில் விலகியிருந்தால் தொலைந்து போக நேரிடும், நாட்டைப்பிடிக்க தேர்தலைத்தவிர சிறாந்த வழி ஏதுமில்லை என்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு விசாலமான திட்டங்களே இதை ஒடுக்கும் வன்முறை, அடக்குமுறைக்கு நிரந்தரமாக முடிவுகட்டப்பட வேண்டும்”

ஆயுதம் அது மாவோயிஸ்டுகள் தூக்கினால் அது தீவிரவாதம் அதுவே போலி மார்க்சிஸ்டு குண்டர்கள் எடுத்தால் பாதுகாப்பா? சந்தடி சாக்கில் கேரளாவைப்பாருங்கள், மேற்கு வங்கத்தைப்பாருங்கள் என்கிறார். அந்த இரண்டு மாநிலங்களையும் பார்த்ததால் தான் கேட்க வேண்டியிருக்கிறது, மாவோயிஸ்டை விட்டுத்தள்ளுங்கள் பாசிசமாய் மக்களைக் கொல்லும் போலி கம்யூனிஸ்ட் கட்சியை எப்போது தடை செய்யப்படும்?


நக்சல்பாரி இயக்கங்களின் மீது இப்புத்தகத்தினை திருப்பும் பக்கமெல்லாம் அவதூறுகள் நிறைந்திருக்கின்றன. சிஆர்இசட்(compact revolution zone) என்ற அமைப்பை ஏற்படுத்த தீவிரமாய் நக்சலைட் தீவிரவாதிகள் முயல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கொலைகாரப்படையான சல்வார் ஜுடூம் இப்புத்தகத்தில் நக்சலைட்டுகளுக்கெதிரான பகுதி மக்களின் படை என்ற பொய்யும் ஆணித்தரமாக நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல நேபாளத்தின் மாவோயிஸ்டுகளும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். நேபாளத்தின் மகத்தான மக்கள் எழுச்சி , நேபாள மன்னராட்சி அழிக்கப்பட்டதும் கவலையைத்தருகின்றன அறிவு ஜீவிக்கப்பட்டவர்களுக்கு. இப்புத்தகத்தில் ருசி கர்க் என்பவர் எழுதிய கட்டுரையில் மட்டும் தான் பழங்குடிகள் மக்கள் அரசால் வஞ்சிக்கப்பட்டது குறித்து சற்று விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையில் பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள், அவர்களின் கலாச்சாரம் அழிப்பட்ட விதம், தண்டகாரண்ய மக்கள் பல்லாண்டுகாலமாய் போராளிகளாக இருந்திருப்பது குறித்தும் தெளிவாக இருக்கிறது.

மாவோயிஸ்டு இயக்கமும் நேபாளா மாவோயிஸ்டு கட்சியும் இணைந்து இந்தியாவை ஆக்கிரமிக்கப்போகின்றன, மாவோயிஸ்டுகளுக்கு உல்பா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ போன்ற அமைப்புக்கள் நிதியுதவி அளிக்கின்றன போன்றா புருடாக்களை வழி நெடுக காணமுடிகின்றது. மேலும் ஒவ்வொரு மாவோயிஸ்டுக்கும் 1500 ரூபாய் நிதி வழங்கப்படுவதாகவும் அதுவும் கூட மாவோயிஸம் நிலைக்க காரணம் என்கிறார் இன்னொரு கட்டுரையாளர்.

 

அப்படியே 1500 ரூபாய் அல்ல 15000 ரூபாய் கொடுப்போம் இந்த புத்தி ஜீவிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தேசத்தை காக்க களத்திலிறங்கட்டும்.

எப்படி நக்சல்பாரி இயக்கத்தை இந்த நாய்களால் கொச்சைப்படுத்த முடிகிறது? உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்துபவனின் அர்ப்பணிப்பு 1500 ரூபாயில் அடங்கிவிடுமா என்ன?
கிருஷ்ணா ஹச்சேத்து என்பவர் நேபாள மாவோயிஸ்டு புரட்சிக்காரர்கள் என்ற கட்டுரையில் ஒட்டுமொத்தமாக நாங்கள் யார் என்பதை தனது தீர்வினைக்கூறி அவிழ்த்துப்போட்டு காட்டுகிறார்.

“1. மன்னரே, மாவோயிஸ்டையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது, அரண்மணையிலிருந்து ராணுவத்தை வெளியேற்றுவது, மாவோயிஸ்டு கொரில்லாக்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வது.
2.புது அரசியலமைப்பில் மன்னராட்சியையும் வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஒரு பொது புரிந்துணர்தலை ஏற்படுத்துவது
3.அரசியலைப்பில் எதையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள உகந்த தீர்வு.”

நேபாள மக்கள் கொடிய மன்னராட்சியை எதிர்த்து களத்தில் நிற்க ஏசி ரூமில் கழிந்து கொண்டிருக்கும் அரசாங்க கூஜா தூக்கிகளான இந்த அறிஜீவிக்கப்பட்ட கைத்தடிகள் இங்கிருந்து வழிகாட்டுகிறார்கள் “மன்னன் தேவையென்று”

இந்த புத்தி ஜீவிக்கப்பட்ட அறிவு ஜீவிகள் எப்போதும் மக்களுக்காக பேச மாட்டார்கள் அவர்கள் ஏகாதிபத்திய, ஆளும் வர்க்க பயங்கரவாத அரசின் கைக்கூலிகள் அதை இதோ எழுத்தாளர் அருந்ததி ராய் இதோ அம்பலப்படுத்துகிறார் “எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.எ.ஏ-ல் வரவில்லை. இந்த சமூகத்தின் எல்லா வகை மாதிரிகளையும் அவர்களிடம் காணலாம். நாட்டின் மிகப்பெரிய அறிவு ஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களை நிறூவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடமிருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிபார்க்க முடியும் “

புத்தகத்தின் பெயர் : நக்சல் சவால் ( நக்ஸல் சவால் )
விலை : 80/-
விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை-600002
விற்பனை பிரிவு தொலை பேசி எண் : 044-42634283/84

http://kalagam.wordpress.com/