அமெரிக்க, ருசிய மேல்நிலை வல்ல ரசுகளின் வலிமை
அமெரிக்க மூலதனக் குவிப்புகள் ப+தாகரமாக மாறத் தொடங்கின. 17,500 கோடி ரூபாய்களுக்கு மேல் வர்த்தகம் செய்த 12 ப+தாகரமான தொழில் கழகங்கள் அமெரிக்காவிலுள்ள 500 பெரிய தொழில் கழகங்களின் மொத்த சொத்துக்களின் மதிப்பில் 27 வீதத்தையும், வர்த்தகத்தில் சுமார் 29 வீதத்தையும் 1970 ஆம் ஆண்டே பிடித்து வைத்திருந்தன. நாட்டிலுள்ள 50 பெரும் வர்த்தக வங்கிகளின் சொத்து, மற்றும் வைப்புத் தொகையில் 61 வீதத்தை பத்து பென்னம பெரிய வங்கிகள் கைப்பற்றின.
வெளிநாடுகளில் அமெரிக்காவின் நேரடி மூலதனம் இடல் 1950 களில் 20,550 கோடி ரூபாய்களாக இருந்தது. இது சுமார் 25 வருடங்களின் பின் அதாவது 1976ம் ஆண்டு 2,40,100 கோடியாக உயர்ந்தது. ஏகாதிபத்திய நாடுகளின் மொத்த மூலதன ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கோ 52 வீதமாகும். 76ல் இருந்த உலகிலுள்ள மிகப் பெரிய முதுலாளித்துவ தொழில் கழகங்கள் 500 இல் 260 அமெரிக்காவின் கைவசம் வந்துவிட்டது.
1977ல் தேசம் கடந்த தொழில் கழகங்கள் ஏற்றுமதி செய்த ரூபாய்களாகும். ஆனால் இவை அந்நிய நாடுகளில் தொழில் வர்த்தகம் மூலம் கட்டுப்படுத்திய வரவு செலவு 11,34,000 கோடி ரூபாய்களாகும். அதாவது 5 மடங்குக்கு மேலாகும். ஏகாதிபத்தியங்களின் மொத்த வர்ததக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 76ல் 12.8 வீதமாகும். ரூபாய்களாகும் அந்நிய வர்த்தகத்தில் அமெரிக்கா 35,000 கோடி ரூபாய்களை நிகர உபரியாகச் சம்பாதித்தது. தொழில்நுட்பம், சேவைத்துறை, போன்றவற்றில் வர்ததக உபரியாக 1,00,725 கோடி ரூபாய்களை அமெரிக்கா 77 களிலேயே சுருட்டிக் கொண்டது.
அமெரிக்க தேசம் கடந்த தொழில் கழகங்கள் தமது நேரடி முதலீடுகளின் மூலம் வெளி நாடுகளில் இருந்து 76ல் கொள்ளையிட்ட தொகையோ 39,200 கோடி ரூபாய்களாகும்.
மறுபுறத்தில் ருசிய ஏகாதிபத்திய தலைமையில் அதன் முன்னாள் சோசலிச நாடுகள் ஒரு பொட்டி முகாமை உருவாக்கின. அத்துடன் சீ.எம்.ஈ.ஏ என்ற அமைப்பை உருவாக்கியது உலக நாடுகளின் தேசிய வருவாயில் கால்பங்கையும், உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும்அடிப்படை எரி சக்தியில் 30 வீதங்களையும் இந் நாடுகள் பெற்றிருந்தன.
1976ல் அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தி 28,58,500 கோடி ரூபாய்கள் எனவும், ருசியாவினுடையது 16,27,500 கோடி ரூபாய்கள் எனவும் இருந்தன. 1975ல் அமெரிக்காவை விடவும் ருசியாவின் இராணுவத்தில் ஆட்பலம இரண்டு மடங்காக மாறியது. 400 யுத்த தந்திர ரீதியிலான அணு ஆயுத வாகனங்களை ருசியா பெற்றிருந்தது. இது அமெரிக்காவை விட கூடுதலாகும். தாக்குதல் பலம் வாய்ந்த கடற்படையை ருசியா நிறுவிக் கொண்டது ருசியா தேசிய உற்பத்தியியல் 15 வீதத்தை இராணுவத்திற்கு என்ற ஒதுக்கியது.
அதாவது இது 2,22,250 கோடி ரூபாய்களாகும். இது அமெரிக்காவின் ஒதுக்கீட்டை விடவும் 24 வீதம் அதிகமாகும்.
புதிய வல்லரசுகளின் தோற்றம்
ருசியாவின் தொங்கு தசை நாடுகளில் ஆட்சி மாறியதுடன், ருசியா பலவீனம் அடைந்தது. இதே நேரம் அமெரிக்காவின் இடத்தை ஜப்பான் கைப்பற்றியது. இந்நிலையில் ஜப்பானும், ஜெர்மனியும் முன்னிலைக்கு முன்னேறியது.
1988களில் ஜப்பானின் மொத்த தேசிய உற்பத்தி 35 லட்சம் கோடி ரூபாய்களை எட்டியது. இது ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டனின் மொத்த தேசிய உற்பத்திகளின் கூட்டத் தொகைக்கு சமமானதாகும். இது அமெரிக்காவின் தேசிய உற்பத்தியையும் விஞ்சி நின்றது. 1987களில் ஜப்பானின் மொத்த வெளிநாடடுச் சொத்து மதிப்பு 42 லட்சம் கோடி ரூபாய்களாக இருந்தது.
அமெரிக்காவின் ஆண்டு வர்த்தகப் பற்றாக் குறை 2,62,500 கோடி ரூபாய்களாக மாறிய போது, ஜப்பானில் 1,75,000 கோடி ரூபாய்கள் உபரியாக அதிகரித்தது. அத்துடன் அமெரிக்காவின் இறக்குமதியில் 49 வீதம் ஜப்பானுடையதாக மாறியது. அமெரிக்காவின் பற்றாக்குறையைச் சரிக்கட்ட அதில் மூன்றில் ஒரு பங்கு மூலதனத்தை ஜப்பான் அமெரிக்காவில் முதலீடு செய்தது. 1987ல் 435 அமெரிக்கத் தொழில் கழகங்கள் ஜப்பானின் கைகளுக்கு மாறியது.
உலகில் மிகப் பெரிய கடன் வழங்கும் நாடாக இருந்த அமெரிக்கா மிகப்பெரும் கடனாளி நாடாக மாறிவிட்டது. மறுபுறத்தில் ஜப்பான் மிகப்பெரும் கடன் கொடுக்கும் நாடாக மாறிவிட்டது. உலகில் மிகப் பெரிய வங்கிகளில் 4 மட்டுமே அமெரிக்காவின் கைகளில் உள்ளது. 1984ல் உலகில் மிகப் பெரிய வங்கியாக இருந்த அமெரிக்காவின் வங்கி 1990ல் 12ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ருசியாவில் கொப்பச்சேர்வின் வருகையுடன் ஏகாதிபத்திய விளை நிலமாக மாறியது. 1987 களுக்கு முன்பே பெரும் எடுப்பில் துவங்கிய தேசம் கடந்த தொழில் கழகங்கள் 250 கூட்டுத் தொழில்களைத் தொடங்கின. மேலும் 1400 கூட்டுத் தொழில்களுக்கு 1900களுக்கு முன்பே கையொப்பமும் இடப்பட்டன. இத் தேசம் கடநத் தொழில் அமெரிக்காவே ருசியாவில் முதல் இடம் வெகிக்கின்றன.
உலகிலேயே மிகப் பெரிய சரக்கு – பயணி விமானப் போக்கவரத்தான ஏர்ரோஃபிளட் உலகில் அதிக பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிய அதேநேரம் அதிக தூரம் பறந்து செல்லக் கூடியது. 1989 342 கோடி ரூபாய் தான் லாபம கிட்டியது. இந்த ஏகபோக கம்பனியை 5 ஆகப் பிரித்து வெளிநாட்டு நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்துள்ளன.
பனிப்போரின் முடிவுகள்
மேலாதிகத்கத்துக்கான முரண்பாடுகளைத் தீர்க்கவில்லை
அமெரிக்கா கிரமமான இராணுவத்தில் 20 லட்சம் பேரைக் கொண்டு இருந்தபோதும் சேமிப்பு இராணுவத்தில் 10 லட்சம் பேரையே கொண்டுள்ளது. இது 30 லட்சங்களாக மாறி உலகில் மிகப் பெரிய இராணுவமாக உள்ளது. அமெரிக்க இராணுவத் தலைமையான பெண்டகன் 10 லட்சம் சிவிலியன் ஊழியர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு; இராணுவத் தளங்களை 1500 ஆக ரீகன் உயர்த்தினார். 1985ன் இறுதியில் 3,22,000 துருப்புகளை ஐரோப்பாவிலும், 1,15,000 துருப்புகளை பசுப்பிக் தூர கிழக்கு நாடுகளிலும் நிறுத்தி மொத்தமாக வெளிநாடுகளில் 5,13,000 துருப்புகளை அமெரிக்கா குவித்து வைத்துள்ளது.
1987 டிசம்பரில் ரீகன் -கொப்பச்சேவ் ஒப்பந்தத்தின் படி கொப்பச்சேன் தானாகவே 5 லட்சம் துருப்புகளை கிழக்கு ஐரோப்பாவில் இருந்தது 1988 டிசம்பரில் விலக்குவதாக அறிவித்தார். முதலில் ஐரோப்பாவில் இருந்த அமெரிக்கவை விட கூடுதலாக 3 லட்சம் துருப்புகளை ருசியா விலக்கிக் கொள்ள சம்மதித்தது. ஆனால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னர் இவ் ஒப்பந்தம் செயல் இழந்து அமெரிக்கா மேல் நிலையை அடைந்தது.
இரசாயன ஆயுதக் குறைப்பு அமெரிக்காவுக்கு சாதகமாகவே கைச்சாத்தானது 24,000 தொன் காயலாங்கடை இரசாயன ஆயுதத்தை அமெரிக்கா அழிக்க, ருசியாவோ 44,000 தொன்களை அழிக்க ஒப்பந்தம் கோரி வழி அமைத்தது. அத்தோடு அமெரிக்கா புதிய ரக இராசயன உற்பத்தியில் ஈடுபட அனுமதியும் அளித்தது. யுத்த தந்திர ஆயுதக் குறைப்பில் அமெரிக்காவை விட 2,000 அணு ஆயுத முனை ஏவுகணைகளை ருசியா அழித்து விட வேண்டும். இதன் ருசியா அமெரிக்காவை தாக்கும் வலிமையை இழந்துவிடும். இந்த வகையில் கோர்பச்சேவ் அமெரிக்காவுக்கு சாதகமாகவே இயங்கினார். அமெரிக்காவும் ருசியாவும் உலகிலுள்ள அணு ஆயுதங்களில் 97 வீதங்களை ஏபோகமாக வைத்துள்ளன.
ஐப்பானிய மேல்நிலை
1965 வரைக்கும் நிரந்தர பற்றாக்குறையைக் கொண்ட ஜப்பான் 1973-75 மற்றும் 1979-80 ஆகிய இரண்டு எண்ணெய் நெருக்கடி ஆண்டுகளைத் தவிர 1965ல் உபரியாக இருந்த 1,900 கோடி ரூபாயை பத்து ஆண்டுகளில் 90 மடங்குகளால் உயர்தியுள்ளது.
1954ல் கொழும்பு திட்டத்தில் பங்கேற்ற ஜப்பான் இரண்டாம் உலப் போருக்கான நட்டஈட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. உலப் போருக்கான நட்டஈடு என்ற முறையில் 190 கோடி ரூபாயை தென்கிழக்கு ஆகிய நாடுகளுக்கு வழங்கியது. இது ஜப்பானின் பொருட்களை ஆசியப் பிராந்தியங்களில் விற்பதற்கு பயன்பட்டது.
1964ல் ஐ.எம்.எஃவ் இல் உறுப்பு நாடாக ஜப்பான் இணைந்து கொண்டது. 66ல் தென்கிழக்கு நாடுகளின் அமைச்சர்களைக் கூட்டிய ஜப்பான் ஆசிய வளர்ச்சி வங்கியை உருவாக்கியது. 1973-75ல் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியை ஜப்பான் சிற்பாகப் பயன்படுத்தியது. இதைப் பயன்படுத்தி ஜப்பானானது நிதிமூலதனத்தை முடக்கிவிட்டது. அயல் நாடுகளுக்கான கடன் - மூலதன ஏற்றுமதியில் 1984ல் பிரான்சையும், 85ல் பிரிட்னையும் விஞ்சிய ஜப்பான் 88ல் அமெரிக்காவையும் விஞ்சியது.
இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிக்குத்தீர்வு புதிய பொருளாதார அமைப்பு என்கிற பெயரில் மூன்று தவணைகளின் பெயரில் கடன், முதலீட்டு நிவாரணங்களுக்கான வாக்குறுதியை அளித்தது. இதன்படி இரண்டே ஆண்டுகளில் ஜப்பான் அதிகாரப+ர்வ வளர்ச்சி உதவியை இரண்டு மடங்காக்கியது. மூன்று ஆண்டுகளில் 38,000 கோடி ரூபாய் அளவு புதிய கடன் முதலீடு வழங்கியது. மூன்றே ஆண்டுகளில் 950 கோடி ரூபாய் அளவு ஆபிரிக்க நாடுகளுக்கு மானியமாக ஜப்பான் வழஙகியது. இதைத் தவிர 15,200 கோடி ரூபாய் அளவு தொகையை மிகமிக ஏழை நாடுகளின் கடனை தள்ளுபடி செய்தது. “அடகு வைத்த பொருட்களை மீட்டு மறு அடகு வைப்பதற்கு கடன்” என்கிற திட்டத்தைப் போல அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களிடம் ஏழை நாடுகள் பெற்றுள்ள கடன்களுக்கு டொலரில் ஈடுகட்டிவிட்டு உள்நாடடு நாணயத்தில் கடன் பத்திரங்களைப் பெற்று மறு முதலீடும் செய்கிறது ஜப்பான்.
1947ல் ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் தோற்றுவிட்டதைத் தொடர்ந்து உருவான அரசியல் நிர்ணயச் சட்டடும் அமுலில் உள்ளது. இதன் 9ஆவது பிரிவின்படி ஜபப்hன் யுத்தம் தொடுக்கவோ, யுத்தத்தில் பங்கேற்கவோ, யுத்தத்திற்கான முப்படைகளை வைத்துக் கொள்ளவோ எதுவித உரிமையும் கிடையாது.
ஜப்பான் தற்பாதுகாப்புக்கு வைத்திருக்கும் படை, ஆயுதங்களுக்கு எல்லை வரம்புண்டு. ஜப்பானின் தேசிய வருவாயில் 1சத வீதமே இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். வெளிநாடுகளுக்குப் படை அனுப்பவோ, அணு ஆயுதங்களை வைத்திருக்கவோ, தயாரிக்கவோ தடையுண்டு. தொலைதூர ஏவுகணைகளை வைத்திருக்கவோ, கமினிச நாடுகளுக்கோ அல்லது ஐ.நா சபை தடை விதித்துள்ள நாடுகளுக்கோ, அன்றேல் போரிடும் நாடுகளுக்கோ ஆயுத ஏற்றுமதி செய்யவும் தடையுண்டு.
ஆனால் இவைகளெல்லாம் கடந்த பத்து வருடங்களில் மாற்றம் பெற்று வருகின்றது. 1988ல் லட்சம் பேரைக் கொண்ட இராணுவமே இருந்தது. இதில் எந்த நேரமும் இராணுவத்தைப் பெருக்க பெருமளவு இராணுவ அதிகாரிகளைக் கொண்டுள்ளது. 1990 விபரப்படி 3,000 கி.மீ தூரம் தாக்கக் கூடிய ஏவுகணைகள், நீர்மூழ்கி, ருசிய எதிர்ப்புத் தாக்குதல் விமானங்கள், 840 கி.மீ தூரம் சென்று தாக்கக் கூடிய ஏஃரக அமெரிக்க விமானங்கள் பல நூறும், விமானத் தாங்கக் கப்பல்களும், ஆயிரக்கணக்கான பீரங்கிக் கவச வண்டிகளும் ஜப்பானிடம் கைவசம் உள்ளது.
இன்று மின்னணு மற்றும் தொலைத் தகவல் நுட்பங்கள், இராணுவ ஆயுத நவீன கட்டமை;ப்பில் ஜப்பாபானது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ரக்கெற் ஏவுகணை உந்துவிசைக் கருவிகள் முதல் கொண்டு லேசர் ஒலிக்கதிர் நுண்கருவிகள் வரைக்கும் ஜப்பானின் தொழில் நுட்பங்களையே உலக இராணுவத் தொழில் கழகங்கள் சார்ந்துள்ளன மற்றும் அணு உலை, கப்பற் கட்டுமானம், இரும்பு – எஃகு, மோட்டார் வாகனங்கள் உட்பட விண்வெளி நுட்பத்திலும் ஜப்பான் மிதப் பெரியதாய் கொடிகட்டிப் பறக்கிறது.
ஆயுத வெடிமருந்து உற்பத்தியில் ஜப்பான் பெரிய அளவில் போட்டியிடுகிறது. மிகப் பெரிய தொழில் கழகமான மிட்சுபிசி கனரக ஆலை தனது மொத்த உற்பத்தி வரவு செலவில் 25 சத விகிதம் ஆயுத வெடிமருந்தில் சாய்ந்துள்ளது. ஜப்பானின் நிசான் மோட்டார் கம்பனி ஆயுத உற்பத்தியை பத்து சத விகிதங்கள உயர்த்தியதுடன், தாக்கும் ஏவுகணைக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. தேசிய வருவாயில் ஒரு வீதம் என்பதையும் மறி ஜப்பான் 87களில் 17,000 கோடி ரூபாய்களை இராணுவத்திற்கு என்ற ஒதுக்கியது. இது மொத்த தேசிய வருவாயில் 7 சத விகிதம் ஆகும். இது அமெரிக்கா, ரசியாவுக்கு அடுத்த இடமாக ஜப்பானை வைத்துள்ளது.
ஜப்பான தனது கடற் பரப்பின் தற்காப்பு எல்லையை 1000 மைல்கள் என நீட்டியுள்ளது. 1987ல் சர்வதேச அவசர நிவாரண அதிரடிப்படை அனுப்புவது, இராணுவ சட்டத்தைத் திருத்தியதுடன் மருத்துவர்கள் இராணுவத்தைக் கொண்ட அவசர அதிரடிப் படையையும் ஜப்பான் கட்டியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் குற்றவாளிகளை அமைச்சர்கள் பாராட்டி, இரண்டாம் உலகமகா யுத்தத்தைப் பற்றிய கருத்துக்களை பாடப்புத்தங்களில திருத்தி அமைத்து ஜப்பான் நியாயப்படுத்துகின்றது.
1988இல் உலக மொத்த தேசிய உற்பத்தியில் அமெரிக்க, ஐரோப்பிய சமூக நாடுகளின் பஙகு 25 சத விகிதமாகும். இதில் ஜப்பானின் பங்கு 15 சத விகிதமாகும். இது 88களின் பின் முதல் மூன்று ஆண்டுகளில் அதிகரித்துச் சென்றது. புதிய சர்வதேச ஒழுங்கை நிறுவ தனது பங்கை ஜப்பான் கோருகின்றது. ஆசியாவில் தனது ஆதிகத்தை நிலைநிறுத்தத் தயாராகி வருகின்றது. அத்துடன் தேவையான ஒரு நிலையில் மிகப் பெரிய இராணுவ வல்லரசாக மாறும் வகையில் தன்னை தகவமைத்துள்ளது ஜப்பான்.
வளரும்…