பிரான்சில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அணுகுண்டு பரிசோதனை முயற்சி மீளத் தொடங்கியதைத் தொடர்ந்து பல பாகங்களிலும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியது. ஆரம்பத்தில் இப் போராட்டத்தை ‘பச்சைக் கட்சி’ (Green peace) இனரால் முன்னெடுக்கப்பட்டது. பின்னர இது சாதாரண மக்களின் போர்க்குணமுள்ள போராட்டமாக வளர்ச்சி அடைந்தது.
பிரான்சின் இன்று ஜனாதிபதி, பிரதமர் போன்றோரின் செல்வாக்கு 5 மாதத்தில் திடீரென குறைந்து 10 வீதமாக மாறியுள்ளது. அணுகுண்டு செய்யும் நாடுகள், பரிசோதனையை நடத்தும் நாடுகள் எல்லாம் உலகைக் கொள்ளை அடிக்கவும், உலகை ஆளும் ஒரு கருவி என்ற நோக்கில் இதைத் தேவையான போது ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்கின்றன. அணுகுண்டு பற்றிய எதிர்ப்பில்
• ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் ஆதிக்கக் கனவுகளுக்கு இடையில் இதை எதிர்க்கும் போக்கு.
• ஏகாதிபத்தியத்துக்கும் அணுத் தொழில் நுட்பம் தெரிந்த அதைச் செய்ய முனையும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு.
• அதுபற்றி எந்தத் தொழில் நுட்பமும் தெரியாத – தெரிந்த நாடுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடு.
இந்த வகையில் பிரான்சில் அணுகுண்டு பரிசோதனை ஆரம்பத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடாக அதை நறைவு செய்ய பச்சைச் கட்சியினர் போராட்டத்தை அரங்குக்குக் கொண்டு வந்தனர். பின்ன இப் போராட்டம் சாதாரண மக்களின் கைகளுக்கு இன்ற சென்றுள்ளது.
பிரான்சில் பாரிய பொது வேலை நிறுத்தங்கள் நடந்து வரும் இந்தநிலையில் கூட, உலகை ஆளும் தித்திப்புக் கனவுடன் அணுகுண்டு பரிசோதனையை நடத்துவதன் மூலம் ஐரோப்பாவில் முதன்மையான ஆதிக்கத்தைத் தக்க வைக்கவும், அமெரிக்காவுடன் போட்டி போட்டு உலகை பங்கு போட்டுக் கொள்ளவும் இவ் அணுகுண்டு பரிசோதனைகளை பிரான்ஸ் செய்து வருகின்றது.
இதுவரை கிடைத்த புள்ளி விபரங்களின்படி அமெரிக்கா 1,030 அணு பரிசோதனையையும், ரஷ்யா 715 பரிசோதனைகளையும், பிரான்ஸ் 204 பரிசோதனைகளையும், பிரிட்டன் 45 பரிசோதனைகளையும், இந்தியா 1 பரிசோதனையையும் செய்ததாக அறிய முடிகிறது.
மூன்றாம் உலக நாடுகள் மற்றும 2ம் உலக நாடுகள் அதுபற்றி ஏதாவது தொழில் நுட்பத்தை கண்டு அறிய முடிந்தாலே உடனடியாக அணுகுண்டு செய்பவர்கள் மிரட்டல், பொருளாதாரத்தடை, குண்டு வீசுதல் என எல்லா வகையான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகயிலும் ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில் தாம் செய்வதை நியாயப்படுத்தவும், அதை எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்கவும் தயங்காது எல்லாவித ஒடுக்குமுறையையும் கையாள்கின்றனர்.
பிரான்ஸ் அறிவித்த படிக்கு முதல் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவுடன் உலகெங்கும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஜெர்மனியில் 12,000 பேரும். சிலியில் 10,000 பேரும் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். மிக மோசமான ஆர்ப்பாட்டத்துடன் கூடிய வன்முறை பிரான்சின் க காலனியான ராசிற்றி தலைநகர் பப்பிற்றியில் நடைபெற்றது.
சர்வதேச விமான நிலையம் முற்றாகச் சேதமானதுடன் பல் கட்டடங்கள் சாம்பலானது. அத்துடன் பொலிஸ் உயிருக்கு பயந்து தப்பியோடியது. சிலியும், நிய+ஸ்லாந்தும் தமது தூதரைத் திருப்பி அழைத்தது. நஹ{று என்ற சிறிய நாடு பிரான்சுடன் தனது ராஜதந்திர உறவை முறித்துக் கொண்டது. தென் பசுப்பிக் நாடுகள் உடன் நடக்க இருந்த பிரான்சின் பேச்சு வார்த்தையை தடையசெய்தது. உலக மருத்துவ சங்கத்தின் (W.M.A) அங்கம் வகித்த பிரான்சு வைத்தியர்கள் ராஜினாமா யெ;து தமது எதிர்பபை வெளிப்படுது;தினர். பிரான்சு மக்கள் 63 வீதம் பேர் தமது எதிர்பபை வெளிக்காட்டி உள்ளனர். ஐரோப்பிய வெற்றிக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்ட சுவீனட் உதைப்பந்தாட்டக் குழு தனது எதிர்ப்பை திடீரென மைதானத்தில் சுலோகம் எழுதிய திரைச் சீலையை உயர்த்தி எதிர்ப்பை வெளிக் காட்டியது. உலகெங்கும் இவை போல பல எதிரப்புக்கள் உலகமக்கள் வெளியிட்டு வரும் நிலையில் பிரான்ஸ் தொடர்ந்து பரிசோதனையையும் செய்து வருகின்றது.
பிரான்சுக்கு எதிராக ஒரு பொருளாதார தடையையோ, பகிஸ்கரிப்புக்களையோ இப்போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் கோராது மந்தப்படுத்தப்பட்ட எதிர்ப்பையே வெளிக்காட்டி வருகின்றனர். அதேநேரம் பிரான்சில் இதையொட்டி ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
அணுகுண்டு பரிசோதனை முடிந்த பின் அதைப் பரிசோதிக்க விஞ்ஞானிகளுக்கு போதி யநேரங்கள் வழங்காது ஏமாற்றியதாக விஞ்ஞானிகள் பிரான்ஸ் அரசை சாடியுள்ள அதேநேரம் அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் பிரான்ஸ் ஜனாதிபதி மக்களுக்கு பொய் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார். அணுகுண்டு பரிசோதனையின் விளைவுகளை குறைத்துப் பிரச்சாரம் செய்ததாக அணு விஞ்ஞானத் தலைவர் மிஷேல் றிவாசி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசு இவ் அணுகுண்டை பிரான்சுக்குள செய்யாமல் தனது காலனி நாடொன்றில்; செய்து வருவரு என்பது தனது சொந்த மக்களின் எதிர்பபை மடடுப்படுத்தவும் அதன் கொரூரமான விளைவுகளை காலனி மக்களின் தலைகளில் சுமத்தி விடுவதற்கும் இவ் ஏகாதிபத்தியவாதிகள் பின் நிற்கக தயங்கவில்லை.
இன்று தேவை அணுகுண்டுகளை முற்றாக அழிப்பதும், அதன் முழுப் பரிசோதனை முயற்சியை நிறுத்துவதும் அதை ஒட்டி புரட்சிகரமான வழிமுறைகளில் போராட முறைவதுமே ஆகும். எல்லா ஏகாதிபத்தியங்களிடமிருந்தும் அணுகுண்டுகளை அழித்து ஒழிப்பதும், இதைச் செய்ய பரிசோதிக்க விளைபவர்களை குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றி பிரகடனம் செய்யவும் வேண்டும்.
அடுத்த வருடம் அணு பரிசோதனைகளை நிறுத்தல் என்ற கபடம் நிறைந்த ஏகாதிபத்திய நோக்கம் தங்களது உயர் ஆளுமைகளைத் தொடர்வே ஆகும். இவர்கள் பெற்ற தொழில்நுட்ப வசதியுடன் இரகசிய பரிசோதனைகள் மூலம் மேலும் அணுகுண்டுகளை செய்து குவித்து உலகை சல்டையிட உள்ளனர். இந்த வகையில் பிரான்ஸ் 1996ம் ஆண்டு 15 அணுகுண்டுகளைச் செய்ய ஆயத்தமாக 20,000 கோடி பிராங்குகளை ஒதுக்கியுள்ளது.
மக்கள் பட்டினியில்கிடந்தாலென்ன, செத்தாலென்ன யுத்தங்களையும் அதற்கு என்று ஆயுதங்களையும் செய்து குவிக் கஇவ் ஏகாதிபத்தியங்கள் பின்னிற்கப் போவதில்லை என்பதை இவ்வரசின் வரவு செலவு திட்டமே படம்பிடித்துக் காடடுகின்றது. இவ் 20,000 கோடி கு பணத்தைக் கொண்டு பிரான்சு மக்களின் சம்பள வீதத்தை 40 வீதத்தால் உயர்த்த முடியும். இது தற்போது பெறும் சம்பளததைப் போல் கிட்டத்தட்ட ஒன்றை மடங்காகும். ஆனால் யுத்தமும் அதன் மீதான வெறியும், அதனால் பெறும் கொள்ளை இன்பமும் அதன் மீதான இவ் ஏகாதிபத்தியத்தினத் கனவுகளும் மக்களை சாம்பல் மேடுகளாக்கும் செயலாகும்.