Language Selection

சமர் - 17 : 12 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொல்லானவை, உருகொடவத்தை மற்றும் மட்டக்களப்பு எண்ணெக் குதங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்து வருகின்றது.  இத் தாக்குதல்களை அரசை பொருளாதார ரீதியில் நெருக்கடிக்க உள்ளாக்கும் என்ற அடிப்படை பலமாக எல்லாப் பாகத்திலும் எதிரொலித்தது. இந்த நோக்கில் தான் புலிகளும் இதைச் செய்திருப்பர் என அனைவரும் அபிப்பிராயப்பட்டனர்.

ஆனால் இதன் பின்னணியில் இலங்கை பெற்றோலியம் கூட்டத் தபானத்தை தனியார் மயமாகக்கக் கோரும் அமெரிக்காவின் நோக்கமும், இத் தாக்குதின் மூலமாக நிறைவேற்றப்பட்டதாக எண்ணத் தோன்றுகின்றது. அதற்காகவே இத் தாக்குதல் வழி நடத்தப்பட்டதா? ஏன்ற சந்தேகத்தை அமெரிக்க நிறவன அதிகாரியின் அறிக்கை மெல்ல எழுப்பியிருக்கின்றது.

கொலன்னாவை எண்ணைக் கூட்டுத்தாபனத்துக்கு அருகில் இருந்த அமெரிக்க பெற்றோலிய நிறுவனமான ‘காலரெக்ஸ்’ எந்தவித பாதுகாப்பின்றி இருந்த போதிலும் அது தாக்குதலில் இருந்து தப்பியிருப்பது, அல்லது தாக்கப்படாமல் விடப்பட்டது மேலும் சந்தேகத்தை வலுவாக்குகின்றது.

1985ஆம் ஆண்டு அநுராதபுர சிங்கள பொதுமக்கள் மீது புலிகள் இனப் படுகொலையை நடத்திவிட்டு அதை நீண்டகாலமாகவே உரிமை கோராது மறைத்து வந்தனர். பின் 88ல் இந்தியாவின் சொற்படியே தாம் இதைச் செய்ததாக புலிகளின் அன்ரன் பாலசிங்கம் உரிமையுடன் பிரகடனம் செய்திருந்தார். இதுபோன்று பெற்றோலியத் தாக்குதலும் நடத்திருக்க வாய்ப்புகள் உண்டா? என்ற கேள்வி இன்று எழுந்து நிற்பது புலிகளின் அரசியல் வர்க்க நிலைப்பாடு சார்ந்ததே.

எண்ணெக்குதத் தாக்குதலைத் தொடர்ந்து ‘கால்ரெக்ஸ்’ நிறுவன உப தலைவர் இலங்கைப் பெற்றோலியம் கூடடுத்தாபனத்தை தனியார் மயமாக்க அறைகூவல் விடுத்துள்ளார்.

எரிந்துபோன நிறுவனத்திற்கு அரசினால் மீள முதலீடு செய்ய முடியாது என்ற காரணத்தை முன்வைத்தே தனியார் மயமாக்க முயலாம் என்ற இன்றைய நிலையில், ‘காலரெக்ஸ்’ அமெரிக்க நிறுவன உபதலைவர் தமது நிறுனத்தின் 10வீத பங்கை இலவசமாக ஊழியர்களுக்கு வழங்கியதன் மூலம் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு மறைமுகமாக தனியார் மயமாக்கக் கோரும் தமது கோரிக்கைக்களுக்கு பக்கபலம் சேர்க்கும் முகமாக ஆசைகாட்டியும் உள்ளர்.  இந்த தாக்குதலின் மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனியார் மயமாகும் என்பது எதிர்பார்கக் கூடியதே!