பிரான்சின் அரசு சார்புத் தொழிலாளர்களுக்கு அடுத்த வருடம் எந்தவித சம்பள உயர்வும் வழங்கப்படமாட்டாது என வலதுசாரி அரசு அறிவித்த பின் 10.10.95ல் 50 லட்சம் பேர் கொண்ட மாபெரும் பொது வேலை நிறுத்தமொன்றை தொழிலாளர்கள் நடத்தினர். தொடர்ந்தும் புதிய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிய முடிகிறது.

80களில் இலங்கை – பிரான்ஸ் நாணயமதிப்பு கிட்டத்தட்ட சமமாகவே இருந்தது. இலங்கையின் பண வீக்கம் இன்று அதாள பாதாளத்தை நோக்கிச் செல்ல, பிரான்சில் வருடா வருடம் மோசமடைந்து செல்லம் பணவீக்கம் தொழிலாளர் வக்கத்தை ஏமாற்றிப் பிழைக்க ஒரு பிச்சைக் காசை எறிவது வழக்கம். இதைச் சம்பள உயர்வு என்று, இது தம்மால் பெறப்பட்டது என்று இன்று உலகிலுள்ள தொழில் சங்கங்கள் காட்டி உயிர்வாழ்ந்தும் வருகின்றது. இந்த வகையில் வழங்கப்பட்ட சம்பள உயர்வுகள் 89ல்- 4.8% 90ல்-2% 91-2.6% 92-3.3% 93-3%  94-1.5% 95-3% 96-0% என்ற நிலைகளில் உள்ளது.

95ம் ஆண்டு புதிய ஜனாதிபதி ஆட்சிப்பீடம் ஏறிய பின் 3 வீத சம்பள உயர்வை அறிவித்த அதே நேரம் இவ்வளவு காலமும் பொருட்கள் மீது இருந்த வரியை (18.6%) என்றுமில்லாத வாறு 20.6% மாக அதிகரித்துள்ளது. எரிபொருள், குடிவகைகள், வாகனங்கள் என எண்ணிலடங்காத பொருட்கள் மீது விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது. இதைவிட போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்தியும், மருத்துவ உதவிகளைக் குறைத்தும் புதிதாக வரியிடப்படும் 1 வீதத்தால் சம்பளத்தைத் துண்டாடி குறைத்தது. இவைகளைக் கூட அமுல்படுத்துவதில் மக்களை ஏமாற்றி பல வழிமுறைகளைக் கையாள்கிறது. இந்தப் போக்கு பொருட்களின்  விலையை திடீரென 2 வீதத்தால் அதிகரிக்கச் செய்துள்ளத.
 
இன்று ஒருவீத சம்பள உயர்வைக் கொடுக்க 500 கோடி பிராங்ககள் தேவைப்படும் இன்றைய நிலையில், அடுத்த ஆண்டு அணுகுண்டு செய்வதற்கு மட்டும் 20,000 கோடி பணத்தை ஒதுக்கியுள்ளது. இதைவிட முதாளிகளை குசியாக்கும் வகையில் ஒருவரை வேலைக்கு அமர்த்தின் அவரின் இரண்டு  வருட சம்பளத்தில் கிட்டத்தட்ட அரைவாசியை அரசு முதலாளிக்கு அன்பளிக்காகக் கொடுக்க உள்ளது. இதற்கென 4,000 கோடி பிராங்குகளை 96ம் ஆண்டு பஜட்டில் ஒதுக்கியுள்ளது.

ஓரு தொழிலாளிக்கு ஒருவீத சம்பள உயர்வைக் கூட கொடுக்க மறுக்கும் அரசு 8 வீத சம்பளத்தை முதலாளிக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறது. இந்த பாவி அரசு, மற்றும தனியார் வேலை நிலைகளில் பாரிய வேறுபாட்டையும் இவ் ஜனநாயக(?) அரசு  கொண்டுள்ளது. இதைத்தான் உண்மையான ஜனநாயகம் எனப் பலர் பிதற்றுகின்றனர். உமதாரணமாக ஓய்வுக்காலத்தை எடுத்து மதிப்பிட்டுப் பார்த்தால்:

                                         அரசு                      தனியார்
 
வேலைக்காலம்            35.5 வருடம்            40 வருடம்
ஓய்வூதி கட்டண வரி   20% - 25%                   50%
ஆகக்குறைந்த
ஓய்வூதியம்                    5,289 F                      3,094F

இதுபோன்று பல வேறுபாடுகளை அரசு – தனியார் தொழிலாளர்கள் கொண்டுள்ளார்கள். இன்று ஜெர்மனியில் வேலை நேரம் வாரம் ஒன்றுக்கு 35 மணி நேரமாகவும், சில வேலைத்தளங்களில் 32 மணியாகவும் உள்ளது. அதேநேரம் பிரான்சில் வேலை நேரம் 39 மணியாக உள்ளது. இதை 35 மணி நேரமாகக் குறைக்கக் கோரி ஒருபுறம் போராட்ம் நடக்க, இப்பொது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் 32 மணி நேர வேலைவேண்டி சுலோகங்களைத் தூக்கிச் சென்றதைக் காணமுடிந்தது.

இன்று போராட்டத்தை முன்னெடுக்கும் தொழில் சங்கங்கள் வலது-இடது என எல்லோரும் இணைந்துள்ள அதேநேரம், இத் துரோகத் தொழிற் சங்கங்கள் அற்ப பொருளாதாரப் போராட்டங்களைக் கூட நேர்மையாக இன்று   செய்வதே கிடையாது.