இரண்டாம் உலக போரில் கிட்டத்தட்ட 2 லட்சம் பெண்களை நிரந்தர விலைமாதர்களாக தனது இராணுவத்தினருக்காக பாடி வீட்டில் வைத்திருந்ததை முதன் முiறாக ஒப்பக் கொண்டுள்ள ஜப்பான் எகாதிபத்தியம். இப் பெண்களில் மிகப் பெரும்பாலோனோர் அச் சமயத்தில் ஜப்பானில் காலனி நாடாக இருந்த கொரியப் பெண்களே ஆவர். பலரையும் கட்டாயப்படுத்தி அடக்கு முறையின் மூலமே இதில் ஈடுபடுத்தி உள்ளது ஜப்பான். ஆனாலும் இன்று ஜப்பான் முழுப் பொறுப்பையும் தானே எற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் பாதி உண்மைகளை மறைத்துவிட படாதுபாடு படுகின்றது ஜப்பான் என்று கொரியப் பெண்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.