08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

யாழ் குடாநாட்டு இராணுவ நடவடிக்கையின் மூல உபாயம் யாரால் வழி நடாத்தப்பட்டது?

யாழ் குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் இனவெறி இராணுவம் தனது காட்டுமிராண்டித் தார்ப்பாரை நடத்தும் இன்றைய நிலையில் இது எப்படி இராணுவ ரீதியில் சாத்தியமானது? புலிகளின் இராணுவக் கண்ணோட்டம் சுயமானதாக இருந்து இருப்பின் ஒருக்காலுமே உடனடியாக யாழ் குடாவைக் கைப்பற்றும் இராணுவ முயற்சி சிறிலங்காவக்கு வெற்றி அளித்திருக்க முடியாது.

யாழ் குடாநாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் இராணுவமானது மிகவும் திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் சர்வதேச சக்திகளின் முறைப்படியன தெளிவான ஆலோசனைகள் வழங்கப்படடுள்ளது. யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற.

அங்கிருந்த புலிகளின் படைப்பரிவிவுகளை வேறு இடங்களுக்கு நகர்ததுவது இராணுவத்தறி;கு அவசியமாகவே இருந்தது. இதை சர்வதேச சக்திகள் தான் புலிகள் மூலம் அரசுக்குச்செய்து கொடுத்துள்ளது.

ஈழப் போர் - 3 ஆரம்பித்தவுட்ன இதன் மூல உபாயங்கள் திட்டமிட்ட முறையில் நடைமுறபை;படுத்தப்பட்டுள்ளன. புலிகள் பெருமளவில் கிழக்கை நோக்கி நகர்ந்ததும். பல முகாம்களை தாக்கி அழிக்கத் தொடங்கிய நிலையில், இராணுவம் பல முகாம்களை தாமாகவே கைவிட்டு படைகளை யாழில் குவித்தும் சீரான வகையில இரு பக்கபடை நகர்வை எப்படிச் செய்ய முடிந்தது? இந்த படை நகர்வ பலிகள் கிழக்கை நோக்கியும், இராணுவம் வடக்கை நோக்கியும் நகர்ந்த நகர்வு ஒரு தற்செயலான நிகழ்வாக இன்று யாருமே பார்க்க பக்கங்களுக்கும் ஆலோசனை வழங்கி ஆட்டிப் படைத்துள்ளது என ஊகிக்க முடியும். கிழக்கில இராணுவ முகாம்களை புலிக்ள கைப்பற்றிய போதும், இராணுவம் முகாம்களை விட்டுவிட்டு நீங்கிய போதும் புலிகள் பிரசார சாதனங்கள பலமாக அதை மறுபக்கம் சிந்திக்க முடியாத் வகையில் அவர்களையே நகர்த்திச் சென்றத. அதில் “தலைவர் உத்தரவு கிழக்கைக் கைப்பற்ற” என்ற கூற்று புலிகளின் கண்களைக் கூட மறுபக்கம் பார்க்க விடாது கட்டி வைத்துள்ளது.

இந்நிலையில் தான் சிறிலங்கா கடற்படை மீது புலிகளின் தாக்குதல் கூட இதே மாதிரிப் பிரசாரத்திற்கு உள்ளானது. யுத்த தந்திர ரீதியில் ஒரு படையும் அதன் ஆயுத பலமும் ஒன்றை முறியடிக்கும் போது அதை மீறி ஆயுத தளபாடம் பெறுவது என்பது ஒரு வழமையான விடயமாகும். ஆனால் சில கப்பல்கள் தாக்கப்பட்டவுடன் முழுமையாக ஒழிக்க உத்தரவு என்ற பிரசாரங்கள், எதிரி நவீன ராடர் வசதியுடன் தாக்குவான் என்பதை சொல்லாத புகழ் உரைகள் நம்பிக்கையீனத்தை பின் ஏற்படுத்தி விடுகின்றது.

இன்று புலிகளின் விமானப்படை, கடற்படை, “கிழக்கைக் கப்பற்றல்”, “யாழப்பாணத்தை விடமாட்டோம்” என்ற தொடர்ச்சியான மிகைப்படுத்தப்பட்ட, ஊதி வீங்கிய பிரச்சாரங்கள் இன்று தகர்ந்து விடும் என்ற நிலைமை புலி உறுப்பினர்களைக் கூட நம்பிக்கையீனத்திற்கு நகர்த்திச் சென்ற விடுகின்றது. இது அவர்களின் பல்வேறு கட்டுரைகளிலும் தென்படுகின்றது.

3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் முல்லைத்தீவு – கிழக்கில் புலிகளின் கூர்மையான விடாப் பிடியான தொடர்ச்சியான தாக்குதல்ளக் இன்று இல்லையென்னும் அளவிற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் அரசு புலிகளின் பலவீனத்தை இனம் கண்டுள்ள நிலையும், புலிகளின் படைப் பிரிவுகள் வடக்கு நோக்கி மீள நகர்ந்ததையும் அரசு அவதானிகத்தது. உணர்ந்தது. இந்நிலையில் தான் புலிகள் சிங்களக் கிராமங்கள் மிது தாக்குதலைத் தொடுத்தனர். சாதாரண சிங்கள கிராம மக்கள் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்கின்ற அப்பாவிகள் மீது புலிகள் தாக்கியதன் மூலம் என்னத்தைச் சாதிக்க முனைந்தனர்.

இத் தாக்குதல் மூலம் சிங்களப் பகுதிகளில் இருந்த அரசுக்கு எதிராக, புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் சிலரைக் கூட மௌனமாக்கியதும் சர்வதேச ரீதியில் தேசிய விடுதலைக்கு எதிரான பாரிய பிரசாரத்திற்கு இது இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக டீடீஊஇ ஊNN மற்றும் யுளுஐயு செய்திச் சேவைகள் அனைத்தும் இவற்றை மீள மீளக் காட்டுவதன் மூலம் புலிகளுக்கு எதிரான ஒரு பாரிய பிரசாரத்தைச் செய்து வருவதன் மூலம், தமிழ் தேசம் எரிக்கப்படுவதை சாம்பலாக்கப்படுவதை திட்டமிட்டே மூடி மறைத்துள்ளனர்.

சிங்களக் கிராமத்தாக்குதலில் சுரண்டும் அரசுக்கு இதுபற்றிய எந்தவித கரிசனையோ, அல்லது தனது இனம் அழிந்தது என்ற அக்கறையோ இருப்பது இல்லை. சுரண்டுவதற்காக தனது இனத்தைச் சேர்ந்த ஒருலட்சம் பேரைக் கொன்று குவித்த இவ்வரசு, ஒரு சிங்களக் கிராமத்தாக்குதலை இட்டு ஒருபோதும் அலட்டிக் கொள்வதில்லை. ஒரே ஒரு நெருக்கடி என்னவென்றால் மற்றைய இன வெறியர்களுக்கு ஒருக்கால் பதில் அளிப்பது மட்டுமே இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கும். மற்றும்படி தனது ஒடுக்குமுறைக் கரங்களை லோசகாத் துடைத்து மறைப்பதற்கே இதை ஒரு பிரச்சாரக் கைக்குட்டையாகப் பாவிக்கும்.

பலம் - பலவீனம் இவைகளில் இருந்து யுத்தத்தைத் திட்டமிடவும் எதிரியை அழித்து ஒழிக்கவும் சொந்த முடிவுகளை சார்ந்து இருக்கவும், பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களைச்சார்ந்து இருக்கவும் சிங்கள முஸ்லிம் பிற இன மக்களின் பரந்துபட்ட ஐக்கியத்திற்கும் உழைக்கும் கொள்கையைக் கொண்டு இருப்பதும் தான் இராணுவ ரீதியில் யுத்தததை வெற்றி பெற வைக்கும் ஒரே ஒரு வழியாகும்.


பி.இரயாகரன் - சமர்