கடந்த மாசி மாதம் 21ம் நாள் இரவு மாசெயில் என்ற இடத்தில் கறுப்பின மாணவன் ஒருவன் நாசிகளால் படுகொலை செய்யப்பட்டான்.


17வயதுடைய இந்தக் கறுப்பின மாணவன் மீது கண்மூடித்தனமாக துப்பாகிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளி பொலீசாரிடம் வகையாக மாட்டிக் கொண்டான்.


F.N என்றழைக்கப்படும் தேசிய முன்னணியின் உறுப்பினரான இக்கொலையாளி லுபென் என்பவரைத் தலைவராக வரிந்த கொண்டவன், சட்டப+ர்வமாக இயங்கிவரும் இத்தேசிய முன்னணிக் கடசி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுகின்றது. சராசரியாக 10 வீத ஆதரவைத் தொடர்ச்சியாகப் பெற்றுவரும் இக் கட்சி வெளிநாட்டவர்களுக்கு எதிராக பகிரங்கமாகவே இயங்கி வருகின்றது.


பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களில் போத்துக்கல் நாட்டைச் சேர்ந்தோரே அதிகமாகக் காணப்படினும், தேசியமுன்னணியின் பிரச்சாரம் இவர்கள் மீதல்லாது அரபு, மற்றும் கறுப்பினத்தோர் மீதே குறிவைத்து நடாத்தப்படுகின்றத. கறுப்பு – வெள்ளை என்ற ஒரேயொரு எல்லைக்கோடு மட்டுமே இவர்களின் அடிப்படையம்சமாகும்.


தேசிய முன்னணியின் பேச்சாளர்கள் இப்படுகொலையை தற்செயலாக விபத்து எனக் கூறிவருவதுடன், எந்தவித அனுதாபத்தையும் வெளியிட மறுத்தனர். இந்நிலையில் கூட்டுக் கொள்ளப்ப்ட அடுத்த நாள் அவ்விடத்தில் 500 பேர் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இப்போராடட நடவடிக்கையானது, ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையால் பெருகிக் கொண்டே இருந்தது. இறுதி நாளன்று மாசெய்யில் மட்டும் 20 ஆயிரம் பேர் அப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.


தேசிய முன்னணியைத் தடைசெய்யக் கோரி நடந்த இந்த போராட்டம் பிரான்சின் பல பாகங்களிலும் உணர்வூப+ர்மாக நடத்தப்பட்டது. வளர்ந்து வரும் இந்த நாசிகள் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிகளுடாகவே ஆட்சிக்கு வரவும், மூன்றாம் உலக யுத்தத்தை நடத்தவும் தீவிரமாக முனநை;தவாறே உள்ளனர். இவற்றைத் தடுத்து நிறுத்த மாற்று அரசிசயல் சக்திகள் புரட்சிகர வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும், இன்று புரட்சிகர சக்திகளைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாத சீரழிந்த நிலையில், மூன்றாம் உலகப் போரின் அழிவின் விளிம்புக்கு உலகம் உருட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.