ஆடு மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைபோல பிஞ்சுக் குழந்தைகளை ஏற்றுமதி செய்யும் வியாபாரம்  இப்போது கொடிக்கட்டிப்பறக்கிறது. கடந்த பத்து வருடத்தில் ;11,862 குழந்தைகள் இவ்வாறு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செயள்யப்பட்டுள்ளனர். மேலைநாடடுத் தம்பதிகளால் தத்தெடுத்துக் கொள்ளப்படும் இக்குழந்தைகள் ஏறத்தாள 5000 டொலர்களுக்கு இலங்கைத் தாய்மார்களால் விற்கப்பட்டுள்ளனர். பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தையை விற்குமளவுக்கு இலங்கைத் தாய்மார்களைப் பிடித்துள்ள வறுமையின் அவலத்தையும், மேலைநாடுகளில் பெருகிவரும் இனவெறியின் காரணமாக இக் குழந்தைகளின் எதிர் காலத்தையும் எண்ணும்போது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.
(நன்றி – புதிய ஜனநாயகம்)