சிங்கள பெரும்தேசிய இன வெளியர்களால் ஒரு நிமிடத்திற்கு 41,000 ரூபா செலவு

இலங்கை மொத்த சனத்தொகையான ஒரு கோடியே 75 லட்சத்தில், ஒரு கோடியே 19 லட்சம் பேர் அதாவது மொத்த சனத்தொகையில் 68 சதவிகிதம் போரின் நிமித்தம் வறுமையில் வாடுகின்றனர்.


தேசிய இனப் போருக்கு ஒரு நிமிடத்தில் 41 லட்சம் ரூபாய்களைச் செலவு செய்யும் இலங்கை இனவெறி அரசு, விரல் விட்டு எஎண்ணக்கூடிய கொழுத்த தரகர்கள் இசைவாக நாட்டைக் கொள்ளையிடுவதற்கு வழிவிட்டுள்ளத. யுத்தத்திற்கு பெரும் பணத்தைத் தாரைவார்த்து வரும் இவ்வரசு மக்களை மேலும் பிழிந்தெடுத்து இருக்கும் கந்தலைக் கூட இழுத்துப் பறித்துவிட முயன்று வருகிறது. பேச்சுவார்த்தைகள், சமாதானம் என்கின்ற கவர்ச்சியான வார்த்கைளினூடாக மக்களின் கொதிப்புக்களை அடக்கி தமது முகமூடிக் கொள்ளைகளை இலகுவாக நடாத்தியும் வருகின்றது.