08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

டென்மார்க் மாநாட்டில் வெளிவந்த உண்மைகள்

டென்மார்க் தலைநகர் ஹோபன் ஹாகனில் மார்ச் 6 முதல் 12 வரை நடந்த சர்வதேச மாநாட்டில் மூன்று முக்கிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. வறுமை, வேலையின்மை, சமுதாயச் சிதைவு என்பவைகளை ஐக்கிய நாட்டு சபை இன்றைய காலத்தின் மையப்பிரச்சினை எனக் கூறி விவாதித்தன. இவ் விவாத நடவடிக்கையில் அதில் கலந்து கொண்ட சில பெண் பிரதிநிதிகள் வறுமைபற்றி அர்த்தமற்ற போலித்தனத்தைக் கண்டித்து போராடினர். இந்நிலையில் ஐ.நா சபை தயாரித்த அறிக்கையின் சில பகுதிகளை புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டது. அதிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றோம்.
(சமர் ஆர்.கு)

வறுமை - இன்றைய நிலையில்


1994ம் ஆண்டு இறுதியில் ப+மியில் மொத்தமாக 560 கோடி பேர் வாழ்ந்தனர். இதில் 100 கோடி பேருக்கு மேல் மிகமோசமான வறுமையில் வாழ்கின்றனர்.


இவ் 100 கோடி பேர் வருட வருடமானமாக 370 டாலர்களை மட்டும் கொண்டு (ஏறத்தாழ 18,500 இலங்கை ரூபா) உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கின்றனர்.


சுமார் 55 கோடி பேர் ஒவ்வொரு இரவும் ‘இராப்பட்டினியில் கிடக்கின்றனர். 150 கோடி பேர் சுத்தமான நீர், கழிவு வசதிகளின்றி தகவிக்கின்றனர். இவர்களின் சராசரி வாழும் வயது பல்வேறு காரணிகளை உள்ளடக்கி 50 ஆக உள்ள அதேநேரம் ஜப்பானின் சராசரி வயது 80 ஆக உள்ளது.


முதியோர்கள் மட்டும் 100 கோடி பேர் கல்வி அறிவு அற்ற தற்குறிகளாக வாழும் அதேநேரம் 50 கோடி சிறுவர் சிறுமியர் எங்கேயும் பள்ளி செல்லாதுள்ளனர். வறுமையில் சிக்கியுள்ளோரில் 70 வீதமானோர் பெண்களாகவும் அடுத்து நெருக்கமாக உள்ளவர்கள் முதியோர்களும் ஆவர்.


ஆபிரிக்காவில் உயிர் வாழும் 1000 பேருக்கு 175 பேர் குழந்தை இறப்பாக நிகழ்கின்றது. இது இந்தியாவில் 100 பேராகவும், கிழக்கிலும் மேற்கிலும் உள்ள முன்னேறிய நாடுகளில் 15 பேராகவும் உள்ளது.


ஏழைகள் உள்ள இடம் எங்கே?


ஆசிய, ஆபிரிக்க நாடுகளே ஏழைகளின் இடமாகவுள்ளது. உலகமக்கள் தொகையில் 16 சதவிகிதத்தினர் ஆபிரிக்காவில் வாழுகின்ற போதும் அதில் அரைவாசிப்பேருக்கு மேல் உலகின் பரம ஏழைகளாக உள்ளனர்.
நுகர்புறத்தைவிட கிராமப்புறத்தில் ஏழைகள் கூடுதலாக உள்ள அதேநேரம் இது 80 சதவிகிதமாகக் காணப்படுகின்றது.
ஆசியாவில் 31 சதவிகித கிராமமக்கள சகாராவை ஒட்டியும், ஆபிரிக்காவில் மொத்த மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினரும், தென் அமெரிக்காவில் 61 சதவிகிதத்தினரும் ஏழைகளாக உள்ளனர். முன்னேறிய நாடுகளில் வறுமை 15 சத விகிதமாகவே உள்ளன.

வறுமையின் தொடர்ச்சியான போக்கு


இப்போதைய வறுமை நிலை தொடரின் 2000ம் ஆண்டில் மேலும் 20 கோடி பேர் வறுமைக்குள் நகர்வர் என உலகவங்கி மதிப்பிட்டுள்ளது.

வேலையின்மை


1994ம் உலக சனத்தொகை 560 கோடியாக உள்ளபோது அதில் உழைப்பு சக்திகள் 280 கோடி பேராக இருந்தனர். இதில் 12 கோடி பேர் வேலையின்றி உள்ளனரென அறிக்கைகள் கூறுகின்றன.


அதிகரித்து வரும் இடைவெளி என்பது தொழில்மயமான நாடுகளில் ஓராண்டுக்கு 20,000 டாலராக (ஏறத்தாழ 10,00,000 இலஙகை ரூபாய்கள்) உள்ள அதேநேரம் கீழ்நிலை நாடுகளில் 500 டாலராக (ஏறத்தாழ 25,000 இல்ஙகை ரூபாய்கள்) உள்ளது. இது கிட்டத்தட்ட 40 மடங்கு அதிகமாகும்.


வருவாயை பெறுபவர்களில் 20 சத விகித உயர் மட்டத்தினர் உலக வருவாயில் 83சத வகிதத்தை பெறும் அதேநேரம் கீழ்நிலையிலுள்ள 20 சத விகிதத்தினர் உலக வருமானத்தில் வெறும் 1.5 சத விகிதத்தையே பெற்று வருகின்றனர்.
உழைக்கும் சக்திகளில் 30 சத விகிதத்தினர் அதாவது 80 கோடி பேர் உற்பத்தி ப+ர்வமான வேலைகளில் இல்லை. மாறாக வேலை தேடிக்கொண்டோ குறைந்த வேலைகளிலோ உள்ளனர்.


குறைந்த வேலையில் 70 கோடி பேர் உள்ள அதேநேரம் இவர்களைச் சார்ந்தே 110 கோடி பேர் பரம ஏழைகளாகவுள்ளனர். 24 பெரிய தொழில்மயமான நாடுகளில் 10 பேருக்கு ஒருவர் வேலையின்றியுள்ளனர்.


வளரும் நாடுகள்


வளரும் நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் 60சத விகிதத்தினர் கிராமப்புறத்தில் உள்ள அதேநேரம் விவசாயத்தைச் சார்ந்துமுள்ளனர். இவர்களின் மொத்த உற்பத்தி தேசிய உற்பத்தியில் 40 சத விகிதத்தைப் பெற்றுக் கொடுக்கின்றது.

விளிம்பு நிலைத் தொழிலாளர்கள்


சுமார் 30 கோடி பேரைக் கொண்ட இந்தப் பிரிவு பெரும்பாலும் வளரும் நாடுகளில் பெண்களைக் கொண்டதே. வாய்ப்புக்கள் பற்றாக் குறையுடன் எந்த விதமான பாதுகாப்புகளுமின்றி முறைசாராத துறையில் மிக மோசமாக கசக்கப் பிழியப்படுகின்றனர்.


சர்வதேச குடிபெயர்தல்


மொத்த உழைப்பு சக்தியில் 1.3 சத விகிதத்தினர் அதாவது 3.35 கோடி பேர் பொருளாதார ரீதியில் செயலூக்கமுள்ள குடி பெயர்பவர்களாக உள்ளனர்.


கடன் நெருக்கடி


வளரும் நாடுகளின் கடன்தொகை கடந்த பத்து வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 1992ல் 23.5 லட்சம் இலங்கை ரூபாய்களாக மாறிய பின்னர் வளர்ச்சி உறைந்துபோய் வேலையின்மை அதிகரித்துச் செல்கின்றது.


தொழில் மயமான நாடுகள்


1994ல் வேலையின்மை 8.6 சத விகிதமாக அதகிரத்த போதிலும் இது மேற்கு ஐரோப்பாவில் 12 சத விகிதமாகவும், கிழக்கு ஐரோப்பாவில் 15 சத விகிதமாகவும் இருந்தது.


ஆபிரிக்கா


இரண்டு பத்தாண்டுகளில் பொருளாதார நெருக்கடியில் சகாராவை ஒட்டிய பகுதிகளில் மிக மோசமான வறுமைக்குள்ளாகி உள்ளன. இங்கு நகர்ப்புற வேலையின்மை 20 சதவிகிதமாகவும், 60 சத விகிதமானோர் முறைசாராத அரைகுறை வேகைளில் நகர்புறங்களில் காணப்படுகின்றனர். கிராமப்புறங்களில் குறை வேலைகளில் 50 சத விகிதத்திற்கு மேலானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


வட அமெரிக்கா – மத்திய ஆசியா


இங்கு வேலையின்மை 10 சதவிகிதம் முதல் 20 சத விகிதம் வரை மாறுபடுகின்றது. இளைஞர்களே இங்கு மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

தென் அமெரிக்கா


இறுக்கமான கட்டுமான சீர்செய் இயக்கம் இருந்தும் 1980ல் இருந்ததுபோல் மீண்டும் 7 சதவிகித வேலையின்மையை அடைந்துள்ளது.


கிழக்கு தென்கிழக்கு ஆசியா


உலகிலுள்ள 110 கோடி ஏழை மக்களில் 50 சத விகிதத்தினர் தெற்கு ஆசிரியாவில் வாழ்கின்றனர். இதைவிட மேலும் 15 சத விகிதத்தினர் கிழக்கு ஆசியாவில் வாழ்கின்றனர்.


சமூக ஒழுங்கேற்றம் சமூக முன்னேற்ற அறிகுறி


வளரும் நாடுகளில் வாழும் வயது சராசரியாக 1950களில் 40 ஆண்டுகளாக இருந்தது. இது 1990ல் 63 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.


ஆபிரிக்கா தவிர்ந்த எல்லா பிராந்தியத்திலும் கருத்தரிக்கும்விகிதம் குறைந்துள்ளது.


சுpல நாடுகளில மக்கள் தொகை அதிகரிப்பும். குழந்தைகள் சாவு உயர்வும் இருந்தபோதிலும், மொத்த உலக அளவில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.


1960 முதல் 1990 வரை உலகில் கல்விக்கு ஒதுக்கப்படுவது நிகர தேசிய உற்பத்தியில் 2.2ல் இருந்து 3.4சத வகிதமாக உயர்ந்துள்ளது. 1970க்கும் 1990-க்கும் இடையில் பெண்கள் கல்வி அறிவைப் பெறுவதில் முன்னேற்றம் கண்டுள்ளது. இது 18சத விகிதத்தில் இருந்து 36 சத விகிதமாக அதிகரித்துள்ளது.
பொருளாதார ரீதியில் வளரும் நாடுகளில் சராசரி நிகர வருமானம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரண்டு

மடங்குகளாக அதிகரித்துள்ளது. 1990ல் இருந்த பொருளாதார பின்னடைவிலிருந்து 1993ல் ஒரு சத விகிதமாகவும், 1994ல் 2.2சத விகிதமாகவும், 1995ல் 3சத விகிதமாகவும் வளர்ச்சி கண்டுள்ளது.
1987ல் இருந்து உலக இராணுவச் செலவு ஆண்டுக்கு 3.6 சத விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் விளைவாக கணக்குப் புத்தகத்தின்படி ‘சமாதானத்தால் அடையும் வருமான’க் கூட்டுத் தொகை 1987க்கும் 1994க்கும் இடையில் 46, 17, 457 கோடி இலங்கை ரூபாய் கிடைத்துள்ளது.


சமூக சிதைவின் அறிகுறிகள்


உலகின் மக்கட் தொகையில் 10 சதவிகிதத்தினருக்கு குறைவானோரே மக்களின் வாழ்க்கையை வடிவமைக்க அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு நிறுவனங்களில் பங்கேற்கின்றனர். ஏழைகள், பெண்கள், முதியோர், சிறுபான்மையினர், கிராமப்புறக் குடிகள் ஆகியோர் பெரும்பாலும் இவற்றிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர்.


அரசியல் அதிகாரம் குறிப்பாக வளரும் உலகில் மையப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உள் ஊர் அரசாங்க அமைப்புகள் சராசரி 10 சத விகிதமே செலவு செய்ய முன்னேறிய நாடுகள் அனுமதிக்கின்றன.


அமெரிக்காவில் ஓய்வூதியம்பெறும் ஒவ்வொரு முதியோருடைய நலனுக்கும் ஒதுக்கப்படும் செலவு 1989க்கும் 1990க்கும் இடையில் 40 சத விகிதம் குறைந்துள்ளது. இதைவிட வெள்ளை இனத்தவர்களை விட கறுப்பினத்தவரின் வேலையின்மை இரண்டு மடங்காகும்.

பாரபட்சம்


உலக எழுத்தறிவில்லாதோரில் 66சத விகிதமும், உலகின் ஏழைகளில் 70 சத விகிதம் பெண்கள் ஆவர். ஆசியாவில் மட்டும் ஏழை பெண்களின் தொகை 37.4 கோடி பேர் ஆவர். இது மேற்கு ஐரோப்பாவின் மக்கள் தொகையைவிட அதிகமாகும்.
உலக மக்கள் தொகையிலிருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் காணாமல் போகின்றனர். இதில் அதிகமானோர் தெற்கு,

கிழக்கு ஆசியாவினர். இங்கு பெண்கள் கருவில் வைத்தே அழிக்கப்படுகின்றனர்.


அமெரிக்கா அல்லாத உலகின் ஒருசதவிகிதமே நிர்வாக உயர்நிலையில் பெண்கள் உள்ளனர். இன்றைய நிலையிலுள்ள ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் முதிய நிர்வாகிகள் ஆக உயர்வதற்கு 475 வருடங்கள் பிடிக்குமென ஆய்வகள் கூறுகின்றன.


70 நாடுகளில் வாழும் 30 கோடி ப+ர்வ குடிமக்கள் கடுமையான பாரபட்சத்தையும், வன்முறையையும் அடிக்கடி சந்திக்கின்றார்கள். குனடாவின்இன்றைய கனேடியர்கள் போல 6 மடங்கு ப+ர்வக்குடி மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். வெனிசுலாவில் எஞ்சியிருக்கும் பத்தாயிரம் ‘யானோமாமி’களை அழிந்துபோகும் அளவிற்கு அவர்கள் பல வழிகளிலும் சுரண்டப்படுகின்றனர்.


1993-94 கணக்குப்படி தென் ஆபிரிக்காவில் வாழும் வெள்ளையர்கள்  கறுப்பர்களுக்கு இடையிலுள்ள வேறுபாடு அமெரிக்காவை விட 4 மடங்கு அதிகமாகும். இது இனவேற்றுமை, நபர்வாரி வருமானம், மனிதவள மேம்பாடடு நடவடிக்கை என்பனவற்றில காணப்படுகின்றது.

வன்முறையும் முறைகேடும்


அமெரிக்காவில் (1,00,00க்கு 12 பேர் வீதம்) கெலைகள், (1993ல் 1,50,000) அறிவிக்கப்பட்டது கற்பழிப்புகள், (1992ல் 7000) துப்பாக்கிச் சூடுகள், சிறார் சாவுகள் என்று உயர்ந்த அளவு வன்முறைச் சம்பவங்கள் உலகுக்கு தலைமை தாங்குகின்றது. 30 லடசம் அமெரிக்கக் குழந்தைகள் முறைகேடுகள், புறக்கணிப்புகளுக்குத் தீராத பலியாகியுள்ளனர்.


சிறார்கள் தான் வன்முறைக்குப் பலியாகும் ஆபத்திலுள்ளனர். இரண்டு லட்சம் சிறார்கள் வாழும் பிரரேசிலில் ஒவ்வொரு நாளும் 4 பேர் கொல்லப்படுகின்றனர். 1993-94 ஆகிய ஓராண்டில் மடடும் பிரேசியச் சிறுவர் கொல்லப்படுவது 40 சத விகிதம் அதிகரித்துள்ளது.


தாய்லாந்து, பிலிப்பைன்ஸ, இலங்கை ஆகிய நாடுகளில் பாலியல் சுற்றுலா மையங்களில் மொத்தம் 5 லட்சம் சிறுமிகள் விபச்சாரத்தில் வேலை செய்கின்றனர்.


பெண்களுக்கு எதிரான வன்முறை எங்கும் நிரமபியிருக்கின்றது. ஆனால் பெரும்பாலும் செய்தியாக வெளிவருவதில்லை. எடுத்துக்காட்டாக இந்தியாவில் ஆண்டொன்றிற்கு 5000 முதல் 9000 வரையிலான வரதட்சினைக் கொலைகள் நடக்கின்றன. வளரும் நாடுகளிலுள்ள மனைவியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கணவன்மார்களால் துன்புறுத்தித் தாக்கப்படுகின்றனர். இதேநேரம் உலகம் முழுக்க 2000 பெண்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றாள்.


கிரிமினல் குற்றம்


சட்டவிரோத நடவடிக்ககைகள் பெருகி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் 1992ல் 140 லட்சம் கிரிமினில் குற்றங்கள் நடந்துள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்பானது 21,39,261 கோடி இலங்கை ரூபாய்களாகும். இது 80 வளரும் நாடுகளின் கூடடுவருமானத்தை (அந்நாடுகள் அனைத்தினதும் நிகர உற்பத்தியின் கூட்டுத் தொகையை) விட அதிகமானதாகும். இது வளரும் நாடுகளின் மொத்தக் கடன் தொகையை விட கொஞ்சமே குறைவானதாகும்.


உலகம் முழுவதும் பார்த்தால் பல கிரிமினல் குற்றங்கள் போதை மருந்துடன் தொடரபுடையதாகவுள்ளது. கனடாவில் 1,00,000க்கு 225 பேரும், அவுஸ்திரேலியாவில் 1,00,000க்கு 400 பேரும் போதை மருந்து குற்றங்களில் சிக்கியுள்ளனர். இது டென்மார்க், நேர்வேயில் இரண்டு மடங்காகி உள்ளன. இது ஜப்பானில் 1985-90க்கு இடையில 30 மடங்குக்கு மேல் அதிகரித்தள்ளது. தேசிய எல்லைஎளைக் கடந்து செய்யப்படும தேசம் கடந்த கிரிமினல் குற்ற அமைப்புக்களின் ஆண்டு வரவு செலவு மட்டும் 50 லட்சம் கோடி இல்ஙகை ரூபாய்களாகவுள்ளது. இது உலகில் வளரும் நாடுகளின் மொத்த கடன் தொகையைவிட 2 மடங்கு அதிகமாகும்.


குடிபெயருதல்


பூமியில் வாழும் 115 பேருக்கு ஒருவர் வீதம் குடிபெயர்ந்துள்ளனர். இது அகதியாகவோ, பொருளாதார, அரதசியல் அல்லது இராணுவ காரணத்தாலோ தமது வீட்டை விட்டு ஓடவைத்துள்ளது.
கடந்த மூன்று பத்தாண்டுகளில் அர்ஜென்டீர்னா மக்கள் தொகைக்கு கிட்டத்தட்ட சம அளவான 350 லட்சம் பேர் தெற்கிலிருந்து வடக்குக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் மேலும் 10 லட்சம் பேர் குடிபெயர்ந்து வருகின்றனர்.
அரசியல் அகதிகளாகவும், தேசிய இனமோதல்களுக்குப் பலியானவர்களாகவும் எல்லை கடந்து ஓடுபவர்கள் எண்ணிக்கை 1970களில் 80 லட்சமாக இருந்து இப்போது 2 கோடியாகிவிட்டது. மேலும் 260 இலட்சம் பேர் உள்நாட்டுக்குள் இடம்பெயர்துள்ளனர்.


மோதல்


உலக நாடுகளில் 40 சதவிகிதமானவை குறைந்தது 5 தேசிய இனஙகளைக் கொண்ட நாடுகளாகும். மொத்த நாடுகளில் பாதி அளவுக்காவது தேசிய இனங்களுக்கு இடையில் ஏதாவது வடிவிலான மோதலைச் சந்தித்து வருகின்றது.


1990ல் நிகழ்ந்த 82 மோதல்களில் 79 தேசிய எல்லைக்குள் நிகழ்ந்தன.


1994ல் ஏப்ரல் ஜுலை ஆகிய நான்கு மாதங்களில் ரூவண்டா நாட்டு மக்கள் 35 லடசம் பேர் கொல்லப்பட்டனர். அல்லது வீடுகளை விட்டுத் துரத்தப்பட்டனர்.


இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் யுத்தத்தின் காரணமாக கொல்லப்பட்டோரில் 90சத விகிதம் இராணுவத்தினரே. இப்பொழுது 90சத விகிதம் சாதாரண மக்கள் ஆவர்.
கடந்த பத்தாண்டுப் போர்களில் 15 லட்சம் குழந்தைகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். 50 லட்சம் குழந்தைகள் அகதிகள்

முகாம்களில் வாழுகின்றனர். 120 லட்சம் குழந்தைகள் வீடுவாசல் குடும்பம் அல்லது இரண்டையும் இழந்துள்ளனர்.


பரம ஏழைகளான 200 கோடி பேர் சம்பாதிக்கும் மொத்த வருவாய்களின் அளவிற்கு வளர்ந்த நாடுகள் தமது இராணுவ அதிகாரிகளுக்காக செலவு செய்கின்றன.


இராணுவத் திட்டங்களுக்காக ஆண்டுக்கு 4,04,000 கோடி இலங்கை ரூபாயை அதாவது உலக மக்களின் பாதிப் பேருடைய வருமானத்திற்குச் சமமாக செலவு செய்கின்றது. உலகில் 100 கோடி பேர் அடிப்படை சுகாதார வசதியின்றி உள்ளனர். வயதுவந்தோர் நாலு பேரில் ஒவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. உலகின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் தினமும் பட்டினியாகக் கிடக்கின்றனர் இந்த உலகத்தில்..


பி.இரயாகரன் - சமர்