(சமர் 1 இல் ‘தேச விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை விவாதத்திற்கு முன் வைத்திருந்தோம். இது தொடர்பாக ஆரோக்கியமான கருத்து விவாதங்கள் எதுவும் நேரடியாக எமக்கு முன்வைக்கப்படவில்லை! ஆனால் ‘தூண்டில்’ ‘மனிதம்’ ஆகியவற்றில் வௌ;வேறு நோக்கு நிலைகளிலிருந்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. சமரன் வெளியீடான கட்டுரை ஒன்றை அடுத்த காலடி என்ற பெயரில் லண்டனிலிருந்து வெளியிட்டிருந்தனர். இவற்றைத் தொட்டு நாம் எமது கருத்துக்களை முன் வைக்கிறோம்)

1983ம் ஆண்டு ய+லை இனக்கலவரத்திற்குப் பிறகு பாய்ச்சல் நிலை வளர்ச்சியை எடுத்த தமிழீழப் போராட்டமானது, சிறிலங்கா அரசுக்கெதிரான எதிர்ப்பு யுத்தம் என்ற நிலையைக் கூட இழந்து முற்றாக சீரழிக்கப்பட்டு விட்டது. ஈழத்தின் எழுந்த இந்தப் போராட்டத்தின் வீச்சு தென்னாசியப் பிராந்தியம் முழுவதையுமே பாதிப்புக்குள்ளாக்க வல்லது எனக் கருதப்பட்டது. ஆனால், தென்னாசிய பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்திகளினதும்சர்வதேசப் பயங்கரவாதிகளனதும் ஊடுருவலுக்கு இந்தப் போராட்டம் வழி செய்து கொடுத்திருக்கிறது. இனிமேலும் ஈழத்தில் நடத்தப்படும் ‘தேசவிடுதலைச் சண்டைக்கு’ முற்போக்குச் சாயம் ப+சி நியாயப்படுத்த முயல்வதும், இது தொடர்பான சரியான நிலையினை எடுக்கத் தவறுவதும் தெற்காசியப் பிராந்தியத்தின் தேசங்களின் விடுதலைக்கச் செய்யப்படும் துரோகத்தனமாகும். ஆந்திரா, ஜம்முகாஷ்மீர், பாகிஸ்தான் போன்ற தேசங்களில் LTTE பாணி தாக்குதல் அலைவீசிக் கொண்டிருக்கிறது. சிங்கள தேசத்திலும் இந்த அலை ஓயவில்லை. இந்த நிலையில் சமூக உணர்வுள்ள, அனைத்து சக்திகளும் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டிய தேவை உணரவப்படவேண்டும்.

தேசிய எழுச்சிகளாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாலும், உலகெங்கும் நடக்கும் புரட்சிகளாலும் தமது தொடர்ச்சியான இருப்புத் தொடர்பாக அச்சங்கொண்ட ஏகாதிபத்தியங்கள், இவ்விதமான போராட்டங்களை திசை திருப்பி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதனூடாக, தனது இருப்பை நிலைநிறுத்தி வழி செய்து கொள்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் வெற்றியடைந்த ஒரு புரட்சியின் அமைப்பாளனும், சிந்தனையாளனும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் இராணுவபலம் இன்றளவு வளர்ச்சிபெறாத சூழலில் “ஒரு ஏகாதிபத்திய நாட்டிற்கெதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னுமொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக குறிப்பிடத்தக்க சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்” என்று மிகவும் தீர்க்கமாக குறிப்பிடுகிறார். இங்கே நாம் ஒரு தே.வி போராட்டம் ஏகாதிபத்தியத்தினால் அதன் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது தனது சொந்த தேசிய நலன்களுக்கானதா? என்பது குறித்து ஆராயும் போது நிலவும் குறிப்பான சூழ்நிலைகளில் போராட்டத்தின் தன்மை பற்றியும், அப்போராட்டத்தின் பின்னாலுள்ள சமூக சக்திகள் பற்றிய ஆய்விலும் இருந்தே முடிவுக்கு வரமுடியும். 1905 ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்து போனதை அங்கீகரித்த மேற்குறித்த சிந்தனையாளன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். நோர்வேக்கு மிக விரிவான சுயநிர்வாக உரிமை கொடுக்கப்பட்டிருந்த போதிலும் அது தனக்கே சொந்தமான பாராளுமன்றம் முதுலியவற்றைப் பெற்றிருந்த போதிலும் கூட்டுச் சேர்ந்த பிறகு நோர்வேக்கும் சுவீடனுக்கும் இடையில் பல ஆண்டுகள் மோதல்களும் அடிப்பாடுகளும் இருந்துள்ளன. சுவீடிஷ் உயர் குடியினரின் ஆட்சியைத் தூக்கி எறிவதற்கு நோர்வே மக்கள் தீவிரமான முயன்றார்கள் இறுதியில் 1905 ஆகஸ்டில் வெற்றியடைந்தார்கள். நோர்வேயின் பாராளுமன்றம், சுவீடிஷ் மன்னர் இனியும் நோர்வேயின் மன்னரல்ல என தீரமானம் நிறைவேற்றியது. நவீன பொருளாதார அரசியல் உறவுகளின் கீழ் எந்த அடிப்படையில் தேசிய இனங்கள் எரிந்துபோதல் சாத்தியமாகிறது? உண்மையில் ஏற்படுகின்றது என்பதையும், அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்கின்ற நிலைமைகளில் சிலசமயம் பிரிவினை எந்த வடிவத்தைக் கொள்கிறது என்பதையும் இந்த உதாரணம் நமக்கு காண்பிக்கிறது என்கிறார்.

நோர்வேயானது சுவீடனிலிருந்து பிரவினைக்கான கோஷம் எழுப்பியபோது சுவீடிஷ் உயர் குடியினரதும் மன்னராட்சியிலிருந்தும் விடுதலை பெறுவதற்காக முற்போக்கு தன்மையை அது கொண்டிருந்தது. உலகம் ப+ராவும் உருவாகி இருந்த குடியாட்சித் தாக்கத்தின் கீழ் நோர்வே சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது. இது சுவீடனின் ஆட்சியிலிருந்து முற்போக்குத் தன்மையைப் பெற்றிருந்தது. ஆனால் இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளில் ஆதிக்கத்தில் இருக்கின்ற சக்தியாக தரகு முதலாளித்துவமே உள்ளது. தரகு முதலாளித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான தேசியசக்திகள் பேராட்டமே தேசவிடுதலைப் போராட்டம். இது பல்தேசிய இனங்கள் வாழுகின்ற நாடுகளில் ஒடுக்கப்பட தேசிய இனம் பிரிந்து போவதற்கான போராட்டமாகவோ, அல்லது ஏகாதிபத்தியத்தின் மூலதனப் பிடியிலிருந்து தேசங்கள் விடுதலை அடைவதற்கான போராட்டமாகவோ அமையலாம். ஆனால் இந்தப் போராட்டத்திற்கான தலைமை சக்திகள் யார் என்பதே எமக்கு முன்னாலுள்ள பிரதான கேள்வியாக அமைகிறது. ‘தூண்டில்’ கலம் 14 இல் தேசத்தின் குறிப்புகளில் பிரஜைகளின் வாதத்திலிருந்தே இதற்கான பதிலை நாம் பெற்றுக் கொள்ளலாம். பிரஜைகள் சொல்வதை போல் ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கு உருவாகுவதற்கு அக் குறிப்பிட்ட வர்க்கம் அங்கே யதார்த்ததில் இருப்பது நியதியில்லை. மர்க்ஸிசம் தான் முதன் முதலில் அரசியலை ஒரு விஞ்ஞானமெனப் போதித்தது. அரசியலை விஞ்ஞானம் எனப் புரிந்து கொண்ட பட்டாளி வர்க்கச் சிந்தனையாளர்கள் இருப்பதற்கு பட்டாளி வர்க்கம் அங்கு யதார்த்ததில் இருக்க வேணும் என்று சொல்ல முடியாது. எங்கடை நாட்டிலே குறிப்பாக வடக்கு கிழக்கிலே தேசிய முதலாளிகள் இருக்கிறார்களோ இல்லையோ பட்டாளிவர்க்கம் என்று மார்க்ஸிய நூல்களில் தெரிவிக்கப்படும் வர்க்கம் இல்லையென்றே அடித்துச் சொல்லிவிடலாம். அதற்காக பட்டாளிவர்க்க சிந்தனை அடிப்படையிலான அரசியல் இல்லையெனவோ, தேவையில்லையெனவோ ஆகிவிடுமா? அப்படித்தான் தேசிய முதலாளிகள் பற்றிய ‘சமரின்’ பிரச்சினையும். இங்கு தேசிய முதலாளிகளா? தரகு முதலாளிகளா? இருக்கிறார்கள் என்பது விடயம் இன்னொன்று புலிகளிடம் ஆதிக்கத்தில் இருக்கும் சிந்தனை முதுலாளித்துவ தேசியவாதத்தில் எவ்வகைப்பட்டது என்பதை ஆராய்வது என்ற வாதம் மிகச் சரியானதே. பிரஜைகள் சொல்வதைப் போலவே தேசிய முதலாளித்துவ சிந்தனை அல்லது தேசியவாதம் என்பது வளர்வதற்கு நிச்சயமாக தேசிய முதலாளித்துவம் என்ற பலமான வர்க்கம் அவசியமில்லை.

ஆனால் அவர்களுடைய கருத்துப்படியே பாட்டாளிவர்க்கம் இல்லாத சூழலில் பாட்டாளிவர்க்க சிந்தனையை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமை சக்திகள் யார்? இல்லாத ஒரு வர்க்கத்தைப் புதிதாக உருவாக்கி அதன் பிறகு புரட்சி நடத்துவதா? இல்லை இந்த சிந்தனையைக் கொண்டிருக்கிற இதனை நோக்கி வழி நடத்தப்படக்கூடிய அல்லது அதன் வழி வரக்கூடிய சமூகத்தின் மிகவும் கீழ்தட்டிலுள்ள உறுதிவாய்நத ஒரு வர்க்கமே இந்த சிந்தனைப் போக்கின் தலைமை சக்தியாக முடியும். இது ஆழமான விவாதத்திற்குரிய விடயமெனினும் இதுவே உண்மை நிலை. இந்த அடிப்படையில்;தான் இருக்கின்ற தேசியவாத அலைக்குத் தலைமை தாங்கும் வர்க்கம் எது? இலலாத ஒரு வரக்கமல்ல, அதாவது பிரஜகள் சொல்வதைப் போல் ‘மார்க்ஸிச நூல்களில் கூறப்படுகின்ற’ பாட்டாளிவர்க்கமோ அல்லது தேசிய முதுலாளித்துவ வர்க்கமோ அல்ல. ஒரு போராட்டத்தை உறுதிமிக்க ஒரு வர்க்கமோ பிரதிநிதிப்படுத்த் முடியும். இந்த அடிப்படையில் சீனப் புரட்சியின் போது தேசிய முதலாளிகளும், பாட்டாளிவர்க்க சிந்தனை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களும் தேசியவாதத்தினை தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்றனர். எமது தேசத்தில் தரகு முதலாளித்துவ சக்திகள் அல்லது ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகள்தான் தேசவிடுதலைக்கோஷத்திற்குரிய தலைமை சக்திகளாக அமைய முடியும். தேசிய முதலாளிகள் அல்ல. LTTE இனர் இதில் எந்த வர்க்கத்தின் பிரதிநிகள்? நிச்சயமாக வறிய கூலி விவசாயிகளின், வறிய கூலித்தொழிலாளர்களின் பிரதிநிதிகளல்ல். மேலும் நிலப்பிரபுத்துவத்தோடு இணைந்த மத்தியதர வர்க்கச் சிந்னைப் போக்கினைக் கொண்டவர்களாக இவர்கள் இருக்கலாம் என்பது இன்னொருவாதம். ஊசலாட்டம உணர்வுள்ள இந்த மத்தியதர வர்க்கம் ஆதிக்கத்தில் பலமாகவுள்ள ஒரு வர்க்கத்தின் பக்கத்திலேயே சார்ந்து விடமுடியும. இலங்கையில் தேசிய முதலாளிகளின் இருப்பு சாத்தியமலலை என்ற அடிப்படையில் LTTE தரகுமுதலாளித்துவ சக்தி என்று சமர் கூறியது மேற்குறித்து வாதத்திலிருந்தே!

சுவீடனிலிருந்து நோர்வே பிரித்துச்சென்றபோது, நோர்வேயில் தேசியமுதலாளிகளின் ஜனநாயகத்திற்கான போராட்டமாகவே அது அமைந்தது. இலங்கையின் குறிப்பான சூழல் அடிப்படியானதல்ல. வலுவான தரகு முதலாளித்துவம், நிலப்பிரவுத்துவ ஆதிக்க சக்திகள் ஒரு பக்கத்திலும், இன்னொரு பக்தில் கூலித் தொழிலாளர்கள், வறியசூலி விவசாயிகள் என்ற பிரிந்து போய்கிடக்கிறது. இடையில் தரகு முதலாளித்துவத்தை எட்டிப்பிடிக்க முயலுக்கின்ற மத்தியதர வர்க்கத்தின் மேலணிகளும், நாளாந்தம் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அதன் கீழணிகளுமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு வர்க்கமும் தனது தேவைக்காக தேசிய கோஷத்தைப் பயன்படுத்திக் கொள்ளும். இதனை அரசியல் ஏமாற்றுக்காகவும், நிதிக்கொள்ளைக்காகவும், பல தடவைகள் முதலாளித்துவ வர்க்கத்தினர் குடியரசு முழக்கங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் ஒரு சிந்தனையாளர். ஒரு குறித்த நாட்டில் நிதிக் கொள்ளையை வலுவாக நடத்துகின்ற வர்கக்ம அல்லது ஆதிக்கத்தின் மிகவும் கீழ் நிலையிலுள்ள வர்க்கம் தனது தேவைக்காக தேசியக் கோஷத்தைப் பயன்படுத்திக் கொள்ளும். இந்த வகையில் தமிழீழ தேச விடுதலைப் போராட்டத்தை ஆதிக்க செலுத்தும் தரகு முதலாளித்துவ வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. சீனாவில் இந்த நிதிக் கொள்ளை நடத்துவதில் தேசிய – தரகு முதலாளிகளுக்கிடையில் நிலவிய போட்டியின் விளைவுதான், தேசிய முதலாளிகளின் தரகு முதலாளித்துவத்திற்கு எதிரான போராடடமாகும். ஆனால் இந்த சூழலில் தரகு முதலாளிகளின் பக்கத்தில் இருந்த ஏகாதிபத்திய சார்பு நிலைக்கு, எதிரான ஒரு போக்கு தேசிய முதலாளிகளிடம் இருந்ததை முற்றிலும் மறுக்கமுடியாது.

இதைவிட தூண்டிலில் சொன்னதுபோல LTTEஐயும் தரகு முதலாளித்துவத்தின் சில இயல்புகளையும் பொருத்திப் பார்ப்பதன் மூலம் LTTEஐ தரகு முதுலாளித்துவ சார்பானவர்கள் என்று சொல்லிவிட முடியாது என்கின்ற வாதத்தில் ஒரு மயக்கமான நிலை இருக்கின்ற போதிலும், இவர்களால் கூட, LTTE யார்? அந்தக் குழுவிற்குப் பின்னாலுள்ள சமூக சக்திகள் யார்? என்ற விவாதத்திற்கான ஒரு குறித்த புதிய அடிப்படையையாவது தரமுடியாமல் இருக்கிறது என்பது துர்பாக்கியமானதே. LTTE தேசியசக்திகள் என்று அடித்துக் கூற என்ன நியாயமான காரணங்கள் இருக்கின்றன என பிரஜைகள் சொன்னால் அதனைத் தொட்டு கருத்துத் தர்க்களினூடாக ஒரு முடிவுக்கு வர வாய்ப்புண்டு.

LTTE சிறிலங்கா இராணுத்தைக்கொன்று போடுகிறது. இந்திய இராணுவத்துடன் உக்கிரமாக மோதியது என்ற இயல்புகளைக் மடடும் வைத்துக்கொண்டு, LTTE இடம் தேசியத்தன்மை இருப்பதாக கொச்சையாகக் கூற முடியாது. மக்கள் யுத்தம் - சமரன் குழுவினர் LTTE இனரின் போராட்டத்தை ஆதரித்து எழுதிய பிரசுரத்திலும், LTTE சிறிலங்கா அரசின் மோதலின் தொடர் இருப்பினால் LTTE இன் இந்தத் தாக்குதல்களை வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமாக கற்பனை செய்து கொண்ட LTTEஐ தேசிய சக்திகளாகச் சித்தரிக்க முயன்றுள்ளனர். LTTE - சிறிலங்கா அரசுச் சண்டையில் ஆயிரக்கணக்கான பாலகர்களை LTTE பலி கொடுத்திருக்கிறது. பல சிங்கள இராணுவத்தினர் செத்துப்போனார்கள். இதில் முதலாவது தியாகம் என்றும் இரண்டாவதை வெற்றி அல்லது வீரம் என்றும் வர்ணிக்கிறார்கள் இவர்கள். இந்த இரண்டும்தான் LTTEஐ இவர்களுக்குத் தேசிய சக்தியாகக் காட்டியிருக்கிறது. LTTEஇன் இந்தப் போராட்டத்தின் அரசியல் அடிப்படை என்ன? இந்த சாவுகளின் அரசியல் விளைவு என்ன என்பதைப் பார்க்க மறுக்கிறார்கள். ரஷ்யாவில் நரோட்னிக்குகளின் சாவு தியாகமாக இருக்கவில்லை. அவர்களின் இலக்குத்தான் எமது பிரச்சினை. ‘இப் போராளிகள் அமைப்புக்களில் எவையேனும் தேசிய இன விடுதலைப் புரட்சிக்கான திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை’ என்கிறது சமரன். திட்டமிடப்படாத யுத்தம் எப்படி தேசிய யுத்தம் ஆகலாம்? எங்கே தேசிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பப் போகிறது? எந்த சக்திகளுடன் அய்க்கியம், யார் எதிரிகள் என்ற குறிக்கோள் இல்லாமல் போராட்டம் தொடர்கிறது. இங்கே இவர்கள் பாட்டாளி வர்க்க சக்திகள் இல்லை என்பது சமரனுக்கும் தெளிவு. அப்படியானால் இவர்கள் யார்? எந்த சக்திகளுடனும் அணிசேரத் தயாரான நிலையிலுள்ள திட்டமற்ற இந்தக் குழு யாருக்குப்பலமாக அமையும்? அல்லது யாரால் பயன்படுத்திக் கொள்ளப்பட முடியும்? என்ற கேள்விகளுக்கு சமரனிடம் பதிலில்லை. நிச்சயமாக இன்றைக்குச் சமூகத்தில் பலம் பொருந்திய ஆதிக்கத்திலுள்ள சக்திகளின் பலாகவே அது அமை முடியும். அந்த வகையில் இலங்கை போன்ற நாடுகளில் ஆதிக்கத்திலுள்ள சக்திகளான தரகு முதலாளித்துவத்தின் பக்கமே LTTE சார்ந்து நிற்க முடியும்.

இங்கே இவர்கள் தேசிய இயல்பு என்று குறிப்பிடுவது LTTE இனரின் விடாப்பிடியான தாக்குதல்களைத்தான். உண்மையில் இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக இவர்களே இவர்களுடன் முரண்பட்டுக் கொள்கிறார்கள் என்பது வேறு விடயம். இந்தத் தாக்குதல்களை தேச விடுதலைப் போராட்டம் என்கிறார்கள். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் 1983 இல் ஒரு தேசிய விடுதலை யுத்தம் என்ற வடிவத்தை எடுத்ததிலிருந்து, அது பல்வேறு இடைக்கட்டங்களைக் கடந்து அது இலங்கை அரசிற்கும் வி.பு களுக்கும் இடையிலான உள் நாட்டு யுத்தம் என்ற வடிவத்தை எடுத்திருக்கிறது. (அடுத்த கலாடி பக் 5) ‘எந்தவொரு தேசவிடுதலை யுத்தமும் ஒரு மக்கள் யுத்தம்’ (அதே நூல்பக்கம் 17) பரந்துபட்ட மக்கள், ஜனநாயக மறுப்பின்மை காரணமாக, அமைப்பு ரீதியாகத் திரண்டு தாங்களின் விடுதலைக்காகப் போராட முடியாமல், அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்டு, அவ் அமைப்புக்களின் பலத்தைச் சாரந்து போரிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் தங்களின் விடுதலைக்காகப் போராட முடியாமல் வெறும் பார்வையாளர்கள் என்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். (அதே நூல் பக்கம 17) எந்த ஒரு தேச விடுதலை யுத்தமும் மக்கள் யுத்தம் LTTE இன் யுத்த தேச விடுதலை யுத்தம் ஆனால் LTTE இன் யுத்தம் மக்கள் பார்வையாளராக வைக்கப்பட்டள்ள யுத்தம். இவ்வாறு முரணான குழப்பங்களை சமரன் தனக்குத்தானே கொண்டிருப்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்தக் கட்டுரையில், LTTEஐ தேசிய சக்தியாக முன் நிறுத்துவதற்கான அடிப்படைக் காரணமாக இந்திய இராணுவத்திற்கும், இலங்கை இராணுவத்திற்கும் எதிராக LTTE நடாத்திய தாக்குதல்களும், அதன் விடாப்பிடியான யுத்தத்தையுமே முன் வைக்கிறது. இந்த யுத்தங்களின் தோற்றம், பற்றியதும் தமிழீழ தேசிய விடுதலை போராட்டம் தொடர்பானதுமான வரலாற்று ரீதியான நோக்கு நிலை எதுவுமின்றி சண்டையை மட்டும் தனிமைப்படுத்திப் பார்த்து LTTE ஐ நியாயப்படுத்தியிருக்கிறது சமரன். இந்திய அரசம் இலங்கை அரசம் உடன்பக்கை (ராஜீவ்-ஜெயவர்தனா ஒப்பந்தம்) செய்து கொண்டிருந்த காலப்பகுதியில் LTTE இனால், நுசுழுளு தவிர்ந்த ஏனைய குட்டி முதலாளித்துவக் குழுக்கள் ஈழப்பகுதிக்குள் நுழைய முடியாதவாறு தடை செய்யப்பட்டிருந்தன. இந்தக் குட்டி முதலாளித்துவக் குழுக்களை LTTE தனது பாசிச நடவடிக்கைகளுக்கூடாக இந்தியா பக்கம் முற்றாக இறுக்கி விட்டிருந்தது. ஏற்கனவே ஊசலாடிக் கொண்டிருந்த இந்தக் குழுக்கள், தமது குழு நலன் நிலை நாட்டிக்கொள்ள தமிழ் மக்களின்மொத்த நலனையும் இந்தியாவிடம் அடகு வைத்துவிட்டு LTTE இற்கு எதிராகப் போராடுதல் என்பதயே இறுதி இலட்சியமாகக் கொண்டன. (பிற்காலத்தில் மொத்த மக்கள் மீதும் தமது காட்டுமிராண்டித்தனத்தை இந்திய இராணுவத்தோடு இணைந்து இக் குழுக்கள் அரங்கேற்றின) இதனால் இந்தக் குழுக்களைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியாவிற்கு சிரமம் இருக்கவில்லை. இனி LTTEஇன் குழு நலனைத் திருப்பதிப்படுத்த வேண்டியதே இந்தியாவின் முக்கிய பிரசசினையாக அமைந்தது.

1987ய+லை சமாதான ஒப்பந்தம் செய்யப்ப்டது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதும் தமிழ் பேசும் மக்கள் ஒருவித மகிழ்ச்சியை அடைந்தனர். அரசின் அடக்கு முறைக்கு மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்த மட்டுநகர், திருமலை மக்கள் குறிப்பாக ஒருவித நிம்மதியை பெற்றுக் கொண்டதாக உணர்ந்தனர். (Broken palmyra)

வடமராட்சி ‘ழிநசயவழைn டiடிநசயவழைn’ முடிந்த பின்னர், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்தியத் தூதுவராலயத்தைச் சேர்ந்த திரு.ப+ரி என்பவருடன் LTTE பேச்சுவார்தை நடாத்திய பின்னர், LTTEஐ இந்தியா, தமிழ் மக்களின் தனியான தலைமையாக அங்கீகரித்து விட்டதாக யாழ், தமிழ் பத்திரிகைகள் மூலமாகவும், இந்தியாவிலும், இலங்கையிலும் அறிக்கை விடுத்தனர். ராஜீவ்காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகக் கூறிக்கொண்டு, திரு.பிரபாகரன் (24 ய+லை 87) இந்திய விமானப்படை ஹெலிக்கொப்டரில் (Helicopter) யாழ்ப்பாணம் சுதுமலையிலிருந்து டெல்லிக்குப் பயணமானார்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நடவடிக்கை தொடர்பாக கொழும்பு ஆராய்ந்து கொண்டிருந்தது. ஆனால் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட, பிரபாகரன் திரும்பி வரவில்லை. 30 ய+லை இந்திய இராணுவம் பாலாலிக்குள் நுழையத் தொடங்கியது. அப்போது LTTEஇன் பிரச்சனை பிரபாகரனைப் பாதுகாப்பாக யாழ்ப்பாணம் கூப்பிடுவது தொடர்பாகவே இருந்தது. சந்திக்குச் சந்தி பிரபாகரனின் படங்கள் வைக்கப்பட்டு தோணரங்கள் கட்டப்பட்டு ‘தலைவர் எங்கே’ என்ற கோஷத்தின் கீழ் போராட்டங்கள் நடந்தன. ஆகஸ்ட் 2, பிரபாகரன் பலாலியிலிருந்து இந்திய இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு சுதுமலையில் மீண்டும் விடப்பட்டார். பிரபாகரன் ராஜீவுடன் நடத்திய பேச்சுவார்த்தை என்ன? அது எந்த அடிப்படையில் அமைந்தது என்பது ஆரம்பத்திலிருந்தே கேள்விக் குறியாக அமைந்தது. மோதத் தொடங்கியதும், விடுதலைப் புலிகளாலும், இந்திய அரசாலும் இவை வெளிச்சத்திற்கு வந்தன. இந்த விடயத்தில் ராஜீவ் LTTE இற்கு அளித்த உறுதி மொழிகளை பிரபாகரன் ப+ரணமாக ஒப்புக் கொண்டிருந்தார.

1. தீர்வுத் திட்டத்திலுள்ள குறைபாடுகள் தீர்த்து வைக்கப்படும்.
2. விடுதலைப்புலிகளின் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு இடைக்கால அரசு நிறுவப்படும்.
3. தமிழ் மாநில பொலிஸ் நிர்வாகம் புலிகள் வசம் ஒப்படைக்கப்படும்.
4. இந்திய சமாதானப்படை தமிழ் மக்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கும்.

இந்த உறுதிமொழிகள் தொடர்பாக LTTEஇன் ‘இந்திய இலங்கை ஒப்பந்தம் - விடுதலைப்புலிகள் நிலைப்பாடு’ என்ற வெளியீட்டில் பின்வருமாறு கூறப்பட்டது.

‘பாரதப் பிரதமரின் உறுதிமொழிகளை அடுத்து நாம் ஆயுதங்களைக் கையளிக்க இணங்கினோம். தமிழ் மக்ளின் நலன்கள் பேணப்படும் பட்சத்தில், இந்திய இலங்கை ஒப்பந்த அமுலுக்கு ஒத்துழைப்பதாகக் கூறினோம்’

‘நாம் வாக்களித்தபடி கணிசமான தொகையில் எமது ஆயுதங்களை இந்திய அமைதிப்படை வசம் ஒப்படைத்தோம். இந்தியாவுடன் நல்லுறவைப் பேணும் நல்லெண்ண முயற்சியாக, இந்திய இலங்கை ஒப்பந்த அமுலுக்கு எமது ஒத்துழைப்பின் அறிகுறியாக நாம் ஆயுதங்களைக் கையளித்தோம். இடைக்கால அரசு நிறுவப்பட்டதும் எஞ்சிய ஆயுதங்களையும் கையளிப்பதாக வாக்குறுதியளித்தோம்.’

4 ஆகஸ்ட் 1987 சுதுமலையில் LTTE இனால் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வே.பிரபாகரன் பேசுகையில்.

‘உங்கள் பாதுகாப்பிற்காக, உங்கள் விமோசனத்திற்காக, உங்கள் விடுதலைக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்பு என்ற பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்’

இது தொடர்பாக மேற்குறித்த அதே நூலில் -

‘பிரபாகரன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். பாரதம் மீதான தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார். தமது மக்களின் நலன் பேணப்படும். தமது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் ஒப்பந்த அமுலுக்கு இசைவாக ஆயுதங்களை ஒப்படைத்தார்.’ இதன் பிறகு LTTE இனது ஊதுகுழல்களாத் தொழிற்பட்ட EROS உம் ஆயுதங்களை ஒப்படைத்தது. LTTE இனரும் ஆயுத ஒப்படைப்பைக் கட்டம் கட்டமாக நிகழ்த்தினார்.

இந்திய அமைதிகாக்கும்படை இலங்கையில் தலையிட்டதும் அனைத்து ஈழப்போராளி அமைப்புக்களுக்கும், ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அது ஆணை பிறப்பித்தது. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்து விட்டது. (அடுத்த காலடி பக்.8)

பிரபாகரனுக்கும் ராஜீவிற்கும் இடையில் நடத்த பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் இறைமையையும் தேசிய நலன்களும் உத்தரவாதப்படுகிறதா? ஈழக் குழந்தைக்குக் கூட இதுதெட்டத் தெளிவாக விளங்கும். இங்கே முதன்மைப்படுத்தப்படுவதெல்லாம் தமிழ் பேசும் மக்ளின் தேசிய நலன்களல்ல. விடுதலைப் புலிகளின் அதிகார வெறித்தனமும், அதனது தனிப்பட்ட குழு நலன்களும்தான்.

இந்த ஒப்பந்தம் தமிழ்மக்களின் பிரச்சினை பற்றிய அடிப்படையையே அடியோடு மறுக்கிறது. அடிப்படையிலேயே தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளோடு முரண்படுகிறது. இதனையே விடுதலைப் புலிகள்

‘இலங்கை மக்கள் ஒரு பல்லின சமுதாயமாக ((Plural society) வாழ்கிறார்கள். இதில் தமிழர்கள் ஒர் இனக்குழு (ethnic group} என்ற ரீதியில் இந்திய இலங்கை ஒப்பந்தம், ஈழத்தமிழினத்திற்கு வரைவிலக்கணம் அளிக்கிறது.

இந்திய அரசின் இந்த விளக்கம் எமது போராட்டத்திற்கு மூலமாகவுள்ள தேசிய இனக் கோட்பாட்டையும், தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரசசினையையும், குழிதோண்டிப் புதைத்து விடுகிறது (இ.இ.ஒப்பந்தம். வுp.பு.நிலைப்பாடு.பக் 5)

தமிழ் பேசும் மக்களின் உரிமையை இவ்வாறு அடிப்படையிலேயே நிராகரிக்கின்ற இந்த ஒப்பந்தத்தைப் புரிந்து வைத்திருந்த LTTE எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. எந்த அடிப்படையில் ஆயுதங்களை கைகயளிக்க முன் வந்தது. ராஜீவுடன் நடந்த பேரத்திலும் முதன்மைப்படுத்தப்பட்டது. LTTEஇன் குழு நலனே தவிர, தமிழ் பேசும் மக்களின் தேசிய நலன்களல்ல. இந்தக் குழு நலன்களின் அடிப்படையிலேயே ஆயுதம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு தமது சொந்த நலனுக்காக இந்தியாவின் பாதங்களில் பிரபாகரன் விழ்ந்து கிடந்தார். மிகுதிப் பகுதி ஆயுதம் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படட பின்னர் ஒப்படைக்கப்படும் என்றது LTTE.

ஒரு பகுதி ஆயுதம் ஒப்படைக்கப்பட்டு இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுகின்ற அந்த இடைக்காலத்தில் நிர்வாக சபை அமைக்கப்படுகின்ற அந்த இடைக்காலத்தில் நடந்தது பச்சையான அதிகாரப்பேரம் மட்டும்தான். அந்த அதிகாரப் பேரத்தில் தோல்வி கண்ட LTTEஇன் மன வெளிப்பாடுதான் IPKF மீதான தாக்குதல்களும், ஆயிரக்கணக்கான மக்களதும், பேராளிகளினதும் உயிரிழப்புகளுமாகும்.

இடைக்கால நிர்வாக சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த இடைக்கால நிர்வாக சபை மாகாணசபைத் தேர்த்ல் நடைபெறும் வரை நீடிக்கும் என்றும், இதில் எட்டு உறுப்பினர்கள் பங்கு பெறுவார்கள் என்றும், LTTE மூன்று பேர் என்றும், TULF இரண்டு பேர், அரச ஊழியர் இரண்டு பேர், ஏனைய குழுக்கள் ஒரு ஆள் என்ற அடிப்படையில் இவ் உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்றும் இந்திய தரப்பில் முன் மொழியப்பட்டது.

இந்த வேளையில் இந்திய இராணுவத்துடன் LTTE அதிகமான உறவுகளை வளர்த்துக் கொண்டதோடு, LTTE இன் மேல் மட்ட உறுப்பினர்களுக்குக் கூட, இத் தீர்விலும் இந்தியாவிலும் கணிசமான நம்பிக்கைகள் வளர்த்தன. இந்தச் சந்தர்ப்பத்தில்தான், LTTEஇன் யாழ்ப்பாணத் தளபதி புலேந்திரனதும் திருமண வைபவங்கள் நடந்தன. இத் திருணமணத்திற்கு இந்திய இராணுவ உயரதிகாரிகளும் சமூகமளித்து இவர்களோடு ஒரே மேசையில் விருந்துண்டு மகிழ்ந்தனர்.

ஆனால் இந்தியா LTTEஐ முழுமையாக நம்பத் தயாராக இருக்கவில்லை. LTTEஉம் மொத்த தமிழ் மக்களின் நலனை விட குழுநலனையே தூக்கிக் பிடித்தது. அதற்காக எந்த மேலாதிக்க சக்திக்கும் தமது நலனை அடகு வைக்கத் தயாராக இருந்தது. ஆனால் இந்தியா இதற்கு இணங்கி வருமா என்ற சந்தேகம் ஒரு புறத்தில் LTTEஇற்கு இருந்த அதே நேரம், ஆயுதமற்ற பேச்சுவார்த்தை அரசியல் குழுவாக LTTE தொடர்ந்து நிலைகொள்ள முடியாது என்பதும் LTTEஇற்கு தெளிவாகத் தெரியும். இதனால் இந்த அடிப்படையிலேயே தனது தொடர் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளல் என்ற வகையிலேயே LTTEஇன், இந்தியாவுடனான பேச்சுக்கள் அமைந்தன. மாதம் அய்ம்பது கோடி ரூபாய்வரை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ள LTTE இணங்கியது. இதனைப் பின்னர் தனது இராணுவச் செலவிற்காகப் பெற்றுக் கொண்டதாக LTTE அறிவித்தது.

இதேவேளை இந்தியாவிற்கும் LTTE தொடர்பான பல சந்தேகங்கள் இருந்தது. கடந்த காலங்களில் இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளுடன் LTTE இற்கு இருந்த உறவுகளும், கிட்டு போன்ற LTTEஇன் தளபதிகளுடாக இலங்கை அரசுடன் LTTEஇற்கு இருந்த உறவுகளும், பாகிஸ்தான் சார்பான இந்தியாவின் தீவிரவாதக் கழுக்களுடன் LTTE வைத்துக் கொண்டிருந்த உறவுகளும், இந்தியாவிற்கு LTTE மீது முழு நம்பிக்கையடைய தடையாக அமைந்தன.

இந்நிலையில் இந்தியாவின் ஆசியுடன் உருவாகி 3ளவயச என்ற பிரபலமாகியிருந்த ENDLF என்ற துரோகக் கும்பல் மக்கள் முன் தோன்றிற்று. யாழ் கடற்கரை வீதியில் முதன் முதலாக இந்த துரோகக் குழுவின் முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. இம் முகாம் அமைக்கப்பட்டதும், LTTE ஆலும், அவர்களின் கையாட்களினாலும், முகாம் தாக்கப்பட்தைத் தொடர்ந்து துப்பாக்கிகளுடன் மக்கள் முன் தோன்றினர். இவ்வாறு பல இடங்களில் இந்தியாவின் அய்ந்தாம் படையாகச் செயற்பட்ட குழுக்களின் முகாம்கள் நிறுவப்பட்டன.

இதனைத் தொடரந்து யாழ் பல்கலைக்கழகத்தில் இக் குழுக்களுக்கு எதிரான வெகுஜனங்களினதும், மாணவர்களினதும் நடவடிக்கை தொடர்பாக ஒரு மாணவர் பொதுக்கூட்டம் LTTEஇற்கு ஆதரவான மாணவர்களினால் கூட்டப்பட்டது. இப்பொதுக் கூட்டத்தில் இக்குழுக்களை; எதிர்த்துச் செயற்பட குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன் வரவேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பொதுக் கூட்டத்தின் இறுதியில் LTTE இனர் அவ்வமைப்புக்கள் மீதான தடையை நீக்கி சுதந்திரமாக இயங்கக் கூடிய ஒரு ஜனநாயகத் தன்மையை வழங்க வேண்டும் என்றும், இதனூடாகவே அவ் அமைப்புக்களின் இந்திய சார்பான நிலையைக் குறைக்கலாம் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் கருத்தை LTTEஇனரிடம் மாணவர் பிரதிநிதிகள் கூறிய போது LTTEஇனர் அது தொடர்பாக ஆலோசிப்பதாகக் கூறினார்.

சில நாட்களின் பின்னர் ஏனைய அமைப்புக்களிலுள்ள போராளிகளை LTTE தனது அமைப்பினுள் உள்வாங்கத் தயாராக இருப்பதாக அறிக்கை விடுத்தது.

ஆனால், ஏனைய துரோகக் குழுக்கள் ஆயுதங்களுடன் பரவலாக உலாவத் தொடங்கினர். 1, செப்ரெம்பர் 87 இல் குளப்பிட்டிச்சந்தியில் காவலுக்கு நின்ற LTTE உறுப்பினர், வான் ஒன்றில் வந்தவர்களால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மானிப்பாய், K.K.S சுன்னாகம் ஆகிய பகுதிகளில் LTTE இனர் துரோகக் குழுக்களால் தாம் தாக்கப்படுவதாக ஒலி பெருக்கிகளில் அறிவித்தனர்.

15, செப்ரெம்பர் 87 அன்று அய்ந்து கோரிக்கைகள் முன்வைத்து LTTEஇன் அரசியல் பொறுப்பாளராக இருந்த திலீபனின் பிரபல சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பமானது. திலீபனை உண்ணாவிரதம் இருக்க வைத்துவிடடு மறுபுறத்தில் LTTEஆனது இந்திய தூதுவராக இருந்த டிக்ஸிற் உடன் அதிகாரப் பேரம் நடத்திக் கொண்டிருந்தது. 26 செப்ரெம்பர் 1987, உண்ணாவிரதத்தின் பன்னிரெண்டாவது நாளில் இறந்து போனார்.

திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பித்த போது முன்வைக்கப்பட்ட
கோரிக்கைகள் பின்வருமாறு


1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு

 என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.


3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு வேலைக்ள நிறுத்தப்பட வேண்டும்.


4. வட கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.


5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள் பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து LTTEஇன் அரசியல் பிரிவுத் தலைவன் உண்ணாவிரதம் இருந்த அதே நேரம் இந்தியாவிற்கும், LTTE இற்கும் இடையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாகவே பேச்சுக்கள் நடந்தன. இந்தக் கோரிக்கைகளும், உண்ணாவிரதமும் திலீபனின் இறப்பும் அதிகாரத்தை விடுதலைப் புலிகள் வசம் கைப்பற்றிக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட துருப்புச் சீட்டுக்களே ஒழிய வேறில்லை. இங்கெல்லாம் விடுதலைப் புலிகளின் தனிப்பட்ட குழு நலன்களே அதி முக்கியத்துவம் றெ;றிருந்தன. எந்த வகையிலும் தமிழ் பேசும் மக்களினது நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

28 செப்ரெம்பர் 87இல் LTTE இந்திய அரசின் அதிகார பேரம் ஒரு முடிவுக்கு வந்தது. திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாக சபையின் உறுப்பினர்கள் எட்டிலிருந்து பன்னிரெண்டாக உயர்த்துவது என்றும், அதில் LTTEஉறுப்பினர் தொகையை மூன்றிலிருந்து ஏழாக உயர்த்துவது என்றும் முடிவு காணப்பட்டது. இதற்கு இணங்கிய LTTE பதினைந்து பேரைத் தெரிவு செய்து இலங்கை ஜனாதிபதியின் முடிவுக்கு அனுப்பியது. இத்தோடு திலீபன் கோரிக்கைகள் நின்று போயின.

இதனால் இன்றைக்கு வரை எதற்காக திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் என்ற கேள்வி விடை காணப்படாததாகவே கிடக்கிறது.

‘Why then did Thileepan die? That was a question for which no satisfactory explanation could be found’ (Broken palmyra)

இந்தப் பேரத்தின் ஒர பகுதியாகவே LTTE இற்கு மாதா மாதம் அய்ம்பது கோடி ரூபாய் தருவதாக இந்தயா ஒப்புக் கொண்டதாக இருதரப்பாலும் பின்னர் ஒப்புக் கொள்ளப்பட்டது.

பின்னர் 02 ஒப்ரோபர் 87, குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 பேர் பருத்தித்துறை கடற்பகுதியால் சென்று கொண்டிருந்த ;போது ‘ஆயுதங்களுடன் சென்றனர்’ என்ற குற்றச்சாட்டின் பெயரில் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் LTTE இனால் இடைக்கால நிர்வாக சபையின் தலைவர் பதவிக்கு, இலங்கை ஜனாதிபதியின் தெரிவுக்காக அனுப்பி வைக்கப்படட மூன்று பெயர்களில் N.பத்மநாதன் என்பவர் தொடர்பாக முரண்பாடுகள் முற்றிற்று. கைது செய்யப்பட்டவர்களை கொழும்பு கொண்டு செல்ல முற்பட்ட போது சயனைட் அருந்தி குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரெண்டு பேர் மரணமாயினர். இதனோடு கூடவே LTTE இனால் K.K.S இலுள்ள இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் பு.ஆ.ஜெயமான, யு.பு.ஆஇ கஜநாயக்க ஆகிய சிங்களவர்களை 6 ஒக்ரோபர் காலை சுட்டுக் கொன்று போட்டனர். பின்னர் ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்த இரு சிங்களவர்களும் LTTE இனால் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் பன்னிரெண்டு பேரும் கொல்லப்பட்டனர். இத்தோடு இந்தியா – LTTE உறவு கேள்விக் குறியாக அமைந்தது. 10 ஒக்ரோபர் மாலை இரண்டு மணி அளவில் LTTE-IPKF ராணுவரீதியான மோதல் ஆரம்பமானது.

‘எமது இயக்கத்தால் அன்றே நிராகரிக்கப்பட்ட மாகாணசபைத் திட்டத்தைத்தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் இன்று முன்வைக்கிறது.’

(இ.இ. ஒப்பந்தம் வி.பு நிலைப்பாடு பக் 9)

இத்திட்டம் தமிழ் மக்களின் அடிப்படையான பிரச்சினைகள், அவர்களது நியாயமான அரசியல் அபிலாசைகளை ப+ர்த்தி செய்யுமென எதிர்பார்ப்பது அசட்டுத்தமாகும்.
(அதே நூல் பக்கம்9)


இவ் ஒப்பந்தம் இந்தியாவினதும்;, இலங்கையினதும் ஆளும் வர்க்க நலன்களை மட்டுமே பேணுகிறது.
(இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சினையும், வெளியீடு: அரசியல் பிரிவு வி.பு.பக் 15)


இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழீழ மக்களின் நலன்களையோ அன்றி அவர்களின் அரசியல் அபிலாசைகளையோ, பாதுகாப்பினையோ பேணவில்லை. மாறாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள இனவாத ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்டு வருவதற்கு வழிகோலியது. (அதே நூல்பக். 18)


இவ்வாறான வெற்றுக் கோசங்கள் மூலம் இந்திய அரசுடன் எதற்காக அதிகாரபேரம் நடத்தியது? இங்கே LTTE இற்கு முக்கியமானது யாருடைய நலன் என்பது மிகவும் வெளிப்படையாகவே விளக்கப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் சண்டை IKEF - LTTE தொடங்கி நான்கு மாதங்களுக்குப் பிறகு 24 பெப்ரவரி 88 அன்று LTTE தலைவரால் கையெழுத்திடப்பட்டு அய்.நா மனித உரிமைகள் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் LTTE இன் நலன் தமிழ் பேசும் மக்களின் தேசிய நலனா?; என்பதை நிரூபணமாக்கிவிட்டது.

உண்மையில் இந்த மோதல் ஆரம்பமாவதற்கு முதல் நடந்த பேரங்கள் LTTE இற்கும், இந்திய அரசிற்குமிடையிலான உறவில் ஏற்பட்டிருந்த நம்பிக்கையை வலுவிழக்கச் செய்ததின் ஒரு விளைவே. LTTE இன் தனிப்பட்ட குழு நலனை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பேரங்கள் அமைந்திருந்ததை LTTE இன் தலைவரால் கூட மறுக்க முடியாதபடி வெளிச்சத்திற்கு வந்துவிடடன. தமது தனிப்பட்ட குழு நலனிற்காக எந்த சக்திக்கும் தம்மை அடகு வைக்க LTTE தயாராக இருந்தது. LTTE யை நியாயப்படுத்துகின்ற சிலர், LTTE ஆரம்பத்தில் இந்தியாவை நம்ப முனைந்தது என்றும், பிறகு இந்தியாவின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மாறும் என்ற சந்தேகம் வலுத்த போது IKPF அய்த் தாக்கத் தொடங்கினர் என்றும் சொன்னார்கள். இவர்கள் LTTE என்ற அமைப்பு வெள்ளையுள்ளம் கொண்ட, ஒன்றுமறியாப் பிரபாகரனின் அமைப்பு என்றும், தாம் பெரிய தத்துவார்த்த கர்த்தாக்கள் என்றும்கற்பனை செய்து கொண்டு அலைகிறார்கள். LTTEஇன் தத்துவார்த்த மூலவேர்களான அன்ரன் பாலசிங்கம், கண்ணாடி சிவக்குமார், சங்கர் போன்றவர்கள் சின்னப் பிள்ளைகளல்ல.

ஐ.நா.மனித உரிமைக் குழுவின் 44 அமர்வின் உறுப்பினர்களுக்கும்
பார்வையாளர்களுக்கும்,
புலிகளிடமிருந்து
24 மாசி 1988

அன்பான பிரதிநிதிகளே,

ஐ.நா தலைமையகத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் நாங்கள் ஜெனிவா உடன்படிககையின் 49ம் ஆண்டின் 1 4 வரையான உடன்படிக்கைகளையும் மேலதிக சேர்க்கைகளான 1,2 என்பனவற்றையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கிறோம்.

இதே நாளில், யுத்த நிறுத்தம் செய்யவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் இந்திய பிரதமரான ராஜீவ் காந்திக்கு புதிய வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறோம். தமிழ் மக்களின் கௌரவம், பாதுகாப்பு, நலன்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமுல்பபடுத்த இந்திய அரசுடன் ஒத்துழைப்பதாக உறுதியளிக்கிறோம்.

இம்மாநாட்டின் உறுப்பினர்கள், பின்வரும் விடயங்களில் தீர்வு காண யுத்த நிறுத்தம் செய்யவும் பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பிக்க இந்தியாவை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

1. ஆயுத ஒப்படைப்பு
2. தமிழ் மக்களின் அடிப்பைட அபிலாஷகளை நிறைவேற்றல்

எங்களுக்கும் இந்திய அரசுக்கும் தமிழ்மக்களின் துயரங்களை குறைக்க உதவி செய்யும்படியும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
உங்கள் உண்மையுள்ள
வே.பிரபாகரன்
தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்

நன்றி : தாயகம்

அவர்களுக்கு இந்தியா யாரென்றும், இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் முன்னமே தெளிவாகத் தெரியும். இந்தக் கூட்டத்தை தேசியசக்திகள் என்று புகழ்பாடிக் கொண்டிருப்பவர்கள், உண்மைகளை மூடி மறதை;துவிட்டு சில சம்பவங்களை மட்டும் தனிமைப்படுதுத்திப் பார்க்கின்ற குருட்டு மனோபாவத்தை விடுத்த, ஆரோக்கியமான விடயங்களை ஆராயும் நிலைக்கு வரவேண்டும் என்பதே எமது அவா! ‘அடுத்த காலடி’யின் கட்டுரையில் தொடர்ச்சியான உண்மைகள் முற்றாக மறைக்கப்பட்டு, சண்டையை மட்டும் தனிமைப்படுததிப் பார்க்கிற தன்மை மேலோங்கி நிற்கிறது.

LTTEஅய்த் தேசிய சக்திகளாகவும், விடுதலை வீரர்களாகவும், பார்க்க முயலுகின்ற ‘சமரன்’ போன்றவை LTTEஇற்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான போரில் அழிந்து போனவர்கள் அப்பாவிப் பொது மக்களும், LTTEஇல் இணைந்து போராடிய 12,13 வயது சிறுபள்ளைகளும்தான். மாறாக LTTEஇன் தலைமையோ அல்லது அதன் மார்க்கமோ அல்ல. LTTE எப்போதும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமானவே தனது செயற்பாடுகளை வரித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் LTTE என்ற அமைப்பின் குழு நலனும், அதன் தலைவர்களின் சொந்த நலனும் பாதிக்கப்படுமானால் LTTE யாருடனும் சமரசத்திற்குப் போக தயாராகவே உள்ளது. மக்கள் மீதோ, தேசத்தின் மீதோ எந்தவித நேசமுமற்ற இந்த சமூகவிரோதப் பாசிசக் கும்பல், தனது குழு நலனைப் பாதுகாப்பதற்காக சிறிலங்கா அரசுடன் பல பேச்சவார்த்தைகளை இந்த போராட்டத்தின் ஆரம்பம் முதலே நடத்தியிருக்கிறது. சிறிலங்கா அரசம் LTTEஉம் அதன் அரசியல் மார்க்கத்திற்குப் பாதகமாக பொதுவாக நடந்து கொண்டதில்லை. 1986இல் சிறிலங்கா அரசு நடத்திய ‘தமிழீழத்தின் குரல்’ என்ற வானொலி ஒலிபரப்புச் சேவை இதற்கு நல்ல உதாரணம். இந்த ஒலிபரப்புச் சேவை LTTE இற்கும், மக்களுக்கும் பிற அமைப்புக்களுக்கும் யாரால் எங்கு நடாத்தப்படுகிறது என்பது தொடர்பாக மர்மமாகவே இருந்தது. விஜிதரன் என்ற மாணவன் கடத்தப்பட்டது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய போராட்டத்தின் போது இவ் ஒலிபரப்பு இம் மாணவன் கடத்தப்பட்டது EPRLF இன் செயல் என்றே அம்பலப்படுத்தியது. LTTE இன் சில இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்தாலும் குறிப்பாக ஏனைய குழுக்களையே விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வானொலி வடமராட்சியின் ழுpநசயவழைn டுiடிநசயவழைn போது சிறிலங்கா அரசாலே நடத்தப்படுகிறது என அம்பலமாக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலே ரெலோ அழிக்கப்பட்ட போது கல்வியங்காடு என்னுமிடத்தில் இலங்கை விமானப் படையும் ரெலோ குழுவினரைத் தாக்கியது. இந்த மோதலின் போது சிறிலங்கா இராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயலவோ அல்லது தமிழ் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தவோ இல்லை. சிறிலங்கா அரச அப்படி முயன்றிருக்குமானால், இந்த மோதலில் ரெலோ முற்றாக அழிக்கப்பட்டிராது. இங்கே நாம் ரெலோஇ சிறிலங்கா அரசு ஆகியவற்றை நியாயப்படுத்த முயலவில்லை. ரெலோ என்ற துரோகக்குழு சரியான ஒரு சக்தியால் அழிக்கப்பட வேண்டியதே என்பதில் நாம் உடன்படுகிறோம். ஆனால் ஏன் சிறிலங்கா அரசு LTTE இற்கு சாதகமான இந்த முயற்சிகளை மேற்கொண்டது என்பது இன்றைக்கும் கேள்விக்குரியதாகவே பலர்முன் உள்ளது.

ஈ.பிஆர்.எல்.எவ் இனை LTTE அழிக்க முற்பட்ட போதும் இவ்வாறே நடந்தது. ஈ.பிஆர்.எல்.எவ் - LTTE மோதலின் போது சில நுP உறுப்பினர்கள் சிறிலங்கா அரசு முகாம்களுக்குச் சென்று முறையிட்ட போதும் இராணுவம் வெளிவரவில்லை.

எப்போதுமே சிறிலங்கா அரசினால் LTTE இன் அரசியல் வழிக்கோ, வளர்ச்சிக்கோ தடை இருந்ததில்லை. LTTE இலங்கையில் வாழ்ந்தால்தான், சிறிலங்கா அரசும் வாழ முடியும் என்ற நியாயம் உணரப்பட்டதின் விளைவே இது. இரண்டு பக்கத்திலும் யுத்தம் என்ற ப+ச்சாண்டியைக் காட்ட முடியாமல் போகும் போது சமரசம் என்ற பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இப்போதும அது உடனடியாக நடத்தப்படக் கூடியதாகவே உள்ளது. இந்த வாய்ப்புக்களை ‘அடுத்த காலடி’யின் கட்டுரை கூட மறுக்கவில்லை. ‘அடுத்த காலடி’யானது அதற்கடுத்த காலடியை வைக்கும் முன்னமே சமரசம் வந்து சேர்ந்து விடலாம். சிலவேள மீண்டும் போர் தொடங்கலாம். இந்த சமரசத்திற்கும் இப்போதே முற்போக்குச் சாயம் ப+சி வைத்திருக்கிறது சமரன் வெளியீடு.

1. இந்த யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினருமே ஒரு நீண்ட யுத்தத்தை நடத்துவதற்கான அந்நிய உதவியை குறிப்பாக இராணுவ உதவியினை நாட வேண்டிய நிலை தோன்றலாம். இந்தக் கறிப்பிட்ட கட்டத்தில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கான ஒரு வாய்ப்பு தோன்றலாம். (பக் 16)

2. பரந்துபட்ட மக்கள் கூட ஜனநாயக மறுப்பின் காரணமாக அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்டு அவ் அமைப்புக்களின் பலனை சார்ந்து போரிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் தங்களின் விடுதலைக்காகப் போராட முடியாமல் வெறும் பார்வையாளர்கள் என்ற நிலையிலேயே வைக்கப்படடு:ள்ளனர். எந்த ஒரு தேசிய விடுதலை யுத்தமும் ஒரு மக்கள் யுத்தமாகும். எனவே இக்கொள்கை ஈழத்தமிழினம் தேச விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்கும் பாதகமாகவும், சமரசத்திற்குப் பணிந்து போவதற்கு வாய்ப்பினை உருவாக்கும் ஒன்றாகவும ;இருக்கிறது. (பக் 17)

(குறிப்பு: LTTEஇன் வரலாறு முழுவதும் ஈழத்தில் ஜனநாயக மறுப்பின்மை வரலாறே.)

3. குறுந்தேசியவாதக் கண்ணோட்டமும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் விடுதலைப் போரிற்கு ஆதரவாகத் திரட்டுவதற்குத் தடையாக இருப்பதுடன் அவர்களை எதிரி தன் பின்னால் திரட்டுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. ஆகையால் குறுந்தேசியவாதமும் தேசிய விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குத் தடையாகவும், எதிரியுடன் சமரசம் செய்து கொண்டு பணிந்து போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. (பக் 17)

4. விடுதலைப்புலிகள் அமைப்பு கடைப்பிடிக்கும் அயலுறவுக் கொள்கை குறிப்பாக ஈழத்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொள்ளாமல், ஏதாவது ஒரு வழியில உதவியைப் பெறுதல் அல்லது இலங்கை அரசிற்கும் இந்திய அரசிற்கும் இடையிலுள்ள முரண்பாட்டை எப்படியாவது பயன்படுத்தி கொள்வது சாத்தியம் என்ற கொள்கையின் அடிப்படையில், அகில இந்திய, தமிழ் மாநில அரசாங்கங்கங்களுடன், அரசியல் கட்சிகளுடனும் விடுதலைப் புலிகள் அமைப்பு உறவு கொள்ளும் கொள்கையும், ஈழத் தமிழினம் விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குத் தடையாகவும், எதிரிகளுடன் சமரசம் செய்து கொண்டு பணிந்து போகும் வாய்ப்பை உருவாக்குகிறது. (பக் 18)

இவ்வாறு சமரசத்திற்கான வாய்ப்பு நிலை எப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவே LTTE ஐ தேசிய சக்திகளாகப் பார்க்கும் அடுத்த காலடியின் சமரன் வெளியீடும் சொல்கிறது. ஒரு ‘தேசிய சக்தியும் தரகு முதலாளித்துவமும்’ சமரம் செய்து கொள்கிற அடிப்படையிலேயே முரண்பட்ட இந்தக் கருத்தினை மக்கள் யுத்தம் குழுவுடன், பாதுகாப்பு பேரவை, Nடுகுவு போன்ற அமைப்புக்களும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஈழ தேசவிடுதலைப் போராட்டத்திற்கு ‘புதுமை’ யான அரசியல் மார்க்கத்தை முன் வைப்பது ஆச்சரியத்திற்குரியதே.

LTTEஇன் பத்து வருட காலச் சண்டையின் விளைவு என்ன? இன்றைய யுத்தத்தின் அரசியல் அடிப்படை என்ன? இன்றைய யுத்தத்தின் அரசியல் அடிப்படை என்ன? என்பவற்றை எல்லாம் இவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.

சர்வதேச போதைவஸ்து கடத்தல்காரர்களுடனும், மொசாட் போன்ற சீரழிவுக் கும்பல்களோடும் இறுக்கமான தொடர்புகளை வைத்துக் கொண்டுள்ள இந்தக் கும்பலை எமது தேசத்தின் தேசியமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில் தமிழ் பேசும் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும். இலாப நோக்கில் மட்டும் மொசாட்டின் ஆயுத விற்பனையில் எத்தனை வீதம் LTTEஇற்குப் போயிருக்கும். விடயங்களையும் சம்பவங்களையும் ஓர் ஆழமான ஆய்வின்றி மேலோட்டமான முடிபுகளை நியாயப்படுத்த் முயல்கிறார்கள் இவர்கள்.

தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வல்லாதிக்க முக்கியத்துவத்தை நாம் அங்கீகரிக்கிறோம். இந்தியாவின் இந்து சமுது;திர சமாதானக் கொள்கையை வரவேற்கிறோம். இநதியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையை மதிக்கிறோம். இந்தியாவின் ப+கோள அரசியல் நலன்களையும வெளியுறவுக் கொள்கைகளையும் கௌரவிக்கிறோம். (இ.ஒ.ஒப்பந்தம் - வி.பு நிலைப்பாடு பக் 23)

தமது நலன்களுக்காக இந்தியாவின் காலடிக்குள் விழ பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் எப்போதும் தயாராகவே இருந்தனர்.

இந்திரா காந்தி இறந்து போனபோது பிரபாகரன் ராஜீவிற்கு எழுதிய கடிதம்.

 (நூல்: பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் பக் 65)

இந்தியாவும் - பிரபாகரனும்

இந்தியாவையும் இந்திய மக்களையும் பிரபாகரன் எவ்வாறு நேசிக்கிறார் என்பதற்கு அன்னை இந்திராமறைவின்போது அவர் வெளியிட்ட அறிக்கையே சான்று பகருகிறது. அந்த அறிக்கையின் ஒவ்வொரு வார்த்தையும் அவரது உள்ளத்திலிருந்து வெளிவந்த உணர்ச்சியின் சிதறல்களாகவே காட்சி தருகின்றன.

மறைந்த அன்னை இந்திராகாந்தி மீது பிரபாகரனும் அவரது தோழர்களும் அளவுகடந்த மதிப்பு வைத்திருந்தனர். மனிதகுலத்தின் ஒளிவிளக்காக அவரைக் கருதினார்கள். துயருறும் தமிழீழ மக்களின் மீது அனுதாபமும், அக்கறையும் கொண்ட மாபெரும் தலைவராகவே அவரைப் போற்றினார்கள். அவர் இறந்த செய்தி பிரபாகரனையும் தமிழீழ மக்களையும் மாபெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அதையொட்டி ராஜீவ்காந்தி அவர்கட்கு பின்வரும் உருக்கமான கடிதத்தை பிரபாகரன் எழுதினார்.

அன்புடையீர்,

அன்னை இந்திராகாந்தி கொடிய கொலைஞர்களால் அகால மரணமடைந்த செய்திகேட்டு நாம் ஆழ்ந்த துயரமும் பேரதிர்ச்சியுமுற்றோம். மனித சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமான இக்கொலை பாதகச் செயலை நாம் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.

ஒடுக்கப்பட்ட மனித குலத்தின் ஒளிவிளக்காகவும், பாரததேசத்தின் உன்னத ஆத்மாவாகவும் திகழ்ந்த ஒரு ஒப்பற்ற பெரும் தலைவரை நாம் இழந்து நிற்கிறோம். தங்கள் குடும்பமும் இந்திய மக்களும் உலகமும் இந்த ஈழு செய்ய முடியாத பேரிப்பால் அடைந்திருக்கும் ஆழ்ந்த துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.


திருமதி இந்திராகாந்தி உலக சமாதானத்திற்காகவும், மனித சுதந்திரத்திற்காகவும் அயராது போராடிய வீராங்கனையாவார். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் ஏகோபித்த குரலாகத் திகழ்ந்தார். தீர்க்கதரிசனத்தோடும் ப+ரண அர்ப்பணிப்போடும் பாரத தேசத்தை சோசலிசப் பாதையில் நிர்மாணம் செய்ய அயராது உழைத்தார். நவபாரதத்தின் சிற்பியாகத் திகழ்ந்தார். இந்தியத் துணைக்கண்டத்தில் ஏகாதிபத்தியத்தையும் அதன் பேராதிக்க சதி வலைப்பின்னலையும் அவர் முழுமூச்சாக எதிர்த்து வந்தார். தேசங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உலகெங்கும் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை அவர் முன்னின்று ஆதரித்துவந்தார்.

அநாதரவான நிலையில் துயருறும் தமிழீழ மக்களின்பால் அன்னை இந்திராகாந்தி எப்போதுமே அனுதாபமும் அக்கறையும் காட்டிவந்திருக்கிறார். ஸ்ரீ லங்கா அரசாங்கம் தமிழ் மக்ளின் அடிப்படை உரிமைகளை நிராகரித்து வருவதனை அவர் எப்போதுமே கண்டித்தார். தமிழ் மக்களின் மீதான இனப் படுகொலையை நிறுத்தியாக வேண்டும் என்று அரசியல் ராஜதந்திர வழிகளில் அவர் ஸ்ரீ லங்கா அரசை நிர்பந்தித்தார். இந்தியாவின் நல்லெண்ண ஆனுசரணையின் கீழ் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் காண்பதற்குத் தனிப்பட்ட முறையில் பெரும் இக்கறை செலுத்தினார். தமிழ் மக்களின் பெருங்காவலராகத் திகழ்ந்த அன்னை இந்திராவின் தனிப்பட்ட அக்கறை மட்டும் இல்லாது போயிருந்தால் எமது தேசமே அழிந்துபோயிருக்கும். தமிழ் விடுதலை இயக்கத்தின் ஆத்மீக வலிமையின் கோபுரமாக அவர் திகழ்ந்தார்.

தமிழ் மக்கள் இந்திராவை என்றும் அன்புடனும், நன்றியுடனும் பெருமதிப்புடனும் நினைவு கூர்வார்கள். தேசியரீதியிலும், சர்வதேச ரீதியிலும் தலைமைப் பொறுப்பை எற்றுள் நீங்கள், எந்த உன்னத இலட்சியங்களுக்காக அன்னை இந்திரகாந்தி வாழ்ந்து, போராடி, இறந்தாரோ அந்த இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்வீர்கள் என்றே நாம் ப+ரண நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

நீங்கள் வெற்றி பெற எமது நல்வாழ்த்துக்கள்.


இவர்கள் தங்கள் குழு நலனுக்காக எப்போதும் எந்த சக்திகளுடனும் கூட்டுச்சேரத் தயாராக இருந்தார்கள். ஏகாதிபத்தியங்களுக்கும் ஈழத்தின சமூகப் பாசிச சக்திகளான LTTEஇன் வாசல் கதவு எப்போதும் திறந்தே கிடக்கும்.

IPKF தனது இராணவ சர்வாதிகாரத்தை தமிழ் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்து: விட்டு நூற்றுக்கணக்கில் நாளாந்தம் மக்களை பலி எடுத்துக் கொண்டிருந்த வேளையில் 13.04.89 அன்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரேதாச அரசு LTTE இற்கு அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக LTTE 16.04.89 ‘உதயன்’ நாளிதழில் வெளியிட்ட அறிக்கையில், ‘சமரசப் பேச்சுவார்த்தைக்கு வருவதென்றால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, இந்திய இலங்கை உடன்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு நிபந்தனை விதித்தது. ஆனால், இலங்கை அரசு அது போலன்றி விடுதலைப் புலிகள் கோரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் சம்மதித்து விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. எனவே விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் 13.04.89 அன்று பேச்சுவார்தைக்கு வருமாறு அழைப்பு விடப்பட்ட போதிலும், அதற்கு முன்னரேயே இலங்கை – LTTE பேச்சுவார்த்தைகள் இரகசியமான முறையில் நடந்தன. மார்ச் 1990 இல் IPKF இலங்கையை விட்டு வெளியேறிய பின்னரும் இப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. முதலில் குறிப்பான மூன்று அம்சங்களை LTTE முன் வைத்தது.

1. இந்திய படை முற்றாக வெளியேற வேண்டும்.
2. TNA, CVF கலைக்கப்பட வேண்டும்.
3. வட கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு, அங்கு முறையான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுள் முதலிரண்டும் முற்றாக நிறைவேறியது. மூன்றாவது கோரிக்கைக்கு ஆறாவது திருத்தச் சட்டம் இலங்கை அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று LTTE கூறியது.

இதன் பிறகு யாழ்ப்பாணத்திற்கு இலங்கை அமைச்சர்கள் வந்து போயினர். LTTE கொழும்பில் தனது முகாம்களை நிறுவிக் கொண்டது. கொள்ளப்பிட்டியில் இலங்கை புலனாய்வுத்துறையின் (Pயவழையெட ஐவெநசடடபைநவெ டீரசநயர) தலைமை அலுவலகத்திற்கு அருகாமையிலும், கொட்டாஞ்சேனையிலும் LTTE தனது பிரதான முகாம்களை அமைத்துக் கொண்டது. ஈழத்திலும், கொழும்பிலும் உள்ள LTTE இற்கு எதிரானவர்களையும், தமிழ் மண்ணின் தேச பக்தர்களையும் சிறிலங்காப் பாசிச அரசுடன் இணைந்து வேட்டையாடியது. PLOT துரோகிகளின் கொழும்பிலுள்ள நிலைகள் மீது சிறிலங்கா பொலிஸ் படையுடன் இணைந்து தாக்குதல் நடத்திற்று. ஆனால் யாழ்ப்பாணத்தில் PLOT இனால் தேடப்பட்டு வந்த தீப்பொறிக் குழுவிலிருந்த உறுப்பினர்களைக் கைது செய்தது. தர்மலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். தேசிய சக்தி என்று LTTEஐ நியாயப்படுத்திய NLFT யைச் சேர்ந்த ரமணி (செல்வக்குமார்) கைது செய்யப்பட்டார். இன்னும் LTTE இடம் ஜனநாயகம் கோரிய, சிறிலங்கா அரசிற்கு எதிரான நூற்றுக்கணக்கான தேச பக்தர்களை தெருத் தெருவாக எரித்து போட்டது. தமிழ் பகுதிகளில் அமைதி நிலவிற்கு!! மயான அமைதி.

TNA, CVF என்பவற்றில் EPRLF, ENDLF ஆகியவற்றில் பலவந்தமாக, பயமுறுத்தி துப்பாக்கி முனையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பல இளைஞர்கள் மீது சந்தேகப்பட்டு, துரோகிகள் என்ற பெயரில் LTTE கொன்று போட்டது.

LTTEஇற்கு எதிராக அம்பாறை மட்டுநகர் பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த, சரணடைந்த பல TNA உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். IPKF இருந்த போது தெருக்களில் மனித இரத்தம் உறைந்து போனது. IPKF போன பிறகு தேசம் முழுவதும் பிணவாடை வீசிற்று. ஒரு புறத்தில் பேச்சுவார்த்தையும் அரசியல் கூட்டங்களும்.இது தொடர்பாக விடுதலைப் புலிகள் பிரதித் தலைவர் கோ.மகேந்திராசா (மாத்தையா சிறி) 15.03.90 விடுதலைப் புலிகள் பத்திரிகையில் விடுத்த அறிக்கையில்

“நாம் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து அண்மையில் தான் வெளிப்படையாக இயங்க ஆரம்பித்துள்ளோம். எம்மால் முழுமையாக துரோகிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் இனங்காண முடியாது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால் எமது மக்கள் எடுத்துரைத்தால் இவர்களை நாம் இனங்கண்டு கொள்ளலாம். (பக் 5)

‘இவர்கள் இனங் காணப்பட்டு அழிக்கப்பட வேண்டியவர்கள் இல்லையேல் நாம் அரும்பாடுபட்டு பல தியாகங்களுக்கு மத்தியில் கண்டுள்ள வளர்ச்சி இவர்களால் அழிக்கப்படும்.

துரோகிகள் தியாகிகள் என்ற பெயரில் பல தேச பக்தர்கள் அழிக்கப்பட்டார்கள். இவை எல்லாம் தேசிய சக்திகளின் வீரம் செறிந்த வரலாற்றின் எந்த அத்தியாயத்தில் எழுதப்பட போகிறது? இதனையே ‘அடுத்த காடி’யின் கட்டுரை.

‘LTTE இன் குறுந்தேசியவாதக் கண்ணோட்டம் அனைத்து ஜனநாயக சக்திகளையும், விடுதலைப் போருக்கு ஆதரவாக திரட்டுவதற்கு தடையாக இருப்பதுடன் அவர்களை எதிரி தன் பின்னால் திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கிறது’

பாசிச அரசின் பின்னால் ஜனநாயகவாதிகளாக ஈழத்திலுள்ள ஜனநாயகவாதிகளை கொச்சைப்படுத்துவது மிகவும் மிலேச்சதனமானது..

LTTE இன் குழு நலன்களைத் திருப்திப்படுத்துகின்ற ஏகாதிபத்தியங்களினதும், LTTEஇனதும் திட்டமிடப்பட்ட இந்த நாடகங்களை ‘சமரனும்’ ‘அடுத்த காலடி’யும் மூடி மறைத்திருக்க வேண்டாம்.

இந்தப் பேச்சுவார்த்தை இடைக்கட்டத்தில் நூற்றக்கணக்கான ஜனநாயகப் படுகொலைகள் அரங்கேற்றிய LTTE ஆரம்பத்தில் சிறிலங்காவின் அரசமைப்புக்குள் தனது குழு நலனை திருப்திப்படுத்திக் கொள்ள முனைந்தது.

‘ஜனாதிபதி பிரேமதாச மீது நம்பிக்கை வைத்தே பேச்சவார்த்தயைத் தொடர்கிறோம்.

‘இந்தியாவுடன் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கும், இலங்கை ஜனாதிபதியுடன் நாம் நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இது நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த ஜனாதிபதி இந்திய படையை வெளியேற்ற விரும்பினார். அத்துடன் இலங்கைப் பொருளாதாரமும் மோசமான நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. எனவே எம்முடன் ஒரு இணக்கமான தீர்வை ஏற்படுத்த அவர் முற்பட்டார். அவர் நல்ல முறையில் எம்மை வரவேற்கிறார்’ (பரமமூர்த்தி வி.பு.ம.கு உறுப்பினர் வீரகேசரி 10.03.90)

‘ஜனாதிபதி பிரேமதாசவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிப்பதாகவும், பரம திருப்தியாகவும் உள்ளது’ – பிரபாகரன் (02.04.90 வீரகேசரி)

‘ஜனாதிபத பிரமதாசவின் துணிச்சலை நாம் பாராட்டுகிறோம் அவர மீது ப+ரண நம்பிக்கை வைத்திருக்கிறோம்’ – பிரபாகரன் (02.04.90 வீரகேசரி)

‘யார் இப்போது ஈழம் கேட்கிறார்கள்? இந்திய ஆதரவான ஆயுதம் ஏந்திய குழுக்களே ஈழம் கேட்கிறார்கள். நாங்கள் ஆயுதங்களை வைத்திருப்பது பற்றியோ இலங்கை அரசுடன் தான் கதைப்போம். பிரமேதாச இலங்கை ஜனாதிபதி. அவர் எங்களுடை ஜனாதிபதி, நாங்கள் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைததிருக்கிறோம். இங்கையில் ஒன்றுமையைக் கொண்டு வரவும் இனங்களுக்கிடைய ஒற்றுமையை ஏற்படுத்தவும் பிரேமதாசா உறுதியாக இருக்கிறார். பிரேமதாசா நிச்சயமாக தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பார் - பாலசிங்கம் (16.07.89 சண்டே ஒப்சேவர்)

‘பிரேமதாசா உறுயளித்தபடி தமிழ்; பகுதிகளில் குடியேற்றங்கள் எதுவும் நடாத்தப்படாமை நம்பிக்கையளிக்கிறது’ - மூர்த்தி.

தமிழ் பேசும் மக்களையும் சிங்கள மக்களையும், பிரேமதாசா – LTTE பேச்சுவார்த்தை நாடகத்தின் மூலம் ஏமாற்றிய இந்தக் கூட்டுக் கும்பல், மறுபடி யுத்த நாடகத்தை ஆரம்பித்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. பல சிறுவர்கள் போராளிகளாகி உயிரிழந்து போகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் அநியாயமான அர்த்தமின்றி இறந்து போயினர். குடியேற்றங்கள் வழமைபோல ‘ஜிகாத்’, EPDP, ENDLF, TELO, EPRLF எல்லாம் இராணுவ வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. மக்கள் பல துப்பாக்கிகளுக்கிடையில் அநாதைகளாக!

சமூகப் பாசிஸ்டுக்களின் சண்டையில அவர்களின் அரசியல் மார்;க்கத்திற்கோ, சிறிலங்கா அரசின் அரசியல் வழிக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவிலலை. பாதிக்கப்பட்டது தேச விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியும், தேச மக்களும்தான்.

இப்போதெல்லாம் யார்யார் அய்க்கிய முன்னணி அமைத்துக் கொணடாலும், சியாங் கை ஷேக்கையும், மாவோ சேதுங்கையும குரல்வளையில் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அங்கே சீனாவின் பொதுவான குறிப்பான சூழல், கொமின்டாங் கட்சி, சியாங் கை ஷேக்கிற்கும் பின்னாலிருந்த சமூக சக்தி, கம்ய+னிஸ்;ட் கட்சியின் பலம், பலவீனம் நிலப் பிரபுத்துவம், தரகு முதலாளித்துவத்தின் பலம், பலவீனம் எது பற்றியுமே சிந்திக்காமல் சியாங்கை ஷேக்கையும் - மாவோ சேதுங்கைப் பற்றியும் மட்டுமே பேசுகிறார்கள். இந்த இரண்டு ஆசாமிகளும் ஏதோ வேலிப் பிரச்சினையில அய்க்கிய முன்னணி அமைத்துக் கொண்டது போல.

“யப்பானியர்கள் சீனாவை ஆக்கிரமித்து போது நிலப் பிரபுத்துவத்தைக் தகர்த்து எறிந்து புதியதோர் சமூகத்தை அமைக்க புரட்சிகர யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாவோ சேதுங்கும், நிலப்பிரபுத்துவத்தை தாங்கி நின்ற அரசிற்குத் தலைமை வகித்த சியாங் கை ஷேக்குடன் யப்பானியர்களுக்கு எதிராகத் தேசிய யுத்தத்தை நடத்த யுத்த தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு வந்த நிகழ்வும், விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசு அரசு பேச்சுவார்த்தை நிகழ்வும் வரலாற்று ஒற்றுமைத் தன்மையினைக் கொண்டுள்ளன. பிற்போக்கு அரசிற்கு உடன்பாடிற்குப் போவதா என மாவோ யுத்த தவிர்ப்பிற்கு மறுத்திருந்தால் மாவோவின் ஜனநாயகப் பரட்சி வெற்றிப் பாதைக்கு சென்றிருக்குமா? என்பது சந்தேகத்திற்குரியதே, சூழ்நிலைகளுக்கேற்ப பொருத்தமான தேவையான அரசியல் நகர்வுகளை தந்திரோபாய ரீதியில் மேற்கொள்ளல் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க அவசியமானது என்பதனை சீனா உதாரணம் நிரூபிக்கிறது.

(விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை, வெளியீடு வி.பு பக்3)

இங்கே பிரபாகரன் மாவோவாகவும், பிரேமதாச சியாங்கை கேஷக்காகவும் கற்பனை செய்யப்படுகிறது.

‘சீனாவில் யப்பானிய எதிர்ப்பு யுத்த காலத்தில், சீனப் பட்டாளி வர்க்க இயக்கம், யப்பானியப் பாசிச ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சியாங் கை ஷேக்குடன் ஒரு முன்னணியை கட்டும் செயல்தந்திரத்தை மேற்கொண்டது போல இந்திய மேலாதிக்கத்தையும இந்தியப் படையின் ஆக்கிரமிப்பையும் எதிர்த்த போராட்டத்தில் ஈழ மற்றும் இலங்கைப் பாட்டாளி வர்க்க இயக்கம் ஒரு அய்க்கிய முன்னணியைக் கட்டும். இங்கே செயல் தந்திரத்தை மேற்கொள்வது சரியானது என சீனப் புரட்சியின் அநுபவங்கள் எமக்கு காட்டுகின்றன.’

இங்கே தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை (TMPP), NLFT போன்றவை ஈழப் பாட்டாளி வர்க்க இயக்கமாகவும், பிரபாகரனை சியாங் கை ஷேக்காகவும் கற்பனை செய்யப்படலாம்.

எத்தனை சியாங் கை ஷேக்குகளும் எத்தனை மாவோக்களும் தெற்காசியாவின் ஒரு கொலைப் புறத்தில் வெற்றி நடை போடுகிறார்கள்? பாவம் மக்கள்!

1923ஆம் ஆண்டு சன்யத்சேன் என்பவரால் தலைமை தாங்கப்பட்ட கோமின்டாங் என்ற ஜனநாயகவாதிகளின் கடசியுடன் அய்க்கிய முன்னணி கட்டுவது தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்காக கண்டான் என்ற இடத்தில் சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாடு கூட்டப்பட்டது.

சன்யன்சேன் என்பவர் சீனாhவிலிருந்த ஒரு சிறந்த தேசியத் தலைவர். ஒரு நல்ல தேசியத் தலைவனாக இருப்பது எப்படி? ஏன்ற கேள்விக்கு டாக்டர் சன்யத்சேன் என்பவரது வரலாறு விடை கொடுக்கும். வாழ்நாள் முழுவதும் தேச நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு மிகச் சிறந்த் தேசியத் தலைவர் சன்யத்சேன். இவரிடமிருந்த தத்துவார்த்த தவறுகளும் போராட்டம் தொடர்பான சரியான தத்துவார்த்த வழிமுறையின்மையும் ஒரு புறமிருக்க, இவரிடமிருந்த தலைமைக்குரிய பண்புகள் மதிப்புக்குரியவை.

1905 இல் டுல் மெல்ஹ{ய+ என்று அழைக்கப்பட்ட புரட்சிக் கழகத்தை ஆரம்பித்து நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான பல போராட்டங்களை சன்யெத்சேன் நடத்தினார். 1911ம் ஆண்டு ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றது. ஆனால் சன்யத்சென்னின் அதிகமான நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை காரணமாக புரட்சியின் வெற்றி எதிர்ப் புரட்சியாளர்களின் கைக்கு மாறியது.

பின்னர் 1923 இல் சன்யெத்செனினால் தலைமை தாங்கப்பட்ட கோமின்டாங்குடன் கம்ய+னிஸ்ட் கட்சி அய்க்கிய முன்னணி அமைத்துக் கொண்டது. கோமின்டர்ங் கட்சிக்குள் கம்ய+னிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களை அதன் சகல கட்சி அங்கத்தவர்களுள்ளும் (மத்திய கமிட்ட உட்பட) உள் வாங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனால் இக்கட்சிக்குள் ஓரளவு பலம் வாய்ந்த நிலையிலிருந்த கம்ய+னிஸ்ட் கட்சி செல்வாக்குச் செலுத்தும் சாத்தியம் ஏற்பட்டது. கோமின்டாங் கட்சி ஒரு அய்க்கிய முன்னணியாக விளங்கிற்று.

1926 இல் நடந்த கோமின்டாங் கட்;சியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் (டாக்டர் சன்யாத்சென்னின் இறப்பிற்குப் பிறகு) சியாங் கை ஷேக் அதன் மத்திய கமிட்டி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சியாங் கை ஷேக் தொடர்பாக நவசீனப் புரட்சி வரலாறு எனும் நூலில் ஹோகான்சி என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

‘சியாங் கை ஷேக் புரட்சி முகாமில் ஒரு வீர செயல்வாதியாகவும், தன் முன்னேற்றத்தில் நாட்டம் உடையவராகவும் இருந்தார். 1911ம் ஆண்டு நடந்த புரட்சி தோற்ற சமயத்தில் அவர் ஷால்காய் பங்கு மார்க்கடடில் ஒரு புரோக்கராக இருந்தார். சோவியத் ய+னியனோடு கூட்டாளியாக சன்யத்சேன் பின்பற்றிய போது சியங் கை ஷேக் அது தனக்கு தனிப்பட்ட லாபகரமான வேலையாக இருக்கும் என்று கருதி வேலை செய்தான்.

எனவே, சியாங் திட்டமிட்டு கட்சிக்குள் ஊடுருவியவன் என்றே பலராலும் நம்பப்படுகிறது. ரஷ்யாவுடன் கூட்டணி. கம்ய+னிஸட் கட்சியுடன நட்புறவு, முதலாளி விவசாயிகளின் நலன் பேணல் என்ற சன்யத்சேனின் கோட்பாடுகளை சியாங் தூக்கி எறிந்து நடக்கத் தொடங்கினான்.

1927 ஆரம்பப் பகுதியில் கம்ய+னிஸ்ட்டுக்களுக்கு எதிராக அவன் நேரடியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏகாதிபத்தியம் சார்ந்த நிலை எடுத்ததிலிருந்து, சியாங் கை ஷேக்கிற்கும், கம்ய+னிஸ்ட் கட்சிகளுக்கும் முரண்பாடு முற்றியது.

இங்கே ஈழத்தில் பிரபாகரனை சியாங் கை ஷேக் என்ற சமரன் சொன்னால் அது சாலப் பொருந்தும். ஆனால் LTTE கோமிண்டாங் ஆகிய விடாது. ஒரு தேச விடுதலை இயக்கத்திற்குரிய நெகிழ்ந்து கொடுக்கும் ஜனநாயகத்தன்மை எதுவுமே LTTE என்ற சீரழிவுக் கும்பலிடம் இல்லை. சிறிலங்கா அரசைப் போலவே தன்னுடைய இலாபத்திற்காக ஏகாதிபத்தியங்களுடனும், அதன் அடிவருடிகளுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிற ஒரு சமூகப் பாசிச தனிநபர் ஆயுதக்குழு.

இங்கு LTTE இனர், பிரேமதாசவுடன் ஏற்படுத்திய அய்க்கியம், பேச்சுவார்த்தை நாடகம் அல்லது LTTE பிரேமதாச தேன் நிலவு (நன்றி UTHR அறிக்கை) என்பது ஒரு தந்திரோபாயக் கூட்டணி அல்ல. LTTE தனது குழு நலனுக்காக தான் விசுவாசமாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு கூட்டணி. இந்த விசுவாசத்தைப் புலிகள் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை என்ற் நூலில் நியாயப்படுத்தி எழுத்துருவில் தருகிறது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு.

இன்று பத்து வருட கால ஆயுதப் போராட்டத்தின் அரசியல் விளைவாக தமிழ் ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான இனிய உயிர்கள் அநாவசியமாகப் பலியிடப்பட்டிருக்கின்றன.

LTTE இன் பாசிசப் போக்கினை குறுந் தேசியவாதமாகச் சிலர் பார்ப்பது அடிப்படையில் தவறானதாகும். இது குறுந் தேசியவாதமல்ல. ஒரு குறுந்தேசியவாத அடிப்படையிலான அமைப்பு ஏனைய தேசிய இனங்களை தனது தேசிய இனத்தின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆனால் LTTE மற்றைய தேசிய இனங்களை முற்றாக அழித்தொழிக்க முற்பட்டு தமிழீழ மக்களின் மொத்த தேசிய நலனுக்கு எதிராக செயற்பட்டிருக்கிறது. தமிழ் பேசும முஸ்லீம் மக்கள், தமிழ் பேசும் ப+ர்விக இனத்திற்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளியே ஏற்படுத்தி, போராட்டத்தைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. இது LTTE இன் தலைமைக்குத் தெரியாதது அல்ல. மொசாட் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு தனது விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள எடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியே இது. இந்திய ஆயுதத்திற்காக அநுராதபுர சிங்களவர் படுகொலை, மொசாட்டிற்காக முஸ்லிம் இன அழிப்பு, LTTEஇன் வரலாறு படைத்த சாதனைகள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சீர் குலைப்பதில் LTTEஇன் பங்களிப்புக்கள்.

1. மக்களமைப்புக்களுக்கும், போராட்டம் தொடர்பான கருத்துக்களும் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் வெறுமனே இராணுவ நோக்கில் 83 ய+லை திருநெல்வேலி தாக்குதல்களை நடத்தி, போராட்ட அமைப்புக்களைப் பாய்ச்சல் நிலையில் வீங்கச் செய்து அரசியல் தேவையை விட இராணுவத் தேவையை வளர்த்து விட்டமை.

2. ஏனைய இயக்கங்களையும் அதன் ஆதரவாளர்களையும் அழித்தொழித்துப் பல சமூக உணர்வும் தேச பற்றும் உள்ள நபர்களைப் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தியமையும், திசை வழியில்லாது மக்களைப் பற்றியும் போராட்டம் பற்றியும் பேசிக் கொண்டிருந்த இயக்கங்களை ஏகாதிபத்தியங்களினதும், உளவு நிறுவனங்களினதும். அரசினதும் பிடிக்குள் சிக்க வைத்தமை.

3. சிறு குழுக்களாகவும் உதிரிகளாகவும் கிடந்த தேசப்பற்றும் சமூக உணர்வும் உள்ள சக்திகளை தேடித்தேடி அழித்தும், கருத்துச் சுதந்திரத்தைப் பறித்தும் போராட்டத்தை சீர் குலைத்தமை.

4. அப்பாவி சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடாத்தியும், கற்பழிப்பும், கொலை, கொள்ளை போன்றவற்றை நடாத்தியும், இலங்கை ப+ராகவும பரந்து கிடந்த மனிதாபிமானமுள்ள போராட்டத்திற்கு ஆதரவான சிங்கள மக்களை போராட்டத்திற்கு எதிராக திசை திரும்பியமை.

5. இஸ்ரேலிய உளவுப்படையிடமும், சர்வதேச நாசகார சக்திகளிடமும் ஆழமாகத் தொடர்பு வைத்துக் கொண்டு, சர்வதேசிய முற்போக்கு சக்திகளிடமும். விடுதலை இயக்கங்களினதும் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டமை.

6. போராட்டத்திற்குப் பணம் சேர்த்தல் என்ற பெயரில், போதை வஸ்துக் கடத்தியும், சர்வதேச சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டும், உலகெங்கும்பரந்து கிடக்கும் மனிதாபிமானிகளின் தீவிர வெறுப்பைச் சம்பதித்துக்கொண்டமை.

7. சொந்த மக்கள் மீது போராட்டம் என்ற பெயரில் பணப்பறிப்பு, ஆள்கடத்தல், வரிவிதிப்பு, போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு போராட்டத்திலிருந்து முழுமையாக மக்களை அந்நியப்படுத்தியமை.

8. முஸ்லீம் தேசிய இனத்தை தமது சொந்த மண்ணை விட்டு, துரோகிகள் என்ற பெயரில் இரவோடு இரவாக விரட்டியடித்தும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற மிலேச்சதனமான செயல்களில் ஈடுபட்டு, முஸ்லீம் மக்களுக்கு தமிழ்மக்களுக்கும் இடையே இருந்த சந்தேகப் பார்வையை நீண்ட காலத்திற்கு நிரந்தரமாக்கி, அந்த மக்களை போராட்டத்திற்கு எதிராகத் திசை திருப்பியமை.

9. இந்தியாவிலுள்ள நச்சு அரசியல்வாதிகளுடனும், நாசகார சக்திகளுடனும் சுட்டுச் சேர்ந்தும் இந்திய மண்ணில் வெறுக்கத்தக்க வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்திய தமிழர்கள் ஈழப் போராட்டத்திற்கு வழங்கிவந்த மறுதலையான ஆதரவை வெறுப்பாக மாற்றிக் கொண்டமை.

தனது வரலாறு முழுவதையுமே கொலைக் கலாச்சாரத்தின் வரலாறாக முன்நிறுத்தியுள்ள LTTE இன் சண்டை போடும் இயல்பை மடடும் வைத்துக் கொண்டு இதனை ஒரு தேச விடுதலை இயக்கமாகப் பாராமல் அது சார்ந்துள்ள வர்க்கததையும்மதிப்பீடு செய்வதில் சரியான அணுகுமுறையைக் கையாள வேண்டும்.

1. முதலில் எந்த ஒரு நாட்டினச் சிக்கலையும் பற்றி ஆராயும் போது அதை திட்டவட்டமான வரலாற்று எல்லைக்குள் வைத்து அதாவது அந்த நாடு எந்த வரலாற்றக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என்ற பின்னணியில் ஆராய வேண்டும். ஒரு நாட்டிற்கு ஒரு கட்டத்தில் பொருந்திய தீர்வு இன்னொரு கட்டத்தில் பொருந்திவராது.

2. ஒரே வரலாற்றுக் கட்டத்திலுள்ள இரு நாடுகளில் ஒரு நாட்டை இன்னொரு நாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிறப்பியல்புகளை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

3. தேசிய இயக்கங்களைப் பொறுத்தவரையில் முதலாளித்துவத்தின் இரு கால கட்டங்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

4. பல்வேறு நாடுகளில் தேசிய சிக்கலை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட நாடுகளில் வளர்ச்சிக் கட்டங்கள் ஒப்பிடக் கூடியவைதானா எனப் பார்க்க வேண்டும். ஒரு நாட்டிற்குப் பொருந்திய தீர்வு அப்படியே வேறொரு நாட்டிற்குப் பொருந்தாது.

நன்றி “தேசிய இன சுய நிர்ணய உரிமைப் பிரச்சினையும் முதலாளித்துவ தேசிய வாதமும்”

- இந்திய கம்ய+னிஸ்ட் கட்சி –
(மார்க்ஸிட் - லெனினிஸ்ட்)
(மக்கள் யுத்தம்) –(சமரன் வெளியீடு)

நாம் இதுவரை காலப் போராட்டத்தில் முற்போக்கு சக்திகளின் தோல்விகளில் எற்பட்ட விரக்திகளை மட்டும் கருத்திற் கொண்டு LTTE அய்த் தரகு முதலாளித்துவ சக்தியாக கருதவில்லை. இன்றைக்கும் LTTE தேசிய சக்தி என நிறுவப்பட்டால் அதன் தேசியத் தன்மையோடு ஒன்றுபடத் தயாராகவே உள்ளோம். ஆனால் LTTE ஏகாதிபத்திய விசுவாசப் போக்கானது மிகவும் வெளிப்படையாகவே நிரூபிக்கப்பட்ட பிறகு இன்னும் LTTEயைத் தேசிய சக்தியாக நியாயப்படுத்த முயல்வது அசட்டுத்தனமானதே. இருப்பினும் முடிபுகளை முடிந்த முடிவாக முன் வைக்காமல் அனைத்து தேசப் பற்றுள் ளசக்திகளின் மத்தியிலிருந்தும் ஆரோக்கியமான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். புலி