“ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம்” என்ற இந்நூல் ரசிய புரட்சி பற்றியும் அதில் ஸ்டாலின் பங்கு பற்றியும் மறு மதிப்பீடு செய்வதற்கான தூண்டுகோலாக உள்ளது. இக் கண்ணோட்டத்திலிருந்து இந்தக் குறிப்புரைகளைப் பயனுள்ள வகையில் படிக்கலாம். ஆனால், இக்குறிப்புரைகளை ஒரு வரலாற்று ரீதியான ஆய்வு என்ற முறையிலோ அல்லது ஸ்டாலினுடைய வரலாற்று ரீதியான பாத்திரத்தைப் பற்றிய விமர்சன ரீதியான மதிப்பீடு என்ற முறையிலோ மாவோ எழுதவில்லை. மாவோவின் உண்மையான நோக்கம் ரசிய அனுபவங்களின் பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்வதன் வாயிலாகப் பெறப்படும் படிப்பனைகளினூடே சீனப்புரட்சி எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்வதேயாகும்.
இக் குறிப்புரைகள் கலாச்சாரப் புரட்சியின்போது உட்கட்சி விவாதத்திற்காக சீனாவின் சுற்றுக்கு விடப்பட்டது. எனினும் அவை அதிகாரப் ப+ர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நூலின் சீன முன்னுரையில், இவை முழு அளவில் சரியானதாகவும், முழுமையானதாகவும் இல்லாதிருக்கலாம் என்ற எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை ஒட்டுமொத்தத்தில் பார்க்கும்போது மிகவும் சரியானதாக இருப்பதோடு ஸ்டாலினை பற்றியும்ரசிய அனுபவங்ளைப் பற்றியும் குறிப்பிடத்தக்க, மதிப்பு மிக்க, விரிவான பகுப்பாய்வை அளிப்பவையாகவும் இருக்கின்றன. இது போன்ற ஒன்ற சீனாவில் பகிரங்கமாக எப்போதுமே கிடைத்ததில்லை.
ஸ்டாலின் மீது குருச்சேவ் தாக்குதல் தொடுத்த காலம் முதற் கொண்டு அதிகாரப்ப+ர்வமாக சீனர்கள் பெரும்பாலும் ஸ்டாலினை உயர்த்திப் பிடித்து வந்துள்ளனர். “1956-ல் ஸ்டாலின் விமர்சனம் செய்யப்பட்டபோது ஒரு புறம் நாங்கள் மகிழ்ச்சியுற்றோம். ஆனால் மறுபுறம் நாங்கள் ஐயுற்று அஞ்சினோம்” என்றும் “சிந்தனையின் தளைகளை அகற்றவும், அடக்கப்பட்ட உணர்வுகளை விடுக்கவும், கண்மூடித்தனமான நம்பிக்கையைத் தகர்க்கவும் மூடியைத் திறந்து விடுவது அவசியமானதாக இருந்தது. ஆனால் அவரை ஒரேயடியாகத் தகர்த்துத் தரைமட்டமாக்குவதை நாங்கள் ஏற்றக்கொள்ள முடியாது”33 என்றும் மாவோ கூறினார்.
உலகின் பார்வைக்கு, ஸ்டாலின் மாபெரும் மார்க்சிய லெனினியவாதியாகவும், லெனினிய லட்சிங்களுக்கு வாரிசாகவும் சோசலிசத் தொழில்மயமாக்கல் மற்றும் விவசாயக் கூட்டு உடமையாக்கலை அடையவும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி ஈட்டவும் ரசிய மக்களை வழி நடத்தியவராகவும் காட்சியளிக்கிறார். ஆனால் அவர் கடுமையான தவறுகளை இழைத்தார் என்பதும் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. கடந்த இருபது ஆண்டுகளாக அந்தத் தவறுகள் கீழ்க்கண்டனவென்று கூறப்படுகிறது. சோசலிச சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தின் விதிகளைப் புரிந்து கொள்வதில் மார்க்சிய-லெனினிய இயக்க இயலை விட்டு வழுவிச் சென்றது. விவசாயத்தில் கூட்டுடைமை மயமாக்கலுக்குப் பிறகும் சோசலிசப் பாதைக்கும் முதலாளித்துவப் பாதைக்குமிடையே பகைமையான வர்க்கப் போராட்டமும் முரண்பாடுகளும் நீடிக்கும் என்பதை அங்கீகரிக்கத் தவறியது. முதலாளித்துவ சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தையும் மக்கள் திரளையும் சார்ந்து இல்லாமலிருந்தது, முதலாளித்துவ மீட்சிக்கான அபாயத்தை வெறும்சர்வதேச ஏகாதிபத்தியத்தின் ஆயுதம் தாங்கிய தாக்குதல் என்பதாகக் குறுக்கியது, விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும் மிகவும் மோசமாக புறக்கணித்தவிட்டு கனரகத் தொழிலுக்கு ஒரு தலைப்பட்சமான முக்கியத்துவம் கொடுத்தது, ரசியா மீது ஜெர்மானியத் தாக்குதலுக்கு முன்னதாக எச்சரிக்கையுடன் இல்லாமல் இருந்தது, எதிர்ப்புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக 1930-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட களையெடுப்பின் போது அதைஅளவுக்குஅதிகமாக விரிவாக்கியது ஆகியனவாகும்.
இந்நூலில், ஸ்டாலினைப் பற்றிய மாவோவின் விமர்சனம் ரசியாவை தொழில் மயமாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட முறைகளின் அடிப்படையையே தாக்குகிறது. இதன் காரணமாக அவை ரசியாவைப் பற்றிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மார்க்சிய ஆய்வை நமக்கு அளிக்கிறது. அவை, இனி எதிர்காலத்தின் சீனாவின் அதிகாரப் ப+ர்வமான கண்ணோட்டத்துடன் இணைக்கப்படலாம்@ மேலும், இது தற்போது சீனாவுக்கு வெளியில் உருவாகிக் கொண்டிருக்கும் ரசியா பற்றிய சரியான மார்க்சிய புரிதலுக்குத் கூடத் துணைபுரிவதாக அமையும்.