சிறீலங்கா இனவாத அரசு தமிழ்தேசிய இனத்தின் மீது தனது இறுகிய கொலைக்கரங்களை நீட்டியது மட்டுமின்றி சிங்கள மக்களைக் கென்று குவித்தையும் 19.02.1991இல் கொழும்பில் கூடிய அன்னையர் முன்னணியினர் அம்பலப்படுத்தினர். இது ஒரு புறமிருக்க,


தென்கிழக்காசியப் பகுதியிலேயே ஆரோக்கியமான வெடிகுண்டு அரசியல் நடாத்தும் பாசிச விடுதலைப் புலிகள் 1991 மாசி – பங்குனி “விடுதலைப் புலிகள்” பத்திரிகையில் கொழும்பி; நடைபெற்ற அன்னையர் முன்னணியினரின் போராட்டத்திற்கு ஆரவு கொடுப்பது என்று வெளியிட்ட செய்தி எவ்வளவு அப்பட்டமானது.

சொந்த மண்ணிலேயே நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களைக் கொன்றவர்கள் இவர்கள். இது மட்டுமா? எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஜனனாயகம் வேண்டி நின்ற முற்போக்குவாதிகள், கம்ய+னிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் என்று எத்தனை பேரைக் கொன்றார்கள். பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

பிறந்து வளர்ந்த மண்ணை விட்டே குறிப்பிட்ட நேரத்தில் முஸ்லீம் மக்களை விரட்டியதை மறக்க முடியுமா?

தங்களால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களின் அன்னையரின் கண்ணீர் கோரிக்கை இவர்களின் கண்ணுக்குத் தெரியவில்லையா?
சிங்கள மக்கள் மேலான கொக்கிளாய், நாயாற்று படுகொலை 15 மே 1985இல் அநுராதபுரத்தில் குழந்தையிலிருந்து முதியோர்வரை 150க்கு மேற்பட்டோரை கொன்ற புலிகள்-

1987 ஆவணியில் திருகோணமலை பகுதியில் அப்பாவிச் சிங்கள மக்களை கொன்ற புலிகள்-

காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லீம்களைப் படுகொலை செய்த புலிகள்-

எத்தனையோ சிங்களக் கிராமங்களில் புகுந்து மக்களை இரவோடிரவாக சுட்டும், வெட்டியும் கொன்ற புலிகள்-

அன்னையர் முன்னணியின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது அவர்களின் ஏமாற்றுவித்தையின் பிறிதொரு பாணியே!

இவர்களிடம் யார் கேட்பது நியாயம்? தங்களின் இருப்பை நிலைநிறுத்த நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் புலிகள்!