Language Selection

சமர் - 2 - 1991
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எங்கு எமது தேசத்தின் அரசுக்கெதிரான போராட்டமானது ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்டமாக மாற்றமடைந்த காலத்திலிருந்தே பெண்களின் சுதந்திரம் தொடர்பாகவும் பெண்விடுதலை தொடர்பாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் குறிப்பான ஒரே நோக்கு நிலைமையிலிருந்து பலராலும் பல அமைப்புக்களாலும் பெண்விடுதலை தொடர்பாக LTTE தலைவர் வே.பிரபாகரன் கூட அறிக்கை விடுகின்ற அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அய்ரோப்பாவில் இருந்து வெளிவருகின்ற பல சஞ்சிகை பெண் விடுதலை தொடர்பாக மிகவும் அக்கறையுடன் ஆணித்தரமாகவம் கருத்துக்களை முன்வைக்கின்றன. ஆங்காங்கே கவிதை அரங்குகளும் கலை நிகழ்ச்சிகளும் பெண் சுதந்திரம் பேணுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது தேசத்தின் பெண்கள்  இராணுவ சீருடை அணிந்து போராட்டக் களத்தினுள் குதித்துவிட்டனர். பல இராணுவ முகாம்கள் பெண்களினால் தனித்து தகர்க்கப்பட்டிருகின்றன. இன்றைக்கும் பல இளம் பெண்கள் LTTE இல் இணைந்து கொண்டிருக்கின்றார்கள். நமது சமூகத்தின் கலாசார வரம்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு பெண்ணினம் போராட்டக் களத்தினுள் குதித்திருக்கிறது. எனினும் பெண்விடுதலை தொடர்பாகவும் தேச விடுதலையில் பெண்களின் பங்கு குறித்தும் இன்றைக்கு வரைக்கும் எமது தேசத்தின் விடுதலை தொடர்பாக கருத்துக்களை முன் வைக்கின்ற எந்த சக்திகள் மத்தியிலிருந்தும் சரியான தத்துவார்த்த நோக்குடன் கருத்துகள் முன்வைக்கப்படாமை துரதிஷ்டமானதே. எவ்வாறு கோஷங்களை மந்திரம் போல உச்சரிக்கின்ற பலர், பெண்விடுதலையில் தாங்கள் நிறைய சாதித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பெண்விடுதலையில் அக்கறையுள்ள சமூக உணர்வுள்ள சக்திகள் மத்தியில் ஒரு விவாதத்தை தோற்றுவிக்குமென நம்புகிறோம்.


ஆதிப் பொதுவுடமை சமூகம் என்று சொல்லப்படுகின்ற, காட்டுமிராண்டி மனிர்கள் வாழ்ந்த காலத்தில், பெண்களின் உழைப்பக்கு தகுந்த மதிப்பளிக்கப்பட்டிருந்தது. பெண்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஒரு பெண்ணின் பெயரிலேயே, அவள் தலைமையிலேயே குழுக்களாக வாழ்ந்த முன்னேற்றமடையாத அந்த் மனிதகுலம் தன்னை ஒழுங்குப்படுத்திக் கொண்டது. அப்பொழுது பெண் ஒரு இறைச்சிப் பண்டமாகவோ அல்லது குழந்தை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவோ மதிக்கப்படவில்லை. ஒரு மனித ஜீவனாக மதிக்கப்பட்டாள். அவள் தலைமைக்கும் உழைப்பிற்கும் அந்த சமூகத்தில் அங்கீகாரமும் மதிப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்த சமூகத்தில் குடும்பம் அலகுகளாகப் பிரிக்கப்படவி;லை. ஒரு பெண் தான் விரும்பிய ஆணுடன் உறவு வைத்துக்கொண்டாள் எனவே வாரிசுகள் ஆணின் பெயரால் அழைக்கப்படவில்லை. தலைமைப் பெண்ணின் வழியிலேயே அழைக்கப்பட்டது. இதன் பிறகு வளர்ச்சியடைகின்ற மனித குலம் வேலைகளை இலகுவாக்கிக் கொள்கிறது. விவசாயம், மிருகவளர்ப்பு என்று மனிதகுலம் தனக்குரிய சொத்துக்களை சேகரித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. வேலைப்பிரிவினைகள் உருவாகின்றன. ஆள்பவன், ஆளப்படுகின்றவன் என்ற நிலை உருவாகிறது. இந்த நேரத்தில் மனிதனுக்கு சொத்தும் அதற்கு வாரிசும் தேவைப்படுகிறது. அதனோடு கூடவே முதில் பெண் அடக்குமுறை உருவாகிறது பொருளாதார ரீதியான அவள் மீதான அடக்கு முறையானது, சமூக கலாசார அரசியல் ரீதியில் வலுவாக்கப்பட்டு, விரிவாக்கப்படுகிறது. இவையெல்லாம் மனித குலத்தின் விஞ்ஞான வரலாறு எமக்குத் தந்த உண்மைகள்.


இந்த அடக்குமுறையானது மனித குலம் சந்தித்த ஒவ்வொரு சமூக அமைப்பிற்கும் எற்ப வடிவங்களில் மாறுபடுகிறது. அந்தந்தச் சமூக கட்டுமானங்களுக்கு ஏற்ப பொருளாதார கலாசார, அரசியல் ரீதியான சமூக ஒடுக்குமுiறாகளாக வடிவெடுத்தன. இவ்வொடுக்கு முறைகள் பெருமளவு நிலத்தை சொந்தமாக வைத்திருக்கின்ற நிலப்பிரபுக்கள் என்ற சமூக சக்திகள் ஆதிக்கத்திலிருந்து நிலப்பிரபுத்துவ காலம்வரை பெண்விடுதலை பெண் சுதந்திரம் பெண்ணிலைவாதம் தொடர்பான கோஷங்களைப் பெருமளவு முன் நிறுத்தப்படவில்லை. பெண்கள் கொடூரமான பொருளாதார கலாசார அடக்குமுறைக்கு உட்படுத்தப்படட்hர்கள். ஆனால் நிரப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பு முறை மக்களின் சமூகப் பொருளாதார தேவைகளைப் ப+ர்த்தி செய்ய முடியாமல்போன போது பெருமளவு மூலதனத்தை சொந்தமாக வைத்திருக்கின்ற முதலாளிகள் என்ற சமூக சக்திகள் ஆதிக்கத்திலுள்ள சமூக சக்திகளாக முதலாளித்துவ சமூகம் உதயமானபோது பெண்விடுதலை என்ற கோஷம் முன்னெழுந்தது. நிலத்தோடு பிணைக்கப்பட்டு, நிலப்பிரபுத்துவ கலாச்சார சங்கிலியால் கட்டப்பட்டு வீட்டுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்த பெண் இனத்திற்கு விலங்குகளை உடைக்க வெளியுலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்ட ரீதியாகப் பெண் இனத்திற்கு விலங்குகளை உடைக்க வெளியுலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டரீதியாகப் பெண் இனத்திற்கு பல முற்போக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. மறுமணம் செய்யும்  உரிமை, விவாகரத்து உரிமைகள் போன்ற பல முற்போக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. பெருமளவு பொருளாதார சுந்திரம் வழங்கப்பட்டது. ஆரம்பக் கல்வியை அறியாத பெண்ணினம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது. அரச உயர்பதவிகளிலும் நிர்வாகத்திலும் பெண்கள் புகுந்து கொண்டனர். முதலாளித்துவம் கொடுத்த இந்த முற்போக்கான மாற்றத்தினால் பெண்ணினம் விடுதலை பெற்றுவிட்டது என்கிறார்கள் பலர். இந்த மாற்றத்தில் இருக்கின்ற முற்போக்கு தன்மையை யாரும் மறுக்கமுடியாது. இன்றைக்கு நிலப்பிரபுத்துவ அடிமை அறுக்கப்படட பல முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகள் பலவற்றில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற சுதந்திரத்தைப் பலர் கோடிட்டுக் காட்டுகின்றனர். இதற்கு மேல் பெண்விடுதலை என்றால் என்ன என்ற கேட்கின்றார்கள்.


நிலப்பிரபுத்துவமும். நிலப்பிரபுத்துவ கலாசார சித்தாந்தமும் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவம் என்ற புதிய ஒழுங்குப்படுத்தப்பட்ட ஸ்தாபனம் உருவானது. இந்த ஸ்தாபனம் தனக்கே உரித்தான ஒழுங்குகளை ஏற்றுக் கொண்டது. இந்த ஒழுங்கு முறையிலேயே பெண்ணின் விடுதலையும் உட்படுத்தப்பட்டது. முதலாளித்துவம் என்ற பலம் வாய்ந்த ஸ்தாபனத்தின் கீழ் அதனது சித்தாந்தங்களுக்கு உட்பட்டே பெண்ணும் தன்னை ஒழுங்குப்படுத்திக் கொண்டன. முதலாளித்துவத்தின் வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப முழு மனிதகுலமும் அந்த அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. நிலத்தோடு பிணைக்கப்பட்டு வெளியுலகத்தை அறிய முடியாது மனித குலத்திற்கு உழைப்பின் தேவையும் மனித சக்தியின் தேவையும் அதிகரித்து. பெருகி வந்த தொழிற்சாலைகளிலும் தொழில் நிலையங்களிலும் வேலை செய்வதற்கு அதிகளவு தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்நேரத்தில் மனித குலத்தின் அரைவாசிப் பகுதியான பெண்களின் உழைப்புத் தேவை அதிகரித்தது. முதலாளித்துவ அமைப்பிற்கான இந்தத் தவிர்க்கமுடியாத தேவையானது, பெண்ணினத்தை அதன் கலாசார சங்கிலியிலிருந்து விடுவிக்க நிர்ப்பந்தித்தது. பெண்ணினத்தை வெளியில் கொண்டுவர அரசியலிலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பெண்களுக்காகப் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் விளைவாக முதலாளித்துவம் தான் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுக் கொண்டது. பெண்கள் மீதான அடக்குமுறை புதிய வடிவம் பெற்றது. முதலாளித்துவம் கொடுத்த முற்போக்கான மாற்றத்தைத் தொடர்ந்து பேணமுடியாமல் போனது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் இந்தக் குடும்பம் என்ற அமைப்பற்ற அடக்குமுறைக்குள் அதனைத் தொடர்ந்து பேணுவதற்காக அமைக்கப்பட்ட அன்பு, பாசம் என்ற தற்காலிக ஆறுதலைக் கூட அது இழந்து போனது.

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பெண் என்பவள் குறைந்தபட்சம் மனிதப் பெண்ணாக பல சந்தர்ப்பங்களில் மதிக்கப்பட்டாள். ஆனால் முதலாளித்துவ வளர்ச்சியடைந்த அமைப்புக்குள்ளோ அவள் வெறுமனே ஒரு இறைச்சிப் பண்டமாகவே பார்க்கப்படுகிறாள். உடலுறவுக்கான பெரும்பாலும் அதற்காக மட்டுமான காட்சிப் பொருளாக அமைக்கப்பட்டிருக்கின்றாள். பெண்கள் போட்டிருந்த நிலப்பிரபுத்துவக் கனமான கலாசார சட்டை முற்றாகக் கிழித்தெறியப்பட்டு நிர்வாணமாக நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருக்கிறாள். பல சந்தர்ப்பங்களில் அவளே உணர்ந்து கொள்ளாமல் மிகவும் நாகரீகமாக அடக்கப்படுகிறாள். ஒரு இயந்திரமாக இயக்கப்படுகிறாள். முதலாளித்துவம் பெண்ணினத்திற்கு வழங்கிய இந்த முற்போக்கான மாற்றம் ஏன் தொடர்ந்து பேணப்படவில்லையா? கலாசாரம் என்பது வளர்த்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக சீரழிக்கப்பட்டது ஏன்? ஆழமான இந்தக் கேள்விகளுக்கான பதில் என்பது பெண்விடுதலை தொடர்பான ஒரு சரியான தெளிவிற்கு வர வழிகாட்டும் என நம்பலாம்.


முதலாளித்துவம் என்ற ஸ்தாபனம் உருவான போது, அந்த ஸ்தாபனத்தின் சமூகத்தேவைக்கான பெண்ணும் அதிலொரு அங்கமாக ஸ்தாபனப்படுத்தப்பட்டாள். பெண்களுக்கென்று பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுக் கொள்வதற்கான சரியான ஸ்தாபனம் ஒன்று இருக்கவில்லை. (முதலாவதாக மொத்த மனிதகுலத்திற்குமான ப+ரண விடுதலை தரப்படவில்லை. அல்லது பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பது வெளிப்படையானது. இங்கு குறிப்பிடுவது அவ்வாறான ப+ரணப்படுத்தப்பட மனிதகுல விடுதலையிலும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தும் இருந்தன என்பதைத்தான். அதாவது பெண்விடுதலை பற்றிப் பேசிய அந்த சமூகத்தில் ஒரு ஆண் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் மேலதிகமாகப் பெண் சமூகத்தால் ஒதுக்கப்படுகிறாள். என்பது பற்றியே குறிப்பிடுகிறோம்) இங்கு பெண் விடுதலைப்பற்றியும் பேசியது பெண் விடுதலைக்கான ஸ்தாபனம் ஒன்றல்ல, முதலாளித்துவத்தின் ஆதிக்க நிலையிலிருந்த முதலாளிகளும் அதன் சித்தாந்த கர்த்தாக்களும்தான். சரியான சமூகக் கண்காணிப்புடன் கூடிய பெண்விடுதலை ஸ்தாபனம் ஒன்ற உருவாகி இருக்கவில்லை. இது முதலாளித்துவ சமூக அமைப்பில் சாத்தியமற்ற ஒன்றும்கூட. எவ்வாறு முதலாளித்துவத்திற்கு ஒரு கட்டம் வரையான பெண் சுதந்திரம் தவிர்க்கமுடியாமல் இருந்ததோ, வரலாற்றுத் தேவையாக உருவானதோ அப்படியேதான் முதலாளித்துவ அமைப்பினுள் பெண் ப+ரண சுதந்திரத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பது தவிர்க்கமுடியாதது. இந்த சரியான பெண்விடுதலையானது முதலாளித்துவத்திற்கு அடுத்த முதலாளித்துவ பொருளாதார சமூக அமைப்பு நிலைக்க முடியாமல் போகும் போது உருவாகும் சமூக அமைப்பிலேயே சாதிக்கப்பட முடியும். பெண்ணின் விடுதலையும் மொத்த சமூகத்தின் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வேறுபடுத்த முடியாததெனினும், மொத்த சமூகத்தின் ப+ரணவிடுதலை என்பதில் பெண்விடுதலை என்பது மிகவும் தவிர்க்கமுடியாத விலக்கப்படமுடியாத ஒரு அங்கமாகும். எனவே சமூக அமைப்பை மாற்றி முழுமக்களுக்குமான ப+ரணவிடுதலையை விரும்புகின்ற சமூக உணர்வுள்ள யாரும் பெண்விடுதலையை ஒதுக்கிவிட முடியாது.


முதலாளித்துவம் எமக்கு கற்றுத்தந்த பாடத்திலிருந்து இந்தப் பெண் விடுதலை எப்படி சாதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருதல் மிகவும் அவசியமானதாகும். முதலாளித்துவம் உருவான காலகட்டத்தினைப் போல வெறுமனே பெண்ணின் சுதந்திரத்திற்கான கோஷங்களை மட்டுமே முன்வைத்து எமது தேசியப் போராட்டத்தின் தேவைக்காக பெண்ணினத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான நிலையை உருவாக்குதல் மட்டும் பெண்விடுதலை ஆகிவிட முடியாது. பெண்களுக்கென்று பெண்களின் தலைமையிலேயே கலாசாரப் போராட்டம் ஒன்றை தலைமைதாங்கி நடத்துகின்ற வலுவுள்ள பலமான பெண்விடுதலை ஸ்தாபனம் ஒன்றில் நேரடியான அரசியல் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு குறிப்பிடுவது அரசியலற்ற ஒரு சீர்திருத்தவாத பெண்விடுதலை ஸ்தாபனம் ஒனறை நோக்காகக் கொண்டில்லை. பெண்களுக்கான பெண்களின் ஸ்தாபனத்திற்கான அரசியல் தலைமையை எவ்வாறு ஒரு அரசியல் ஸ்தாபனம் கொள்கை வழியில் வழங்கலாம் என்பதை அந்த அரசியல் ஸ்தாபனமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்த தி;ட்டமி;ட்ட பெண்விடுதலைக்கான போராட்டம் என்பது தனது நோக்கத்திற்கும் குறிக்கோளுக்கும் ஒப்ப பெண் சுதந்திரத்தின்  தனது அரசியல் தேவைக்காக வலியுறுத்துகின்ற அரசியல் ஸ்தாபனத்தின் தலைமையை ஏற்றுக் கொள்ளும். இன்றைக்கு பெண்விடுதலை தொடர்பாக கோஷம் எழுப்புகின்ற பிரதானமாக இரண்டு தவறான நோக்குகளில் முதலாவதாக ஓர் அரசியல் ஸ்தானத்தின் ஒரு பகுதியாகப் பெண்கள் அணிதிரட்டப்படலாம் என்பதும் அரசியல் ஸ்தாபனத்தின் தேவையை முக்கியத்துவப்படுத்தாத வெறுமனே சீர்திருத்துவாதப் போக்கில் பெண்கள் அணிதிரட்டப்படலாம் என்ற நோக்கும் காணப்படுகிறது. இவ்விரண்டுமே அடிப்படையில் சந்தர்ப்பவாத நோக்கில் அமைந்தனவாகவே இறுதியில் முடியும்.
எமது தேசத்தின் விடுதலைக்கான போராட்டம் வன்முறைப் போராட்டம் என்று வடிவெடுத்த காலம் முதலே இதற்கான வெளிப்பாடுகளைக் காணமுடியும்.


எமது தேசத்தில் ஆரம்பம் முதலே EPRLF, EROS, PLOT போன்ற சிறு முதலாளித்துவ அமைப்புக்கள் சமூக மாற்றம் பற்றியும் பெண்விடுதலை பற்றியும் பேசிக்கொண்டன. ஏராளமான பெண் போராளிகள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில் EPRLF பெண் போராளி சோபா வீர மரணமடைந்தாள். தனியான பெண்கள் பிரிவொன்றை EPRLF தனக்கென ஏற்படுத்திக் கொண்டது. இதுவரை ஈழப் போராட்டத்தின் ஆரம்ப முதலே பல பெண்களின் வீர இரத்தம் எமது மண்ணில் சிந்தப்பட்டிருக்கிறது. ஆனால் எமது தேச விடுதலை இயக்கங்களின் உள்ளும் புறமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வதைகள் அதே இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பல தடைகள் நேரில் பார்த்திருக்கிறோம். காக்கைதீவிலும் கூவம் நதியிலும் சடலங்களைப் பார்த்திருக்கிறோம். மணியந் தோட்டத்தில் அநாதைப் பிணங்களாக ஆறு பெண்களின் சடலங்களைப் பார்த்திருக்கிறோம். இயக்க உள் முரண்பாடுகள் காரணமாக வெளியேறிய பல பெண்கள் இன்றைக்கும் சமூகத்தில் இரண்டாந்தரப் பிரசையாக திசையற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். EPRLF தீவிரமாக பெண்விடுதலை பேசிய காலகட்டத்தில், TELO இல் இருந்து வெளியேறிய 20க்கும் மேற்பட்ட பெண்கள் தமது சமூக ஒடுக்குமுறைகளுக்குப் பயந்து தமிழ்நாட்டிலிருந்த காலகட்டத்தில் EPRLF இன் ஈழப்பெண்கள் முன்னணி சாதாரண பெண் என்ற அபிமானத்துடன் கூட அவர்களைப் பார்க்க மறுத்தது.  TELO உடன் எமக்கு அய்க்கியம் இருப்பதால் உங்களைக் கருத்தில் எடுக்கமுடியாது என்று ஆணித்தரமாக மறுத்துவிட்டனர். அது தொடர்பாக ஈழ பெண் விடுதலை முன்னணியில் இருந்த ஒரு பெண் கருத்துத் தெரிவிக்கையில் பெண் என்ற வகையில் எனக்குப் பெண்ணின் கஷ்டங்கள் விளங்கும் ஆனால் எனது ஸ்தாபனத்தின் அரசியலுக்கு நான் கட்டுப்பட்டவள் என்று சொன்னார்.

 ஒரு ஸ்;தாபனத்தின் அரசியல் தேவைக்காக எவ்வளவு தூரம் பெண்ணினம் நயவஞ்சகத்தனமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது இது போன்ற பல சந்தர்ப்பங்களில் தெளிவாகி இருக்கிறது. எனவே பெண்களுக்கான பெண்விடுதலை ஸ்தாபனம் ஒன்று நேரடியாக இயக்க அரசியல் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் ஒரு அரசியல் இயக்கத்தின் கொள்கை வழி நடத்தலைத் தானே விரும்பி ஏற்றுக் கொள்கின்ற அல்லது கொள்கை வழியிலான தலைமையை ஒரு அரசியல் ஸ்தாபனம் வழங்கக் கூடிய அமைப்பு முறையைக் கொண்டதாக எமது தேசத்தில் உருவாகும் முற்போக்கான அமைப்பு ஒன்றோடு இணைந்து உருவாக வேண்டும் என்ற தேவையை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் இன்றைக்கு LTTE என்ற சமூகப் பாசிச தனிநபர் ஆயுதக் குழுவினால் தனது தேவைக்காக மட்டுமே முன்வைக்கப்படுகின்ற பெண்விடுதலைக் கோஷத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.