உண்மையில் நான்
என்னதான் எழுதப்போகிறேன்
இது பதினோராவது தாள்
எதுவும் பிடிக்கவில்லையயனக்கு
எழுத்துக்கள் தடுமாறுகின்றன
நேற்றிலிருந்து எழுதிக்கொண்டேயிருக்கின்றேன்
தாள்களை கிழிப்பது அனிச்சையாய்
கொண்டேயிருகிறது….
என்னால் சிந்திக்க முடியவில்லை
நெஞ்சடைத்து செத்துப்போன
இருபதினாயிரம் குரல்கள் என்னை
நெருக்குகின்றன
ஒப்பாரிக்குரல்கள் செவியை
கிழிக்கின்றன
இரண்டு வருடம் தண்டனை
லட்சம் ரொக்க ஜாமீன்
வந்து விட்டது தீர்ப்பு
முதலாளி குற்றவாளியல்ல
சிரிக்கிறான் ஆண்டர்சன்
குடித்த மூத்திரம் வழிகிறது
(அ)நீதி மன்ற படிகளில்
மனதில் பதிய வை
இதுதான் சனநாயகமாம்
காந்தி கெ(V)டுத்த விடுதலையாம்
ராமனுக்கு மலச்சிக்லென்றால்
சோனியாவுக்கு சளுக்கென்றால்
கருணாவுக்கு வலிப்பென்றால்
செயாவுக்கு கொழுப்பென்றால்
எரியும் நாடு
அமைதியாயிருக்கிறது
இந்த அமைதியை சுவாசிப்பதற்கு
அந்த மீத்தைல் ஐசோ சயனைட்டை
சந்தோசமாய்சுவாசித்திருப்பேனே…….
கவிதையயழுதுவதற்கு பதில்
ஆயுமெடுத்து பழகியிருந்தாலாவது
எனக்கு நிம்மதி கிடைத்திருக்கும்
அதனாலென்ன
காலம் ஒன்றும் கடந்து விடவில்லையே.
http://kalagam.wordpress.com/2010/06/09/இது-பதினோராவது-தாள்/