முதலாளித்துவ தேர்தலை பகிஸ்கரித்த லெனின் கிராட் மக்கள்!

அண்மையில் லெனின் கிராட்டில் (தற்போது பீட்டர்ஸ்பாக் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.) மாநகர சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 50 பிரிவிகளைக் கொண்ட அவையில் இரண்டில் மூன்று பங்குகள் 25 வீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடந்தால் மட்டுமே தேர்தல் செல்லுபடியாகும். 

ஆனால்  முதற் சுற்று வாக்கெடுப்பில் 25 வீதமானோர் பங்கு கொண்டனர். இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் 5 வீதமானோர் பங்கு கொண்டு முதலாளித்துவ தேர்தலை நிராகரித்துள்ளனர்.  50 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட இப்பிரிவில் இதன் மூலம் இத் தேர்தல் சட்டபடி செல்லாததாகியுள்ளது. 5 வீத வாக்குகள் பதிவாகி உள்ள இம்மாநகர சபையில் 2 வீத வாக்குப் பெற்றவர்களைக் கொண்டு ஆட்சியை அமைக்க யெல்சின் சட்டத்தை மாற்றி அமைக்க முயலலாம். 2 வீத வாக்குகளைப் பெற்றவர்களின் ஆட்சியை ஜனநாயகம் எனக் கூப்பாடு இடும் முதலாளித்துவம் உண்மையில் ஜனநாயகமல்ல. மாறாக அது சுரண்டும் வர்க்க கனவுகளை நிறைவு செய்யும் ஆட்சி அமைப்பே. இதற்கு லெனின் கிராட் மக்கள் பாடம் புகட்டும் நாள் வரத்தான் போகிறது. அப்போது இவ் முதலாளித்துவ போலி ஜனநாயகம் புதைகுழிக்கு அனுப்பப்படும். அப்போது ஏகாதிபத்தியங்களும், முதலாளித்துவவாதிகளும் கம்யூனிச பீதி கிளப்பியபடி சதிகளை தமது வாழ்வாகக் கொண்டு அலையத்தான் போகிறார்கள். ஆனால் மக்கள் முதலாளித்துவத்தை சவக்குழிகளில் அனுப்ப தொடர்ந்தும் போராடுவர். வரலாறு என்பது போராட்டங்களால் ஆனது. இதை லெனின் கிராட் மக்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.