கம்பூச்சிய மக்களின் வீரம் செறிந்த போராட்டம்.

வியட்நாம் படைகளை வெளியேற்றவும் அமைதியைக் கொண்டு வரவும் என உறுதி கூறி ஜக்கிய நாட்டுப்படை கம்பூச்சியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவ கால் ஊன்றிக் கொண்டனர். அங்கு வியட்நாமுக்கு எதிராக போராடி வந்த முக்கிய மூன்று குழுக்கள் இருந்தன. அதில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி. ஜக்கிய நாட்டுப் படையோ கம்யூனிஸ்ட் படையை அழிக்க தன்னால் இயன்றளவும் முயன்று மற்றவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். ஜக்கிய நாட்டுப் படையில் முக்கியமாக ஜப்பான் உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் வெளிநாட்டுக்குப் படையை அனுப்பியது இதுதான் முதல் தடவை. கம்பூச்சிய சுய பூர்த்தியை கொண்ட ஒரு நாடாகும். இங்கு உள்ள சுயபூர்த்தியான விவசாயத்தை அழிக்க ஜப்பான் பெரும் அளவில் தனது சந்தைக்கு தேவையான உற்பத்தியை முடுக்கி விட்டுள்ளது.

இதனால் மக்களின் எதிர்ப்பில் மூன்று ஜப்பானியர் கொல்லப்பட்டனர். ஜக்கிய நாட்டுப் படையின் உதவியுடன் கம்யூனிஸ்டுக்களின் தளப்பிரதேசத்தை முற்றுகையிட முனைந்த கம்பூச்சியாவின் 6000 படைகள் மீது கம்யூனிஸ்டுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 500 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் அவர்களை பின்வாங்க வைத்தனர். தொடர்ந்து சமாதானப்படை என்ற பெயரில் யு.என்.ஒ தொடர்ந்து தாக்குதல்களை நடாத்தி தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

 

யு.என்.ஒ இன்று அமெரிக்க கைப்பொம்மையாகியதுடன் அமெரிக்க நலன்களை பிரதிபலிக்கின்றதொன்றாகும். கம்பூச்சியாவை தனது பொருளாதார சந்தையாக்க முனைய சமாதானம் என்ற பெயரில் யு.என்.ஒ இன்று உலகு எங்கும் கொண்டு செல்லப்படுகின்றனர். ஆனால் மக்கள் இதற்கு எதிராக தமது வீரம் செறிந்த போராட்டங்களை தொடர்கின்றனர்.