08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

தொடரும் செர்பிய அட்டூழியங்கள்

யூக்கோஸ்லாவியாவின் இனமுரண்பாடுகள் இரண்டு வருடத்துக்கு மேலாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. முதலாவது உலக யுத்தம் தொடங்க காரணமாக இருந்த யூக்கோஸ்லாவியாவில் உள்நாட்டு இனகலவரங்களுடன் இரண்டாம் உலக யுத்தகாலத்;தில் சில இனங்கள் ஜெர்மன் நாசிகளுடன் ஜக்கியப்பட்டனர். இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிகளுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் கட்சி யூக்கோஸ்லாவியாவை ஜக்கியப்படுத்தி தேசிய சுயநிர்ணய உரிமையை வழங்கி ஜக்கியப்பட்ட நாடாக மாற்றியது. 1950 களில் தனது சோசலிச கொள்கைகளை கைவிட்டு திரிபுப்பாதைக்கு சென்றபோது பெயரளவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்ட ஒரு சீரழிந்த முதலாளித்துவ ஆட்சியை நிறுவிக்கொண்டனர்.

ஆனால் பெயரளவில் அனைத்து கம்யூனிச கோசங்களையும் கைவிட்டு அப்பட்டமாகவே முதலாளித்துவ பாதைக்குள் அண்மையாகத் திரும்பி மேற்கு நாட்டு முதலாளித்துவத்தை தம் வசப்படுத்தினர். அதன் ஊடாக முழுமையான கொள்ளைகளை நிகழ்த்த இனமுரண்பாட்டை முன்தள்ளியதுடன், ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான முரண்பாடு சேர்ந்து இன்று யுத்தத்தை வழிநடத்துகின்றது. பிரிந்து போராடும் இவ் தேசிய இனங்களின் பின் ஏகாதிபத்தியங்கள் தமக்கு சார்பானவர்களை ஆதரித்தும் உதவி வழங்கியும் யுத்தத்தை நடத்துகின்றனர்.

 

சமாதானப் படையை நிறுவியுள்ள ஏகாதிபத்தியங்கள் தமது காலனியாக்கும் கனவுகளுடன் யுத்தத்தை நடத்த உதவியபடி பெயரளவில் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசிவருகின்றனர். முஸ்லிம் தேசிய இனம் மீதான தாக்குதல்கள் மிக மிக மோசமானவை. இரண்டாம் உலக யுத்தத்தை மிஞ்சுமளவுக்கும் சென்று உள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் கூட்டாகவும், தனியாகவும் மாறிமாறி கற்பழித்ததுடன் மட்டுமின்றி வயிற்றில் குழந்தை உருவாகுவதையும் உறுதிசெய்து கொண்டனர். இவர்களை நிர்வாணமாகவும் உணவு இன்றியும் அடைத்து வைத்து கருவை ஆறு ஏழு மாதம் வளர விட்டு பின் விடுதலை செய்துள்ளனர்.

 

இதன் ஊடாக முஸ்லிம் தேசிய இனம் மற்றைய தேசிய இனக் கலப்பை ஏற்படுத்த மேலிருந்து உத்தரவின் பேரில் நிகழ்த்தப்பட்டது. சிறைக்கைதிகள் உணவு இன்றி எலும்புக்கூடுகளாக மாறி மரணிக்கின்றனர். யுத்தத்தால் கை கால்களை இழந்த சமுதாயமாக ஊனம் குன்றி மக்கள் கூட்டத்தை வதைக்கின்றது. உலக பொருளாதார நெருக்கடியும் அதில் முரண்பாடும் ஏகாதிபத்தியங்களும் யூக்கோசிலாவியாவை பங்கு போட்டுக்கொள்ள, முதலாளித்துவ ஜனநாயகம் சிறந்தது என வெற்றுக் கூச்சல் ஊடாக தமது நலன்களை அடைய யுத்தத்தை தொடர முனைகின்றனர்.


பி.இரயாகரன் - சமர்