06032023
Last updateபு, 02 மார் 2022 7pm

என்-ஜ-பி-(இலங்கை உளவுத்துறையின்) அறிக்கை!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யூ-என்-பியின் எந்த வேட்பாளருக்கு எதிராகவும் சந்திரிகா போட்டியிடின் நான்கு இலட்சம் வாக்குகள் அதிகம் பெறுவார் என என்-ஜ-பி அறிவித்துள்ளது. இக்கணிப்பீடு வடக்கு தவிர்ந்த ஒரு புள்ளிவிபரமே. 144 பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இக் கணக்கெடுப்பு தொண்டமான் யூ.என்.பியுடன் இணைந்திருப்பின் என்ற அடிப்படையில் வைத்தே எடுக்கப்பட்டது. யூ.என்.பி தனது வெற்றியை உறுதி செய்து கொள்ள அனைத்து வழிகளையும் கையாளுகிறது.

அதுவே என்.ஜ.பி கொண்டு ஒரு முயற்சி ஊடாக தனது நிலையை உறுதி செய்து கொள்ள முனைகிறது. எப்படி கள்ளவோட்டு போடுவது, தமிழ்மக்களின் வாக்குகளை எப்படி பெறுவது என அனைத்து வழிகளையும் கண்டறிய முனைகின்றனர். புலிகள் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் அரசுடன் சோரம் போகக்கூடிய நிலையும். அதன் ஊடாக புலிகள் மீது செல்வாக்கு உபயோகிக்கப்படுகிறது. புலி சரி அரசு சரி இவர்களின் பின்னணி ஏகாதிபத்தியங்களே. தேவையானபோது இவர்களுக்கிடையில் யுத்தமும், சமாதானமும் கோருகின்றனர் இவ் ஏகாதிபத்தியங்கள். அதாவது மனிதவுரிமை மீறலைக் கண்டித்தபடி இம் மேற்குநாடுகளே ஆயுத தளபாடங்களை ஏற்றுமதி செய்கின்றனர். இது போல் தான் புலி அரசுக்கு பின்னால் இவ் ஏகாதிபத்தியங்களே உள்ளன. தமிழ்மக்களின் வாக்குகள் யூ-என்-பிக்கு போட புலிகள் துணைபோக உள்ளனர்.


பி.இரயாகரன் - சமர்