கடந்த வாரம் வெள்ளியன்று +2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. பத்திரிக்கைகளில் மாநில வாரியாக, மாவட்ட வாரியாக முதலிடம் வென்ற மாணவ மாணவிகளின் புகைப்படங்கள் மின்னுகின்றன. மாநில தகுதி பெற்ற நபர்களின் செவ்விகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டன. “நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன், இஞ்சினியராகுவேன், ஐஏஎஸ் ஆவது தான் லட்சியம்”
அதிக மதிப்பெண் பெற்றோரை வாழ்த்த நான் என்னளவில் தயராயில்லை, காரணம் ஏன்பலர் குறைவான மதிப்பெண் வாங்கினார்கள் எனும் போது, அதிக மதிப்பெண்களைக்காணும் போது என்னையறியாமல் அதன் மீது வெறுப்புதான் வருகிறது. பக்கத்து வீட்டிலோ அல்லது தெரிந்தவர்கள் வீட்டிலோ உள்ள பிள்ளைகள் தன் மகன்/மகளை விட அதிக மதிப்பெண் வாங்கும் போது நடக்கின்ற விசயம் எல்லோரும் அறிந்ததே.
காரணம் தவறு செய்து விட்டான் / ள். அது மன்னிக்க முடியாத தவறு. ஆம் அப்படி ஒரு தவறு. சரியாக மனப்பாடம் செய்யத் தெரியாததால் நேர்ந்த தவறு அது. உருத்தட்ட தெரியாததால் நேர்ந்த தவறு அது. இங்கே தவறு செய்ய நேர்ந்ததால் இனி அவ்வளவுதான் வாழ்க்கை. தகுதியற்றவர்களெல்லாம் அறிவுரைக்கு வரிசையாய் நிற்பார்கள். தேர்வுகளில் தோல்வியுற்றவர்களை விட மதிப்பெண் குறைவாக வாங்குவோரின் மன நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.
தோல்வியடைந்து விட்டால் வேறு வழியில்லை மறு தேர்வுதான் வழியில்லை. இப்போதுதான் உடனே நடக்கிறது மறுதேர்வு, முன்பெல்லாம் ஒரு வருடத்தை தொலைக்க வேண்டியதுதான். இம்ப்ரூவ்மெண்ட் என்பது கூட 12 வகுப்பில்தான். பத்தாம் வகுப்பின் தேர்வு முடிவுகள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆம் மதிப்பெண் குறைவெனில் முதல் பிரிவு கிடைக்காது, பள்ளியே பார்த்து ஏதாவதென்று பிச்சை போடும்.
தேர்வில் தோல்வியடைந்தவர்கள் நாளிதழ்களைப்பார்த்தவுடன் தெரிந்துவிடும் என்பதால் வெளியே வரமாட்டார்கள். மதிப்பெண் குறைவானவர்களோ அவர்கள் தகுதி பள்ளியில் ஒட்டியிருக்கும் மார்க் லிஸ்டை பார்த்தவுடந்தான் தெரியும். மதிப்பெண் குறைவு என்றவுடன் தெரிந்த முகங்கள் யாராவது தெரிந்தால் ஓடி ஒளியும். யாராவது மார்க் கேட்டால் என்ன சொல்வது தெரியாது? மனம் இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்துகிடக்கும்.
அதிக மார்க் வாங்கிய ஜீவிகள் பள்ளிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். தெரிந்தவனையெல்லாம் பார்த்து மதிப்பெண் விசாரித்து கொண்டிருப்பார்கள். மதிப்பெண்ணை கூட்டி சொன்னால் இதுதானே உன் மதிப்பெண் என்று எழுதி வைத்திருப்ப்பதை சொல்லுவார்கள். இப்படி தலை கவிழ்ந்த எத்தையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.
வீட்டிலோ நிலைமை நிலை பூடாகரமாகிக்கொண்டிருக்கும். தந்தை சொல்லுவார்”ஏன் நாயாட்டம் தின்னத்தெரியுதுல்ல என்னடா மார்க் வாங்கியிருக்க, அய்யோ என் பேரை கெடுத்துட்டு வந்து நிக்குதே, தாய் தல்யில் அடித்துக்கொண்டு அழுவார் பக்கத்து வீட்டு முருகேசன் உன்னமாதிரிதாண்டா ஸ்கூலுக்கு போறான், அவன் என்னடா மார்க்கு? அவன் எப்புடிடா மார்க் வாங்குனான்? அவன் மூத்திரத்தை வாங்கிகுடி”.
அவன் மூத்திரத்தை வாங்கிக்குடி இது புகழ்பெற்ற வாசகம், ஊர் கடந்து, மாவட்டம் கடந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிக்கிடக்கின்ற வார்த்தை. அவ்வார்த்தையை பத்து பேர் முன் சொல்லும் போது வருகின்ற அவமானம் அதுதான் பலருக்கும் முதல் அவமானமாக இருக்கும். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும், , வெடிக்கும் அழுகையை கைகள் பொத்தி பொத்தி அடக்கும். ஏதும் செய்ய இயலாமையால் தலை குணிந்து கிடக்கும் முகம் .
ஆதரவாய் சொல்பவர்கள் கூட ஒன்றை அழுத்திச்சொல்லுவார்கள்”என்ன பண்றது தப்பு பண்ணிட்டே”. இப்போது நீ மேற் கொண்டு என்ன படிக்க வேண்டும் என்பது முடிவு செய்யும் அதிகாரம் உனக்கு இல்லை. சொந்தக்காரன் வந்து தன் மகனின் பெருமை பீற்றிக்கொள்ளுவான். வீட்டிலே காரியக்கமிட்டி கூட்டம் கூடும் இந்த தண்டத்தை என்ன மேற்கொண்டு படிக்க வைக்கலாம்? ஆலோசனைகள் வெளியார்களிடமிருந்தும் வரவேற்கபடும்.பின்னர் எடுத்த முடிவின் படி ஏதோ ஒன்றில் சேர்க்கவைக்கப்படுவான்/ள்.
பத்தாவது மற்றும் பணிரெண்டாவதில் அதிக மதிப்பெண் எடுத்ததாலேயே அவன் உயர்ந்தவனாகிவிட்டானா? குறைவான மதிப்பெண் வாங்கியதாலே தாழ்ந்தவனாகிவிடுவானா? மேற்கொண்டு படிக்கப்போகும் இடத்தில் முதல் நாள் ஆசிரியர் கேட்பார்.”யார் எவ்வளவு மார்க் சொல்லுங்க?” மறுபடியும் ஆரம்பித்துவிடும் வேதனை.
பத்தாவதிலேயே அதிக மதிப்பெண் எடுத்த அனைவராலேயும் +2 ல் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை, +2-ல் அதிக மதிப்பெண் எடுத்த அனைருமே பட்டப்படிப்புகளில் / பட்டயப்படிப்புக்களில் அதிகம் சாதித்து விடுவதில்லை. அறிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மனனம் செய்யும் திறமை தான் இதை தீர்மானிக்கிறது.
முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு அரிசி விலை கிலோ எவ்வளவென்றால் தெரிவதில்லை.கான்வெண்டில் கிழித்த மாணவனுக்கு கடைக்கு போய் மீன் வாங்கிவிட்டு வர தெரிவதில்லை. ஏன் அரிசி விலை ஏறியது, ஏன் விவசாயம் அழிந்து போனது என எதுவுமே தெரியாமல் / தெரியவைக்கப்படாமல் தான் அனைத்து மாணவர்களுமே வளர்க்கப்படுகிறார்கள். மக்களைப்பற்றி கவலைப்படாத சமூகம் அடிமைத்தனமான சமூகம் உருவாக்கப்படுகின்றது.
இதில் அதிக மார்க் எடுத்தவன் உயர்ந்தவன் குறைந்த மார்க் எடுத்தவன் தாழ்ந்தவன் என்பதுதான் வேடிக்கை. இந்தக் கல்விமூறையால் எதை மாற்ற முடியும் உன்னால்? ஏன் உன்னுடைய வாழ்வுக்கான செலவை உன் கல்விமூறையால் மாற்ற முடியுமா? அழிந்து போன விவசாயத்தை மாற்ற முடியுமா ? எதையுமே மாற்ற முடியாத இந்தப்படிப்பு முறை உயர்ந்ததா என்ன? இப்படி மனிதனின் வாழ்வுக்கு தம்புடி அளவுக்குக்கூட பயன் படாத இந்தப்படிப்பு முறையில் அதிக மதிப்பெண் எடுத்தால் என்ன?
குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக இக்கல்விமுறை மீது வராத கோபம் தனிப்பட்ட மாணவர் மீது வருகிறது. லட்சக்கணக்கானோரில் சிலர்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடிகிறதெனில் அது யாருடைய தவறு கல்விமுறாஇயின் மீதா? அல்லது அதை படித்த மாணவர்கள் மீதா ? சிஅல்ர் கேட்பார்கள் அவன் எப்படி படித்தான். அந்த அவனோ அல்லது அவளோ நூற்றிலே எத்தனை பேர். ஆக நூற்றுக்கு அல்லது ஐம்பதிற்கு ஒரு மாணவன்தான் அதிக மதிப்பெண் பெற முடியுமெனில் அக்கல்வி முறை வகுப்பில் நூற்றுக்கு 10 பேருக்கா அல்லது 90 பேருக்கா?
பத்தாவதெனில் 375 மதிப்பெண்தான் பார்டர் பணிரெண்டாவதில் 950 தான் பார்டர் அதற்கு கீழ் மதிப்பெண் எடுத்ததெல்லாம் வேஸ்ட் இதுதான் சமூகத்தின் பார்வை. என்னுடன் படித்த மாணவன் பத்தாவதில் மதிப்பெண் குறைவு ஆனால் டிப்மோவில் 92 % மதிப்பெண் வாங்கினான். பின்னர் பி.இ. முடித்தும் விட்டான். அதனால் அவன் உயர்ந்தவனல்ல காரணம் அவன் இன்னமும் அடிமையில் சுகம் காணுபவன். அவன் இன்னமும் மக்களைப்பற்றி கவலைப்படாதவன். ஆக படிப்பிற்கும் வாழ்வுக்கும் சுயமரியாதைக்கும் துளியும் சம்பந்தமிருப்பதாய் தெரியவில்லை.
எது தகுதிக்குறைவு?
இந்த முறை தேர்வு முடிவுகள் வந்ததுமே சிலர் ஆங்காங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்கொலை எனபது “அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்ற சிந்தனை” மதிப்பெண் குறைவையும் தோல்வியடைவதையும் மாபெரும் குறையாக காட்டும் சமூகம் தான் முதல் குற்றவாளி. மதிப்பெண் குறைவு/ தோல்வி எனில் வெளியில் தலை காட்ட முடியாது என்ற நிலைமைக்கு என்ன காரணம்? மாணவர்களுக்கு சமூகத்தைப்பற்றிய அறிவு புகட்டப்படாமலிருப்பதே இதன் காரணம். சின்ன மருது புலியை அடக்கியதான் மூன்றாம் வகுப்பு பாடங்களில் வந்தது. அவரின் திருச்சிபிரகடனம் வாத்தியாருக்கே தெரிவதில்லை. இங்கு ஆசிரியரை இழுக்கக் காரணம் அந்த 3-ம் வகுப்பு படித்த மாணவன் தானே பிற்காலத்தில் ஆசிரியராகிறான்.
மாபெரும் துரோகி காந்தி இந்த நாட்டின் தேசத்தந்தையாக மாணவர்களின் மனதில் பதியவைக்கப்படுகிறது. புரட்சியாளன் பகத்சிங் புறக்கணிக்கப்படுகிறார்.அண்ணா, கருணா நிதி, கூத்தாடி எம்ஜிஆர் செயா பாடங்கள் படிப்பாக வருகின்றன. ஆதிகால சங்க இலக்கியங்கள் என்ற பேரில் எது தேவை எது தேவையில்லை என்பதெல்லாம் தெரிவதில்லை. மனப்பாடம் செய், மனப்பாடம் செய் இதுதான் தேர்வில் வெற்றி பெற உத்தி.
பத்தாவதில் பீட்டர் கையை வைத்து சுவற்றில் வழியும் நீரை அடைப்பான். அது ஒரு கதை. அந்தக்கதையை கதையாக எப்படி எழுதுவதென்று யாரும் சொல்லித்தரவில்லை. மனப்பாடம் செய்,மனப்பாடம் செய் இதை த்தா சொன்னார்கள். மனிதனின் மூளையை சிந்திக்கச் சொல்லவில்லை. மனப்பாடம் செய்ய மட்டுமே கற்றுக்கொடுத்தார்கள். போராட்டம் தவறென்றார்கள். அரசியல் தவறென்றார்கள்.
என் அன்பு மாணவனே,
போராடும் இவ்வுலகில் போராடாமல் இருப்பதல்லவா தகுதிக்குறைவு?, மக்களைப்பற்றிய அக்கறையின்றி எதைப்பற்றி படிக்கிறாய்? உன் வாழ்வுக்கு, என் வாழ்வுக்கும் மக்களின் வாழ்வுக்கும் துளியும் பயன் படாத இப்படிப்பை தகுதியாய் நிர்ணயித்திருக்கும் இச்சமூகத்தை எதிர்க்காமலிருப்பதல்லவா தகுதிக்குறைவு.
அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன, தனியார் பள்ளிகள் நன்கொடை போதவில்லை என்று பள்ளிகளை இழுத்து மூடுகின்றன.அரசுக்கல்லூரிகள் புதைகுழிக்கு தயராயிருக்கின்றன, பொறியியலெனில் லட்சங்கள், மருத்துவத்திற்கோ கோடிகள் எங்கும் பணம் தான் எதிலும் பணம்தான். பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் முதல் பாடம் எடுத்தவன் தானா இன்று கல்விக்கட்டணங்களை குறைக்கக்கோரும் களத்தில் நிற்கிறான்?அது நிர்ணயிப்பதல்ல, சமுகத்தின் மீதான அக்கறை தான் போராடத் துண்டுகிறது
படிக்கும் மாணவனுக்கு எதற்கு அரசியல்? படிக்கும் மாணவனுக்கு அல்லாமல் வேறு யாருக்கு? உன் தாயின் தாலி கல்லூரி தாளாளரின் பற்களில் மின்னும் வேளையில் உன்னையன்றி யார் போராடுவார்கள்? இன்ஸ்டால்மெண்ட் கட்டணத்தை கட்ட முடியாமல் நீ வேதனையுறுவதை, வெளியில் நிற்க வைத்து அவமானப்படுவதை உன்னையன்றி யார் அறிவார்? உனக்கு உன்னைத்தவிர யார் போராட முடியும்?
பணமின்றி படிப்பதற்கு படிப்பொன்று இருக்கிறது. ஆம் மக்களைப்படி, அவர்களிடமிருந்து கல், அவர்களுக்கே கற்றுக்கொடு, அதற்காக உன்னை படிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. இந்த விளங்காத படிப்பை விளங்க வைக்க மக்களையும் சேர்த்துப்படி. மதிப்பெண் குறைவென்றும் தேர்வில்தோல்வியுற்றனென்றும் உன்னை கிண்டலடித்தவர்களை எதிர்த்து , போராத அடிமைகளே என்று நீ எள்ளி நகையாடு. இனி நீ தான் ஆசிரியன்.
(தாலி – இதைப்புனிதமாக கூறவில்லை, பலர் கடைசியாய் வேறு வழியின்று வைக்கும் ஒரு பொருள் என்ற அளவில் மட்டும்)
நீ தான் ஆசிரியன்