ஊர் கூடி தேர் இழுக்க முயன்றோம்.....
அவர் எவரோ தலமைச் சாரதி என்றோம்...
தலைவன் என்றோம், தெசியத் தலைவன் என்றோம்...
அப்பாலும் போய் தொழுதோம்... சூரியத்தேவன் என்றோம்...
துதி பாடினோம்... அன்று!

இன்று
முள்ளிவாய்க்கால் கரையோரம் முடிந்து போயிற்று 
எமது போராட்டம்!
களமாடி மரித்துப்போன போராளிகளும், மக்களும்
கூடவே தலைமைச் சாரதியும் தான்!

 

தலைவனின் மரணம்பற்றி

அறியாதவர்கள் கேட்கிறார்கள்...
அறிந்தவர்கள் மறுக்கிறார்கள்...

 

எவரது மரணத்தையும் ஒருபோதும் மறைக்க முடியாது!
தொண்டர்களையும், தோளனையும் அளவிடு.

 

மனச்சாட்சியின் 
குறைந்த பட்ச நேசிப்பு என்பது
அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதுதான்.

 

வழி விடு!

 

போராட்டம் என்பது இன்னமும் நீண்டதுதான்!
தலைவர்கள் வருவார்கள் ,போவார்கள்
மக்களின் நலன்கள் நிரந்தரம

விழித்துக்கொண்ட தமிழ் நிரந்தரமானவை

 

விழித்துக்கொண்ட தமிழ் மக்களமைப்பு 16.05 .2010