சிவராமை, முதல் தடவையாக, 85இன் நடுப்பகுதில் தீவகத்தில் கண்டதாக நினைப்பு. அப்போது புளாட்டின் அரசியல் பாசறையில், மார்க்சியம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

 

அதன் பிற்பாடு, அவரை 90களின் கடைசியில், ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் அரசியல், பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வாளராக இருந்த போது, என் பணியின் நிமித்தம் அவருடன் நேரடியாக  தொடர்பில் இருந்தேன். அத்தொடர்பை எற்படுத்தி தந்தவர்கள் முன்னாள் சரிநிகர் ஆசிரியர் குழுவினர்.

 
அந்தக் காலகட்டத்தில்; இலங்கையில் நடந்து கொண்டிருந்த மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான எனது செயற்பாடுபாடு.  இது பல தளங்களில் இருந்தது. சிவராமுக்கும் எனக்குமான உறவு இத்தளத்திலேயே இருந்தது. அவர் இலங்கையில் நடந்து கொண்டிருந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக் அனைத்து விடயங்கள் பற்றியும் ஆழமான அறிவையும், விபரங்களையும் அறிந்தவராக இருந்தார்.
 
பல ஐரோபிய நாடுகளின் மனிதஉரிமை அமைப்புகள், அரசுசார்பற்ற நிறுவனங்கள்;, இவரிடமிருந்து  மனிதஉரிமை மீறல்கள் பற்றிய விபரங்களைப் பெற்றன. இதன் மூலம், ஐரோபிய அரசுகள் இலங்கைக்கு அகதிகளை திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்தின. குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நோர்வே, டென்மார்க், கனடா போன்ற நாடுகளின் இதில் குறிப்பிடத்தக்கது. இலங்கை அகதிகள் சார்பான அரசியல் மாற்றங்களுக்கு, சிவராமின் தகவங்கள் பல தடவைகளில் நேரடியான காரணிகள் என்றால் மிகையாகாது. 

 

அது மட்டுமல்லாமல், இன்று புலம் பெயர்ந்த நாடுகளில், ஜனநாயகம், மார்க்சிசம், முற்போக்கு, பெண்விடுதலை கதைக்கும் சிலர், சிவராமின் உதவியால் பெற்ற தகவல்கள் மற்றும் சிபாரிசு கடிதங்கள் மூலமும், அவரின் சர்வதேச தொடர்புகளை பாவித்தன் மூலம் அகதி அந்தஸ்து பெற்றனர். ஏன் சிவராமின் படுகொலையை சாதகமாக வைத்து,  பலன் பெற்றோர், இன்றும் பலன் பெறுவோர் பலர்.  

 

இவர்களில் சிலர் தான் சிவராமின் இறப்புக்கு பின் அவர் பற்றிய காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள். அவர் உயிருடன் இருக்கு போது அவரின், களவாணித்தனங்கள், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அரசியல் படுகொலைகள் போன்ற அனைத்தும் இவர்களுக்கு தெரிந்தும் மூடிமறைத்தனர். ஆனால் அப்போது தமது தேவைக்காகவும், சந்தர்ப்பவாதமகவும், சிவராமை விமர்சிக்காமல் பச்சோந்தியாய் இருந்தார்கள்.
  
மேலும் இவர்களில் பலர் இன்று புலியின் அழிவுக்குப் பின், அதன் வாரிசென உருவெடுத்துள்ள மே18 இயக்கத்துடன் தொடர்புள்ளவர்களாக இருகின்றனர். இதே நபர்களே முன்பு தமிழ் ஈழ மக்கள் கட்சி என்ற அமைப்பை, தீப்பொறியின் எச்சத்தில் இருந்து உருவாக்கினர். இக்கட்சி பிற்காலத்தில் சீரழிந்து புலியின்; (முற்போக்கு-இடதுசாரிகளை) உளவு பார்க்கும் அமைப்பாக மாறியது.

 

இச்சீரழிவுக்கும், முற்போக்கு-இடதுசாரிகளை காட்டிக் கொடுக்கும் அமைப்பாக மாறவைத்தற்கும்  யார் காரணம்? சாட்சாத் சிவராமே தான்!

 

அன்று இலங்கையில் தமிழ் ஈழ மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், சரிநிகர் பத்திரிகையை தளமாக கொண்டிருந்தனர். இவர்கள் அவ் அமைப்பின் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளாகவும் இருந்தனர். அமைப்பின் இன்னொரு பகுதியினர் புலம்பெயர் தேசங்களில் இருந்தனர்.  

 

இந்த உள்நாட்டு உறுப்பினர்கள் தேசிய பார்வையில் புலியை முற்போக்கு தேசிய சக்தியாக வரையறுத்ததுடன், புலிசார்பாகவும் பிரசாரம் செய்தனர். இன்னிலையில் இவர்களுக்கு புலியுடன் எந்த நேரடி தொடர்பும் இருக்கவில்லை.

 

சிவராம், சரிநிகர் பத்திரிகையில் எழுத தொடங்கிய போது, புலிகளுடனான உறவை    தமிழ் ஈழ மக்கள் கட்சியின்; சரிநிகர் பத்திரிகையை தளமாக கொண்டிருந்த உறுப்பினர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். இதேவேளை இவ் இணைப்பு சிவராமால் திட்டமிட்டு ஏற்படுப்பட்டதல்ல. கட்சியின் விருப்பின் அடிப்படையிலேயே, சிவராம் இணைப்பாளராக செயற்பட்டார். (இதேவேளை கனடிய, மற்றும் இங்கிலாந்து தொடர்புகளினுடாகவும் தமிழ்ஈழ மக்கள் கட்சியினர் புலியுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது).

 

இங்கு தனித்தனியாக சிவராம், சரிநிகர், தமிழ் ஈழ மக்கள் கட்சி தனித்தனியாக புலிக்கு வேலை செய்;தன. அதே நேரம் புலிக்கு வேலை செய்வதில் தமது தனித்துவத்தைக் கொண்டிருந்தனர். ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இருந்தனர்.  

      

இதன் பின் தமிழ் ஈழ கட்சியை சேர்ந்த நபர்களும், சரிநிகர் பத்திரிகையின் எழுத்தாளர்களும் ஆசிரியர் குழுவும், செய்தியாளர்கள் என்ற முகமூடியுடம் வன்னிக்கும், கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கும் காவடி எடுத்தனர். (இன்று இங்கிலாந்திலும், நோர்வே, பிரான்சிலும் இவர்கள் வாழ்கிறார்கள். இந்த நபர்கள். இவர்களிடமிருந்து சில காரியங்களை நிறைவேற்ற புலிகள் இவர்களுக்கு பெண்ணும் பொன்னும் வழங்கியதாக, இவர்களின் குழுவை சேர்ந்தவர்களே, உள்முரண்பாடு காரணமாக செய்திகளை கசிய விட்டனர்.)

 

இவ்வாறு சரிநிகர், தமிழ் ஈழ கட்சி அனைத்தையும் புலிகளிடம் அடகு வைத்து விட்டு, துரோகத்தனமாக தப்பித்த இந்த மே 18 பிரமுகர்கள், இப்போ தங்கள் வழிகாட்டியான குருவை அவர் இறப்புக்கு பின் விமர்சிக்கின்றனர். புலியின் ஜனநாயக மறுப்பையும், இலக்கியம், பெண்ணியம், "தலித்தியம்" போன்ற முகமூடிகளை அணிந்துகொண்டு; எப்படி ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளாட் சேர்ந்த முன்னாள் கொலைகாரர்கள் எப்படி தப்பித்து கொள்கிரார்களோ, அதேபோல  சிவராமும் பலருக்கு இன்று தம் ஈன முகத்தை மறைக்கும் முகமூடியாக பயன்படுகிறார். 

 

இப்போது மக்களுக்கு தெரியவேண்டியது புளாட்டில் சிவராம் செய்த திருவிளையாடல்கள் மட்டுமல்ல. அதெல்லாம் பழைய கதை. இதைவிட முக்கியமாக இன்று தெரிய வேண்டியது, தமிழீழகட்சியும், சரிநிகர் குழுவும், சிவராமுடன் சேர்ந்து விளையாடிய கண்ணாம்பூச்சி ஆட்டம் பற்றியதே. சிவராம் படுகொலை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இதை ஒரு தொடக்கமாக கொண்டு ஐரோப்பாவில் வாழும் முன்னாள் தமிழீழகட்சி உறுப்பினர்களும், சரிநிகர் குழுவும், மற்றும் இவர்களுடன் சம்பத்தப்பட்ட மே 18 இயக்க பிரமுகர்களும்; மக்களுக்கு தாங்கள் சிவராமுடனும், புலிகளுடனும் சேர்ந்து செய்த மக்கள் விரோத அரசியல் பற்றிய சுய விமர்சனத்தையே செய்ய முன்னவர வேண்டும்.

 

மா.நீனா

30.04.2010