" Pathman takes his task to treat seriously" says Jan Vaage, county physician in South Trøndelag to ‘adresseavisa’ newspaper (Norway).
"பத்மன் உண்மையாகவே தன்னிடம் வருபவர்களை சிறப்பாகக் கையாள்கிறர்" என்று ஒரு மாநிலப் பொறுப்பான தலைமை டாக்டர் பாராட்டியதற்கு என்ன காரணம்?.
இதன் பின்னணி என்ன?
ஒரு பெண் தனக்கு சமூக பயக் கோளாறு (social anxiety)என்று எனிடம் வந்தார் . சமூக பயக்க் கோளாறு எனப்படுவது, வெளியில் பொதுமக்கள் மத்தியில் செல்லப் பயப்படுவது. பேருந்தில் செல்லவோ,தனிமையாக எங்கு செல்லவும் பயப்படுவது . இதைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரை தமிழரங்கத்தில் "வெட்கமா சமூக பயக்கோளாறா" என்று உள்ளது அதனை வாசிக்கவும். இங்கே அழுத்தவும் http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2377:2008-08-01-14-55-25&catid=134:2008-07-10-15-51-26&Itemid=86
அந்த விடயங்களை நான் மீண்டும் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அந்தப் பிரச்சனை ஹிப்னோதெரபி மூலம் எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்ப்போம்.
நோறா என்ற பெண் பல நண்பர்களைக் கொண்ட ஒரு குதூகலமான,கலகலப்பான மகிழ்ச்சியான பெண். நண்பர்கள் மத்தியில் நின்றால் எப்பொழுதும் அவர்களைக் கலகலப்பாக வைத்திருப்பார். ஆனால் அவரால் தனிமையில் வீட்டை விட்டு வெளியேற முடியாது.அந்த 23 வயதுப் பெண்ணுக்கு எப்பொழுதும் துணை தேவை. தனது காதலன்,நண்பர்கள் அல்லது தாயாருடன் தான் வெளியேறுவார். தன்னுடைய காதலனுடனே வசித்து வந்தார்.
அவரால் தனிமையில் வெளியே செல்ல முடியாதது.அவரது வாழ்க்கயை பெரிதும் பாதித்தது. வழமை போல் பல மருத்துவர்களிடம் அணுகியும் அவர்களால் அந்தப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. அந்தப் பெண் திறந்த மனம் உடைய நேர்மையான , கெட்டித்தனமுடையவராக இருந்த படியால் உடனடியாக்வே அவரது நோய்க்குரிய காரணத்தைக் கண்டு பிடிப்பதர்காக அவரைக் ஹிப்னாடிஸம் செய்து அவரது சிறு வயது நோக்கி நகர்த்தினேன்.
எந்தக் காரணத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை.அவர் முதல் முதல் உலகுக்கு வரும் அக்கணத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் தனது கழுத்தை சுற்றி எதோ அமத்துவதை வெளிப்படுத்தி வேதனைப் பட்டார். மூச்சு விடுவதற்கும் சிறிது கஸ்ரப் பட்டார்.எனது அனுபவத்தினூடாக பிரச்சனை விளங்கி விட்டது.அவரது கழுத்தை தொப்புள் கொடி இறுக்கியதை என்னால் ஊகிக்க முடிந்தது. தயாரிடம் அதை உறுத்திப் படுத்தி அவருக்கு சிகிச்சை அளித்தேன்.
காதலனின் ஆச்சரியம்
அன்று மாலை நோறா தனது காதலனிடம் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, காதலனை எதிர்பார்க்காது வெளியேறினார்.காதலனால் நம்ப முடியவில்லை அவரும் அமைதியாகவே இருந்து விட்டார்.நோறாவும் நடு வளியில் செல்லும் பொழுது தான் தனிமையில் பயமில்லாது வருவதை உனர்ந்து, பத்மனின் ஹிப்னாடிஸம் தனக்கு உதவி செய்கின்றது என்று மகிழ்ந்தார். கடைக்கு தனிமையில் சென்று வந்த காதலியால் காதலன் ஆச்சரியப் பட்டான்.அடுத்த நாள் நோறாவிற்கு தனது மனோ தத்துவ மருத்துவரைச்(Psychologist) சந்திக்கும் நேரம் இருந்தது.
மனோ கத்துவ மருத்துவரிடம் சென்று அவரிடம் கூறினாள்.நான் உங்களிடம் பலவருடமாக் வந்தும் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஆனால் பத்மன் ஒரு சந்திப்புடன் தனது பெரும் பிரச்சனையை தீர்த்து விட்டதாகவும் கூறினார்.இது உளவியல் டாக்டர்கள்(Psychologist) மத்தியில் சிறு சலசல்ப்பை ஏற்படுத்டியது.
இதனால் பொறாமைப் பட்ட ஒருவர் 100 வருடங்களுக்கு முற்பட்ட சட்டத்தை மீட்டெடுத்து பத்மனுக்கு ஹிப்னாடிஸம் செய்ய சட்டம் இல்லை என்று என்னிடம் வாதிட்டார். நான் அவருக்கு பல முறைகளிலும் விளங்கப் படுத்தினேன். 100 வருடங்களிற்கு முன்பு ஹிப்னாடிஸத்திற்கு இருந்த வரையறை வேறு. இப்பொழுது வேறு என்பதை உணர்த்தினேன்.அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 100 வருடத்து பழைய சட்டம் கூறுவது என்ன வென்றால் ,பல்மருத்துவர்(dentist),மருத்துவர்(doctor) , உளவியல்மருத்துவர்கள் (Psychologist)மாத்திரமே ஹிப்னாடிசம் செய்ய முடியும்.
அப்பொழுது பழைய வரையறையின் படி ஒருவரது விருப்பத்திற்கு மாறாக ஹிப்னாடிஸம் செய்ய முடியும் என்பதே. அனால் புதிய முறையின் படி அனைத்துக் ஹிப்னாடிசமும் சுய ஹிப்னாடிஸமே(self hypnosis). ஒருவரது விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ய முடியாது என்பது புதிய விதிமுறை.அந்த மனோ தத்துவ மருத்துவர் பிரச்சனையை விடவில்லை. மேலதிகமாக மானிலப் பொறுப்பான டாக்டரிடம் முறயிட்டார்.இது பத்திரிகையிலும் வந்தது. உண்மை என்னவெனில் மாநிலப் பொறுப்பான டாக்டர் அலுவலகத்தில் இருந்து பலரும் என்னிடம் சிகிச்சை பெற்று திருப்தியடைந்தவர்களே.ஆதலால் மாநில பொறுப்பு மருத்துவர் என்னைப் பற்றி நன்றாக்வே அறிந்திருந்தார். அவர் என்னிடம் கூப்பிட்டு கலந்தாலோசித்து விட்டு, பத்திரிகயில் என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேட்டி கொடுத்தார்.மாநில மருத்துவர் ஒருவரைப் புகழ்வது என்பது மிகவும் அருமை.இது சுய புராணம் அல்ல, பலரது சந்தேகங்களிற்கு தெளிவு.
தொப்புள் கொடி சிக்கிய எல்லோருக்கும் சமூக பயம் வரும் என்பது அர்த்மாகாது. சிலருக்கே அவை அதிர்ச்சியாக பதிந்து விடுகிறது.நோராவிற்கு அந்தப் பிரச்சனை தீர்க்காவிட்டால் , அது அவரது பிள்ளைக்கும் பராமரிப்பினூடாக பரவும். பல பெற்றொருக்குள்ள பயங்கள் பிள்ளைகளிற்கும் உண்டு. அவை பெரும்பாலும் பராமரிபினூடாக் பரவியதே.
எம்மில் பலருக்கு குறிப்பாக் பெண்களுக்கு சமூக பயக் கோளாறு இருப்பதே தெரியாது.பயம் ஓரளவு இருப்பது பாதுகாப்பானதே. ஆனால் எல்லை மீறும் பொழுது அது பிரச்சனையாகி விடுகின்றது. சில பெண்கள் தான் எப்பொழுது கணவனுடனே தான் வெளியே செல்வேன் என்றும், இளமையில் பெற்றோருடன் தான் வேளியே செல்வேன் என்றும் பெருமையாகக் கூறுவதும் உண்டு. அவர்களும் சமூக பயக்கோளாறு உடையவர்களே
இப்படியாக நாங்கள் இலங்கைப் பிரச்சனையைப் பார்ப்போமானால், பல பிள்ளைகள் குண்டுச் சத்தத்திலிம் பிறந்து இருக்கின்றன,பலருக்கும் பல அதிர்ச்சிகள் நடந்திருக்கின்றது.இலங்கைப் பிரச்சனை மே 19.2009 இல் முடியவில்லை. அப்பொழுது தான் உள்வியல் ரீதியாக ஆரம்பித்துளது. இது என்னும் எத்தனை பரம்பரைக்கு எம்மைப் பாதிக்குமோ தெரியாது.உடனே எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்.
6.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 06
5.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 05
4.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 04
3.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 03
2.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 02
1.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 01