ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்கும் வர்க்க இலக்கியத்தை, ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்த்து போராட வேண்டும் எனக் கோருவது கருத்துச் சுதந்திரமாகும்.

இக் கல்வெட்டு என்பது கடந்தகால நிகழ்கால அரசியல் மீது என்பதால், வெறுமனே றயாகரன் மீதானது அல்ல. என் போராட்ட வரலாறு என்பது கடந்தகாலம், நிகழ்காலத்திலும் சமுதயத்தின் அனைத்து ஒடுக்குமுறை மீதானது என்பதால், குறிப்பாக தமிழ் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்துக்குமானதாக, அவர்கள் போராடும் உரிமைக்காகவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் நீண்ட விடாப்பிடியான போராட்டத்தால் மட்டுமே அடையாளப்படுத்த முடியும். இதற்க்காக என்னுடன் சேர்ந்து நின்ற பலரை நான் இழந்தேன். அது போல் போராடியவர்களின் பக்கம் எங்கள் கரங்களை உறுதியோடு இணைத்துக் கொண்டோம். அதே நேரம் இந்தச் சமூகம் தனது விடுதைலைக்காக பல சமுக முன்னணியாளரை இழந்தது. தமிழீழப் போராட்ட வராலாற்றில் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், அதே நேரம் இயக்க உள் வெளி சனநாயக விரோத்துக்கு எதிராக போராடியபோது கொல்லப்பட்ட ஆயிரம் முன்னணியாளாகள் முன் நின்றும், ஆதாரவு கொடுத்தும் நின்ற என் வராலாற்றை கொச்சைப்படுத்தி சேறுயடிக்கப்படும் போது, அது கடந்த கால நிகழ்காலத்தில் இதற்க்காக போராடி தம்மையே அர்ப்பணித்த தியாகத்தையும், அந்த அரசியல் சார்ந்த மொத்தப் போராட்டத்தையுமே என்பதை சனநாயக, மற்றும் வர்க்க சக்திகள் விழிப்புடன் எதிர் கொள்ளவேண்டியுள்ளது. அன்று சனநாயக விரோதிகள் ஏ.கே.47 மூலம் எதை சனநாயக வாதிகளுக்கு எதிராக நடத்தினரோ, அதையே என் கல்வெட்டு மூலமும் கடந்த போராட்டம் மீதும் நடத்துவதன் மூலம் செய்யும் பிற்போக்கு அரசியலாகும்.

 

இந்த போராட்டத் தொடர்ச்சியில் எது நிகழ்கின்றதோ அதை மர்ர்க்ஸ் வார்த்தையில் பார்ப்போம். "அரசியல் பொருளாதாரத் துறையில் சுதந்தர விஞ்ஞான ஆராய்ச்சி சந்திப்பது, மற்றெல்லாத் துறைகளிலும் சந்திக்கிற எதிரிகளை மட்டுமன்று. அது ஆராய்கிற பொருளின் விசேஷத் தன்மையானது மானுட நெஞ்சத்தின் உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை, தனி நலனின் ஆவேசங்களை யுத்தகளத்துக்குள் எதிரிகளாக வரவழைக்கிறது." என மார்க்ஸ் மூலதனம் முதல் பாகம் ஒன்றில் பக்கம் 28யில் குறிப்பிட்டுள்ளார்.

 

அன்று மட்டுமல்ல இன்று அதுவே உண்மை என்பதற்க்கு எடுத்து கட்டாக, அண்மையில் வெளியாகிய எக்ஸில் இதழ் நான்காவதில் (இவ்இதழ் ஆசிரியர் குழு உடைந்து இரு பத்திரிகை ஒரே பெயரில் வெளியாகியுள்ளது. இவ் இரண்டிலும்) றயாகரன் இறந்து விட்டார் எனக் குறிப்பிட்டு ஷோபாசக்தி ஒரு கல்வெட்டை அவரின் உன்னதமான இலக்கிய அரசியல் வழியில் (இப்படி பலரால் அரசியல் அற்று புகழப்பட்டவர். இதை அரசியல் உள்ளடக்கத்தில் கூறத் தெரியதோர்.) வெளியிட்டுள்ளர். இதன் மூலம் பாட்டாளிவர்க்க எதிரிகள் நான் இறந்த பின் எப்படி எழுதுவர் என்பதற்க்கு ஒரு எடுத்துக் காட்டாக இக் கல்வெட்டு வெளிவந்துள்ளது. மார்க்ஸ் இறந்து விட்டார் என்று அவர் காலத்தில் பலமுறை செய்தியாக வர்க்க எதிரிகள் செய்தி பரப்பி அவரை உயிருடன் பலமுறை கொன்றனர். அவர் உண்மையில் இறந்த போது அதை நம்ப மக்கள் மறுக்கும் அளவுக்கு அவரை கொன்று கல்வெட்டில் பதித்தனர். இறுதியில் எங்கெல்ஸ் உண்மையில் இறந்தை அறிவித்த போதுதான் மார்க்ஸ் உடலால் இறந்ததை உலகம் நம்பியது. இதுபோன்றவை வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்காக போராடியவர்கள் சந்தித்த புதிய விடையங்கள் அல்ல.

 

இது போல் நான் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்துக்காக, ஆணாதிக்கத்துக்கு எதிராக, சாதியை ஒழிக்க என சமுதாய அவலங்களை ஒழிக்க புறப்பட்டதால் எனக்குத் தெரிய பல இயக்கங்கள் எனக்கு மரண தண்டனை தீர்ப்பளித்து தேடினர். கைது செய்து கொல்ல வைத்திருந்த இடத்தில் தப்பியவன். இதைவிட எத்தனை மரண தண்டனைகள் உள்ளனவோ தெரியாத நிலையில் உள்ளவன்.

 

நான் பல்கலைக்கழக அதிகாரவர்க்க, ஆணாதிக்க ராக்கிங்கை தனியொருவனாக தலைமைதாங்கி எதிர்த்து கோட்பாட்டிலும் நடைமுறையிலும் பல்கலைகழகத்தை இரண்டாக்கி போராடியதால் "மன நோயாளி" என துண்டுப்பிரசுரம் விட்டு என்கருத்தை மறுக்க "மனநோயாளி" ஆக்கினர்.


சமூக பிரச்சனைகளை பற்றி அக்கறையற்ற போக்கு பரிசில் வெளிப்பட்ட நிலையில் அதை குறித்து வெளியிட்ட துண்டுப் பிரசுரத்துக்கு பதிலாக மரணதண்டனை தீர்ப்பளித்து "கல்வெட்டு" வெளியிட்டுள்ளனர்.

 

நல்லது இவைகளையிட்டு நான் உங்கள் எல்லோருக்கும் தெளிவாக கூறுகின்றேன் வரலாறும், மக்களும் எப்போது தவறுயிழைப்பதில்லை.

 

இக் கல்வெட்டு எனது கோட்பாட்டுக்கு அல்ல எனது உயிர்க்குத்தான். ஏன் எனின் கீழ் உள்ளவைக்கு பதிலளிக்காத எல்லா நிலையிலும், எனது கோட்பாட்டுக்கு பதிலளிக்கபடாத மரணதண்டனை போன்று, கல்வெட்டும் ஒரே மாதிரியானதுதான். இவ் அரசியல் படுகொலைக்கு எதிராக போராடாத எவரும் குறைந்த பட்சம் சனநாயக வாதியாக இருக்க தகுதி கிடையாது. இயக்கங்கள் இராணுவ வழியில் வீதிகளில் வழங்கும் மரண தண்டனை போல் ஷோபாசக்தி சமூகப் பிரச்சனைக்கு பதிலாளிக்கத் தவறி மரணதண்டனை வழங்கி கல்வெட்டு விடுகின்றார். எனது கோட்பாடுக்கு பதிலளிக்கப் படாதவரை அது தனிநபர்க்கு வெளியிட்ட கல்வெட்டு மட்டுமின்றி அது இயக்கபாணி மரண தண்டனையும் கூட. ஷோபாசக்தி இவற்றுக்கு பதில்லளித்துள்ளாரா? என்றகேள்வியை உங்களிடம் எழுப்பி அவற்றின் மேல் கல்வெட்டை ஆராயக்கோருகின்றேன்.

 

சமுதயத்தின் ஒவ்வொரு பிரச்சனையையும் ஆராய்யும் வழி என்ன? இந்த ஆய்வு முறை இருக்கும் போக்கின் மீது வால் பிடித்துச் செல்வதுக்குப் பதில் பிரச்சனையை நுனுகி ஆராய்யக் கோருகின்றது. மார்க்ஸ்க்கு எதிரான அவதூறுகள் மற்றும் ஆய்வுகள் மீதான விவாத்தில் மார்க்ஸ்சின் ஆய்வு என்ன என “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான” முன்னுரையை எழுதியவரின் வரிகளை மீள மார்க்ஸ் மூலதனத்தில் பக்கம் 38 இல் கூறுவதை எடுத்து வைப்பதன் மூலம் கீழ் நான் எழுப்பவைகளை ஆராய்வதற்க்கும், எனது அரசியல் நிலையையும் மற்றவர் அரசியல் நிலையையும் சுயமாக ஒப்பிட உதவும் என்பதால் அதை நாம் முதலில் பார்ப்போம்.

 

"மார்க்சுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது யாதென்றால், தாம் ஆராய முற்பட்டுள்ள புலப்பாடுகளின் விதியைக் கண்டுபிடிப்பதே@ குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திற்குள் திட்டமான வடிவத்தையும் பரஸ்பரத் தொடர்பையும் கொண்டுள்ள இப்புலப்பாடுகளை ஆளுகிற விதி மட்டுமன்று அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவை திரிந்து மாறுபடுவது பற்றிய, வளர்;ச்சியடைவது பற்றிய, அதாவது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு, தொடர்புகளின் ஒரு வரிசையிலிருந்து வேறுறொரு வரிசைக்கு மாறிச் செல்வது பற்றிய விதி அவருக்கு இன்னுமதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விதியைக் கண்டுபிடித்தவுடனேயே, அதனை சமூக வாழ்வில் வெளிக்காட்டுகிற விளைவுகளை அவர் நுணுக்கமாக ஆராய்கிறார். ஆதலால் மாhக்ஸ் ஒன்றைப் பற்றி மட்டுமே கவலை கொள்கின்றர். சமூக நிலைமைகளின் நிர்ணயமான அமைப்பகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர வேண்டிய அவசியத்தை விடாக்கண்டிப்பான விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் உணர்த்துவதைப் பற்றியும், அடிப்படைத் தொடக்க ஆதாரங்களாக அவருக்குப் பயன்படுகிற உண்மைகளை முடிந்த வரை பாரபட்சமின்றி நிலைநாட்டுவதைப் பற்றியும் கவலை கொள்கிறார். இன்றுள்ள அமைப்பின் அவசியம், இவ்வமைப்பு தவிர்க்க முடியாமலே மறைந்து அதனிடத்துக்கு வர வேண்டிய இன்னொருஅமைப்பின் அவசியம் ஆகிய இரு அவசியங்களையும், மனிதர்கள் நடம்பினாலும் நம்பா விட்டாலும், உணர்ந்திருந்தாலும் உணராதிருந்தாலும் இப்படித்தான் நிகளுமென்பதையும் அவர் ஒருங்கே நிரூபித்த விட்டாலே இதற்க்குப் போதுமானது. மார்க்ஸ் சமுதாயத்தின் இயக்கத்தை இயற்கை வரலாற்று நிகழ்முறையாக அணுகுகிறார்........... நாகரிகத்தின் வரலாற்றில் உணர்வு அமிசம் இவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கிற தென்றால், நாகரிகத்தைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு விமர்சன ஆராய்ச்சி உணர்வின் எந்த வடிவத்தையும் அல்லது எந்தப் பயனையும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்பது கூறாமல் விளங்கும். இப்படிச் சொல்வதன் பொருள் அதன் தொடக்க ஆதாரமாகப் பயன்படக் கூடியது கருத்தன்று. பொருளாயதப் புலப்பாடேஎன்பதாகும். இப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒரு நிகழ்வை கருத்துகளோடு அல்லாமல், இன்னொரு நிகழ்வோடு மோத விட்டும், ஒப்பிட்டும் பார்ப்பதுடன் நின்று கொள்ளும். முடிந்தவரை சரிநுட்பமாக இரு நிகழ்வுகளையும் ஆராய்வதும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தினால் உண்மையிலேயே ஒரு பரிணாமத்தின் வௌ;வேறு அமிசங்களாக அவை அமைவதும் இவ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்@ ஆனால் அனைத்திலும் மிக முக்கியமானது இப்படியொரு பரிணாமத்தின் வௌ;வேறு கட்டங்கள் வெளிப்படுகிற அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் தொடரை, வரிசைக் கிரமங்கள் மற்றும் சங்கிலித் தொடர்களை விடாக்கண்டிப்புடன் பாகுத்தாய்வதாகும்" (அடிக் கோடு நான்) இதை அடிப்படையாக கொண்டு கீழ் உள்ளவைகளை ஆராய தயாரானவர்கள் மட்டுமே சமூக இயக்கத்தின் உயிர் நடியை சரியாக கணவும், அதன் ஒளியில் மக்களை விமோசனத்துக்கான மாhக்கத்தை சுட்டிக் காட்டவும் போராடவும் முடியும் என்பது கேள்விக்கு இடமற்றது.

 

1.தலித்தியம் - தலித் எப்படி சாதியை ஒழிக்கும்? தலித்தில் உள்ள முதலாளியின் நிலை என்ன? தலித்துக்குள் உள்ள சாதிகள், தனக்குள் உள்ள சாதியை ஒழிக்குமா? அப்படியாயின் இது எப்படி? இவைகளைக் கேட்டால் (பாட்டாளி வர்க்கம்) சாதித்தடிப்பா? பறையன், பள்ளன் என ஏன் போராடமுடியாது? அப்படி போராடினால் வெற்றி பெறமுடியதோ? ஏன்? இவைகளை நான் கேட்பதால் சாதித்தடிப்பு என எந்த ஆய்வை கொண்டு? சாதிக்கெதிராக பாட்டாளி வாக்கம் நடைமுறை மற்றும் கோட்பாட்டில் போராடவில்லையா? 1980க்கு பின் என்னைவிட இதை திறம்படச் செய்தவர் யார்? எதையாவது காட்ட முடியுமா? நான் நடைமுறை மற்றும் கோட்பாட்டில் போராடியதில் உமது விமர்சனம் என்ன?

 

2.பின்நவீனத்துவம் - பின்நவீனத்துவம் எப்படி சமூக ஒடுக்குறையை ஒழிக்கும்? பெரும்பான்மை சிறுபான்மை (சுரண்டப்படும் மக்களுக்கும் சுரண்டுபவனுக்கும்) இடையில் என்ன உறவைக் கையாளும். இங்கு தனிநபர் சனநாயகம் வர்க்க எல்லையில் எப்படி கையாளப்படும்? பின்நவீனத்துவம் எந்தமக்களை (வர்க்கத்தை) சார்ந்து நிக்கும்? அதன் கோட்பாடு என்ன? இப்படி கேட்டால் கல்வெட்டுதான் பதிலா?

 

3.அதிகாராத்துவம் - அதிகாராத்தை எப்படி ஒழிக்கமுடியும்? அதன் வடிவம் என்ன? இருக்கும் அதிகாராம் எப்படி தகரும்? இதில் வர்க்கப் பாத்திரம் என்ன? பாட்டாளி அதிகாராத்தைக் கைப்பாற்றினால் முதலாளிக்கு எதிராக அதிகாரம் இருக்குமா, இருக்காதா? வன்முறை உடலால் மட்டுமா? அல்லது இலக்கியம் போன்றவற்றிலும் பொருந்துமா? விமர்சனம், மற்றும் இலக்கியத்தில் வன்முறை மொழியில் இருக்குமா? இருக்கிறது எனின் ரNஐஸ்வரி பாலசுப்பிமணியத்துக்கு ஷோபாசக்தி எழுதிய விமர்சனம் மொழியால் வன்முறை கொண்டது அல்லவா? (இவர் வாய் மூலம் எழுத்தில் அல்ல கடந்த கால தனது இலக்கியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார்.) அப்படியாயின் ஒடுக்கும் வர்க்க இலக்கியத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் தடை செய்யப்படும் எனக் கூறிய விமர்சனம் மட்டும் எப்படி தவறாகும்? இதற்கு பதில் கல்வெட்டும் மரணதண்டனையும் தான் என்றால் அது ஒடுக்கும் வர்க்க குரல் இல்லையா?


4.பெண்விடுதலை - பெண்விடுதலை எப்படி அடையமுடியும்? அதற்கான பெண்கள் போராட்ட வடிவம் (எந்த வர்க்க பெண் போராட்டத்துக்கு தலைமை தாங்குவது, அதன் வேலைத் திட்டம்) என்ன? பெண் எப்படி அடிமையானாள்? அடிமையாக்கிய காராணம் தகர்க்காமல் பெண் விடுதலை அடைய முடியுமா? அப்படிமுடியும் எனின் எப்படி? உங்கள் பெண்ணியத்துக்கும் ஏகாதிபத்திய பெண்ணியத்துக்கும் (அணைத்திலும்) வேறுபாடு என்ன?

 

5.ஒரினச்சேர்க்கை - எப்படி உருவானது? அதற்க்கு காரணம் என்ன? இது இயக்கையாயின் எப்படி? அதன் ஆதாராம் என்ன? எப்படி இது பாட்டாளி வர்க்ககோசமாகும்?

 

இந்த இடத்தில் மாhக்சின் சில கருத்துகளை வைப்பது இதையும் சரி, சமூக இயக்கத்தையும் சரி புரிந்து கொள் சிந்திக்கின்ற, உண்மையில் சமூகத்தின் மீது அக்கறை கொள்வோருக்கு உதவும். "... .., டார்வின் நம்மை அக்கறை கொள்ளச் செய்கின்றார். பொருளுற்பத்திக்குப் பயன்படும் மனித உறுப்புகளின் வரலாறு - சமூகஒழுங்கமைப்பு அனைத்தின் பொருளாயத அடிப்படையாக விளங்கும் இந்த உறுப்புகளின் வரலாறு - அதே அளவு அக்கறைக்குரியதன்றோ? விக்கோ கேட்பது போல, இப்படியொரு வரலாற்றைத் தொகுப்பது எளிதன்றோ நாம் மனிதனின் வரலாற்றைப் படைத்திருக்கிறோம். இயற்க்கையின் வரலாற்றைப் படைக்கவில்லை என்பதுதானே இரண்டுக்கமுள்ள வேறுபாடு? மனிதன் இயற்க்கையைப் பயன்படுத்திக் கொள்கிற முறையை - அவன் வாழ்வதற்கு வகை செய்யும் பொருளுற்பத்தி நிகழ்முறையை - தொழில் நுட்பவியல் வெளிப்படுத்துகிறது; இதன் மூலம் அது அவனது சமூக உறவுகளும், அவற்றிலிருந்து ஊற்றெடுக்கிற கருத்துருவங்களும் வடிவமையும் முறையையும் புலப்படச் செய்கிறது. இந்தப் பொருளாயத அடிப்படையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறுகிற சமய வரலாறும் கூட விமர்சன பூர்வமற்றதே. எதார்த்தத்தில் சமயத்தினது மாய சிருஷ்டிகளின் மண்ணுலகக் கருவைப் பகுப்பாய்வின் மூலம் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமன்று. ஆனால் உள்ளபடியே நிலவுகிற வாழ்க்கை உறவுகளிலிருந்து அவ்வுறவுகளுக்குரிய விண்ணுலக வடிவங்களை வகுத்தமைப்பது மெத்தக் கடினமாகும். இந்த இரண்டவது வழிமுறைதான் பொருள்முதல்வாத வழிமுறையாகும்; ஆதலால் விஞ்ஞான வழிமுறையாகும். இயற்கை விஞ்ஞானத்தினது சூக்குமப் பொருள்முதல் வாதத்தின் (abstract materialism) - வரலாற்றையும்அதன் நிகழ்முறையையும் ஒதுக்கி விடுகிற இந்தப் பொருள்முதல்வாதத்தின் - பலவீனங்கள், இயற்க்கை விஞ்ஞானிகள் அவர்களது தனித்துறையின் எல்லைகளைக் கடந்துவந்து வெளியிடுகிற சூக்கும, சித்தாந்தக் கருத்தமைவுகளில் உடனே தெளிவாகப் புலப்படுகின்றது." (மூலதனம் பக்கம் 505)

 

6.சுதந்திர காதல், சுதந்திர அன்பு, கட்டற்ற சுதந்திரம் ... - சுதந்திரம் எப்படி தோன்றியது? யாருக்காவது சுதந்திரம் உண்டு எனின் இந்த வர்க்க சமுதாயத்தில் யாருக்கு? வர்க்க சமுதயாத்தில் எதிரான இரண்டு வர்க்கத்துக்கு சுதந்திரம் இருக்க முடியுமா? சமுதாயத்துக்கு சுதந்திரம் கிடைத்த பின் சுதந்திரம் கற்பிதமா? இல்லையா? ஏன்? வர்க்க சமுதயாத்தில் சுதந்திரம் கோரி போராடி பெறின,; மறுத்தவனின் மறுக்கும் சுதந்திரம் மறுக்கப்படுமல்லவா? ஏன்எனின் மறுப்பதும் கோருவதுக்கும் இடையில் அல்லவா சுதந்திரம் உயிர் வாழமுடிகின்றது?

 

7.இராணுவவாதம் - புலிகள் இடம் இராணுவ வாதம் இல்லையா, எப்படி? சுத்த இராணுவக் கண்ணோடட்ம் புலிகளிடம் இல்லையா? இராணுவத் தாக்குதல்கள் மக்களை அணிதிரட்டும் என்ற தத்துவம் புலிகளிடம் கிடையாதா? புலிகளின் செய்தி ஊடகம் தமது இயக்க நடவடிக்கைகளை அரசியல் ரீதியில் நியாப்படுத்துகின்றதா? அல்லது இராணுவ ரீதியில் நியப்படுத்துகிறதா? புலிகளின் தனிநபர் அழித்தொழிப்பு இராணுவக் கண்ணோட்டம் கொண்டதா, அல்லது அரசியல் கண்ணோட்டம் கொண்டதா? புலிகள் தமது நடவடிக்கையில் அரசியலை ஆணையில் வைக்கின்றனரா அல்லது இராணுவத்தை ஆணையில் வைக்கின்றனரா? இயக்கத்தின் தலைமை இராணுவத்தை அடிப்படையாக கொண்டதா? அரசியலை அடிப்படையாக கொண்டதா?

 

8.சனநாயகத்தைக் கோருவது - சனநாயகத்தை எப்படி கோரிப் பெற முடியும்? நான் அன்றும் இன்றும் அனுங்கி அனுங்கி லிமிட் பண்ணி மக்களுக்காக குரல் கொடுத்ததாக கூறும் நீங்கள் அதை எப்படி அனுங்காமல் விழுங்காமல் அண்லிமிட்டில் குரல் கொடுப்பது என விளக்கவும்? அன்று நான் அனுங்கிய போது நீங்கள் எப்படி குரல் கொடுத்தீர்கள்? இன்று எப்படி அனுங்காமல் குரல் கொடுக்கின்றீர்கள்? எனக்கு வெளியில் யாரெல்லாம் என்னைப் போல் அனுங்காமல் குரல் கொடுத்தனர்? கொடுத்தீர்கள்? ஈழப் போராட்டத்தில் சனநாயகப் போராட்ட வரலாற்றை எடுத்து உங்கள் இலக்கிய மேதமையால் வையுங்களே பார்க்கலாம், அண்லிமிட்ரட் பேர்வழிகளே?

 

9.என்னை நோக்கி - வெள்ளாத்தனம் என்கிறீர்கள். அனுங்கி அனுங்கி லிமிட் பண்ணி என பலப்பலவாக உங்களை போற்றும் பலருக்குப் பிடித்த நக்கல்பாணியில் கூறியுள்ளீர். (இது ஒருவகையில் சினிமாவுக்கு கவுண்டன் போல இலக்கியத்துக்கு உம்மை கவுண்டன் எனலாம். அதனால் உமது இலக்கியத்தையும் இலக்கியக் கவுண்டத்தனம் கொண்டது என அழைக்கலாமோ?) நல்லது நண்பரே. இப்படி நம்பிக்கையுடன் துணிச்சல் உடன் புல்லரிக்க எழுதுவதால், என்னைப் பற்றி கடந்த காலத்தில் எதை எல்லாம் தெரிந்து வைத்துள்ளீர்? நான் போராடிய இடங்கள், கதைத்த இடங்கள், நடைமுறை வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என எங்கும் அன்றும் இன்றும் தெரிந்து இப்படி கூறுவதால் அதை ஆதாரமாக அனுங்காது லிமிட் பண்ணாது எனது "அனுங்கிய லிமிட் பண்ணிய வெள்ளாத்தனத்தை" வாசகர் முன் வையுங்கள். அது அல்லவா நேர்மை? ஹகவுண்ட இலக்கியத்தாலஹ் அது முடியாதோ?

 

10.எதற்காக - என் மீதான் தாக்குதல் எதற்காக? உமது கதையையும், ராNஐஸ்வரி மீதான உமது விமர்சனத்தையும் நான் விமர்சித்ததுக்கு பதிலாளிக்காத இத் தாக்குதலில் அரசியல் உள்ளதா? உமது படைப்பை பாட்டாளி வர்க்கப் படைப்பு அல்ல என்றேன், மறுக்கமுடியுமா? ஏன் உமது எல்லாப் படைப்பும் பாட்டாளி வர்க்க படைப்பு இல்லை என்கின்றேன், முடிந்தால் அது பாட்டாளி வர்க்கப் படைப்பு என நிறுவமுடியுமா? வர்க்கப் போராட்ட பாதையில் ஒரு சமூகப் பிரச்சனை மீதான தீர்வுக்கும் அதே பிரச்சனையின் உமது இலக்கிய தீர்வுக்கும் உள்ள உடன்பாட்டை நிறுவமுடியுமா?

 

11.கொள்கை எது? - அமைப்பு வடிவத்தை எதிர்க்கும் நீர், தலித்தில் வர்க்க மதிப்பீட்டை மறுக்கும் நீர், எப்படி கால்மார்க்ஸ்சை போற்றமுடியும்? எப்படி ரொக்சியை போற்றமுடியும?;. இருவரும் இதற்க்கு நேர் எதிரானவர்கள் அல்லாவா? 1917க்குப் பிந்திய காலத்தில் ரொக்ச்சி சோவியத்தில் அனாஸ்சிட்டுகளை எதிர்த்து ஆயுதத் தாக்குதலையும் வன்முறையையும் நடத்தினார் அல்லவா, இதை கண்டிக்கின்றீரா? அனாஸ்சிட்டுகள் லெனின் மீது சுட்டபோது அதை ஆதாரிக்கின்றீரா? எது உமது நிலை? அமைப்பு வடிவத்தை ஒழுங்கை இராணுவக் கட்டுப்பாட்டை உயர்த்திய ரொக்ச்சி அதிகாரத்தின் பிரதிநிதியா? சனநயகத்தின் பிரதிநிதியா? லெனின், ரொக்ஸ்சி, கால்மார்க்ஸ் அனைத்தும் வர்க்க எல்லைக்கு உட்பட்டவையே என்றனர். அப்படியாயின் தலித்தும் அதற்க்கு உட்பட்டது அல்லாவா? உட்பட்டது என்றால் லெனின் ரொக்ஸ்சி பார்ப்பானிய வெள்ளாளரா? ரொக்ச்சி ஸ்ராலின் முரண்பாடு என்ன? தெரியுமா? அதை விளக்கமுடியுமா? ஸ்ராலின் அதிகாரத்தின் பிரதிநிதி என்றால் ரொக்ஸ்சி மாற்றாக அங்கு எதை வைத்திருந்தார்? நீங்கள் எதை வைக்கின்றீர்கள்? எப்படி? வடிவம், அதன் போக்கு, செயல், அமைப்பு வடிவம் என அனைத்து தளத்திலும் என்ன? வைக்க முடியாதவரை கதையளப்பு தான் தீர்வா?

 

12.திம்புக் கோரிக்கை தொடர்பாக - திம்புக் கோரிக்கை என்ன? திம்புக் கோரிக்கை ஏன் பிழை? திம்புக் கோரிக்கையில் உள்ள சுயநிர்ணயக் கோரிக்கை ஏன் பிழை? மலையக மக்களுக்கு பிரஐhவுரிமை கோரியது ஏன் பிழை? இதற்க்கு அப்பால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை முன்வைக்கின்றீர்கள்?

 

13.வன்முறையும், மக்களும் - அராஐகவாத வன்முறை சாதாரன அரசு வன்முறையைவிட கேடனது இல்லையா? உதரணமாக பிரன்சில் வீதி வன்முறையில் ஈடுபடும் அராஐகவாத வழிபறி அடி உதை நடவடிக்கை மக்களுக்கு துன்பமானதா இல்லையா? இதனால் தமிழ் பேசும் பிரஞ்சுவாழ் தமிழர் துன்பம் தெரிந்தது அல்லவா? இதுபோல் போராடும் இயக்க அராஜக வன்முறை சதாரண நிர்வாகம் உள்ள வன்முறையை விட கொரூரமானது அல்லாவா? தனிநபர்கள் குற்றவாளியாக தீர்ப்பளித்து கொல்வது, பணம் வாங்குவது என அணைத்தையும் சுட்டிக்காட்டுவது விமர்சிப்பது தவறா? ஏன்? அண்மையில் கிளிநொச்சியில் மூன்று தொழிளார்பாதை உறுப்பினரை கைது செய்த புலிகளிடம் மீட்க்கக் கூடியாதாக இருந்தது ஏன்எனின் ஒரு நிர்வாகம் இருந்தால் அல்லாவா? இல்லாது அராஐக பிரதேசம் எனின் மீட்டியிருக்கவே முடியாத அல்லவா?

 

14.இலக்கியம்- எல்லா இலக்கியத்துக்கும் சுதந்திரமா? சுரண்டலை ஆதரித்த, சாதியை உயர்த்தும், பார்பானியத்தை நியாப்படுத்தும், நிறத்தை ஆதரிக்கும் நாசிச பாசிச ஆரிய நியாயப்படுத்தும், ஆணாதிக்கத்தை கோரும் அனைத்துக்கும் சுதந்திரமா? இதற்க்கா எனக்கு மரணதண்டனையும் கல்வெட்டும்? ஒழித்து விளையாடியது போதும் அனைத்துக்கும் பதில் கூறுவது தானே விவாதப் பண்பு? அண்மையில் பிரன்சின் நாசித் தலைவன் லுப்பனுக்கு nஐர்மனியில் நாசிச இலக்கியத்தை ஆதரித்ததுக்கா ஐரோப்பிய பாராளமன்ற சிறப்புரிமை பறிக்கப்பட்டு விசாரனை மூலம் சிறை செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் உமது நிலை என்ன? பாம்பாய் காவிய சினிமா இலக்கியம் முஸ்லிம் மக்கள் மீதான பாசிச பார்ப்பானிய வன்முறையை நியப்படுத்திய போது அதை தடை செய்யக் கோரி போராடினர்கள் பாட்டாளி வர்க்கமும், முற்போக்குவாதிகளும், மக்களும். இதில் உமது நிலை என்ன? நான் இது தடை செய்யப்பட வேண்டும் என்கின்றேன். குற்றமா? எப்படி? கூறமுடியுமா நண்பரே?

 

நான் கேள்விகளாக எழுப்பியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நான் கடந்த காலத்தில் இவை தொடர்பாக நிறையவே விவதித்துள்ளேன். விவாதிக்கின்றேன். விவாதிப்பேன். இதற்க்கு எல்லாம் பதிலளிக்க வேண்டும். போகிற போக்கில் கட்டுடைக்கின்றோம், மறுக்கின்றோம் புரட்டுகின்றோம் புடுங்குகின்றோம்;, கேள்விகள் எனப் போடும் கோசங்கள் (வடிவத்தில் வரட்டுவாதம்) கேட்;பவனுக்கு புல்லரித்த சந்தோசமாக இருக்கும். ஆhhல் அது மக்களுக்குள் பின்னிப் பிணைந்துள்ள போராட்டத்தை வழிநடத்தாது. மாறாக அராஐகவாதம் தனிநபர் தாக்குதலும் எஞ்சும். நடைமுறையில் மக்களை சிந்திக்காத போது சொற்களால் கோசம் போடும் போது "சிந்தனைகள் இல்லாத போது சொற்கள் சுகமான மாற்றாகின்றன" மூலதனம் பக்கம் 103 இல் மார்க்ஸ் அழகாக கூறுவது இங்கு சிறப்பாக வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்ற சமூக நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக நிறுவமுடியாத கற்பனை வாதிகளுக்கு பொருந்துகின்றது.

 

எனது தேசியம் தொடர்பன நூல் விளம்பரத்தை அம்மாவில் பார்த்து புத்தகத்தை வாசிக்காமலேயே விளம்பரத்தை மட்டும்கொண்டு விமர்சனம் செய்த போது அதன் தனிர்நபர் தாக்குதல் புரிந்ததே. எனது புத்தகத்தை புரியாமுடியாதவை என்பதற்க்கு, மார்க்ஸ் தனது மூலதனம் தொடர்பாக கூறியாதை பார்ப்போம். "...., இப்புத்தகம் கடினமானதென்று குற்றஞ்சாட்ட முடியாது. புதிய தொன்றைக் கற்றுக் கொள்ளவும், ஆகவே சுயமாகச் சிந்திக்கவும் சித்தமாயுள்ள வாசகரையே நான் மனத்தில் கொண்டுள்ளேன்" என மார்க்ஸ் மூலதனம் பக்கம் 25 இல் குறிப்பிட்டதேயே மீளவும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகின்றது. அத்துடன் புத்தகத்தில் விவாதித்த தத்துவார்த்த விடயத்தை புரிந்து கொள்ள குறைந்த பட்சம் அவை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கவேண்டும். மார்க்ஸ் மூலதனம் பக்கம் 42இல் கூறுவதை இங்கு வைப்பது சாலப் பொருந்தும். "விஞ்ஞானத்துக்கு ராஐபாட்டை ஏதுமில்லை@ அதன் களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாய்ப்புண்டு" அதுபோல் எனது கருத்தை விமர்சிக்கின்றேன் எனக் கூறிக்கொண்டு நான் எழுதாதவைகளை மேற்கோளுக்குள் இட்டும் வெளியிலும் விமர்சிக்கும் மோசடி மிகக் கேவலமானது.

 

ஏன் உமது கல்வெட்டை வெளியிட்ட பின் நண்பர் ஒருவர் திருமணத்தில் முன்பின் அறிமுகமில்லாத என் மனைவியிடம் சென்று கையை குழுக்கி விட்டு "நான் தான் ஷோபாசக்தி" என இச் சமுகத்தின் ஒரு சாதாரண பெண்ணிடம் கூறிவிட்டு சென்ற போது (அப்போது அவருக்கு தலித்புரட்சியின் அங்கமான கட்டுடைத்த புரட்டிப் போட்ட தலைகால் தெரியாத வெறியில்லை. தலித் வெறி என நான் கொச்சைத்தனமாக அடையாளப்படுத்தவில்லை. மாறாக தலித் தத்துவியலாலர்கள் என எழுதிக் கொண்டு இருப்போர் குடித்தலை தலித் பண்பாடு என விவாதிப்பதுடன் அதை ஊக்குவிக்க வேண்டும் என கூட்டம் போட்டு விவாதித்து பிரகடனம் செய்கின்றனர்.) அதன்பின் இருந்த தனிநபர் மீதான வக்கிரத்தை புரிந்து கொள்ளமுடிகிறது.

 

அடுத்து ரொக்ஸ்சி பிரஞ்சு அரசாங்கத்தில் இருந்தார் என நான் எழுதியது தவறு என்கின்றார். நல்லது நன்பரே நீர் இது பற்றி அன்று விவாதித்த போது தவறு இழைக்க முடியாத (நான்) ஆவணத்தைக் காட்டினேன். சிரமப்பட்டு வாசித்து மொழி விளக்க தவறு பற்றி விவாதித்து சென்ற நீர் அதன் பின் இதை மறுக்கும் எந்த ஆவணத்தையும் தந்தது கிடையாது.

 

நான் ஆதாரமாக கொண்டதைப் பார்ப்போம். "டிராட்ஸ்கி பிரான்ஸ்க்குச் சென்று, பூர்ஷ்வா அரசாங்கத்திலே அமைச்சராகி பின்னர் வேலை நிறுத்தங்களை முறியடிக்க முயன்ற மில்லரண்டை எதிர்த்து பாரிஸ் தொழிலாளர் நடத்திய கிளர்ச்சியிலே பங்குபற்றினர்" கதிர் ராமசாமி எழுதிய "டிராட்ஸ்கி வாழ்க்கை வரலாறு" நூலில்தான் இப்படியுள்ளது. இது அவருக்கும் தெரிந்தது என் மீதான தாக்குதல் தனிநபர் காழ்ப்புக் கொண்டதே. இத் தகவல் தவறாக எழுத அந்த நூல் காராணமாக இருந்தது. இருந்த போதும் இத் தகவல் தவறானது எனின் அத் தவறுக்கு நூலுக்கு வெளியில் தகவல் தவறை ஏற்றுக் கொள்கின்றோம். இது ஒன்றும் சிந்துபிடிக்கும் வேலையில்லை. தகவல் தவறு, வேறு நூல்கள் மூலமும், எமது கவனயீனத்தாலும் தவறுகள் ஏற்பட வாய்புகள் உள்ளன. தவறுகளை ஆதாரமாக சுட்டிக் காட்டும் எல்லா நிலையிலும் அதை மீள் பரீசிலணை செய்யவும் சுயவிமர்சணம் செய்யவும் பின்நிற்க்கபோவதில்லை. இப்படிஇருக்க பொய்யாக என்மீது சேறுயடிக்கவென வசகரை ஏமாற்றி கதையளப்பதை விடுத்து, "எக்ஸில் புரளிகள் சிறப்பிதழ்" விடவேண்டும் என புரளி விடுவதை விட்டு தொடருங்கள்.

 

எனது கருத்துக்கு பதிலளிக்க முடியாத எந்தக் கோட்பாடு, எழுத்தும் தனிநபர் மீதான தாக்குதலே ஒழிய வேறுயல்ல. இதற்க்கு எதிரான குரல் கொடுக்காத அனைவரும் எனக்கு வழங்கிய மரண தண்டனைக்கு கையுயர்த்தி கல்வெட்டை கொண்டாடியவர்களே. இவர்கள்தான் இன்றைய முதலாளித்துவ உலக சனநயகத்தின் வீரமிக்க எடுபிடிகள் ஆவர்.

 

அடிக்கடி பலர் ஸ்ராலின் அதிகரத்துவம் பற்றி புலம்பியபடி, அதன்பின் ஒளித்து நின்று கல் எறிகின்றனர். ஆம் நாம் ஸ்ராலினின் சகல ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் நடவடிக்கைகளை வான் அளவுக்கு உயர்த்தவும் பாதுகாக்கவும் பின்நிற்க்க போவதில்லை. அது போல் ஸ்ராலினின் தவறுகளை விமர்சனம் செய்யவும் பின் நின்றதில்லை. சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்த போராட்டத்தில் யாரெல்லாம் ஈடுபடுகின்றனரோ அவர்கள் எல்லோரும் இதில் சரியாக போராடுவர். யாரெல்லாம் சுரண்டலுக்கு போராட தயாரில்லையோ அவர்கள் எல்லாம் ஸ்ராலினை எதிர்த்து சுரண்டலைப் பாதுகாப்பர். ஏன் பின்நவீனத்துவவாதிகள் என்போர்; ஒன்றில் பல கூறு உண்டு என்போர் ஸ்ராலின் விடையத்தில் மட்டும் ஒரு கூறு உண்டு என காட்டும் போக்கு மார்க்சிய எதிர்ப்பில் முகிழ்ந்ததேயாகும்.

 

முடிவாக மார்க்ஸசின் வசகத்தில் முடிப்பதே பொருந்தும். அதே மூலதனம் பக்கம் 28 இல் "விஞ்ஞான வழிப்பட்ட விமர்சனத்தின் அடிப்படையில் கூறப்படும் அபிப்பிராயங்கள் யாவற்றையும் வரவேற்கிறேன். பொதுஐன அபிராயம் என்று சொல்லப்படுவதன் விருப்புவெறுப்புகளைப் பொறுத்த வரை - இவற்றுக்கு நான் என்றும் விட்டுக் கொடுத் ததில்லை - முன்போலவே இப்போதும்" இதைத்தான் இந்தமாதிரியன விஞ்ஞான பூர்வமற்ற அனைத்து புத்தக புத்தியீவிகளுக்கும் பதிலாக வைக்கின்றேன்.

 

குறிப்பு: இவரால் அம்மாவில் ராNஐஸ்வரி மீது முதலாளித்து கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட விமர்சனத்தையும், இவர் ரொக்சியை ஆதரித்தால் இவருக்கு சார்பாக அழகலிங்கம் வக்கலாத்து வாங்கி மக்களே ஆசைப்படுங்கள் என எழுதியதை நான் விமர்சித்தேன். பதில் இல்லை கல்வெட்டு பதிலாக கிடைத்தது. இவரால் பேராசன் எனக் குறிப்பிடப்படும் கால்மார்க்ஸ்சின் கூற்றை அதையொட்டி மீள வைக்கின்றேன்.


"....., தங்கத்தை சேர்த்து வைப்பவர் உடலின்பங்களைப் பலியிட்டு பொன்னைப் பூஐpக்கிறார். சுகபோகங்களைத் துறந்திடச் சொல்லும் சுவிசேஷ போதனையைக் கரும சிரத்தையுடன் கடைப்பிடிக்க்கிறார். மறுபுறம், அவர் சரக்குகளாகச் சுற்றோட்டத்தில் விட்டதற்கும் கூடுதலாய் அதிலிருந்து எடுக்க முடியாது. எவ்வளவு அதிகமாக உற்பத்தி செய்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவரால் விற்க முடிகிறது. எனவே, கடுமையாக உழை, மிச்சப்படுத்து, அளவின்றி ஆசைப்படு- (அடையாளம் நான்) இவை அவரது முப்பெரும் சீலங்களாகும்@ விற்பதைக் கூட்டு, வாங்குவதைக் குறை இதுவே அவரது அரசியல் பொருளாதாரத்தின் சாரமாகும்" மார்க்ஸ் மூலதனம் பக்கம் 187 இல் கூறுவதால் மார்க்ஸ்சுக்கும் கல்வெட்டு அடித்து விடலாமே அ.மார்க்ஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து.

 

பின்குறிப்பு:


மொழியில் வன்முறையும் பயன்பாடும்


குறிப்பு 1: பிரிந்த எக்ஸில் 2-5 இல் "தனது மற்றது" என்ற ஷோபசக்தி எழுதிய கதையில் துணுக்குச் செய்தியாக அவர் உத்தமபுத்திரன் பெயரில் நான் அவரின் கதையை விமர்சிப்பதாக உள்ளடக்கமின்றி, தன்னைத் தான் நியப்படுத்தி பாதுகாக்க வரட்டுத்தனமான வகையில் சொற்களால் சேறுயடித்து சோடித்துவிடுவதன் மூலம், தனது கதை மீதான விமர்சனங்கள் அர்த்தமற்றவையாக ஒழிக்கவும், விமர்சனங்களைத் தடுக்கவும் பாசங்கு செய்த பகிடிகளை, துணுக்குகளையும் எழுதியுள்ளார். என்னவோ புரியவில்லை சமுகத்தை தலைகீழக புரட்டிப் போடும் தைரியம் இருக்கு என்று எழுத்தில் அலட்டும் இவர், இந்தியா நாலாம்தர சஞ்சைகளான குழுதம், ஆனந்தவிகடன் போன்றன, செய்திக்கு பொருத்தமாகவும், வெளியிலும் போடும் துணுக்குகள், பகிடிகளை கொப்பியடித்து போடுகின்றர். இதுபோல் இந்திய சினிமவில் பகிடி என்ற பெயரில் செந்தில் போன்ற நாலம்தர ஆய்வுகளை செய்வதை ரசிக்க ரசிகர் கூட்டமே அலையிறது தெரிந்தNது. அந்த நாலாம்தர துணுக்குகளை பொழுதுபோக்கு தனியாகவும், சேர்த்தும் பார்க்கும் ரசிகன் எந்த நிலையில் ரசிக்கின்றனோ அதுபோல் தான் என்மீதான காழ்ப்புக் கொண்ட நகைச்சுவை ரசிக்கப்படுகின்றது. ரசிப்பவன் யார்? பொழுதுபோக்கு இலக்கியம் படைப்பவன், தன் பெயர் பேச எழுதுபவன், கூடி வம்பளப்பவர்கள், உனது சமூக அக்கறை என்ன என்ற எனது கேள்வியால் நெளிந்து அங்கலாய்ப்பவர்கள், இலங்கை அரசுடன் கூடி அரசியல் நடத்துவோர் எல்லோருக்கும் என்மீதான அரசியல் அற்ற தனிமனித காழ்ப்பை ரசிப்போர் உள்ளவரை இப்படி எழுதுவது நீடிக்கும்.

 

என்னை உத்தமபுத்திரன் என்ற பெயரால் குறிப்பிட்ட தன்மையில் நான் சொல்வதற்க்கு வெளியில் வாழது கோட்பாட்டுக்கும், நடைமுறைக்கும் இடையில் இடைவெளி இருக்காது வாழ போராடுபவன். ரசிக்க துணுக்கு எழுதும் ஷோபாசக்தி, இதுவரை சொன்னதை நடைமுறையில் வழுவாது முதலில் வாழ்ந்து காட்டுவது அவசியம். இராண்டாவது உமது கதைகள் இரண்டை கடந்த காலத்தில் விமர்சித்துள்ளேன். அதை மறுத்து கோட்பாட்டில் போராடவேண்டும். அத்துடன் எனது கோட்பாட்டை தத்துவார்த்த வழியில் விஞ்ஞான பூர்வமாக எதிர்த்த போராடவேண்டும். உலகில் இரு எல்லைக்குள்தான் சமுகம் பிளந்தபோய் உள்ளது. ஒருபுறம் உழைக்கும் மக்கள் மறுபுறம் ஏகாதிபத்தியம் (உழைப்பை உறுஞ்சி சுரண்டி உண்டு வாழும் வர்க்கம்) இதில் அனைத்து எழுத்தும் பக்கம் சார்ந்து ஒருமுடிவை எடுக்கின்றது. இதை மறுத்து துணுக்கு ரசிகர் மன்றம் நடத்த விரும்பின் உங்கள் கோமாளித்தனத்தல் உலகம் தலைகீழாகி விடாது.

 

குறிப்பு 2: எனக்கு எதிராக தனிநபர் தாக்குதல் ஊடாகவும், கடந்தகாலத்தில் சனநாயக போராட்டத்தை முன்னெடுத்த அனைவரையும், அதற்க்காக தம்மை தியாகம் செய்த போராளிகளின் போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தி சேறுயடித்த போது, இந்த ஐனநாயக உலகம் தமது சொந்த வர்க்க விருப்புடன் மௌனம் சாதித்து கடந்தகால சனநாயக போராட்ட தியாகங்களை புதைத்தை எதிர்த்து நான், "உயிர்நிழல்" (முன்னைய எக்ஸில்- 1) சஞ்சிகையில் எழுதியிருந்தேன். இதைத் தொடர்ந்து பலத்த பிரதிபலிப்புகளை கேட்கமுடிந்தது. இதில் எனது நிலையுடன் உடன் பட்டவைகளை விடுத்து எதிர்நிலையில் வெளிவந்தவைகளை சுருக்கமாக ஆராய்வோம். இதில் சில நல்ல நோக்கிலும், சில காழ்ப்புணர்விலும் பிரதிபலித்தன.

 

1.எனது எழுத்துக்கள் (எனது பதில் விமர்சனம் முதல் எனது தத்துவ விமர்சனக் கட்டுரைகள்) மொழியில் வன்முறையை கையாள்கின்றது. இது வாசகரின் வாசிப்புக்கு இடைஞ்சலாக உள்ளது. அத்துடன் மொழியல் ரீதியில் புரியமுடியாது கடுமையாக உள்ளது என்ற விமர்சனங்கள் தொடர்பாக நான் எனது எழுத்தை மீளாய்வுக்குள்ளாக்கினேன்.

 

மொழியில் வன்முறைக் கையாளாமுடியுமா? இல்லையா? என்ற தத்துவ விவாதத்துக்குள் இது நகர்ந்து விடுகின்றது. மொழியை எந்த வர்க்கமும் கையாளக் கூடிய வகையில் மொழி வர்க்கம் கடந்தது. மொழி பயன் பாட்டில் வர்க்கம் கிடையாது. ஆனால் மொழி பயன்படுத்தப்பட்ட அடுத்த கணமே மொழி வர்க்க எல்லைக்குள் பிரிந்துவிடுகின்றது. மொழி சமூகத்தினதும், பொருளினதும் பிரதிபலிப்பாக பிரதிபலிக்கும் போது, இந்த சமூக வர்க்க எல்லைக்குள் உட்பட்டுவிடுகின்றது. சமூகம் வர்க்க முரண்பாட்டின் மோதலுக்குள் வினாடிக்கு வினாடி மோதும் போது, அதில் இருந்து பிறக்கும் மொழியும் வர்க்க மோதலின் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டேயிருக்கும் என்பது யதார்த்தமாகும். அப்படி இருக்கும் போது எல்லா வர்க்க (மொழியில்) மோதலும் நியாமானதாக, அத்துமீறதாக இருக்குமா என்ற கேள்வி எழுவது நியாமானது.

 

இதை எதையடிப்படையாக கொண்டு ஆராய்வது என்பது முக்கியத்துவமானது. இருக்கின்ற சமூகநிலை, அதில் நிகழும் வர்க்கப் போராட்டம், அதில் மாறுபட்ட வர்க்கங்களின் போராட்டங்கள் இவற்றில் தான் மொழியின் கையாழுகையின் சரி பிழை தெளிவாக்க உள்ள ஓரே அளவுகோள். இந்த அளவுகோள் எப்போதும் வார்க்க போராட்டத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு அளக்கக் கூடியது. மொழியலில் வன்முறையைக் கையாள்வதில் இதைமட்டுமே அளவு கோளாக நான் எப்போதும் கொள்கின்றேன்;. நான் மாறுபட்ட வர்க்க நட்பு சக்கிகள் மீது வன்முறை கையாண்டோ இல்லாது தத்துவ விமர்சனத்தை விடுத்து தனிநபர் தாக்குதலை நடத்தியிருப்பின், அதை சுட்டிக் காட்டும் எல்லா நிலையிலும் சுயவிமர்சனம் செய்ய தயாராக உள்ளேன்.

 

மொழியலின் புரியாமை தொடார்பாக ஒருசெய்தியை மற்றவர்களுக்கு புரிய வைக்கவேண்டும் என்பதால் தான் எழுதுகின்றேன். மற்றவர்களின் மீது மேதாமையை நிறுவவோ அல்லாது என்னை நாலு பேர் பேச வேண்டும் என்பதற்க்காக எழுதவில்லை. மாறாக மக்கள் மீது உள்ள துன்பங்களின் விடிவுக்கான உண்மைகளை இனம் காட்ட, அதைக் கொண்டு போராடவே நான் எழுதுகின்றேன்.

 

இப்படி எழுதும் போது சமூதாய ஏற்றத்தாழ்வுகளின் பிரதிபலிப்பு ஓரே வர்க்கத்துக்குள்ளும் ஏற்றறத் தாழ்வை பிரதிபலிக்கும். அறியான்மையும், கல்வி மடுவுக்கும், மேட்டுக்கும் உள்ள இடைவெளியால் பிளந்துள்ளது. ஆணால் வாழ்வியல் யதார்த்தால் நடைமுறையில் உண்மைகளை இனம் கண்பதும், போராடுவதும் நிகழ்வாக உள்ளது.

 

பொதுவான சமூக இயக்கத்தை முழுமையில் கண்பது மட்டுமே சமூகத்தை விடுவிக்கமுடியும் என்பதால் அதை தத்துவமாக வெளிப்படுகின்றது. இது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மீது ஆய்வுகளை செய்து முன்வைக்கும் போது, சமூகத்தின் ஏற்ற இறக்கத்தால் எல்லோரும் புரியமுடியாத வகையில் மாறுகின்றது. இதைப் புரிந்து கொள்ள தொடர்ச்சியான தேடல், அறிதல், பரிச்சயம் அவைசியமாகும் அதே நேரம், இதை மனிதனின் யதார்த்த வாழ்வுடன் பொருத்திப் பார்க்கவும் பரிசோதித்து பார்க்கவும் கற்றுக் கொள்கின்ற போதுதான் ஒரு தத்துவத்தை புரிந்து கொள்ளமுடியும். இதில் தத்துவத்தை மறுக்கின்ற விமர்சன விவதங்களில் தத்துவ செறிவு ஆழமாக மாறுகின்றபோது புரிதல் மேலும் கடினமாகின்றது. இது பரிச்சயம் இன்றி புரிதல் கடினமானது. ஒரு தத்துவத்தை விஞ்ஞான பூர்வமான உண்மைகள் மீது நிறுவதும், அந்த உண்மை மனிதனின் வாழ்வின் பிரதிபலிப்பாக இது இருக்கும் வரை மக்கள் ஏற்றத் தாழ்வு மறையமறைய புரியும் இடைவெளி குறைந்து வரும்;. இருந்தபோதும் இதை விரிவாக்கின் அதை மேலும் புரிய கூடியாதாக இருக்கும்;. இருந்த போதும் புத்தகத்தின் நோக்கம், இது யாரை சென்று அடைய வேண்டும் என்ற எல்லைக் கோடு மட்டுமே புத்தகத்தின் செறிவை தீர்மானிக்கின்றது.

 

அடுத்து இத்தத்துவத்தைக் கூட மிகமிக விரிவாக நடைமுறை சம்பவங்கள் உடன் ஒப்பிட்டு, அனுபவத்துடன் பொருத்துகின்ற போது தத்தவத்தை புரிய வைக்கமுடியும். இந்த வகையில் கூலிவிவாசாயி, தொழிலாளி, பூர்சுவா வர்க்கம், முண்ணனியாளர்.. என சமூகத்தின் வேறுபட்ட பிரிவுகளின் முன் தத்துவத்தை விளக்குவது என்பது ஓரே மாதிரியானது அல்ல. மாறாக முற்றாக வேறானது. எனது தத்துவ விமர்சனக் கட்டுihகள் முண்ணனிக்கு மட்டுமானது.

 

இது ஒருபுறம் இருக்க விஞ்ஞான உண்மைகளை மறுத்த, எதையும் இதுதான் என நிறுவாத கோட்பாடுகளை வைக்கின்றனர். இது எழுதுபவனுக்கே விளங்காத நிலையில் எழுதுவதாகும். உண்மைகளுக்கு பதில் கற்பணைகளையும், பொருளுக்கு பதில் கருத்தையும் வைத்து எதையும் குறித்து சொல்லாத சொற்களின் தொகுதி விளங்காததையிட்டு கவலைப்படத்தேவையில்லை. மாறாக இந்த மோசடியை அம்பலப்படுத்த வேண்டும். (உதாரணமாக கடவுள் உள்ளார் என்றும் பின்னர் விரிவாகும் தத்துவங்கள்) இது போல் சமூக விடுதலைத் தத்துவங்களிலும் கணவேண்டும்.

 

மொழி என்பது உலகில் பலவாக இருந்த போதும் எல்லா மொழியும் பொருளை அடையாளம் கணவும், அதை விளக்கவும், அதன் மீது செயல் படவும், அதன் இயக்கத்தை புரிய வைக்கவும் என மொழி மக்களால் உருவாக்கப்பட்டது மட்டுமின்றி மொழிக்கு பொருள் சாhந்து அர்த்தைக் கொடுத்தனர். பொருளை மறுத்த கருத்து முதல்வாதிகள் மொழியின் அர்த்தை பொருளில் இருந்து மறுத்துவிடுகின்றனர். இதை பின்நவீனத்துவ வாதிகள், கட்டுடைப்பாளார்கள் .. என கூறிக் கொள்வோர் மொழியின் பொருளின் தன்மையை மறுத்து, மொழியின் அர்த்தை மறுத்த கருத்துமுதல்வாதியாக இருந்தபடி இலக்கியம், ஓவியம் என அர்த்தமற்ற, கருத்தற்றவைகளை புரட்சியாக காட்டுகின்றனர். இது இன்று ஏகாதிபத்தியத்தால் மறுக்கப்படும் மொழிகள், இலக்கியங்கள்.. என அனைத்து செயல் தளம் மீதும் இந்த பின்நவீனத்துவ வாதிகள் வர்க்க விசுவசத்துடன் செயல் ஆற்றுகின்றனர். ஏன் அகதியாக புலம் பெயர்ந்த ஒருவனின் பையித்திய தனத்தை, எழையின் ஏக்கமான பார்வையை, ஒரு பெண்ணின் சோகத்தை... என மனிதனின் யதாhத்தை வெளிப்படுத்துவது தானே ஒரு சமூக அக்கறைக்குரியவனின் பிரதிபலிப்பாக இருக்கும். இல்லாத அர்த்தமற்ற வெளிப்படுத்தல் இந்த ஏகாதிபத்திய அமைப்பு களங்கப்படாத பிரதிபலிப்பை புரட்சியின் பெயரில் செய்வது இன்று இனம் கணப்பட வேண்டும். இந்த துரோக வேர் அறுக்கவேண்டுமா? வேண்டாமா? என்பதே அடிப்படையான கேள்வி.

 

2.என் மீதான வரட்டு தனிநபர் தாக்குதலுக்கு பதிலாளிக்க கூடிய முக்கியமானதா? வரலாற்றில் சரியாக இவை விமர்சிக்கப்படும் எனவே இதை தவிர்த்து இருக்கலாம். ஷோபாசக்தி போன்றோர் இச்சமூகத்தில் எதையும் சாதிக்க போவதில்லை, எழுதும் அளவுக்கு முக்கியத்குரியவர்களும் அல்ல. இதை ஒட்டி பல. இதன் தொடர்ச்சியில் என்னைப் பற்றி நான் எழுதியது அவசியமா? இப்படியான கருத்துக்களை பார்ப்போம்.

 

இதில் சில உண்மைகளை சுட்டியிருந்தனர் என்பதை நான் பார்க்கும் அதே நேரம் இதன் மீதான கருத்துகளை நானே வைக்க வேண்டிய துரதிஸ்டமான வரலாற்று கட்டத்தில் இருப்பது வேதனையானது. கடந்த காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராக, இந்தியா அரசுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, இயக்கங்களிடம் சொந்த ஐனநாயகத்தை கோரி போராடிய மதிப்புக்குரிய தியாகிகள், மற்றும் அப்போராட்டங்களில் கண்ணுக்கு முன்பகவே பிணங்கள் விழவிழ அஞ்சாது போராடிய வரவாற்றை, என் மீதான தாக்குதல் மூலம் சேறடித்த போது, எந்த ஐனநாயகம் பறிபோனது என்று ஒப்பாரி வைக்கின்றனரோ அதை மீள ஐனநாயகத்தின் பெயரில் ஒழித்தபோது மௌனங்களும், சிரிப்புமாக திரிந்த போதுதான் நான் எழுதவேண்டியேற்பட்டது. ஆயிரம் போராளிகளும் தங்கள் மரணத்தை கண்டு அஞ்சாது எம் மண்ணில் நடத்திய வீரமிக்க போராட்டத்தை என்பெயரல் கொச்சைப் படுத்தியபோது நான் அன்று அவர்களுக்காக எப்படி போராடினேனோ, அதேபோல் மேலும் மூர்க்கமாக தனித் ஒருவனாக போராட வேண்டிய வரலாற்று கட்டத்தில் நிற்பதை பார்க்க தவறும் காராணத்தால் தான் எழுதுகின்றேன். ஆம் இன்று போலித்தனத்தில் ஐனநாயகம் உழலுகின்ற போது நான் அன்று போராடியவர்களின் ஓரே குரலாக, அவர்களின் கோரிக்கை மீது போராடும் மனிதனாக இருப்பதால் போராடுகின்றேன்.

 

அன்று போராடியவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக, இந்தியா விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தரகு நிலப்பிரபுத்துவதுக்கு எதிராக, இயக்கத்திடம் உள் வெளி ஐனநாயகத்தை கோரி வீரமிக்க கோட்பாடு, மற்றும் நடைமுறையில் போராடியவர்களில் பலரை இழந்தோம். அதற்க்காக அன்றும் இன்றும் தொடர்ந்து குரல் கொடுப்போர் தொடர்ந்தும் பலத்த நெருக்கடிகளில் போராடுகின்றனர். இது ஒருபுறம் நிகழ புலிகளிடம் மட்டும் ஐனநாயகத்தைக் கோரி (சிலர் இதற்க்கும் சற்று அப்பாலும்) எதிரியுடன் கூட்டுச் சேர்ந்து அதை தான் ஐனநாயக போராட்டமாக கட்டுவதும், அதைத் தான் தியகத்தின் போராட்டமாக சித்தரிப்பதும் அரங்கேறுகின்றது.

 

இந்த வகையில் பல்கலைக்கழக ஆசிரியார் சங்கம் உண்மைகளையும், பொய்களையும் கலந்து அரசு சார்பாக வெளியிடுவதும், மக்களின் உண்மை நிலவரங்களை முடிமறைத்தபடி பொய்களின் மீது அறிக்கை தயாரித்து சர்வதேச பண்நாட்டு அமைப்புகளை பாதுகாக்கும், உருவாக்கும், சட்டமுலத்தை தயார் செய்யும் ஒடுக்கு முறையாளர்களிடம் கொடுத்து எம்மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய தலையீட்டை வேகப்படுத்தி ஊக்குவிக்கின்றனர்.

 

இந்தவகையில் பாரிசில் கொல்லப்பட்ட சபாலிங்கம் மாபெரும் தியாகியாக காட்டவும், அவரை கொன்றவரை பெயர் குறிப்பிட்டு சொல்ல முடியாத அரசியலை ஐனநாயகக் குரலாக காட்டி, ஐனநாயகம் பேசுவதும், அதை வெளிப்படுத்த மலர் வெளியிடுவதும், இம் மலரில் துரோகிகளான அமிர்தலிங்கத்துக்கும், உமாமகேஸ்வரணுக்கும், பத்மநாபாக்கும் அஞ்சலி செய்து தியாகியாக்கி வெளியிடுவதன் மூலம் வெளியிடுபவர் ஐனநாயகத்தின் குரலாக கட்டும் போக்குப் போல் பல இன்று வெளிகிளம்புவதன் வெளிப்பாடுதான் என்மீதான கல்வெட்டும் கூட. கடந்த போராட்ட தியாகங்கள், மக்களின் விடுதலை மீதான அரசியல் பார்வை போன்றவற்றில் உறுதியாக இருக்கும் எனக்கும், கடந்த காலத்தில் போராடி தியாகியாகியோருக்கு எதிரான, கல்வெட்டு மூலம் சேறடித்தால் மட்டுமே போலிகளின் ஐனநாயகம் குறைந்த பட்சம் எழுப்பமுடியும் என்ற நிலையில் தான் கல்வெட்டு வெளிடப்பட்டது. ஆனால் மக்கள் மீதான உறுதியான எனது போராட்ட மாhக்கமும், அதன் தத்துவத்தால் அமைந்த எனது விமர்சனம் முன் தோல்வி கண்டது.

 

சபாலிங்கம் கொலை புலம் பெயர் நாட்டில் நடந்த முதல் அரசியல் படுகொலை என்றவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. இக்கொலை அரசியல் முடிவு அல்ல தொடரும் என்பதையும் பறை சாற்றியது. இக்கொலையின் நோக்கம் அம்பலப்படுத்தப்படவேண்டியதுடன் மட்டுமின்றி, இந்த அரசியலுக்கு எதிராக போராடுவது அவசியமாகும்.


மாறாக கொல்லப்பட்டார் என்பதற்காக அவரை மாபொரும் தியாகி என காட்டுவது உண்மையில் போராடியவர்கனை கொச்சைப்படுத்துலதாகும்.


சபாலிங்கம் என்ன இலக்கியம் படைத்துள்ளார்?. அவர் மனிதபிமானி என்கின்றனர் எப்படி? அவரின் அரசியல் என்ன?

 

பல்கலைக்கழகத்தின் அறிக்கைகளை பிரஞ்சில் மொழி பெயர்த்து ஏகாதிபத்திய நாடுகள், ஒன்றுபட்டு உலகை அமெரிக்காவுக்கு போட்டியாக ஆளத் துடிக்கும் ஐரோப்ப பாராளமன்ற உறுப்பினருக்கு கொடுத்த அரசியல் தான் சபாலிங்கம் அரசியல்;. இலக்கிய முயற்ச்சி;யாக வெளியான, வெளி வர சில நூல்களை உதவினார். இந்த நூல்களை விற்பதில் வியாபாரியாக இருந்தார். இதைவிட சிறு சஞ்சிகையில் சில எழுதினார். 50 வீதம் வட்டி வாங்குபவன் போல் இவர் அல்லல்பட்டு வந்தோரிடம் கேஸ் எழுதி பணக்காரா ஆணவர். இதைத் தான் கேஸ் எழுதிய மனிதபிமானி என்கின்றனர். இதுதான் அவரின் கடைசிக்கால செயல்பாடு.

 

இதற்ககு;த்தான் தியாக வேடங்கள். தமிழ்தேசிய விடுதலைப் போராட்ம் தொடங்கிய காலத்தில் இந்தி பாராளமன்றம், சட்டசபை உறுப்பினருக்கு அறிக்கை, தகவல் மக்களின் ஐனநாயகத்தின் பெயரில் வழங்கித்தான் இந்தியா தலையிட்டை ஊக்கப்படுத்தி தலையிடவைத்தனர் பலர். அதைத்தான் யாழ் பல்கலைகழக ஆசிரியர் குழுவும் சரி, சபாலிங்கம் சரி, இதுபோல் நியாப்படுத்தி செய்வோரும் ஏகாதிபத்திய நேரடி தலையீட்டை ஊக்குவிக்கின்றனர். இதுதான் சபாலிங்கத்தின் அரசியல்;. ஏன் ஐனவரி 3ம் திகதி தினமுரசில் ஈ.பி.ஆர்.எல்.எப் புலிக்கு எதிராக யாழ்குடா நாட்டில் கையெழுத்து வாங்கி உலக தலைவருக்கு அனுப்பிய செய்தியை வெளியிட்டிருந்தது. இதைத்தான் சபாலிங்கம் செய்தாரே ஒழிய வேறு ஒன்றுமல்ல. இந்த அரசியல் போக்கை தியாகமாக காட்டுவது, மலர்கள் வெளியிடுவது, அதையொட்டிய நடைமுறைக்கு எதிரான கோட்பாட்டு செயல் தளத்தை கட்டியமைக்கும் இந்த போக்கில் தான் கல்வெட்டின் அவசியம் அவர்கள் முன் பிறக்கின்றது. இதற்க்கு எதிரான போராட்டத்தில் தான் பதில் அரசியல் வழியில் அவசியமாகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக, இயக்கத்திடம் ஐனநாயகத்தை கோரி, இந்தியா அரசுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தரகு நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக போராடாத அனைத்து செயல் தளங்களும், இதில் ஒன்றுடன் கூட சமரசம் செய்தாலும் மக்கள் விரோத அரசியலாகும். இதுதான் எமது அரசியல் நிலை. இதுதான் அன்று போராடி தம்மை இச்சமூகத்தின் விடுதலைக்காக அர்பணித்தவர் நிலையும் கூட. இதற்க்கு எதிராக வெளிவரும் சஞ்சைகள், மலர்கள், தனிநபர் செயல்கள் என அனைத்தையும் எதிர்த்து நாம் போராடுவோம். இதில் சமாரசம் என்ற கேள்விக்கே இடமில்லை.

 

என்பற்றி நான் எழுதியது என்பது வலிந்து எழுதப்பட்டவையல்ல. மாறாக என் மீதான சேறுயடிப்பு, மீது அவைகளை வைப்பதும், அது கடந்தகால ஐனநாயகத்துக்கான போராட்டத்தை பாதுகாக்கும் வழிகளில் வைக்கப்பட்டவையே. கடந்தகால போரட்டங்களை சரியாக மதிப்பிடவும், அதை அரசியல் ரீதியல் விமர்சிக்கும் போது வரவேற்பதில் பின்நிற்க்கமட்டேன். ஏன்எனின் எனக்கே விமர்சனம் உண்டு. ஆணால் சேறுயடிக்கும் போது அதை எதிர்த்து போராடவும் மேற்க்கூறிய காரணத்தால் பின்நிற்க்கவும் மட்டேன்.

 

3.என்மீது தாக்குதல் நடத்த எனக்காக வெளியிடு ஒன்றை இருள்மலர் சுகிப்புக் குழுவைச் சார்ந்த நால்வர் நாட்டாமை என்ற சமூகப் பொறுப்பற்ற தனிநபர் வக்கிர இதழ் வெளியிட்டிருந்தனர். மக்களுக்கு பிரசுரிக்க மறுத்த கட்டுரைகளை வெளியீடுவதாக பிற்றிக் கொண்டு தனிநபர்கள் மீதான தாக்குதல்களை பொய்கள் அவதூறுகள் மீது பொழிந்திருந்தனர். மக்களுக்கு தெரியாத, சொல்லா முடியாத பல ஆயிரம் விடையங்கள் குவிந்திருக்க, மக்கள் அறிவற்ற ரீதியல் சூனியமான அறிவில் இருக்க அவற்றை தகர்ப்பதற்க்கான சமூக அக்கறைக்கு பதில் தனிபர்கள் மீது ஆதாரமற்ற தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 

உதரணமாக என்.எல.எப்.ரி யிடம் இரண்டு எஸ்.எம்.ஐp இருந்தாக கூறுகின்றார். அப்படி இரண்டு இவ் ஆயுதம் இருந்ததில்லை. அடுத்து கோயில் கொள்ளையடித்தாம். என்.எல.எப்.ரி எந்தக் கோயிலையும் கொள்ளையடித்ததும் இல்லை. அடுத்து உமாமகேஸ்வரன் கூட்டணியுடன் சேர்ந்து சாதி ஓழிப்புக்கு போராடியவராம். எங்கே சாதி ஒழிப்புக்கு கூட்டணி போராடியாது. உமாமகேஸ்வரன் எங்கே எப்ப போராடியவர். மாறாக வருடம் வருடம் கட்டுவன் சந்தியில் வறுத்தலை பள்ளருக்கு சன்னதி காவடியின் போது உமாமகேஸ்வரன் உள்ளிட்ட கூட்டணியின் கோட்டையின் தளபதிகள் அந்த மக்களை அடித்து நொருக்கியது இலங்கைச் சாதி வரலாறு. எதிர் காலத்தில் சாதி ஒழிப்பைச் செய்ய தலித்துகள் கூட்டணியிடம் கால்களில் விழுவது மிகசிறப்பானது. இப்படி ஆதாரமற்ற பலவற்றை கூட்டாக எழுதி வெயிட்டவர்கள் தமது சொந்தப் பெயரில் அதை வெளியிடாத மோசடியிலும் ஈடுபட்டனர்.

 

எம்மண்ணில் தமிழ்மக்கள் பெயரில் நடத்திய தாக்குதல்கள், கொலைகளின் தமிழ்மக்கள் என உரிமை கோரி விட்ட அறிக்கைகள், சுவரொட்டிகள் எல்லாம் இந்த வகையானதே. ஆதாரமற்றவற்றை செய்யும் போது புனையான பெயர்கள் அதற்கான வராலாற்று அரசியலுடன் அரங்கேறிவிடுகின்றது.


அர்த்தமற்ற வகையில் 1983 இல் காளன் மிளைப்பது போல் உருவான 32 இயக்கங்கள் எப்படி உருவனதோ அதே போன்று, கம்புயூட்டர், போட்டோ பிரதியொடுக்க கொஞ்சப் பணம் இவ்வளவும் போதும் பெயர் இல்லாத, அல்லது பெயருடன் எதையும் புலம்பிவிட முடியும். இந்த மாதிரி அவதூறுகளை விதைக்கும் செய்திகளுக்கும், அதைத் தாங்கி வரும் வெளியீட்டுக்குப் பின்னால் எந்த சமூக அக்கறையும் இருப்பதில்லை. என்பது அவர்களே ஓத்துக்கொள்வதுதான்.

 

எமது துண்டுப்பிரசுரத்தை ஓட்டி எந்த விதமான அரசியல் விமர்சனத்தையோ, பதிலையோ அளிக்காத தனிநபர்பற்றியும், கடந்தகால ஐனநாயக போராட்டத்தையும் தூற்றித்தான் புலம்பமுடிகின்றது. இது போன் தூற்றல்களுக்கு பதிலாளிப்பது என்பது அவசியமற்ற வகையில் அது புளுத்து நாற்றம் காணத் தொடங்கியுள்ளது.