கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா எனுமிடத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன. கோயிலுக்கு வரும்பக்தர்களையும் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் இக்குரங்குகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தன.

இதில் ஒரு மூத்த குரங்கு மட்டும் மற்ற குரங்குகளுடன் சண்டை போட்டு, பக்தர்களைத் தொல்லையிலிருந்து காத்து வந்தது. இதனால் பக்தர்கள் அந்தக் குரங்குக்கு"சாயிப்பு" என்று அன்பாகப் பெயரிட்டு அழைத்து, இந்துக் கடவுளான அனுமாரின் அவதாரமாகக்கருதி உணவுப் பொருட்களை அளித்து வந்தார்கள். அக்கோயிலிலுள்ள குரங்குக் கூட்டத்துக்கு சாயிப்புதான் தலைவரைப் போலச் செயல்பட்டு வந்ததாம். அந்தக்குரங்கை மற்றக் குரங்குகள் சண்டையிட்டுக் கடித்துக் குதறியதால், படுகாயமடைந்த சாயிப்பு, கடந்த டிசம்பர் 28ஆம் தேதியன்று இறந்து விட்டது. சாயிப்புவின் சாவுச் hசசூதியைக் கேட்டதும், அப்பகுதியிலுள்ள பக்தர்கள் கோயிலில் கூடி கண்ணீல்மல்க சாயிப்பு குரங்கை வணங்கினார்களாம்.

பலர் மலர்மாலைகளை வைத்து அஞ்சலி செலுத்தினார்களாம். இந்து பக்தர்கள் வேதனைப்படும்போது அத்துயரத்தில் பங்கேற்பதுதானே இந்துத்துவத்துவத்துக்கு செய்யும் உண்மையான சேவையாக இருக்கமுடியும்? உடனடியாக வலது கம்யூனிஸ்டு கட்சியைச் Nசுர்ந்த கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், கொல்லம் மாவட்டம் குன்னாத்தூர் தொகுதியின் வலது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வான குஞ்சுமோன், மற்றும் அக்கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் திரண்டுவந்து இந்து பக்தர்களுக்கு ஆறுதல் கூறி, செத்துப்போன குரங்குக்கு சிவப்புத் துணி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். "சாயிப்பின் மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது" என்று உருகினார், எம்.எல்.ஏ. "சாயிப்பைப் பொறுத்தவரை அவர் ஒரு தலைவர். அவருக்கு மரியாதை செலுத்துவது எனது கடமை" என்று செத்த குரங்கை உயர்திணையாக்கி அரற்றினார், அமைச்சர்.

இந்துவெறியர்களே விஞ்சும் அளவுக்கு, இந்துக்களால் அனுமாரின் அவதாரமாகச் சித்தரிக்கப்படும் குரங்குக்கு இறுதி மரியாதை செய்து போலி கம்யூனிஸ்டுகள் செய்த புரட்சியைப் பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போனார்களாம்! இந்துக்களின் நம்பகமான காவலானாகக் காட்டிக் கொண்டு, மூடநம்பிக்கையை ஆதரித்து இப்படிக் கீழ்த்தரமாகச் சென்று சீரழிந்து நிற்கும் போலி கம்யூனிஸ்டுகள், அடுத்துவரும் தேர்தல்களில்"இந்துக்களின் ஆசியும் ஆதரவும் பெற்ற சின்னம் கதிர் அரிவாள்"என்று பா.ஜ.க.வுக்குப் போட்டியாக ஓட்டுப் பொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.