Mon02172020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தேர்தல் திருவிழா உபயகாரர்களின் போட்டித் திருவிழாக்கள்! செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்!

  • PDF

எமது நாட்டின் “சரித்திர முக்கியத்துவம”; வாய்ந்த தேர்தல் திருவிழாவை, அதன் சகல உபயகாரர்களும் போட்டி போட்டு,  (மேளதாளம் -வாணவேடிக்கைகளுடன், –வில்லுப்பாட்டு கதாபப்பிரசங்கஙகளுடன்) தடல்புடலாய்ச் செய்கின்றனர். முழுநாடுமே (தேர்தல்); திருவிழாவின் குதூகல உச்சக்கட்டத்தில் உள்ளது.


இக்குதூகலம் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு, (சொற்பொழிவுகளாக, பிரச்சாரங்களாக, போட்டிப் பிரச்சாரங்களாக, வழக்காடு பட்டிமன்றங்களாக) மகாகோலம் கொள்ளும். குதூகலங்களுக்கு உள்ளும், எம்நாட்டு மக்களுக்கு உள்ள பெரும் கவலை, தடுமாற்றம், திணறல், என்னவெனில் இத்தேர்த்தலில் உள்ள 8,000பேரை எப்படி 196-பேர்கள் ஆக்குவதென்பதே! சர்p, மக்கள் என்னதான் செய்கின்றாhகள், என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நான் சென்றவாரம் சொன்னதுபோல், இந்த 8,000த்தை பிரதிநிதித்துவப் ;படுத்தும், கட்சிகளும், குழுக்களும் மக்களுக்கு என்னதான் சொல்கின்றன என்பதைப் (தொட்டதை-விட்டதை) பார்ப்போம்.

ஓர் சுயேட்சை வேட்பாளர்!

யேசு மரியாள் சூசை துணை எனக்கு அளிக்கப்படும ;வாக்குகள் இயேசுக்கிறிஸ்துவிற்கு அளிக்கப்படும் வாக்குகளே!
தேசிய அபிவிருத்தி முன்னணிக்கட்சியின் சார்பில்-சுயேட்சையாக போட்டியிடும் கிறிஸ்தவ மதகுரு ஒருவர். எட இந்தப் பாவப்பட்ட பாதிரியாரை என்னவென்பது:, இந்த மகிந்த திருச்சபைக் குடும்பத்தினது;ம், ஏனைய பாதாள கள்வர்குகை குடும்பங்களினதும் பாராளுமன்றத் திருச்சபையை, நல்லதென அடம் பிடித்து போட்டியிடுகின்றார். கடடுக்காசு (கடனோ?) எடுத்தால் (சர்pத்திரப் பாராளுமன்றத்தில்)  பெரும்சாதனைதான்.


ஜனாதிபதி மகிந்தா!


“எதிர்காலத்தில் தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்கள் நடாத்த உத்தேசித்துள்ளேன். அப்போது விடுதலைப் புலிகள் கேட்டதை எல்லாம் கொடுக்க முடியாது. சமஸ்டி என்பதும் பிரிவினையுடன் தொடர்புடைய ஒன்றும்,. கேவலமானதுமாகும். வடகிழக்கை நான் ஒருபோதும் இணைக்கப் ;போவதில்லை. மாகாணங்களின் முதல் அமைச்சர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்குவது என்பது, முழுமையான ஆபத்தே!. சோனியா காந்தி உத்தரப்பிரதேசத்திற்குள் தன் தொகுதிக்குச் செல்ல, முதல்வர் மாயாவதி அவரைத் ;தடுத்தார். பின்பு போலீஸ் உதவியுடனேயே, அவர் சென்றார். எனவே அந்நிலைமை எனக்கு (பிள்ளையான்-கருணா-டக்கிளஸ் அல்லது வேறு யாராவது) வரக்கூடாது என்கின்றார் மகிந்த மன்னன்”-
மகிந்தா, பொன்சேகாவை முட்டாள் ஆக்குவதுபோல் தேசிய இனப்பிரச்சினையையும் முட்டாள்தனமாக பார்க்கின்றார், கையாள்கின்றார். இவரது இவ் அரசியல் அரங்கம் ம்pக விரைவில் சுக்கு நூறாகு;ம் இது வரலாற்று நியதி.


கூட்டமைப்பின் சம்பந்தன்


சுயநிர்ணய உரிமை என்பது ஓர் பூதமல்ல. பிசாசுமல்ல. ஐக்கியநாடுகள் சபையின் சாசனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கியமான ஓர் சொற்பிரயோகமே. வடகிழக்கில் அபிவிருத்தி என்பதே நடைபெறவில்லை. அபிவிருத்திக்கான பணமும் அரசினுடையதில்லை. .இதை சர்வதேச நாடுகளே வழங்குகின்றன. அதில் பெரும்பகுதி எமது மக்களுக்கு கிடைப்பதில்லை. அதை மேலும் பலர் அபகரித்துக் கொள்கின்றனர். அபிவிருத்தி என்பது சுயநிர்னய உரிமையின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டியது. இது எமது மக்களின் இறைமையின் ஓர் அம்சம். எமக்கு எது தேவையென்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும். இதை “வெற்றிலைகளும் சுயேட்சைகளும்”; தீர்மானிக்க முடியாது.  அதை இத்தேர்தல் முலம் நாம் நிருபிப்போம்.  என்கின்றார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்”.
அந்pநிய சக்திகளின் தொங்கு சதைகளாகி, தமிழ்த்தேசியத்தின் சுயநிர்னயத்தை பிரதிபலித்தால் அது தமிழ்மக்கள் விடுதலையாகாதே! தேர்தலில்வெற்றி பெறத்தான் உதவும்!“தேசியத்தவைர்” பொன்னம்பலம்


“தமிழர் கூட்டமைப்பை தோற்கடிப்பதல்ல! இரா சமபந்தன், மாவை, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை தோற்கடிப்பதே (மோதகத்தின் மா நல்லது. தேங்காய்ப்பூ, பயறு, சர்க்கரை கூடாதாம்) எம் இலட்சியம்! என்கின்றார் காங்கிரஸின் “தேசியத்தலைவர்” பொன்னம்பலம்.
இவர்கள் சொல்லும் தேசியம்-கீசியம், தாயகம்-கீயகம், சுயநிர்ணயம்-தன்நிர்ணயம், தமிழ் ஈழம்-மற்றறைய ஈழங்கள், இலடசியங்கள் எல்லாம் ; பாராளுமன்ற ஆசனங்களுக்கே! என்கின்றார். “இத ;தேசிய இலட்சியத் தலைவர்.”  தாத்தா ஓர் மீன்பிடி மந்திரியாக மலையக மக்களின் தேசியத்தையே இல்லாதாக்கியவர்! பப்பா யாழ்ப்பாணத் தொகுதி தான் வேண்டுமென அடம்பிடித்து அன்றைய கூடட்டணியை உடைத்தவர். தங்களுக்கும் தொகுதித் தொற்று நோய் (பத்மினி-கஜேந்திரன்) வந்துதானே இக்கூட்டமைப்பையும் உடைச்சனீங்கள்;! உங்களுக்கெல்லாம் ஓர் சந்ததி; (இலட்சிய) வருத்தம்தான்!  இதற்கு மக்கள் தந்தாலொழிய வேறு மருந்தில்லை!எதிர்கட்சித்தலைவர் ரணில்!


எதிர்வரும் புதுவருடத்தின் பின்னர் எமது ஐக்கிய தேசியமுன்னணி அரசாங்கமே ஆட்சியில் இருக்கும். அப்போது எங்கள் அமைச்சர்களுக்கு எல்லாம் குறைந்த சம்பளமே பெறுவார்கள். பொருட்களுக்கு ;எல்லாம் வரி நீக்கம். தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெல்லாம்  நீதி கிடைக்கும். எப்பவோ எர்pக்கபட்ட யாழ்நூலகத்திற்கு இப்போதான் மன்னிப்ப கோர்pயுள்ளார்; ரணில். ஓரு வகையில் தலதாமாளிகை;கு குண்டுவைத்த கருணா-பிள்ளையானை (இன்னுமே மன்னிப்பு இல்லை. மகிந்தாவும் ஓ.கே.தானே) விட இவர் பரவாயில்லை! அது சரி நீங்கள் சொல்வது  போல் ஆட்சிக்கு வந்தால் உதையெல்லாம் செய்ய மகிந்த மன்னன் விடுவாரோ?பாரிஸ் ஈழநாட்டிற்கும் தேசியப்பட்டியலில் ஓர் இடமுண்டு!


தமிழ்மக்களின் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர் தமிழ்மக்கள் ஆவர். இவர்களின் அபுpலாசைகளை (கல்வி, செல்வம், வீரம்  இன்னும் இன்னோரன்ன) இவ்விதழே பிரதிபலிக்கின்றது. அத்துடன் “தற்போதைய தேசியத்தலைவரின் பொன்னம்பலத் தமிழ்ஈழத்திற்கு” புலம்பெயர்மக்கள் பெரும் ஆதரவாம். அவர்கள் நினைத்தால், புலத்தில், தங்கள் பலம் கொண்டு எதுவும் செய்வார்களாம். இவர்களின் கல்வி செல்வம், வீரத்திற்கு புலம் ஈடாகுமா? எனவும் விதந்தரைக்கின்றது இவ் ஊடகம்; இதைக் கண்ணுற்ற தேசியத்தவைர், ஆனந்தப்பிரவாகம் அடைந்து இவ்ஊடக நிர்வாகத்திற்கும் காங்கிரஸின் தேசியப்பட்டியலில் இடம் ஓன்று ஒதுக்க முடிவு செய்துள்ளாராம். இச்செய்தி புலத்திலும்-புலம்பெயர் மக்கள் மத்தியிலலும் பரவலாக பேசப்படுகின்றது.

டக்கிளஸின் பிரகடனம்!


அபிவிருத்தி ஆரம்பிக்கும நாள் ஏப்ரல் 9-என கொள்வோமாக! என பிகடனப்படுத்துகின்றார், வடக்கின் வசந்தமான டக்கிளஸ் அவர்கள். இதை ஏப்ரல் 1-என ஆக்கினால் இன்னும் மிகப் பொருத்தமாக இருக்குமே! தங்களின் வசந்த அபிவிருத்தி பற்றி சம்பந்தனும், தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ,  (தங்களுக்கு “வெற்றிலை மடித்தது தாம்பூலம்” தந்துள்ள) தங்களின் தவைரின் தன்னடக்கமான பதிலையும், தீர்வையும் கண்டு தாங்கள்  புளகாங்கிதம் அடைந்திருப்பீர்களே!

முக்கிய குறிப்பு: கிழக்கின் விடிவெள்ளியும், மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருடையதும், ஏனைய உபயகாரர்களினதும் விஞ்ஞர்பனங்களை அடுத்த வாரம் தருகின்றேன்.


11-ஆயிரம் ஏக்கரில் பண்ணை அமைத்து, 11-ஆயிரம் புலிகளுக்கு புனர்வாழ்வு! –அரசுஎவ்வளவு பெர்pய தாராள மனசு இந்த அரசிற்கு. ஒரு ஆளுக்கு ஒரு ஏக்கரில் புனர்வாழ்வு! இந்தப்பண்ணைகள் அரசு இயந்திரத்தின் சிங்கள் குடியேற்ற கூடாரங்கள் ஆகப்போவது இன்னொரு கதை. இதற்கு மறுபெயர்தான் புனர்வாழ்வுப் பண்ணை. என்னே என்பது இந்தப் “பேரினவாத மகிந்த சிந்தனையை”

நாடு கடந்த தமிழ்ஈழ அரசு இன்றைய காலத்தின் கட்டாய தேவை! –ஈழவேந்தன்


கூட்டமைப்பு எம்.பி.யாகி, சுயதேவை கருதி (பயத்தில்-கட்டாய லீவில்) நாட்டை விட்டோடியவர், இப்போது இன்றைய காலத்தின் கட்டாயம் பற்றி கதாகாலோட்சபம் செய்கின்றார்.

இலங்கை; ஜனநாயகம் செத்துவிட்டதாம்!      –பிரதம நீதியரசர் சரத் என் சில்வா

இந்தப் பழைய நீதவான்  இப்ப கொஞ்ச நாட்களாக -இலங்கையில் ஜனநாயகம் இல்லையென போற வாற இடமெல்லாம் சொல்லிக்கொண்டு திர்pகின்றார். அதுவும் பொன்சேகா கைதிற்கு பிற்பாடு ஜனநாயகம் என்றால் என்ன? அது கடைகிடையிலை கிடக்கோ? கிலோ என்ன விலை? என இலங்கை மக்கள் கடந்த இரண்டு முன்று தசாப்தங்களாக தேடித்திரிகின்றார்கள்! இந்த நீதவானும் பதவியில் இருந்தபோது மக்கள் “ஜனநாயகத்தை” தேடிய பல வழக்குகளைச் சந்தித்திருக்கின்றார்!

2008-ல் இவரே பதவியில் இருந்தபொழுது தமிழ்மக்களுக்கு, செய்த தமிழ்தேசிய இனவிரோதச் செயல், ஜனநாயக விரோதச்செயல்: தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடகிழக்கை சட்டரீதியாக பிரித்து தீர்ப்பு வழங்கியதே! வடகிழக்கு தமிழ்மக்களின் தாயகமே என வலியுறுத்தியே 13-வது திருத்தமும் வரையப்பட்டது. அதை இல்லாதாக்கிய “ஜனநாயகப் பணியை” இப்புண்ணிய நீதிபதியே செய்து முடித்தார்;!
நீங்கள் செய்து முடித்த மக்கள் விரோத – “ஜனநாயக மறுப்பின்” தொடர்தான்!  தொடராய் தொடர்கின்றது!

தற்போதைய சட்டங்கள் மக்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தவேண்டும்!  –பிரதமர்


எந்த மக்கள் நலன்;: மகிந்த குடும்பம்-அவர்களின் “சொந்த பந்த மக்கள் நலன்தானே”

விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தாலும் எமது நாட்டில் தஞ்சம் கோரலாம் — பிரித்தானியா

இதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற ஓன்றையும் அரசியல் கட்சிகளாக பதிவு செய்துள்ளது. இலங்கையை கவனிக்கப்படவேண்டிய நாடாகவும் அறிவிததுள்ளது. இவையெல்லாம் ஒரு சாராரை எதிர்ப்பதுபோல், மற்றவர்களை பப்பா மரத்தில் ஏற்றும் வேலையே. எதிர்வரும் தேர்தலுக்கான நாடகமே. சோழியன் குடும்பி சும்மா ஆடாது!

தகுதியற்ற நீதிபதிகள்!


பொன்சேகா வழக்கை விசாரித்த நீதிபதிகளுக்கு இவ்வழக்கை விசார்pக்க தகுதியற்றவர்கள் என, பொன்சேகாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி சட்டத்தரணிகளில் ஒருவரான சுனில் வட்டக்கல கருத்துத் தெரிவிக்கையில் நீதிபதிகள் குழுவுpற்கு தலைமை வகிப்பவர் தற்போதைய இராணுவத்  தளபதியின் மைத்துனர். ஏனைய இருவர்களில் ஒருவர், சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது, தகுதியின்மை காரணமாக பதவியிறக்கம் செய்யப்பட்டவர் மற்றவர் இராணுவக் கேள்வி மனுக்கோரல் நடவடிக்கையின் போது, குற்வாளியாகக் காணப்பட்டவர்.

மேலும்  இராணுவத்தளபதி (பொன்சேகா) இராணுவச் சட்டத்திற்கு உட்பட்டவர் இல்லையென்பதால், இக்குற்றச்சாட்டுக்களை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாதென எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்ட, இதுபற்றி ஆராய கால அவகாசம் தேவையென்று நீதிமன்னறம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் நீதிபதிகளின் தகுதிபற்றி கேட்க, நாங்கள் நீதிபதிகள்தான். எங்கள் தகுதிக்கென்ன குறைவென மழுப்பி, வழக்கை ஆரம்பித்து, பொன்சேகாவை நோக்கி தாங்கள் குற்றவாளியா? சுற்றவாளியா? எனக் விசாரணையை தொடங்கினர்,, மீண்டும் சட்டத்தரணிகள் குறுக்கிட்டு இவ்வழக்கை இந்நீதிமன்றத்தால், விசாரிக்க முடியாதென்ற சட்டப்பிரச்சினையை கிளப்ப “தட்டுதடுமாறிய தகுதியற்ற இந் நீதிக்குழாமினால்” நீதிமன்றமே ஒத்திவைக்கப்பட்டதாம்! இனி அடுத்த விசாரணைக்கு “பாதாள    உலகின்; நீதிபதிகள் குழுவை” மனுநீதி மன்னன் நியமிப்பார்.!

http://www.psminaiyam.com/?p=3217

Last Updated on Tuesday, 23 March 2010 06:51