ஜென்னியின் வாழ்க்கைக் குறிப்பு


ஜென்னி 1814-ம் வருடம் மாசிமாதம் 12-ந் திததி பிறந்தார். ஜென்னியின் பெற்றோரும், கார்ல் மார்க்சின் பெற்றோரும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்தனர். இதன் விளைவு இருவரும் காதலர் ஆகினர்.

1843-; ஆனி 19-ம் நாள் கார்ல் மாhக்ஸ் ஜென்னியைக் கைப்பிடிக்கின்றார். அன்றில் இருந்து தன் இறுதி வாழ்நாள் வரை மார்க்சின் தோழியாக, ஆசிரியையாக, மாணவியாக, குடும்பத் தலைவியாக, அன்பு மனைவியாக, வாழ்ந்தார். ஜென்னியின் தன் குடும்பவாழ்வின் பெரும்பகுதியை பஞ்சம் பசி பட்டினி பெரும்பிணி கடன்தொல்லை, பிள்ளைகளின் தொடர் மரணம் போன்ற சொல்லொனாத் துயர்களுக்கூடாகவே வாழ்ந்து முடித்தார்.

 

திருமணத்தின்பின் ஜெர்மன் அரசுக்கெதிரான மார்க்சின் அரசியல் நடவடக்கைகளின் நிமித்தம்;, அங்கிருக்க முடியாத நிலையில், மார்க்ஸ் தம்பதிகள் பாரிசிஸ் வருகின்றனர். அங்கும் அவர்களுக்கும் அரசியல் பரச்சினையே! 1845-ல் பார்pசில் இருந்தும், 1848-ல் பிரஸிலிருந்தும், 1849-ல் கொலோனில்pருந்தும், 1849-ல் இருந்து மீணடும் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மார்க்ஸ் லண்டனுக்கு செலகின்றார். ஆனால் ஜென்னியை உடன் அழைததுச்செல்ல பணம் இல்லை. அரசிடம் மூன்று வாரகால அவகாசம் பெற்று,  தோழர்கள் நண்பர்களின் உதவியுடன் ஜென்னி லண்டன் ;செலகின்றார். ஏழு பிள்ளைகளுக்கு தாயான ஜென்னி, அவர்களுடன் முழுவாழ்வு வாழவேயில்லை! ஏழு பிள்ளைகளில், நான்கு ஓன்றன்பின் ஒன்றாக இறந்துபோயின. இறந்த குழந்தைகளை அடக்கம் செய்ய, துயர் துடைக்க புலம்பெயர் தோழர்கள் நண்பர்களே உதவி செய்தனர்.

 

1857-ல் ஜென்னியின் குழந்தையொன்று பிறந்தவுடனே இறந்து விடுகின்றது. அத்துடன் “அறிவுச் செல்வன்” என அவர்களால் அன்பாக வளாக்கப்பெற்ற 8-வயது பாலகன் ஒருவன் மறைகின்றான.;. இப்பாலகனின்  மறைவு குறித்து, ஜென்னி ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில், நான் பல துன்ப துயரங்களை ஏற்கனவே அனுபவித்திருக்கின்றேன். ஆனால் தன்மகன் இறந்தது தம்மை கொடுமையாக வாட்டி வதைப்பதாகவும் எழுதியிருந்தார். இன்னோர் மகளின் மறைவு குறித்து ஜென்னி மாக்ஸ் சொல்கின்றார்.

 

1852-ல் ஈஸ்டர் பண்டிகையின்போது எங்கள் சிறு பிரானஸீஸ்காவுக்குக் கடுமையான மார்சளி; ஏற்பட்டது. மூன்றுநாட்கள் அவள் வாழ்விற்கும் சாவிற்கும் இடையே போராடினாள். மிகப் பயங்கரமாக அல்லல்பட்டாள். ஆவள் மரணமடைந்தபோது, அவளது சிறு உடலைப் பின்னறையில் விட்டுவிட்டு, முன்னறைக்குச் சென்று தரையில் படுக்கைகளை வரித்தோம். உயிருடன் இருந்த எங்கள் குழந்தைகள் மூவரும் எங்களருகில் படுத்திருந்தனர், ஆனால் நாமெல்லோரும் இரவிரவாக உறக்கமேயின்றி, அச் சின்னத் தேவதைக்காக, அழுதோம். நாங்கள் கடுமையான வறுமைத்துயர்pல் மூழ்கியிருந்த காலகட்டத்தில்தான் இந்த அருமைக் குழந்தையின் மரணமும் நிழ்ந்தது. அந்தச் சமயத்தில் எமக்கு உதவி செய்த எவராலுமே உதவி செய்ய முடியவில்லை. கடைசியாக எங்களை அடிக்கடி வந்து காணும் பிரெஞ்சு அகதி ஒருவரைத் தேடி உதவி செய்யும் புர்pயும்படி மன்றாடினேன்;. அவர் சினேகபூர்வமான ஆதார உணர்வோடு இரண்டு பவுன்கள் கொடுத்தார். அந்தப்பணம் சவப்பெட்டி வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. அதில்தான் என் குழந்தை நிரந்தர அமைதியில் நிலை கொண்டிருக்கிறது. அவள் இந்த உலகிற்கு வந்தபொழுது அவளுக்கு தொட்டில் இருக்கவில்லை. இறந்தபொழுது அமைதிபெறும் இடமும் வெகுகாலம் மறுக்கப்பட்டுள்ளது. அவளது உடல் இடுகாட்டிற்கு தூக்கிச் செல்லப்பட்டதை துயரத்தால் கனத்துவிட்ட எத்தகைய இதயத்துடன் நாங்கள் பாத்திருப்போம்.

 

இப்பேர்ப்பட்ட நெஞ்சை உருக்கும. இதயத்தைப் பிழியும் நிகழச்சிகளே அவரின் குடும்ப வாழ்வு. இவ்வாழ்வால் ஜென்னி நோயாளி ஆகின்றார் 1880-ம் ஆண்டு ஈரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றார்.ஓர்வருடம் இந்நோயால் உவாதைப்பட்டு, 1881-ம் ஆண்டு மார்கழி இரண்டாம் நாள் இவ்வுலகில் இருந்து நிரந்தர விடை பெறுகின்றாள்.

எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை


ஜென்னி மாhக்ஸ் யோஸிப் வெய்டெமையருக்கு எழுதிய கடிதம் – லண்டன், மே 20, 1850
அன்புள்ள திரு வெய்டெமையர்,             (பகுதி 1)

தங்களாலும் தங்கள் அன்பான மனைவியாலும ;நட்புடனும் அன்பு கலந்த விருந்தோம்பலுடனும் உபசர்pக்கப்பட்டடு, உங்கள் வீட்டில் நான் சொந்த வீட்டைப்போல மிகவும் வசதியாக தங்கியிருந்த நாட்கள் கடந்து ஏறக்குறைய ஓராண்டாகப் போகின்றது. நான் இருக்கின்றேன் என்பதுபற்றிக் கூட நான் இத்தனை நாளாக காட்டிக்கொள்ளவில்லை. உங்கள் மனைவி நேசத்துடன் எழுதிய கடிதம் கண்டும் மௌனமாக இருந்தேன். உங்களுக்கு குழந்தை பிறந்தது பற்றிய செய்தியும்கூட இந்த மௌனத்தைக் குலைக்கவில்லை. இவ்வாறு மௌனமாக இருப்பது என்னை அடிக்கடி மூச்சுத் திணற வைத்தது. ஆனால் பெரும்பாலும் எழுத முடியாத நிலையில் இருந்தேன். இன்னும்கூட எழுதுவது கஸ்டமாகத்தான் இருக்கிறது.

 

சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னைப் பேனா எடுத்து எழுதுமப்படி நிர்ப்பந்திக்கின்றன. றிவியூ பத்திரிகையில் இருந்து ஏற்கனவே கிடைத்த அல்லது கிடைக்கப்போகும் பணம் ஏதாவது இருக்குமானால், கூடிய விரைவில் அனுப்பிவைக்கும்படி வேண்டுகின்றேன். எங்களுக்குப் பணம் மிகமிகத் தேலை. நாங்கள் செய்துவருகின்ற, பல ஆண்டுகளாகளாய் செய்துவந்துள்ள தியாகங்களை வைத்துக் கேட்கின்றோம் என்று நிச்சயமாக யாரும எங்கள்மீது குறைகூற முடியாதுங்கள் நிலை குறித்து பொதுமக்களுக்கு என்றுமே தகவல் கொடுக்கப்பட்டதில்லை. எனது கணவர் இத்தகைய விடயங்களில் மிகவும் மான உணர்ச்சியுள்ளவர்.


கடைசியாக ஏதேனும் இருந்தால் அதையும் தியாகம் செய்வாரே தவிர அதிகாரபூர்வமாக அங்கீகர்pக்கப்பட்டுள்ள “பெர்pய மனிதர்களைப்போல” ஜனநாயகப் பிச்சையில் இறங்கமாட்டார். ஆயினும் தமது றிவியூவிற்கு தமது நண்பாகளிடம் இருந்து, குறிப்பாக கொலோனிலுள்ள நண்பர்களிடமிருந்து தீவிரமான உற்சாகமான ஆதரவை அவர் எதிர்பார்க்க முடியும். “;றைன்ஸே சைத்துங்” பத்திரிகை;ககாக அவர் செய்துள்ள தியாகங்கள் குறித்து அறிந்துள்ளவர்களிடம் இருந்தும் முதன் முதலாக உதவிகளை அவர்  எதிhபார்க்க முடியும். ஆனால் இதற்கு மாறாக அசட்டையும் ஒழுங்கீனமுமான நிர்வாகத்தின் விளைவாக கார்pயம் கெட்டுப்போயிற்று. இதில் புத்தக விற்பனையாளர் , நிர்வாகிகள் கொலோன் நண்பர்கள் ஆகியோர் செய்த காலதாமதம் அல்லது ஜனநாயகவாதிகளின் போக்கு இவற்றில் எது மொத்தத்தில் அதிக நாசம் விளைவித்தது என்று யாரும் சொல்லமுடியாது.

 

இங்கு என் கணவர் வாழ்க்கையின் சில்லரைக் கவலைகள் மிகமிக மோசமான உருவில்  வந்து மூழ்கடிப்பதன் விளைவாக இதற்கு ஈடு கொடுத்து தினசரி மணிக்கு மணி போராட தமது சக்தி முழுவதையும், தமது அமைதியான தெளிவான நிச்சயமான கௌரவத்ததையம் பயன்படுத்தி நிலை நிற்கவேண்டியிருக்கிறது அன்புமிக்க திரு. வேய்டெமையர் அவர்களே! பத்திரிகைக்காக என் கணவர் புர்pந்துள்ள தியாகய்கள் பற்றி உங்களுக்குத் தெர்pயும், அவர் ரொக்கமாக ஆயிரக்கணக்கில் இதற்காக முதல் போட்டார். உர்pமையாளர் பொறு,ப்பினை ஏற்றுக்கொண்டார். வெற்றியை எதிர்பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாத காலத்தில் மதிப்பிற்குர்pய ஜனநாயகவாதிகள் இதைச் செய்ய அவரைத் தூண்டினார்கள். இல்லாவிடில் அவர்களே கடனுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருப்பார்கள் அல்லவா?


புத்திரிகையின் அரசியல் மதிப்பையும் தமது கொலோன் கூட்டாளிகளின் பிரஜாவுர்pமை கௌரவத்தையும் காப்பதற்காக முழுப் பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். தமது அச்சகத்தை விற்றார். வருமானம் முழுவதையும் பிரித்துக்கொடுத்தார். தாம் வெளியேறுவதற்கு முனபாக 300டாலர்கள் கடன் வாங்கி புதிதாக வாடகைக்கு எடுத்த  இடத்தின் வாடகையையும், ஆசிர்pயர்களுக்கு தரவிருந்த சம்பளப் பாக்கியையும் தீர்த்துவிட்டே சென்றார். அவரோ பலாத்காரமாக விரட்டப்படும் நிலையில் இருந்தார். எங்களுககென்று நாங்கள் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. என்பத உங்களுக்கு தெரியும். கடைசியாக எங்களிடம் இருந்த வெள்ளிப் பொருட்களை அடகு வைப்பதற்கு நான் பிராங்கபுர்ட் சென்றேன். கொலோனிலிருந்த எனது துணிமணிகளும் மற்றப் பொருள்களும் ஜப்தி செய்யப்படலாம் என்று நான் அஞ்சியதால் கொலோனிலிருந்த எனது தட்டுமுட்டுச் சாமான்களை விற்பதற்கு ஏற்பாடு செய்தேன்.

எதிர்ப்புரட்சி pமேலோங்கிய கொடுங் காலகட்டத்தின் துவக்கத்தில் என்கணவர் பார்pஸ் சென்றார். எனது மூன்று குழந்தைகளுடன் நான் அவரைப் பின்தொடர்ந்தேன். அவர் பாரிஸில் வந்து தங்க முற்பட்டாரோ இல்லையோ, அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். எனக்கும் என் குழந்தைகளுக்கும்கூட அங்கு அதற்குமேல் தங்கியிருக்க அனுமதி மறுக்கப்பட்டது. அவரைப் பின்பற்றி மீண்டும் கடல் கடந்து சென்றேன். ஒரு மாதத்திற்குப் பின் எங்களது நாலாவது குழந்தை பிறந்தது. மூன்று குழந்தைகளும், நான்காவது குழந்தைப்பேறும் என்ன என்பதை அறிய லண்டனையும் இங்குள்ள நிலைமைகளையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். நாஙகள் வாடகையாக மட்டும ;மாதத்திற்கு 42டாலர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. எங்களுக்கு கிடைத்துவந்த பணத்திலிருந்து இதை நாங்கள் சமாளிப்பது சாத்தியமாயிற்று. ஆனால் றிவியூ பிரசுரிக்கப்படவுள்ள எங்கள் சின்னஞசிறு செல்வாதாரமும் தீர்ந்துவிட்டது. ஓப்பந்தத்திற்கு விரோதமாக எங்களுக்கு பணம் தரப்படவில்லை. சிறுதொகைகளே தரப்பட்டன. எனவே நிலைமை மிகவும் அபாயகரமானதாக இருந்தது.  (தொடரும்)

 

http://www.psminaiyam.com/?p=2621