05172022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

மேலும் பல காயங்கள் படவோ...

சிறிதும் பெரிதுமாய்
ஐந்து காயங்களோடு
வன்னியிலிருந்து
தப்பி
வந்து சேர்ந்தது சிட்டுக்குருவி


எந்தெந்தக் காயத்தை
யார் யார் தந்தார்களென்பதை
சிட்டுக்குருவியால்
அறுதியிட்டு சொல்ல முடியவில்லை

ஆனால்
இரு பகுதியினருமே
பாரபட்சமின்றி தந்தார்களென்பதில்
நம்பகரமாயிருந்தது அது

அயலட்டத்தின் பிரச்சனை என்னவெனில்,
காயங்களை
இரண்டாக, சரிசமனாக பிரிக்கமுடியாதேயென்ற
கணக்கின் குழப்பம்
(அந்த ஒரு காயத்துக்குள் 107வாட்கள் ஊடுருவிய காயங்களும் வலிகளும் அடங்கிக் கிடக்கிறதென்பது வேறு கணக்கு)

எஞ்சியிருக்கும்
ஒரு காயத்தை கணக்கு முடிக்க
எந்தப் பேய் பிசாசோடும்
கூட்டு சேரும்படியாகி விட்டது சிட்டுக்குருவிக்கு

மேலும் பல காயங்கள் பட
சித்தமாகினையோ என் சிட்டுக்குருவி...

http://www.uyirmei.com/2010/03/blog-post_13.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்