கருவறைக் கண்ணீர் – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

முகம் தெரியாத தாயே

உன் கருவிலிருக்கும்

கடைசி மகள் எழுதும்

கண்ணீர் கடிதம்.

உனது கருவறைச்

சுவர்களில் – எனது

சுட்டு விரல் தீட்டும்

ஓவியம் புரிகிறதா? –நீ

பிரசவித்த என்

முன்னவர்களைக் காணோமென்று

கதறும் ஒலி என்

காதுகளுக்கு கேட்கிறது.

காணமல் போன அண்ணா,

காலில்லா அப்பா,

தடுப்பு முகாமில் மூத்தவன்,

பருவ வயதில் இளையவள்

ஓட்டைக் கூடாரத்தில்

கிளிந்த துணியுடன் நீ

இதற்கிடையில்

நான் ஏனம்மா ….?