05292023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்! - செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!

இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் இழுத்துச் சென்றனர்!

முன்னாள் இராணுவத் தளபதி இப்படித்தான் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளார்;. பொன்சேகாவை கைது செய்தவர், முன்னர் பொன்சேகாவினால் தண்டனை வழங்கப்பட்ட- தற்போதைய கொழும்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி. தேர்தல் தினத்தன்றும் பொன்சேகா தங்கியிருந்த விடுதியை சுற்றி வளைத்த போராட்டத்திற்கும் தலைமை தாங்கியவரும் இவரே!

இக்கைதின் ஊடாக, மகிந்தா தானும் இன்னொரு பிரபாகரப் புலியே என ஊர் உலகிற்கு காட்டியுள்ளார், நிறுவியுள்ளார்;. இலங்கையின் எதிர்காலம், இம்சை, பழிவாங்கல், கொலைகளுடன் கூடிய “மாமிச விலங்காட்சியே”தான். அதன் தொழிற்பாடுதான், கற்கால மனிதர்களை கல்லால் எறிய தை;துள்ளார்.  அப்படியாயின் பொன்சேகா?

மகிந்தா- பொன்சேகா ஜனாதிபதியாக- இராணுவத்தளபதியாக யுத்தத்தை ஆரம்பித்தபோது மனிதப் படுகொலையில், பாசிச சர்வாதிகாரத்தில் இருவரும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்களே! ஜனநாயக-மக்கள்விரோதப் பொன்சேகாவை ஜனநாயகவாதியாக்கியதும், ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கியதும் மகிந்த—கோத்தபாயா சகோதரர்களின் பாமரத்தன அரசியலே……சரத்தின் கைது இன்று மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோத-சர்வாதிகார அரசியல் ஆகியுள்ளது. இதை ஓர் இணையதள பின்னூட்ட வாசகர் சரியாக கணித்துள்ளார்.

ஆம், மதியற்ற-மட்டகரமான மகிந்த சிந்தனையால், சர்வாதிகாரி பொன்சேகா இன்று ஜனநாயகத்தின் குரலாக-மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பவராக, ஆக்கப்பட்டுள்ளார். மகாபாரதத்தில் துரியோதனன்-துச்சாதனன் போல் இலங்கையில் கோத்தபாயா மகிந்த சகோதரர்கள்! கோத்தபாயா (தாய்நாட்டின்-ஜனநாயக) துகிலை உரிய, மகிந்தா மௌனமாக பார்த்து ரசிக்கின்றார்!

இலங்கை மக்கள் உளவியல் மன அழுத்தங்களினால் அவதியுறுகின்றனர். மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு, தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். புpரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிக்கக்கூடிய வல்லமையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.          –பேராசிரியர் பெரேரா

சமகால இலங்கை மக்கள் குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலையாகியுள்ளனர். குரங்கிற்கு மக்களின் மன அழுத்தங்கள், அபிலாசைகள் பற்றி என்ன தெரியும்!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, 40,000- தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 3-இலட்சம் மக்கள் நியூயோர்க்கில் உள்ள மத்திய பூங்கா போன்ற, ஒரு சிறு நிலப்பரப்பில் கைதிகள் ஆக்கப்பட்டனர். அனைத்துரக ஆயுதங்களும் பாவிக்கப்பட்டது.- –ஓய்வுபெற்ற ஜ.நா வின் இலங்கைக்கான பேச்சாளர்

இதைத்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு பொன்சேகா சொல்வேன் என்றிட, அவரை இராணுவ  மன்றத்திற்குள்  கொண்டு சென்றுள்ளார்கள்! நவநீதம்பிள்ளை கட்டாயம் விசாரிக்க வேண்டும் என்கின்றார்; நடக்குமா? எது எப்படி என்றாலும் சம்பவம் உண்மையே!

தேசம்நெற்றும் கீபோட் மாக்சிஸ்ட்டுக்களும்!

புலம் பெயர்வில் சில “புலன்பெயர்ந்ததுகள்” சொந்த அலுவலாய் ( காணிவாங்க, சீதன உறுதி முடிக்க, சொந்த-பந்த உறவுகளின் நன்மை தீமைகளுக்கு) இலங்கை போய்வந்து, தேசம் நெற்றில் கட்டுரை எழுதினால், இதுகள் யதார்த்த மார்க்கிசவாதிகளாம்! மற்றவர்கள் கீபோட்டாம்!  
அண்மையில் கொன்ஸ்ரன்ரைன் என்றொரு புலன்பெயர் “கீபோட் யதார்த்த மார்க்சிசவாதி” இலங்கை போய்வந்து,  தேசம்நெற்றில்,– “கீபோட் மார்க்சிசத்திற்கும் யதார்த்தத்திற்கும் உள்ள தூரம்” என்றொரு கட்டுரை எழுதியுள்ளது.

ஐயா, கொன்ஸ் அவர்களே! மற்றவர்கள் கீபோட் என்றால், நீங்கள் எழுத்தாணி கொண்டு, ஏட்டோலையில் எழுதுகின்றீர்களோ? உங்களின் தூர யதார்த்தப் பார்வையில், ஜெயபாலன் எந்த மார்க்சிஸவாதி? ஏடோ, கீயோ, மற்றதோ? இதை பின்னூட்ட வாசகர்களும் எல்லோ கேட்கின்றார்கள். தங்களின் கட்டுரையைப் பிரசுரித்ததில் ஜெயபாலனுக்கு, குட்டிநாய் குலைத்து தாய் நாய்க்கு கடி வாங்கி குடுத்த நிலை. உங்களில் சிலர் கண்ணாடி வீட்டிற்குள் நின்றுகொண்டு கல்லெறிகின்றீர்கள். உங்கள் வீட்டுக் கண்ணாடி இரும்பென்ற நினைப்பில்…

யதார்த்தக் கட்டுரைபற்றி….

;கொன்ஸ், தங்கள் கட்டுரைக்கும், யதார்த்தத்திற்கும், சிந்தனைக்கும் உள்ள தூரம், சூரிய மண்டலத்திற்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தை விட அதிகம். அவ்வளவு நீள்-அகல-சற்சதுரச் சிந்தனை!

தமிழ்மக்களின் யதார்த்த நிலைமைகளை பிரதிபலிக்க வேண்டுமாம்! 33சத விகித நிலப்பரப்பில் ஐந்து சத விகித தமிழ்மக்கள் வாழ்ந்துகொண்டு, இது எமது பாரம்பரிய பிரதேசம் என்று கதறியழுவது, யதார்த்தமற்ற முட்டாள்தனமான வரட்டு அரசியல். இதற்கு சாவுமணி அடிக்கவேண்டுமாம். இவருக்கு எதிலும் தூரக் கணிப்பீடுதான்! இவர் கணிப்பில் தமிழ் மக்களை “தூரம் குறைந்து வாழும் இனம்” எனலாம்!…….. இப்படிப் பல அலம்பல்கள். புலி முடிந்து விட்டது! புலிக்கு எதிராக “கீபோட்டில்” எழுதியவர்கள் நாட்டிற்கு போகலாம்! பெரிய வேலைத்திட்டமே இருக்காம்! புலிக்கு எதிராக எழுதியவன் போகலாம்! புலிக்கும் அரசிற்கும் எதிராக எழுதியவர்களின் பட்டியல் புலம்பெயர்வில் இருந்து விமான நிலையம் ஈறாக, நாலாம் மாடி வரை உள்ளது! இவர்களும் போகலாமோ? தற்போது இலங்கையில் மகிந்த கோத்தபாயா ஜனநாயகக்காலம் அல்லவோ?

தமிழ்மக்களின் அரசியலை, வடக்கின் வசந்த, மாபெரும் வேலைத்திட்டத்தையே  குத்தகைக்கு எடுத்த “ஆனானப்பட்ட” டக்கிளசே போதுமடா சாமி, என்னை விடுங்கள் ராஜினாமா செய்யப்போகின்றேன் என்ற வெறுத்த நிலையில், இவர் மகிந்த ஞானப்பால் குடித்துவிட்டு வந்து இங்கு தேவாரம் பாடுகின்றார்.

தாங்கள் குறிப்பிடும் வட-கிழக்கு மக்களின் அவல வாழ்வை, சிவில் நிர்வாகம் அற்ற தன்மையை அபிவிருத்தியற்ற போக்கை, இதை சீர் செய்வதற்கான பொருளாதார தட்டுப்பாட்டு சம்பந்தமான, தங்கள் ஆதங்கத்தை கேலி செய்து புறம் தள்ளவில்லை. புலம்பெயர் மக்களின் பங்களிப்புக்களை நிராகரிக்கவில்லை! இவையெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொரி போட்ட மாதிரி  இதற்கு அப்பால் அரசு செய்யவேண்டிய பலவற்றை பேரினவாத நோக்க்pல் இருந்து செய்ய மறுக்கின்றது. மகிந்த செல்லப்பிள்ளையான பிள்ளையானும் இதைத்தான் சொல்கின்றார்,  அவர் சொன்னால் யதார்த்தம். மற்றவர்கள் சொன்னால் கீபோட்டோ?

ஐயா யதார்த்தவாதிகளே தத்துவவாதிகளே! நீங்கள் எதையும் எதுகொண்டு எழுதினாலும் பரவாயில்லை! குழம்பாதீர்கள் மக்களைக் குழப்பாதீர்கள். இதுவே நீங்கள் மக்களுக்கு ஆற்றும் பெரும் தொண்டாகும்!

பொன்சேகா எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்?————அமெரிக்கா

சற்றுப் பொறுங்கள் சட்டமா அதிபரிடம்  கேட்டுள்ளார்கள்!, இலங்கைச் சட்டத்தின்படி முதலில் கைது அதன்பின்தான் மற்றவைகள்… இவையெல்லாம் உஙகளுக்கு ஏன் சொல்லவேணடும்!

வன்முறைக் கலாச்சாரம் தலைதூக்க இடமளியேன்.——-ஜனாதிபதி

தாங்கள் இருக்க பயமேன்! நீங்கள் முழுமுதற் கடவுள் அல்லவா! படைத்தலைத் தவிர காத்தல் அருளலுடன்  துஷ்ட-நிக்கிர சிஷ்ட பரிபாலனமும் அல்லவா செய்கின்றீர்கள்!

ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டுள்ள சுதந்திரம் என்னவென்று சொல்ல முடியுமா? — பதவி விலகவுள்ள ஊடகத்துறை அமைச்சர்

தங்கள் குடும்ப ஆட்சியைத் தவிர, மற்றப்படி சகலதையும் எழுதலாம் தானே! இதைவிட இனியென்ன சுதந்திரம் வேண்டும்!  -

பொன்சேகாவை ஐந்து வருடங்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும்!

நீங்கள் சொன்னால் அண்ணா செய்யாமலா விடுவார்! நீங்கள் அபூர்வ சகோதரர்கள் ஆச்சே!   

யாழ்-பல்கலைக்கழக மாணவர் இருவரின் தற்கொலை!

வட-கிழக்கைச் சேர்ந்த–யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், தாம் வாழ்வதில் பயன் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு, கிணற்றில் ஓன்றாக விழுந்து உயிரை மாய்த்துள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் இருவரும் காதலர்கள். மாணவன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர். மாணவி மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

இவ்விரு மாணவர்களும், வன்னியுத்தத்தில் பாதிக்கப்பட்டு, வவுனியா தடுப்பு முகாமில் இருந்து பல்கலைக்கழகம் வந்தவர்கள். மாணவன் அருந்ததிராய் இருகால்களும் பாதிக்கப்பட்டு, இயங்காத நிலையில் பல்கலைக்கழகம் வந்தவர். மாணவி திருவிழி முதலாம் வருட முகாமைத்துவ மாணவி.

இவ்விரு மாணவர்களின் தற்கொலைக்கான காரணம், மாணவன் அருந்ததிராயிற்கு கிடைக்கப்பெற்ற மருத்துவ அறிக்கையில், அவரின் கால்கள் மட்டுமல்ல,  அவரது இடுப்பிற்கு கீழான அனைத்துப் பகுதிகளும், இன்னும் சில மாதங்களில்  இயங்கமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளதே.
பேரினவாதப் போர்வெறியின் பிரதிபலிப்பு;, மனிதப்படுகொலைகளை மட்டுமல்ல, தப்பியவர்களையும் விட்டுவைக்கவில்லை! இப்பிஞ்சு உள்ளங்கள் எதிர்காலம் பற்றி எதைத்தான் கற்பனை செய்திருக்கும்! இது போதுமென்ற திருவிழியின் திடசங்கற்ப மன வைராக்கியத்தையும், ஏழை மனதையும் சுக்கு நூறாக்கியுள்ளது! அம்மாணவி துக்கத்தைப் பலமாக மாற்றவேண்டும்! மாற்றியே ஆகவேண்டும்! இதுதான் சமகால ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சமகால நிலையும்.

ஆயுதம் ஏந்தியோர் தேர்தலில் போட்டியிட முடியாது! –கருணா

புதிய ஏற்பாட்டின்படி கொலை செய்தவர்கள்தான் போட்டியிடலாம்!  உங்கள் கட்சியில் பலருக்கு அத்தகுதி உண்டல்லவோ? 
ஊருக்கு உபதேசம் அப்ப அது உங்களுக்கில்லைத்தானே!


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்