09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

வாக்குப் சீட்டை இனிப் பயன்படுத்துவதெப்படி

எவரிற்குப் போடுவதென்று குளம்பவேண்டாம்

எப்படிச் செல்லுபடியாக்குவதென்றும் குளப்பவேண்டாம்

எல்லாவற்றிற்குமான வழிதிறக்கிறது

நாங்களே வருகிறோம்...... உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளி

விழித்துப்பாருங்கள் விடியல் அருகிருக்கு...

 

இரத்தத் திலகமிட தேவையினியில்லை-எம்

இலட்சினையே செங்கொடிதான்

நம் உழைப்பை சொல்லும் சுத்தியலும் அரிவாளும்

பாசிசத்தை கொல்லும் படை நகர்த்த

வாக்குச்சீட்டே போரின் பின்னான புதுயுகம்

 

கார்ல்மாக்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்ராலின்

மாவோ கற்றுக்கொள்ள கால ஓட்டத்துடன் புதுவழி

வேளையிது – மாய்ப்பதற்கு

வீதியிறங்க விண்ணதிரும் கோசமெழுப்பி

 

சீறிவரும் கண்ணீர் புகைக்குண்டு

வேகமுடன் தண்ணீர் பாச்சும் டாங்கிகள் இனியில்லை

 

வீட்டில் இருங்கள் விரல்இடும் மை

வெளிச்சத்தின் வருகை - நாட்டை ஆளும்

மக்களே வாக்கை தாருங்கள்......

புதியஜனநாயகக்கட்சியின் புதுமந்திரம்.....

 

 யுத்தத்திற்குப் பின்னான இன்றைய சூழலில் புதிய-ஜனநாயக கட்சியின் அழைப்பு


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்