Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஈழத்திற்காக அங்கு தமிழ் மக்கள்படும் துன்பங்களுக்கு  வாய் பேச முடியாமல் தன் உயிரை பதிலாய் தந்தவர் முத்துக்குமார். அவர் இறந்து ஓராண்டு கடந்து விட்டது. அவரின் முதலாம் நினைவு தினத்திற்கு ஓட்டுப்பொறுக்கிகள் முதல் போலி இனவாதிகள் வரை எல்லோரும் தன் பங்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டனர்.
அவர்கள் முக்கியமாக ஒன்றை  செய்தார்கள் அதுதான்  அப்போதும் சரி இப்போதும் சரி செத்துப்போனமுத்துக்குமார் என்ன சொன்னார் என்பதை மட்டும் விட்டு விட்டு  மற்ற எல்லாவற்றையும்
 
 ஓட்டுப்பொறுக்கிகள் கடந்த தேர்தலில் இரு பிரிவாக நின்றார்கள் ஒருவர் ஈழமக்களின் துரோகி அணி மற்றொருவர் ஈழமக்களின் எதிரி அணியாக, இனவாதிகளும் ஈழ விடுதலைக்கு தன்னை மட்டுமே அத்தாரிட்டியாக இருந்தவர்களுக்கோ பாரிய சங்கடம். எந்தப்பக்கம் சாய்வது தேர்தலில்  முதுகு சொறிந்தே பழக்கப்பட்ட கைகள் தவித்துக்கொண்டிருந்த நேரமது.

பாசிசத்தால் மக்கள் தலைகளில் கொத்துகொத்தாய் குண்டுகள் இறங்கின. “ஆட்லெறி குண்டு” என்பதை தமிழ்ச்சமூகம் ஆயுசுக்கும் மறக்காதென்பதை அப்போர் நிரூபித்துக்காட்டியது. இந்துமாக்கடலில் ஈழத்தமிழரின்குருதி கலந்தபின்னும் அதன் நிறம் மாறவில்லை, மாறவும் விடவில்லை அத்தாரிட்டிகள்.


இந்திய தேசியத்துக்கு பூச்செண்டு கொடுத்தார்கள்.

“இந்திய ஆளும் வர்க்கம் போரை நடத்தவில்லை சோனியா தனக்கு துணை இல்லாத காரணத்தால் தான் இப்போரே, மலையாளிகள் மத்திய அரசை தவறாக வழி நடத்துகிறார்கள்” முடிந்த அளவுக்கு இந்திய ஆளும்வர்க்கத்தை எப்படியெல்லாம் அம்பலப்படுத்த முடியாதோ அதை மட்டும் செய்ய வேண்டும் அப்படித்தான் செய்தார்கள்.

 

தில்லியை ஏகாதிபத்தியமாக சொன்னவர்களெல்லாம், தனித்தமிழ் நாட்டை கேட்டவர்களெல்லாம் ஓடினார்கள் ஓடினார்கள் வேகமாக இந்தியத்தை தூக்கி நிறுத்துவதற்காக. ஏன் உன் எதிரிக்கு வாக்கு கேட்க போகிறாய்? இது ஏகாதிபத்தியம் தானே பின் எதற்கு  உனக்கு தேர்தல்? கேள்விகள் அந்தரத்தில் தொங்கின? பதில்கள்  வாய்க்குள் அடங்கின, ஆனால் செத்துவிட்டான் முத்துக்குமார். யார் அந்த முத்துக்குமார் பெரிய தமிழினவாதியா? இல்லை சிறுத்தைப்பட்டாளமா? //

// அண்டையில் பாதிக்கப்படும் மக்களின் குரல் கேட்டு தினம் தூங்காமல் தத்தளித்த ஒரு மனிதன், என்ன செய்வது தெரியாமல் ஏது செய்வது என புரியாமல் அல்ல புரிந்தே தெரிந்தே முடிவெடுத்தான், அவனுக்கு நிச்சயமாய்த் தெரியாது. அவன் சாம்பல் செயா வீட்டிற்கும் கருணா வீட்டிற்கும் பாத்திரம் கழுவத்தான் போகப்போகிறதென்று.


கதறினார் வைகோ , சீறினார் திருமா, கொந்தளித்தார்கள் போலி இனவாதிகள் ஆனால் எல்லோரும் ஒன்றாய்முத்துக்குமாரின் கொள்கைக்கும் கொள்ளி வைத்தார்கள். என் உடலை ஆயுதமாய் ஏந்துங்கள் என்றான்முத்துக்குமார். உடலை ஏந்தியதாய் சொன்னவர்கள் அந்த கொள்கையினை ஏந்த தயாராயில்லை. அங்கே ஒரு இனம் அழிக்கப்படுவதை தாங்கமாட்டாமல் செத்த முத்துக்குமாரை, மக்கள் இறப்பது தாங்க மாட்டாது செயாவுக்கு ஒட்டுபோட சொன்ன தங்களோடு ஒரே தராசில் நிறுத்த முடியவில்லை. 

 

 முத்துக்குமார் விரைவில் எரிக்கப்பட வேண்டியதற்கு ஆக வேண்டியதை எல்லாம் செய்தார்கள். சொற்பமானவர்களின் எழுச்சியை அற்பமானவர்களின் சதி வென்றது. தன் உடலை யாரிடம் ஒப்படைக்க்கோரினானோ அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது உடல், இடுகாட்டில்  கொள்கைகளோடு  அவனும் எரிக்கப்பட்டான்.

 

கருணாவின் வேட்டில் ஈழம் அடகு வைக்கப்பட்டது, மற்றவர்கள் தன் பங்குக்கு செயாவின் சுருக்குப்பையில் திணித்தார்கள் மீதி ஈழத்தை, பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட சொன்னவர் ஈழத்தை தேர்தல் முடிந்தவுடன் ரிலீஸ் செய்வதாக சொன்னார். ஈழமக்களுக்கு வாக்கரிசி போட்டபடியே வாக்குகள்கோரப்பட்டன.செயா ஈழத்தாயாக பரிணமித்தார்.

 
கோட்சே ஈழத்திற்கு குரல் கொடுத்தால் அவனுக்கும் ஆதரவு தருவேன் சீமான் சிங்கமாய் பிளிறினார்.கொளத்தூர்மணியோ செயா ஈழம் தந்தாலும் தராவிட்டாலும் இது கருணாவுக்கு தண்டனை என வாத்தியாரானார். மொத்தத்தில் எல்லோருமே வேசம் போட்டார்கள் வேசத்தோடு அழுதார்கள் வேசத்தோடு கதறினார்கள்.இனி தேர்தலில் ஓட்டின் தேவை முத்துக்குமாரால் நிரப்பப்பட்டது. தேர்தல் முடிவும் வந்து விட்டது.  ஒரு இனமும் சிதைக்கப்பட்டது. முடிந்து விட்டது ஓராண்டு.

வீரவணக்கங்கள்,அஞ்சலிகள் எல்லாம் வழக்கம் போல தொடர்ந்தன கூடவே வழக்கம் போல முத்துக்குமாரின் பிணத்தை ஆயுதமாக அல்லாது பிணமாக மட்டும் கண்டவர்கள் இப்போதும் உணர்ச்சி மிக்க பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை வாக்கு சீட்டிற்காக மடைமாற்றியவர்கள் எப்போது பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்போதும் எல்லோரும் முத்துக்குமாரின் பிணத்தை பேசுகிறார்களே ஒழிய //அவனின் விருப்பத்தை பேசினார்களா?


ஷோக்குகளும் ஷேக்குகளும்

முத்துக்குமாரின் மரணத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளைப்போலவே இப்போதும் கேள்விகள்கேட்கப்படுகின்றன. ”நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்கிறீர்களே? எதற்கு முத்துக்குமாரின் சாவுக்கு வந்தீர்கள்?சாவு வீட்டில் ஆள் பொறுக்க வந்த ஒரே கட்சி நீங்கள் தான், என்னவோ நீங்கள் மட்டும் தான்முத்துக்குமாரி-ன்சாவின் போது எல்லாம் செய்ததாக கூறிக்கொள்கிர்களோ,உங்களின் தேர்தல் புறக்கணிப்பு ஆளும் கங்கிரசுக்குத்தான் உறுதுணையாக இருந்தது.//


புலித்தலைமை பாசிசமாகத்தான் இருந்தது அதை இப்போதும் மறுக்கவில்லை,ஆனால் முத்துக்குமார் புலியாஎன்பதுதான் கேள்வி. முத்துக்குமாரைப்போல பலரும்  ஈழமக்களின் பிரதிநிதியாக புலிகளை மட்டுமே பார்க்கிறார்கள், அவர்களுக்கு உண்மையான புலிகளின் வரலாறோ அவர்களின் அராஜகப்போக்கோ தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை,  அந்த வாய்ப்பினை தனது வாயால் முடி மறைத்தவர்கள் தான் சென்ற தேர்தலில் செயாவுக்கு ஓட்டுகேட்டார்கள்.  போலி பெரியாரிய, இனவாதிகளைப்போல உள் இயக்க மற்றும் மாற்று இயக்க படுகொலைகளை முத்துக்குமாரோ அல்லது ஏனையை ஈழ ஆதரவு உழைக்கும் மக்களோ ஆதரித்தார்களா என்ன?//

 

முத்துக்குமாருக்கு விசுவாசமாய் இருப்பதாக நீங்கள் கூறிக்கொள்ளலாம் ஆனால் அவனின் கொள்கைகளை, விருப்பத்தை கூட இருந்தே குழிபறிப்பீர்கள் என அவன் கண்டிப்பாய் நம்பி இருக்கமாட்டான். என் பிணத்தைபோராடும் மாணவர்களிடம் கொடுங்கள் என்றவனின் பிணத்தை மாணவர்களை தாக்கி விட்டு தூக்கி சென்ற அவலத்தை எந்த மேடையில் நீங்கள் பேசினீர்கள்? 
 
திருமாவின் அயோக்கியத்தனத்தை புரட்சிகர அமைப்புக்களைத்தவிர யார் பேசுகிறார்கள்? உங்களை பேச விடாமல் ம க  இ க தான் தடுத்ததா? தடுத்தது புரட்சிகர அமைப்புக்கள் அல்ல, உங்கள் கையாலாகாதத்தனம் தவிர வேறேது இருக்கமுடியும்?

நாங்கள் ஆள் பொறுக்கத்தான் போனோம்இதில் மாற்றுக்கருத்து இல்லை, முத்துக்குமார் சொன்னான்  “என்உடலை ஆயுதமாக்குங்கள்”  அதற்குத்தான் ஆள் பொறுக்கப்போனோம், மக்களைத்திரட்ட எங்களால் ஆன ஏதோ சில விசயங்களை முடிந்தவரை செய்தோம் எங்களுக்குஉங்களைப்போல போயஸ் தோட்டத்தில்புரட்சியாளர்களைப் பொறுக்கும் அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை.

எங்கேயும் புரட்சிகர அமைப்புக்கள் மட்டும்தான் செய்தோம் என்று சொல்லவும் இல்லை எழுதவும் இல்லை, ஆனால் ஒன்றை மறக்காது மக்களிடையே சொன்னோம், சொல்வோம், சொல்லிக்கொண்டே இருப்போம் உங்களின் கையாலாகத்தனம்தான்  அதுதான் துரோகத்தனத்திற்கு முதுகு சொறிந்தது என்று.
 
வினவில் வந்தகட்டுரையைஅடுத்து ஒரு முசுலீம் ஷேக் தனது தளத்தில் எழுதிவருகிறார். அதில் அவரது
நோக்கமே  “தொடர்ந்து சில காலமாய் முற்போக்கு வேடமிட்டு எல்லா கருத்துக்களையும் எதிர் கொண்டு அதற்கான தகுந்த எதிர்வினை ஆற்றுவோம் என்று பொய் வேடமிட்டு திரிந்து கொண்டிருந்த மாவோயிஸ்டு மரமண்டைகளின் இணையதளமான “வினவு” தன்னுடைய முற்போக்கு வேடத்தை கலைக்க வேண்டிய காலம் கனிந்து விட்டதென்றே எண்ணுகின்றேன்”. //
 
 
அவரின் கேள்விகள்
 
“தியாகம்” செய்ய முத்துக் குமார் போன்ற அப்பாவிகள் வேண்டும். ம.க.இ.க வினர்கள் மறந்தும் கூட இந்த மாதிரியான தியாகத்தை செய்து விட மாட்டார்கள். எப்படி முத்துக் குமார் என்ற அப்பாவியின் மரணத்தில் திருமா ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் அரசியல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத பிழைப்புவாத அரசியல் தான் ம.க.இ. க வின் அரசியலும். இதை மறுத்தால் மருதையன் தலைமையில் ஒட்டுமொத்தமாக ம.க.இ.க வினர்களும் எப்போது முத்துக் குமார் மாதிரி தியாகம் செய்ய போகின்றீர்கள் என்பதை இந்த தளம் மூலமாக சொல்லுங்கள். தியாகம் அப்பாவிகள் மட்டும் செய்யக் கூடியதாக இருக்க கூடாது. ம.க.இ.க. வினர்கள் போன்ற பெறும் பெறும் அறிவாளிகளும் செய்ய வேண்டும்……………….இப்படியாகி விட்டன.

//
புரட்சிகர அமைப்புக்கள் எந்த இடத்திலும் தற்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் அத்தற்கொலை எதனால் நிகழ்ந்தது என்பதை ஆராய்வதைத்தான் தடுக்க ஷேக்குக்கோ அல்லா இருக்கிறார், நமக்கு அறிவு இருக்கிறது. மக்களின் பாதிப்பைக்கண்டு மனம் பொறுக்காது, என்னை வைத்து அரசியல் செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு.

 

செத்தப்போனவனின் அறிவு குறைவுதான் ஷேக்கைபோல, அவரின் நண்பர்கள் போலவும் இருக்காது.அந்த தியாகத்தை மதிக்க வேண்டிய இருக்கிறதா இல்லையா? அந்தப்போராட்டத்தை மக்கள்போராட்டமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறதா இல்லையா?

// அன்புள்ள ஷேக், உங்களுக்கு எல்லாம் வல்ல பேரருளாளன் அறிவு,செல்வம், வசதி, எல்லாவற்றையும் கொடுத்திருக்கலாம் ஆனால் தன் மானத்தை கொடுத்தாரா?

 

போராட்டக்குணத்தை கொடுத்தாரா? ஆனால் எங்களுக்கு செல்வத்தை கொடுக்காத  “கடவுள்”  தன்மானத்தை கொடுத்துவிட்டான் என்ன செய்வது. எங்கும் போராட்டம் வன்முறையின்றிதான் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம்தான். ஆனால் ஆளும் வர்க்கம், அதிகாரம் எங்கள் “மர”மண்டையை பிளக்கும் போது குர்ரானையோ, பைபிளையோ, கீதையையோபடிக்கும் அளவுக்கு எங்களுக்கு பொறுமை இல்லை. அது அவசியமும் இல்லை. உங்களுடைய பொறுமை அது ஆளும் வர்க்கத்தின்  நல்ல மண்டையில் உதித்தது. 

 

எல்லாவற்றுக்கும் இறைவன்தான் காரணமென்று உழைக்கும் மக்களால் இருக்க முடியாது, கடவுள் இருக்கிறான் என்றாலும் அவன் தானாய் உணவு தரமாட்டான் என்றுதான் உழைப்பில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இறைவன் தான்இதை செய்தான் என்று தெரிந்தும் யாராவது பாதிக்கப்படும் போது கண்ணீர் விடுகிறார்கள்.

முத்துக்குமாரை படைத்த அல்லா அவனை ஏன் தற்கொலை செய்து கொண்டு சாகவைத்தான்? அவனின் தற்கொலைக்கு காரணமாக ஏன் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தான்? கடவுள் முக்கியமாக உங்கள் அல்லா இருப்பது உண்மை எனில் உலகமக்களை கொன்று குவித்த அவன்தான் முதல் குற்றவாளி. இதனால் தான் உங்கள் அல்லா மட்டும் அல்லது இந்து, கிறித்துவமத சாமிகளைக்கூட தூக்கியெறிய சொல்கிறோம்.
 
ஷேக் உங்களிடம் ஒரே ஒரு சின்ன கேள்வி அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் இப்படி ஏறுகிறதே உங்கள்அல்லா ஏதாவது ஸ்பெஷலாக உங்களுக்கு படி அளக்கிறாரா? அரிசி பதுக்கலுக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் உங்கள் அல்லாதான் காரணமெனில் அவனை கட்டி வைத்து அடிப்பது என்ன தவறு?  நாங்களோ அதற்கும் அல்லாவுக்கும் ஏனைய சாமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறோம்.
 
ஒரு வர்க்கத்தின் தேவைக்காக இன்னொரு வர்க்கம் கசக்கிபிழியப்படுகிறது என்கிறோம்.உங்கள் அல்லாவை நீங்களே இப்படி குற்றவாளி ஆக்கிவிட்டு  நாங்கள் நிந்திப்பதாக கூறுவது சரியா?

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்  புரட்சிகர அமைப்புக்களின் புரட்சி  சூடு சொரணையுள்ள உழைக்கும்மக்களுக்கானதுதான். உங்களைப்போன்ற அறிவாளிகளுக்கில்லை. உங்களைப்போல் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் எல்லாவற்றையும் மறந்து உங்களை ஆதரிக்கிறோம் மாநாட்டில் உங்களைப்போல் மாறிமாறி  மண்டியிட்டு //நாயாய் (குறிப்பு கீழே)இருக்க உழைக்கும் மக்களுக்குத் தெரியாது /அவசியமும் கிடையாது.

( நாங்கள் எல்லாம் வல்ல பேரருளாளன் கருணையால் உங்களால்பொறுக்கிகள்என  விளிக்கப்படும் போது, எங்களதுகம்யூனிச பூதத்தின்எல்லாம் வல்ல அருளால் நீங்கள் நாய்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள் )

//