10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

பறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்றப்படுகிறது

எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள்

அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள்

குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும்

வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்…..

மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்

தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று………

.

இடித்துநொருக்கப்பட்ட நினைவுத் துயிலறைகளில்

எழுப்பப்பட்ட இராணுவமுகாக்களில் கொடிகள் கறுத்துப்போய்

பறக்கும் சாம்பல் மூட எடுத்துதறி ஏற்றப்படுகிறது


உழைப்பவன் பாடலும் கதிர்தள்ளிக் கலகலக்கும் நெற்கதிரும்

விழைந்து திழைத்தநிலம்  - ஏக்கத்துள்

இரைகின்ற இராணுவ தொடரணிகள் – படைபெருக்கி

பசும்தரைகள் காக்கிசட்டைகளால் நிரப்பிய படியே

மனித உரிமைக்காய் செங்கொடிகள் உயர்கிறதாவென

பறக்கும் கொடியில் சிங்கம் பாயத்தயாராகவே இருக்கிறது


நாளைப்பொழுதும் நயவஞ்சகத்து நகர்வாய்

வேளையிதுவாய் – வெற்றுறுதி தேசப்பற்றாய் காலைவருடும்…

கறுப்புக்கொடி உயர்த்தி மதிலெலாம் எதிர்த்தெழுதி

சுதந்திரத்தார் கேட்டைசொன்னவரோ – மகிந்தரின் கோட்டைக்குள்

சிங்கக்கொடியுயர்த்தி ஆனந்த சுதந்திரம் அடைந்தனர் போ….


மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்

தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று……….கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்