10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

அன்னம் இனிச்சிதறுண்டு வெற்றிலையில் அமரும்……

எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்
தளபதியும் சேனைகளும்  களம்மாறும் தேர்தலிற்காய்
படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்
தேர்தல் களமாட– கூட்டமைப்பு வீறுகொண்டு
இனமான உணர்வுகொள்ளும் …..

விரல்நுனியில் மைகாட்டி வட்டுக்கோட்டை.—புலத்து
வீரமறவர்  நாடுகடந்து வென்றெடுப்பர்
தரைவிரிக்க பாயில்லை தறப்பாழுமில்லை—மீள்
குடியமர்வு வெறும்தரையில் வாக்காய் நிறைக்க
அன்னமினி சிதறுண்டு வெற்றிலையில் அமருமோ யாரறிவார்;;;….

நாடாளும்  கோத்தபாய நாட்டாண்மை
கொடிகட்டிப் பறக்குது பார்–பாசிசமாய்
பாராளும் அதிபதிகள் வாய்மூட கர்சிக்கும் -மமதை 
ஜநாவின் இருப்பையே யாருக்காய் –அருகிருப்பாய் என்கிறது
ஊரோடு அழிக்கையில் ஊமையானாய்-உடனிருந்து
சரண்புகுந்தோர் உயிரெடுத்த—கோழையொடு சரணானாய்..

பிரபா மரணஉயில் பெற்றாய்–கொதியடங்க
எண்ணையில்லை தோண்ட –மக்கள்
எரியுண்ட சாம்பலிலே பண்ணை அமையுங்கள்–ஆசிய
பேட்டை ரவுடிகள் கொட்டமடிக்க—ராஜபக்ச குடும்பம்
மக்கள் எலும்பையும் உருக்கித்தரும் வறுகிப்போங்கள்..

பாவம் மக்கள் பயபீதியொடு காலம் -பறித்தெடுத்த
பிள்ளைகளின் நினைவோடு உருக்குலைந்து
இளமையிலே கிழமாக போர் தின்று போட்டிருக்கு
கொடுமையிலும் கொடுமை –தம் கோலோச்ச தலமைகள்
இனவாதம் ஏற்றி இருப்பை தக்கவைத்து
தடுமாறும் இனங்கள்–பகைவிலக்க விலங்கிட்டார்
அறுதிப் பெரும்பான்மைக்கு அடித்தது யோகம்
இனவாதத் தீயில் குளிர்காயும் எல்லோருக்கும் தான்….

‘காத்திருப்போம் –கருத்துரைப்போம்
 இன இணைவு எழுட்சி கொள்ள வழிசமைப்போம்’


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்