ஓ கெயிட்டியே!…..

இவ்வருடத்திலாவது எம்மை நிம்மதியாக மனிதனாக வாழவிடு என புத்தாண்டை வேண்டுவோம். ஆனால் இப்புத்தாண்டு பிறந்ததிலிருந்து அரைமாதக் கலன்டர் கடதாசியைக் கூட கிழிப்பதற்கிடையில் இயற்கையின் சீற்றம் கெயிட்டியை  (ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்களையும் பல பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கட்டிடங்களையும்) காவு கொண்டுள்ளது. நான்கு லட்சம் மக்களை காயப்படுத்தியுள்ளது.

இவ்வுலகின் அதிகாரத திமிர் கொண்ட ஆளும் சுரண்டும் வர்க்கம் எம்பூமியின் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி இயற்கையை அழிப்பது ஒருபுறம். பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அதை போர்களாக்கி உலக மக்களை அழிப்பது இன்னொருபுறம். இயற்கை சீற்றம் கொண்டு மழையாய், வெள்ளப்; பெருக்காய், பெருங் காற்றாய்,  சூறாவளியாய், நிலநடுககமாய், சுனாமியாய், தொற்று நோய்களாய் எம்மானிடத்தை அழிப்பது  மற்றொர்புறம். இவவுலகின் மக்கள் அதிகாரச் செருக்கு, இயற்கைச் சீற்றததிற்கும் ஏதிராகப் போராடுகின்றார்கள். போராடியே தீரவும் வேணடு;ம். மனிதகுலத்தின் வரலாறு அதிகாரத்திற்கும் – இயற்கைக்கும் எதிரான போராட்டமே. இன்றைய இவ்வுலகம் பற்பல லட்சம் வருடங்களாக மக்களின் போராட்டத் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டதே! அண்மையில் அமெரிக்கா கெயிட்டியை ஆக்கிரமித்த போது, அந்த  மக்கள் சிந்திய இரத்தம் இன்னும் காயவில்லை, அதற்குள் இயற்கை அந்த மக்களை கொன்று குவித்துவிட்டது. கெய்ட்டி மக்களின் தியாகளுக்கும், மரணங்களுக்கும் தலைசாய்ப்போம்.

சத்தியவான்களின் குற்றச்சாட்டுக்கள்

சரத் பொன்சேகாவிற்கு  ஆதரவு வழங்குமாறு தமது நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் முஸம் மிலலுக்கு மூன்று கோடி ருபா லஞ்சம் கொடுத்து விலை பேசப்பட்டதாம். அதில் முப்பது லட்சம் வெள்ளவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கையளிக்கப்பட்டது. இதற்கு ரணில் விக்கிரமசிஙகா, தவிசாளர் சமரவிக்கிரம பாராளுமன்ற உறுப்பினர்,  ரவி கருணநாயக்கா ஆகியோர் தரகர்களாக செயற்பட்டார்கள் என்று குற்றம்சாட்டுகின்றார் ஜே.வி.ரியில் இருந்து மகிந்தாவின் பணத்துக்காக ஓடிப்போன விமல் வீரவன்ச என்ற இனவாதி.

மறுபக்கத்தில் மகிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ச – கே.பி. கைது செய்யப்பட்டபின் அவரின் பொறுப்புக்களை வகிக்கும் எமில் காந்தனுடன் நெருங்கிய பண உறவாம். இதன் விளைவு கோடிக் கணககில், நாமல் ராஜபக்சவின்  இளைஞருக்கான நாளை என்ற அமைப்பிற்குள் புளங்கப்படுகினறதாம். இந் நிதி தந்தையாரின் தேர்தல் செலவிற்கும் சென்றுளளதாம் என்கின்றது பொன்சேகா கூட்டணி.

மகிந்தா-பொன்சேகா இருவரும் கொலை கொள்ளை ஊழலில் ஈடுபடுவது என்பது, ஒரு நாணயத்தின் இருபக்கங்களே. இரு கூட்டணியும் தங்கள் “நாணயத்தின்” ஓர் பக்கதததையே காட்டுகின்றனர். அதுசரி விமல்வீரவன்சாவின் பாராளுமன்ற உறுப்பினர், ஜே.வி.பிக்கு எதிராக மகிந்தாவின் பின் வென்ற போது பெற்ற பணத்தை என்னவென்பது? இதன் கதிதான் என்ன?

மனித உரிமைகளுக்காகப் போராடிய மகிந்தாவை ஆதரிக்கவேண்டும் – ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

என்னே விதந்துரைப்பு! அவ அண்டங்காக்காவை குயில் என்பர், கசாப்புக் கடைக்காரனை ஜீவகாருண்ணியவாதி என்பர். இவவைப் போன்ற வகையாறுகளின் அரசியல் சாபக்கேட்டிற்கு என்றும் விமோசனமே கிடையாது!

மகிந்தாவிற்கு பச்சைக்கொடி காட்டும் பான்கீ மூன்

கடந்தவாரச் செய்திகளைப் பார்த்து ஐ.நா சபை செயலாளர் பான் கீ முன் முளை பிசாகிவிட்டதோ? என்று எண்ணவைத்தது. ஆனால் தற்போதைய நிலவரத்தின்படி, அவர் அப்படியில்லை என்பதை நிருபித்துவிட்டார்.

“சனல ; 4ல்” தமிழ் இளைஞர்களை கொலைகள் செய்த காட்சிகள் உண்மையானது என மூவர் கொண்ட நிபுணர்குழு நிருபித்துள்ளது. இச்செய்தி வந்த உடனேயே ஐ.நா.சபை செயலாளர் இலங்கையின் குற்றச்செயலை விசாரிக்க தானும் ஓர் குழுவை நியமிப்பதாக அறிவித்தார். தற்போது சனல் 4-ன் உண்மைகள் நிபுணர்களின் தனிப்பட்ட சொந்தக் கருத்தென எல்லோருக்கும் காதில் பூ வைக்கின்றார்.

சனல் 4-ன் விவகாரத்தில் தற்போது நடந்துள்ளது என்ன? இலங்கையில் தற்போது தேர்தல் காலம். மகிந்தா –  பொன்சேகா இருவரும் சமநிலையில் உள்ளனர். சனல் 4-சம்பந்தமான உண்மைநிலை அறிக்கையும், பான்கீ முனின் கடந்தவார அறிவிப்பும், மகிந்தாவின் தேர்தல் வெற்றிக்குப் பாதகமானதே.

இதை எப்படி தக்கவைப்பது என்பதில், இலங்கை – இந்திய அசுகளுக்கு பெரும் தலையிடியே. இதற்கு மண்டையைப் போட்டுடைத்து, ஓர் சிறந்த முடிவிற்கு வந்தனர். முடிவு விஐய் நம்பியார் மூலம் காய் நகர்த்துவது என்பதே.

இந்தியாவிற்கு மகிந்தாவின் தோல்வி என்பது சர்வதேச ரீதியில் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் உருவாக்கும். இதற்காக விஜய் நம்பியாரை பான்கீ மூனுக்கு தூதனுப்பியபின் கைங்கரியததாலேயே, அவரை இப்படிச் சொல்ல வைததுள்ளது.

தேர்தல் முடிய பான்கீ முன் திரும்பவும் “இவ்வுடலை” (சனல்4) கொண்டு முருங்கை மரத்தில் ஏறினாலும் யாரும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். இந்தியாவிற்கு “வீட்டோ அதிகாரம்” இல்லைத்தான். ஆனால மற்றைய வீட்டோக்காரர்களை விட பலவற்றை இந்தியா ஐ.நா. சபையில் தன் நாட்டை வித்து சாதிக்கின்றது.

திஸநாயகததிற்கும் விடுதலை

புலிகளுக்கு நிதி சேகரிததார் எனற குற்றசசாட்டின் பேரில் பத்திரிகையாளர் திஸநாயகம் கைது செய்யப்பட்டார். இக் குற்றச்சாட்டின் பேரில் 2009 ஆகஸ்ட் 31-ந் திகதி அவருக்கு 20 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்தீர்பபிற்கு எதிராக திஸநாயகம் அவர்களால் மேன் முறையீடு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் குற்றச்சாட்டும் தண்டனையும் நிலுவையில் இருக்கக்கூடியதாக வெறும் 50000 ருபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இப்போது தேர்தலகாலம் இன்னும் ஓர் வாரத்திற்கு நம்பமுடியாத – அதிசயிக்கத்தக்க பல சம்பவங்களும் நிகழ்சிகளும் நடைபெறும். ஓர் தமிழ்த் திரைப்படத்தில் அதன் கதாநாயகன் “ஒருநாள் முதல்வராக” நடித்து பல திறில்களைச் செய்தார். அதேபோல் மகிந்தாவும் “ஒருவார ஐனநாயக முதல்வராக” மாறி திறில்கள் பலவற்றை செய்து வருகின்றார்.

தற்காலத்தை ஐனநாயகத்தை இலங்கையின் “பொற்காலமும்” எனலாம். இப்பொற்காலத்திலேயே திஸநாயகம் அவர்களின் விடுதலையும் பாராளுமனற உறுப்பினர் கனகரததினம் அவர்களின் விடுதலையும், பிரபாகரனின் தாயார் இந்தியா செல்லும் அனுமதியும் கிடைத்திருக்கின்றன.

இதில் முககிய விடயம் என்னவெனில் விடுதலை செய்யப்பட்ட இருவரின் குற்றமும் – தண்டனையும் நிபந்தனையுடன் நிலுவையிலேயே உள்ளது. தேர்தல் “பொற்காலம்” முடிய, கிடப்பில் உள்ளவைகளை தூசு தடடி எடுககப்படலாம் – தண்டனைகளும் புத்துயிர் பெறலாம்.

நல்லூர் மாநாட்டு தீர்மானத்தில் இருந்து சிலவரிகள்……

மாறி மாறி வந்த அரசுகள் தங்களின் தேர்தல் விஞ்ஞானங்களில் தமிழ்மக்களின்; நியாயபூர்வமான கோரிக்கைகள் பற்றி பிரஸதாபித்தது மட்டுமின்றி, தமிழ்த்தரப்புடன் ஒப்பந்தங்களையும் செய்து கொண்டாலும், இவையாவும் செயல்வடிவம் பெறவில்லை.

எதிரணியினர் சொல்வது போன்ற “சரத்-கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தம்” செயல் வடிவம் பெற்றிடுமோ?

இறுதிக் கட்டப ;போரில் 27,000 பேரை இழந்தோம்;;… மகிந்தாவின் செல்லத் தம்பியும் கொலைகாரணும்

இறுதிககட்டப் போரில் 27,000 ராணுவத்தினரை இழந்து பயங்கரவாதத்தை இல்லாதாக்கினோம். ஆனால் இதை இன்னும் ஊக்குவிக்கின்ற சக்திகள் இருக்கவே செயகின்றன. இச்சக்திகள் இன்னொரு ஈழப்போருககு வழி சமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கினறன. – மகிந்தா

அமெரிக்காவின் ஒபாமா முதல் பிரிட்டன் இந்தியா பாகிஸ்தான் ஈறாக இலங்கையின் மகிந்தா வரை ஐயோ பயங்கரவாதம் பயங்கரவாதம் என கத்துகின்றார்கள். அவற்றிக்கான காரண காரியஙகள் எதுவென்று தெரிந்தும், இவர்கள் அதை தீர்க்க முனைவதில்லை. இதைச் செய்யாதவரை அது (பயங்கரவாதம்) இருந்தே தீரும். பயங்கரவாதம் இலலாவிட்டால், இவர்களின் அரசியல் இருப்பும் இ;லாது போய்விடுமே.

இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் பொன்சேகாரவை ஆதரிக்கமாட்ட்டான்—சிவாஜிலிங்கம்

அப்போ உங்கள் அகராதியில்; மகிந்தாவை ஆதரிப்பவர்கள் இனபற்றளார்கள், மானஸ்தர்கள்!? தாங்களும் மகிந்தாவின் தொண்டர் அடிபபொடி ஆழ்வார் என்பதை, ஊருக்கு ஒருக்க பகிரங்கப்படுத்தியுள்ளீர்கள்.

எதிர்காலத்தில் போராட்டமாம்?

எதர்காலததில் அரசியல்தீர்;வு காணப்படாத பட்சத்தில், மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் – தமிழரசுக்கடசியின் கூட்டத்தில் சம்பந்தன்

தங்களின் 60-வருடகால் போராட்டஙகளால் தமிழமக்கள் போராடும் சக்தியை இழந்து அரசியல் அநாதையாகியுள்ளனர். ஓர் ராஜியத்தையே நடாத்தியவர்கள், வட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு நந்திக்கரைக்கு ஊடாகவே போய்விட்டார். இதற்குள் நீஙகளும் உஙகள் போராட்டமும்.

http://www.psminaiyam.com/?p=904