நான் சொன்னது தவறு தான்
சரியென்று சொல்லவில்லை
என் வார்த்தைகள் தடுமாறின
என்னவென்று உன்னைச்சொல்ல
எல்லாவற்றையும்
ஆடைகளைந்து அம்மணமாய்
நீ பாலியல் வன்புணர்ச்சி
செய்து கொண்டிருக்கும் போது
என்னவென்று உன்னைச்சொல்ல
எல்லோரின் உறுப்புக்களையும்
ஆராய்ச்சி செய்யும் உனக்கு
என்னதான் தேவை?
எனக்கு ஒன்றும் புரியவில்லை
இந்த ஆராய்ச்சியை மருத்துவத்தில்
செய்திருந்தால் பல பட்டங்கள் வாங்கியிருக்கலாமே?
நாங்கள் செய்த “பாவம்”
உன்னுடைய சமூக மருத்துவ கோலம்
விமர்சனங்கள் வந்தன
நான் என்ன செய்வேன் தோழரைப்போல்
நான் இலக்கியவாதியா என்ன?
என்னால் முடியவில்லை
திட்டினேன்
மக்களின் மொழியில்
அது சரியென்று சொல்லவில்லை
உணர்ச்சிகள் மேலோங்கும் போது
அறிவு கரைந்து விடுகிறது
கரைந்து போன அறிவினை
மீட்டுக்கொண்டேன்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
உனக்குத்தெரியுமா
காலைமுதல் மாலை வரை
ஓடாய் உழைத்து கருத்துப்போன
எங்கள் பெண் பாட்டாளியின்
வியர்வை கரிக்குமென்று
கண்டிப்பாய் வாய்ப்பில்லை
உன் வாய்கள் எதையோ சுவைத்து
அச்சுவைதனை
உலகிற்கு முரசரைந்து கட்டியம் கூறலாம்
வறண்டு போன விவசாயத்தை
இற்றுப்போன ஆடைகளை
ஒடுங்கிப்போன ஆலைகளை
உன் உணர்ச்சிகள் தருமா?
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்களின்
உரிமைகளை
அம்மணமாய் பாடையில் ஏற்று
உழைக்கும் மக்களின் உறுப்புக்களை
ஆராய்ச்சி செய் – கூடவே அவர்களுக்காக
உழைத்தவர்களையும்
எல்லாவற்றையும்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
உன் அம்மணப்பேனாவுக்கு
நோபல் பரிசுகூட கிடைக்கலாம்
விவசாயம் நொடிந்து
விசம் குடித்து
செத்த பிணங்கள் அம்மணமாய்
பிணவறையில்
பளபளக்கும் ஆடையோடு
விரைந்து செல்
நிர்வாணக்கவிதைகள் எழுது
ரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள்
உன்னால் நிர்வாணமாக்கப்படாதவர்கள்
1.லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
http://kalagam.wordpress.com/2010/01/14/ஆடைகள்-எழுதும்-நிர்வாணக்/