05182022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

உடனே வழக்கம் போல் ஆரம்பித்து விட்டார்கள், அறிவு ஜீவிகள். தனிப்பட்ட வாழ்க்கை செய்திகளை வம்புக்கிழுத்தது ஏன் என்கிறார்கள்.

உங்கள் சிந்தனைகள் வித்தியாசமாக உள்ளது. எவை குறித்தும் உங்களால் எப்படி பேச முடிகிறது தோழி? பொதுவாக பெண்ணுரிமை பேசும் பெண்களைக் கண்டால் எனக்கு எரிச்சலாகவே இருந்தது. நண்பர் உங்கள் தளத்தை பார்க்கும்படி சொன்னார்.

 

 

 

உண்மையில் உங்களின் நேர்மையான விமர்சனங்கள் கண்டு அதிர்ந்துதான் போனேன். இப்படியும் பேசுவார்களா என்று? முதலில் உங்களுடைய துணிச்சலுக்கு ஒரு சபாஷ். பெண்ணுரிமை பேசும் பெண்களுக்கு ஏன் ஆண்களைக் கண்டால் அப்படியொரு வெறுப்பு தோழி? சமீபத்தில் லீனா கவிதையை குறித்த சர்ச்சையை இணையத்தளத்தில் பார்த்திருப்பீர்கள். அவரின் கவிதை குறித்து உங்கள் கருத்து என்ன? இவர் கவிதைக்கு வினவு தளம் சரியான விமர்சனம் வைத்திருப்பதாக நான் கருதுகிறேன். இவை குறித்தும் தாங்கள் கட்டுரை எழுதவேண்டுகிறேன்.

http://www.vinavu.com/2010/01/06/leena/
http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/01/blog-post.html

அன்புடன்
குமரன்.

~~~~

கருத்துக்கும், விமர்சனத்திற்கும் வேறுபாடு இருக்கிறது குமரன். லீனா அவர் தளத்தில் எது வேண்டுமானாலும் எழுதலாம். அது அவர் உரிமையுங்கூட. அவர் இதைத்தான் இப்படித்தான் எழுதவேண்டும் என்று தீர்மாணிக்க நாம் யார்? விருப்பம் இருப்பவர்கள் படித்துக் கொள்ளட்டும். விருப்பம் இல்லாதவர்கள் ஒதுங்கிக் கொள்ளட்டும். இதில் கருத்து சொல்வதற்கு என்ன இருக்கிறது? 

ஆனால், பெண்ணியம் சார்ந்து சிந்திக்கும் போது அவரின் கவிதை வரிகள் இலக்கியமாகும் போது, அவை குறித்து எதிர்விணை செய்யும்போது, அது விமர்சனமாகலாம். அப்படித்தான் வினவு தளம் விமர்சனம் வைத்திருக்கிறது.

லீனா பாஷையில் சொல்வதென்றால், எல்லா ´ஆண்குறி´யுமா மம்மு குடித்துக் கொண்டிருக்கும்? 

மம்மு குடிப்பதற்கு கூட்டுப்புணர்ச்சி ஆண்குறிகளுக்கும், இருபால் புணர்ச்சி குறிகளுக்கும் கிலுகிலுப்பு வரலாம். கொள்கை, புரட்சி பேசும் ´ஆண்குறி´களுக்கு கிலுகிலுப்பு வராது. எழுச்சிதான் வரும். யோனி கொழுப்புக்குள் புகுந்து கொண்டு மம்மு குடிக்கவா ஆயாசப்படும்? அல்லது ´நீ புடுங்கி போடு மயிரை´ என்று மல்லாந்துக் கொண்டு புணருமா? அல்லது லீனா சொல்வது போல், "அவரது தொடைகள் எப்பொழுதும் பரப்பியே வைத்திருக்கும் பணியைக் கண்டு, 

"ஆகா என்னே புரட்சி நடக்குது புது யுக யோனிக்குள்" என்று புரட்சி அறிக்கை வாசிப்பார்களா?  

வினவு என்ற ´ஆண்குறி´க்கு மிகத் துணிச்சல்´தான். 

"ஆண் குறியின் வெறியைக் காரித்துப்பும் லீனாவை நோக்கி, "ஏன் டைரக்டர் பாரதிராஜாவுக்கும், சேரனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஆண்குறி இல்லையா? என்கிறது...

உடனே வழக்கம் போல் ஆரம்பித்து விட்டார்கள், அறிவு ஜீவிகள். தனிப்பட்ட வாழ்க்கை செய்திகளை வம்புக்கிழுத்தது ஏன் என்கிறார்கள்.

ஆந்திர கவர்னரான 83-வயது தாத்தா கட்டிலில் 3-இளம் பெண்களுடன் சல்லாபம் செய்ததை வீடியோவில் அம்பலப்படுத்திய போது, தன் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு போனாரே! அப்போது இதே கேள்வியை இந்த அறிவு ஜீவிகள் ஏன் கேட்கவில்லை?   

இந்த ´ஆண்குறி´களை நினைக்கும் போது பெரியார் சொன்னவை தான் நினைவுக்கு வருகிறது. 

"பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும், எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது." -[பெரியார், 24.05.1958]

இன்று பெண் உடல் அரசியல் குறித்த தெளிவான விவாதங்கள் இல்லை. யோனிக் கட்டுடைப்பு மட்டுமே பெண்ணியமாகவும் ஆண்குறிகளை எதிர்ப்பதே தங்கள் புரட்சியாகவும் நினைத்துக் கொண்டு அதே ´ஆண்குறி´யிஅடைக்கலமாகிறது பெண்ணியம். 

வினவு கட்டுரை நன்றாக அலசி ஆராயப்பட்டவை. ஆனால் அதில் ஆணாதிக்கமும், கிசு கிசு பாணியிலும் இருப்பதாக சில பின்னூட்டங்கள் புலம்புகின்றன. அவர்களுக்கு சங்கதி தெரியாத வரை அவை கிசுகிசுக்கள் தான். எங்களைப் போன்ற செய்தி தெரிந்தவர்களுக்கு அது உண்மைச் செய்தி. அதைத்தான் வினவு என்ற ´ஆண்குறி´ செய்திருக்கிறது. 

ஆனால் லீனா வினவு தளத்தை மஞ்சள் பத்திரிகைகளுக்கு இணையாக சொல்கிறார். அனைத்தும் கிசுகிசு என்று மழுப்புகிறார். தினதந்தியும், தினமலரும் பொய் செய்தி போட்டன என்கிறார். தற்போது ஜீனியன் விகடனில் 13.01.2010 மீண்டும் யோனிக் கொழுப்பை விவாதத்திற்கு வைத்திருக்கிறது. இதற்கு என்ன சொல்லப் போனார் லீனா? 

நடிகைகளையும், அரசியல்வாதிகளையும் அவர்கள் நடத்தைக் குறித்தும் பத்திரிகைகள் அம்பலப்படுத்துவது போல், போலி இலக்கியவாதிகளின் திருட்டுத்தனத்தையும், அதில் இருக்கும் அரசியலையும் ஊடகங்கள் வெளிப்படுத்த முன்வர வேண்டும். 

போலி பெண்ணியவாதிகளையும், உண்மையில் சமூகத்தின் நலனுக்காக போராடும் பெண்ணியவாதிகளையும் ஒன்றிணைத்து விவாதிக்க வைத்து மக்கள் முன் கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும். 

சமுகத்திற்காக எழுதுவதும், பேசுவதும், போராடுவதும் ஒரு வகை பெண்ணியம் என்றால், தன் சுயஇச்சைகளையும், அணுபவங்களையும், கவிதையாக வைத்து கட்டுடைக்கிறேன் என்பதும், ´ஆண்குறி´கள் எல்லாம் வெறி பிடித்தலையும் தறுதலைக்குறிகள் என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டும், யோனிப் புரட்சிக்கு ஒட்டு மொத்த பெண்ணியத்தின் சார்பாகவும் பேசிக் கொண்டு தங்களுடைய உடலை ஆதாயமாக வைத்து காரியங்களை சாதித்துக் கொள்ள முயலும் பெண்களையும் நாம் விமர்சனத்திற்கு உட்பட்டே ஆகவேண்டும். 

அப்போது பிழைப்புவாத அரசியல் செய்யும் இலக்கிய பெண்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து சுய விமர்சனம் செய்ய முயலலாம்.

இங்கே இன்னொரு ஆண்குறி அழகாக தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. இதையும் படித்து பாருங்கள். 

http://ow.ly/Uz2G
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1824


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்