12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

லீனா சுவிஸில் இடம் பெற்ற குறும்பட விழாவுக்கு மாத்தம்மா ...

ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கவில்லை என்று கூறும் அம்மணி அஜீவனிடம் கறந்ததைக் கூடவா மறுக்கிறார். ஆதாரத்திற்க்கு நடிகர் நாசரைக் கேளுங்கள். நாசரிடம் இருந்த படத் தொகுப்புக் கருவிகளைக் கொண்ட நிறுவனத்தை பங்காளிகள் அடிப்படையில் வியாபாரம் செய்யலாம் என்று அஜீவனுக்கு கூறி அஜீவனும் தனது சேமிப்பெல்லாம் கொடுத்த பின் தரமுடியாது பண்ணுவதைப் பண்ணிப்பார் எனறு கூறியவர் என்று அஜீவன் ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.//

இங்கே சில திருத்தங்களை சேர்க்கலாம் என நினைக்கிறேன். லீனா சுவிஸில் இடம் பெற்ற குறும்பட விழாவுக்கு மாத்தம்மா எனும் ஆவண குறும்படத்தை நிழல் பத்திரிகை ஆசியர் திருநாவுக்கரசு மூலம் அனுப்பியிருந்தார். அதன் பின்னர் நிழல் திருநாவுக்கரசுவிடம் தொடர்பு கொண்டு, திரைப்பட விழாவுக்கு வர உதவுமாறு கேட்டதோடு, தனது ஆவணப்படத்தை சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யுமாறு பல முறை தொலைபேசியில் பேசினார். அதே போல திருநாவுக்கரசு ஒரு குறும்படத்தை சிறந்த குறும்படமாக தேர்வு செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவை தேர்வுக் குழுவின் விடயம் என கடுமையாக சொன்னேன். இருந்தாலும் சுவிஸில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கான குறும்படங்களை அனுப்ப செலவாகும் பணத்தை திருநாவுக்கரசுவுக்கு அனுப்பினேன். இவை பொதுவான நடைமுறையல்ல. இலங்கை தமிழரது குறும்படங்கள் சில அரசியல் வட்டத்துக்குள் சிக்கியிருந்ததால் அவற்றை முதன்மைப்படுத்த முடியாத நிலை எமக்கு இருந்தது.

 

அதே நேரம் நல்ல குறும்படங்களை தேர்வு செய்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அவற்றை பார்த்தாவது புலத்து படைப்பாளிகள் வித்தியாசமான படைப்புகளை கொண்டு வர வேண்டும் எனும் எண்ணம் காரணமாக உலக தமிழர் படைப்புகளை விழாக்கள் வழி பார்க்க வழி செய்தல் நல்லது என நினைத்தேன். இக் காலத்தில் இலவச குறும்பட பயிற்சிப் பட்டறைகளையும் நான் சில நாடுகளில் செய்யத் தொடங்கியிருந்தேன். இதன் முதல் முயற்சிக்கு கரம் கொடுத்தவர் தேசம் ஜெயபாலன். ஐரோப்பிய திரைப்பட விழா எனும் குறும் – ஆவண பட விழாவை சுவிஸிலும், லண்டனிலும் நடத்துவது என முடிவெடுத்து தொடங்கினாலும், இறுதியில் சுவிஸில் மட்டுமே நடைபெற்றது. அது முதலும் கடைசியுமானது.

 

தேசம் ஜெயபாலன், லண்டனில் ஈழத்து படைப்பாளிகளின் படைப்புகளை மட்டும் லண்டன் விழாவில் காட்ட வேண்டும் என தெரிவித்ததால், நான் லண்டன் விழாவை ரத்துச் செய்தேன். அதற்கு காரணம் படைப்புகளை, படைப்பாளிகளிடம் கோரும் போது சுவிஸ் – லண்டன் நாடுகளில் விழா நடைபெறும் என தெரிவித்திருந்தேன். சுவிஸில் அனைத்து குறும்படங்களும், திரையிடப்பட்டு சுவிஸ் திரைப்படத் துறையினரால் தேர்வுகளும் நடந்து முடிந்து பரிசுகளும் சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டன. இந் நிலையில் ஈழத்து படைப்பாளிகளின் (புலம்பெயர் ஈழத்தவர் படைப்புகள் உட்பட) படைப்புகளை மட்டும் லண்டனில் திரையிடுவது முறையல்ல எனும் காரணத்தால் அதை ரத்து செய்தேன். அது பல மனவேதனைகளை உண்டாக்கினாலும், இதில் நான் எடுத்த முடிவு சரியானதாக கருதினேன். எனக்கு சுமார் 6,000 சுவிஸ் பிராங் அளவு இழப்பு ஏற்பட்டது.

 

இதனிடையே பரிசு கேடயங்களையும், சான்றிதழ்களையும், சென்னையில் விழா நடத்துவதற்குரிய பணத்தையும் நிழல் திருநாவுக்கரசுக்கு அனுப்பினேன். ஆனால் திருநாவுக்கரசு தமது விழாவாக நடத்தி கேடயங்களை மட்டும் சில பிரமுகர்களை வரவழைத்து சென்னை சோவித் திரைப்பட அரங்கொன்றில் கொடுத்து, நான் சுவிஸ் குறும்பட விழாவில் பணம் சம்பாதித்ததாக அவரது நிழல் திரைப்பட சஞ்சிகையில், வந்தவர்களது எண்ணிக்கையை வைத்து மோசமான கட்டுரை ஒன்றை அண்ணாதுரை எழுதியதாக வெளியிட்டிருந்தார். அக் கட்டுரையில் சிறப்பாக நடந்ததாக விழாவையும், வந்தவர்கள் தொகையோடு அனுமதிக் கட்டணத்தை போட்டு எமது குறும்படங்கள் வழி, புலத்தவர் பணம் சம்பாதிக்கிறார்கள் எனும் தொணியில் இருந்தது அக் கட்டுரை.

 

திரைப்பட ஒழுங்கு, திரையரங்கு, காலை முதல் மாலை வரையான உணவு, இணைய தள உருவாக்கம், கேடயங்கள், சான்றிதழ்கள் என செலவானதை திருநாவுக்கரசு கணக்கெடுக்காமல் பணத்தை குறியாக கட்டுரை வரைந்திருந்தார். சென்னையில் நடந்த விழாவின் படங்களை திருநாவுக்கரசின் “நிழல்” சஞ்சிகையிலும், “சொல்லப்படாத சினிமா” ( http://www.viruba.com/final.aspx?id=VB0000466) எனும் புத்தகத்திலும் பிரசுரித்தாலும், அதற்கும் எமது அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததாக காட்டி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எமது விழா குறித்து ஒரு பக்க குறிப்போடு திருநாவுக்கரசு நிறுத்திக் கொண்டார்.

 

இக் கால கட்டத்தில் ஜெர்மன் நாடு இந்தியாவில் உள்ள கல்வியையையும், ஜொமன் கல்வியையும் இணைத்து ஒரு ஜேர்மன் தொலைக் காட்சி உருவாக்கிய ஆவணப்படத்தில் பணிபுரிய வந்த லீனா, படப்பிடிப்பு முடிந்தும் ஜேர்மனியில் இருக்க விரும்பி, ஏதோ தில்லு முல்லு செய்யப் போக, அவரை இருந்த விடுதியில் இருந்து உடனடியாக வெளியேற சொன்ன நிலையில், என்னைத் தொடர்பு கொண்டார். கவிஞர் அறிவுமதி யாருக்கோ உதவ சொல்ல, அவர்களும் உதவவில்லை என்று தத்தளித்து இருப்பதாக சொன்னார். நான் உடனடியாக அங்கு சென்று, அவரை பார்த்த போது, அவர் ஜெர்மனிக்கு வரும் போதே, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் உத்தேசத்துடன் வந்திருப்பதாகவும், தமிழர்களை சந்திக்கும் நோக்கில் வந்திருப்பதாக சொன்னார். அதற்காக அவர் பலரோடு பேசியிருந்தார். இவர்களில் முக்கியமானவர்கள் சுவிஸ் ரஞ்சி, லண்டன் கலைஞர் ராஜா மற்றும் பிரான்ஸ் சோபா சக்தியாகும். ஆனால் இவரது கையில் பணம் மட்டும் இருக்கவில்லை.

 

ஏதோ ஒரு வகையில் இவர்களை சந்திக்கவும், சந்திப்புகளை நடத்தவும் உதவினேன். ஆனால் இவர் போன இடமெல்லாம் நாத்தியிருந்தார் என்பதை காலம் தாழ்த்தியே அறிந்தேன். இவற்றை இத்தோடு விடுகிறேன்.

 

இவர் சென்னை சென்ற பின், இவரது கணவரான இயக்குனர் ஜெரால்ட் மற்றும் குறும்பட இயக்குனர் சிவா ஆகியோரது நட்பு கிடைத்த போது, அவர்களோடு ஒரு எடிட்டிங் கலையகத்தை உருவாக்கலாம் எனும் எண்ணத்தை முன் வைத்தார்கள். நல்லா ஐஸ் வைத்தார்கள் என்றால் தவறில்லை. லீனா, ஜெரால்ட் மற்றும் சிவாவோடு ( இவர் ஒரு வழக்கறிஞரின் மகன்) இணைப்பை உருவாக்கி விட்டு, விலகி நின்றார். நானும் லீனா இருப்பதை விரும்பவில்லை. நான், பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தேன். மீடியா கிராப்ட் எனும் பெயரில் நடிகர் நாசரது எடிடிங் சூட்டை வாங்கி, இடம் எடுத்து ஆரம்பமானது. நான் விமானம் ஏறினேன். எனது நண்பர்களை, இவர்கள் சந்திக்க விடவில்லை. தொடர்பு கொண்ட போது பலரிடம், நான் வெளியே சென்றிருப்பதாகவே சொல்லியிருக்கிறார்கள். இருந்தும் என பழைய நண்பர்கள் சிலரை, அவர்களை விட்டு, தனியே சென்று சந்தித்தேன். அவர்களால் அதை தடுக்க முடியவில்லை. அவர்களிடம் என் பிஸ்னஸ் குறித்த தகவல்களை சொல்லி, கண்ணோட்டம் விடுமாறு சொல்லி விட்டு வந்தேன். நான் விமானம் ஏறிய அடுத்த நாள், மீடியா கிராப்ட், கனவுப் பட்டறையாக மாறியது.

 

இரு வாரங்களுக்குள், என்ன செய்யாலாம் என ஆராய்ந்தேன். என் பாட்டனர்கள் எனக்கு பசப்பு வார்த்தைகளால் பொய் கதை விட்டுக் கொண்டிருந்தனர். நான் எதுவும் சொல்லாமல், சென்னைக்கு சென்று இறங்கி, நண்பர்களோடு காரியாலயத்துக்கு சென்ற போது அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. என்னோடு சென்றவர்களை பார்த்த போது அவர்களால், துள்ளவும் முடியவில்லை. காரியாலயத்தில் இருந்த லீனாவிடம், என்ன நடக்கிறது எனக் கேட்டேன். “என்னோடு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு, ஜெரால்டோடு பேசக் கொள்ளுங்க” என்று கத்தினாள். என்னோடு வந்தவர்கள் “வாங்க, ஜெரால்டை தேடுவோம்” என்றார்கள். ஆந்திரா போயிருப்பதாக லீனா பொய் சொன்னாள். ஆனால் ஜெரால்டை கோடம்பாக்கத்தில் வைத்து பிடித்தோம். ” அஜீவன், மோசமான ஆக்களோடு சேர்ந்திருக்கீங்க, நாம பேசலாமே” என்றார். பணத்தை திருப்பி தரணும் என்றேன். “காரியாலத்தை எடுத்துக்கிட்டு விட்டுடுங்க” என்றார். காரியாலத்தில் கொடுத்த பணத்துக்கு பொருட்கள் இல்லை. லீனா, தனது தாய்க்கு வீடு கட்ட அதில் பணம் கொடுத்திருப்பது தெரிய வந்தது. வக்கீலிடம் அழைத்துச் சென்று பணத்தை திருப்பி தர எழுதி தருமாறும் செக் தருமாறும் சொன்னோம். இழுத்தடித்தார். பிரச்சனை கடினமாக, லீனா, “அஜீவன், நான் பொறுப்பா, வாங்கித் தர்ரேன். பிரச்சனை பண்ணாதீங்க” என அழுது சந்திக்க விரும்புவதாக சொன்னார். ” உன்னோடு இனி பேச்சு கிடையாது. நான், ஜெரால்டோடு பார்த்துக் கொள்கிறேன்” என்றேன். பெண்களை இழுத்தால், அது வேறு மாதிரியாகி விடும் என்பதால் ஆரம்பத்திலேயே லீனாவை ஒதுக்க நான் எடுத்த முடிவு, இப்போது கை கொடுத்தது. லீனா, ஒரு பெண் ஐபீஎஸ் போலீஸ் அதிகாரி வரை சென்றும் சரியாகவில்லை. அவரது உறவினரான எனது நண்பர், என் பிரச்சனையில் ஈடுபட்டிருந்தார். அடுத்த நக்கீரனிடம் சென்றார். அங்கும், அஜீவனது உறவுகளும், நண்பர்களும் எதுவும் செய்வாங்க என்று சொன்னதால், இறுதியில் எனது பணம் கறுப்பு பணம் என்றும். நான் விடுதலைப் புலி என்றும், கதையை மாற்ற திட்டம் போட்டு, என்னோடு சண்டைக்கு தயாரானார்கள்.

 

நிலை உணர்ந்த நண்பர்கள் பவர் ஒப் அட்டார்னியை எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறுங்கள். உங்கள் பணம் வரும். உங்களுக்கு ஆபத்து வரக் கூடாது என்றார்கள். அது சரியாக பட்டது. மிரட்டியும்,……….. எல்லாம் நடந்த பின்னர் 3 செக்கில் வங்கி மூலம் பணம் போட எழுதிக் கொடுத்தார்கள். கடைசியில் பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டி வந்தது. இருந்தாலும் நான் மனதளவில் தேவையற்ற பிரச்சனைகளை எதிர் நோக்கினேன். அதன் பின்னர் அமெரிக்காவில் இருந்து ஒரு பெண் தொடர்பு கொண்டார். லீனா, காவேரி சம்பந்தமான ஆவணப்படுத்துகாக என 10ஆயிரம் அமெரிக்க டாலர்களை வாங்கி, படத்தையும் செய்யாமல் பணத்தையும் தராமல் இருப்பதாக சொன்னார். ஒளிப்பதிவாளர்களுக்கோ அல்லது வேலை செய்வோருக்கும் பணம் கொடுப்போர் அல்ல ஏமாற்றுவோரே? அவதானம்.

 

http://thesamnet.co.uk


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்