10192021செ
Last updateச, 09 அக் 2021 9am

போலிகளைப் பற்றி லெனின் சொல்கிறார்!

மகத்தான புரட்சி வீரர்களின் 
வாழ்நாட்களில் அடக்கும் வர்க்கம் 
அவர்களை ஈவு இரக்கமின்றி கண்டிக்கிறது. 
அவர்களுடைய போதனைகளை 
சமூகத்திற்கு விரோதமானது என்கிறது. 
ஆத்திரத்தால் துவேஷிக்கிறது. 
கருத்து திரிபுவாதம் செய்ய 
பொய்ப் பிரசாரம் செய்ய முற்படுகிறது. 
அவதூறு செய்வதற்காக இயக்கங்கள் நடத்துகிறது. 
ஒடுக்கப்பட்டவர்களுக்கு திருப்தியளிக்கும் பொருட்டு, 
ஒடுக்கப்பட்டவர்களை ஏமாற்றும் பொருட்டு, 
புரட்சி வீரர்கள் இறந்த பின் 
அவர்களை பூஜிக்கத்தக்க விக்கிரகங்களாக்கி, 
அவர்கள் பெயரிலேயே புனிப்படுத்தப்படும் 
கருத்து திரிபுவாதகளை முன்னெடுக்கின்றனர். 

இதன் மூலம் புரட்சிகரமான சித்தாந்தங்களின் 
உண்மையான கொள்கைகளின் 
கூர்முனையை மழுங்கடித்து, 
ஆண்மையை அழித்து கொச்சைப்படுத்துகின்றனர். 
நிகழ்காலத்தில் மார்க்ஸியத்தை 
களங்கப்படுத்தி இழிபடுத்தும் வேளையில் 
பூர்ஷீவா வர்க்கமும், 
தொழிலாளி இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் 
சேர்ந்து முனைந்திருக்கின்றனர். 

மார்க்ஸிஸ்ட் போதனைகளின் 
புரட்சிகரமான அம்சத்தையும், 
புரட்சிகரமான ஜீவனையும் 
போலிகள் புறக்கணிக்கின்றனர், 
திரித்துவிடுகின்றனர். 
பூர்ஷீவா வர்க்கம் ஒப்புக் கொள்ளக் கூடியதாய் 
இருப்பதை அல்லது ஒப்புக்கொள்ளக் 
கூடியதாய் தோன்றுவதை 
அவர்கள் முன்னணிக்கு கொண்டு வந்து 
போற்றிப் புகழ்கின்றனர். 
பின்புறமோ அவர்களுக்கு குழிபறிக்கின்றனர்.

* லெனின்
http://bit.ly/8sDh8y

தமிழச்சி
27.12.2009