சாணக்கியர்களின் வாக்குமுலங்கள்

அடுத்த ஆட்சியில் சுபீட்சமாகும் கனவுகட்குள்

மிதக்கவிடப்;பட்டபடியே கடந்துபோயின…….

இழந்தபடியே எண்ணிக்கை கண்ணைத்திறக்குமென

முன்னர் ஆண்டவெள்ளையர் தேசமெலாம்

முள்ளிவாய்க்கால்வரையும் இன்னமும் மடியென

சட்டப்புத்தகங்களில் எழுதப்பட்டவை நிகழவில்லையென்றன

 

நிழலைக்கொடுத்ததோ இல்லையோ

பெருமரம் தறிக்கப்படும்படியாய் உள்ளிடை…

ஓங்கிவீசிய கோடாரிகளின் பிடிகள்

அதேமரத்துக்கிளைகளாலேயே செருகப்பட்டதாயேயிருந்தது

பருத்துக்கிடந்தபோது ஒட்டிக்கிடந்தவை

வெட்டியகரமெதைப்பற்ரியேதான் படரப்போகிறது

 

எங்களிற்கான கோரிக்கைகளுடன் பேரம்பேசுவதாய்

வீரம்பேசியபடியே கதிரைகட்கான இருப்பு உறுதிசெய்யப்படுகிறது

இத்தனைதசாப்த இழப்புக்களினுள்ளும்

இரும்புமனிதர்களாய் வலம்வரமுடிகிறது

 

சனத்தின் அழிவை கிண்டல்பேசும் சாத்தான்களாய்

பொல்கொடுத்து அடிவாங்கியதாய் எங்களிடமே கூறமுடிகிறது

இடிந்துபோய்கிடக்கும் தேசத்துமேடையில்

ஏறிநின்று வாக்குஇரக்க எப்படிமுடிகிறது

 

பொறுக்கிவாழ்வாய் புடமிடப்பட்டோர்

திருந்திவாழ்தல் எந்ததேசத்து நிகழ்ந்தது

வருத்திச்சனத்தை வாழ்விலுயர்ந்த வர்க்கமிது

தேர்தல்கணத்தி;லெலாம் காருண்யசீலராய் காவிதரித்து

இனத்தின்மீதான இரக்கம் மேலிட

கதறத்திருகிய கைகள்கூப்பி இரந்துவருக…

 

பிளந்துபோட்டு குறுந்தேசியம் பேசியே

பீறிட்டோடிய குருதிஆற்ரில் மிதந்துவாருங்கள்

நெஞ்சைப்பிளந்தவன் வஞ்சகர் கூட்டொடு

வாக்கெடுக்க வருக வருக…

 

இழந்துகற்ரவர் எம்தேசத்துமக்கள்

தம்பலத்தில் கிளர்ந்து எழும்வரை

புள்ளடியிட்டால்  பொறுக்கிப்போங்கள்...

 

http://www.psminaiyam.com/?p=820