‘அரசு’ என்பதும் ‘ஜனநாயகம்’ என்பதும் அனைவருக்கும் பொதுவானது அல்ல என்பதை வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் மெய்ப்பித்துவிட்டன. வெண்மணி அதற்கு நவீன கால உதாரணம். நந்தன்அதற்கு பழங்கால உதாரணம்.
எனினும் சிலர் உழைக்கும் பெரும்பண்மை மக்களுக்கான ஜனநாயகத்தை சர்வாதிகாரம் என்றும் சுரண்டும் சிறுமாண்மை கூட்டம் உழைக்கும் பெரும்பாண்மை மக்களின் மீது ஏவிவிடும் சர்வாதிகாரத்தை ஜனாநாயகம் என்றும் கொண்டாடுகிறார்கள். ஆதிக்க சாதி, வர்க்க வெறியர்களால் நந்தனை மட்டும் தான் எரிக்க முடிந்தது, வெண்மணியை மட்டும் தான் கருக்க முடிந்தது, அவர்களின் கனவுகளோ எங்களிடம் கை மாற்றப்பட்டு கணன்று கொண்டிருக்கிறது. அந்த கங்கைக் கொண்டு அனைத்து அநீதிகளுக்கும் தீ மூட்டுவோம்! இரிஞ்சூர் கோபாலகிருக்ஷ்னனுக்கு தீர்ப்பு எழுதிய நக்சல்பாரிகள் தான், தில்லை தீட்சிதனுக்கு உரியதல்ல என்கிற வரலாற்றுத் தீர்ப்பையும் எழுதப்போகிறார்கள். நக்சல்பாரிகள் தான் வெண்மணி தியாகிகளுக்கு ஜனநாயகம் வழங்கிய அநீதியை புறம் தள்ளி நீதியை வழங்கி அவர்களின் லட்சியத்தை தமது நெஞ்சிலேந்தி வரித்துக் கொண்ட அவர்களின் வாரிசுகள். நந்தனுக்கோ இன்னும் நீதி வழங்கப்படவில்லை அவனுக்கான நீதியையும் நக்சல்பாரிகளே எழுதி வைப்பார்கள்.
தீயில் கருகிய வெண்மணி தியாகிகளே உங்கள்
நினைவை நெஞ்சில் ஏந்துகிறோம்!
தீயில் எறிந்த தில்லை நந்தனே!
தீர்ப்பு எழுத விரைந்து வருகிறோம்!
நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை தடுத்து நிற்கும்
தீண்டாமைச்சுவரை தகர்த்தெறிய விரைந்து வருகிறோம்!
அன்று ஒரு சிறு கிராமத்திற்குள் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த கோபாலகிருக்ஷ்ணன் நக்சல்பாரிகளால் களை எடுக்கப்பட்டான். இன்றோ அந்த கோபால கிருக்ஷ்ணனின் பிரம்மாண்ட உருவமாக, மறுகாலனியாதிக்கத்தின் தாசர்களான மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் நக்சல்பாரிகளை அழித்தொழித்து வேட்டையாட வெளிப்படையாகவே பிரகடணம் செய்திருக்கிறார்கள். நாட்டையும் , நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும், அந்நியனுக்கு நட்டை காட்டிக்கொடுக்கும் இந்த அந்நியக்கைகூலிக் கும்பல் நாட்டின் நலனையும், மக்கள் நலனையுமே தமது வாழ்வாக கொண்டு அநீதிகளுக்கு எதிராக போரிடும் நக்சல்பாரிகளை பயங்கரவாதிகள் என்றும், மக்கள் விரோதிகள் என்றும் சித்தரித்து அழித்தொழித்துவிட துடிக்கிறது.
ஆற்காடு நவாப், எட்டப்பன், தொண்டைமான் போன்ற கைக்கூலிகளின் வரிசையில் அந்நியனுக்கு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இந்த நவீன கைக்கூலிகள் மக்களுக்காகவே வாழும், மக்களுக்காகவே சாகும் மாவோயிஸ்டுகளை, நக்சல்பாரி புரட்சியாளர்களை பயங்கரவாதிகள் என்று மக்களிடமிருந்து பிரிக்கப்பார்க்கிறது. மாவோயிஸ்ட் பயங்கரவாதம் என்கிற பெயரில் இந்த அரசபயங்கரவாத கும்பல் அப்பாவி பழங்குடி மக்களைக் கொல்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட எதிரிகள் அறிவித்திருக்கும் இந்த உள்நாட்டுப்போர் நாட்டை முற்றாக அடிமைப்படுத்தும் போராகும். எதிரிகள் போரை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் தமது தற்காப்பிற்காக அயுதங்களை கையிலெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளர்கள்.
வில், அம்பு போன்ற எளிய ஆயுதங்களை வைத்துக்கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் மீது நவீன ஆயுதங்களைக் கொண்டு “ஆப்பரேக்ஷன் கிரீன் ஹண்ட்” என்கிற பெயரில் அரசு நடத்தவிருக்கும் இந்த பயங்கரவாத தாக்குதலை ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் வண்மையாக கண்டிக்க வேண்டும். இந்த அரசபயங்கரவாதத்தை அனைத்து இடங்களிலும் அம்பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் மக்கள் தாமாகவே நிறுத்திக்கொள்ளும் வரை இந்த போர் ஒரு முடிவுக்கு வராது.
வெண்மணித்தியாகிகளின் நினைவு நாளில் அரச பயங்கரவாதிகளுக்கு மக்கள் விடுக்கும் எச்சரிக்கை இது!
-
தொடர்புடைய இடுகைகள்:
வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவலவுல வெந்து மடிஞ்சோமடா வெண்மணியில…
வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!
இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!
http://vrinternationalists.wordpress.com/2009/12/25/மறையாது-மடியாது-நக்சல்பர/