எழுந்திடுவோம் எனும் துணிவு இதயத்தே துளிர்த்தது
வெந்து புண்ணாகிய உணர்வுகள் வேகம்கொள்வது தெரிந்தது
மனிதம் வாழ்வதாய் மனது தேற்ரியது
சாவுக்குள் மிஞ்சிய சனத்தின் தவிப்பும்;;..தப்பிய
பிள்ளைகள் உடலெங்கும் ரவைகளாய்
ரணத்தின் பொழுதுகளிலும்
துரும்பைத்தன்னும் அசையென மனிதம் உறுத்தாதிருப்பது எப்படி......
கனத்துவெடித்து கதறும் முனகலிலும்
சினத்தை தூண்டும் சிறுமையில் எப்படிவாழ முடிகிறது......
இனத்தின் பெயரில் கிளம்பும் காழ்ப்பு
பேரினவாதத்திலும் பெரிதாய் பிளக்கிறதே....
ஏத்தனைகோடி துன்பங்களை அவர்கள் சுமப்பர்
எறிகணைவீச்சு இதயபூமியின் நெஞ்சைப்பிளந்தன
வளம்கொழித்த வயல்களின் வரம்பையும் வாழ்வையும்
செயின்பிளக்குகள் தகர்த்தது
ஊழிப்பெருவாய் இரத்தத்தில் நிறைந்தபடியே
இன்னமும் அடங்காவெறியொடு
மிஞ்சிய இளையோரை கொடுகரத்துள் நெரித்தபடி.
அரவணைப்பதாய் அறிக்கைகளுடன்
உலககொடையாளரின் கதவுகளை தட்டுகிறது....
மக்கள் தட்டும்போது திறக்காதவையும்
கேட்டபோது தரப்படாதவையும்
ஒடுக்குமுறையாளருக்காக மட்டுமே திறக்கப்படுமெனவும்
சிந்தியகுருதியெலாம் செங்கம்பளமாய் விரித்துப்போட்டபடி
நந்திக்கடலின் பின்னரும் நம்மண்ணில் வீறுநடைபோடுகிறார்கள்
எமது வாழ்வும் எமது வளமும் தமக்கானதாயும்
முடிந்தால்
பாராளுமன்ற தங்களதுபொம்மைகள்
உங்களால் தெரிவாகியவர்கள் பார்துக்கொள்வார்களென
எங்களிற்கு கீதோபதேசம் செய்கிறார்கள்......
எல்லாமே பட்டுத்தெளிந்த சனங்கள்
நடக்கட்டுமென பல்லைக்கடித்தபடி.நம்பிக்கையுடன்
எந்த மீட்பனும் எமக்காய் வரார்களென உரக்கச்சொல்கிறார்கள்......
எங்கள் கரமே எமது வலிமை
இதுவே தோழமை ...
இனியொரு ....... சதிக்காய் எப்படி முனைப்புறும்
அப்படியாயின் வர்க்க குணாம்சமே............