இப்படி நம்புவது, நம்ப வைப்பது, மக்களின் முதுகில் குத்தும் துரோகம். இப்படி நம்ப வைத்து அரசியல் செய்வது பச்சையான பச்சோந்தித்தனமாகும். மூடிமறைத்த தங்கள் சந்தர்ப்பவாதத்துடன், திடீர் அரசியல் வியாபாரம் நடத்த முனைகின்றனர்.

கடந்த வரலாற்றை மூடிமறைத்து மார்க்சியம் பேசுதலே தான், இன்று புதிய எதிர்ப்புரட்சி அரசியலாகும். 1983ம் ஆண்டு இயக்கங்கள் தோன்றியது போல், எல்லா புனித பட்டங்களுடன் மார்க்சியம் பேசத் தொடங்குகின்றனர். தம்மை மக்களின் புதிய மீட்பாளராக காட்ட முனைகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில், அதன் வௌ;வேறு காலகட்டங்களில், என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற ஆய்வை மறுத்து தொடங்குகின்றது இந்த எதிர்ப்புரட்சி அரசியல்.

 

ஆய்வாளர்களாக வானத்தை நோக்கியும் வழிகாட்டுவதாக கூறும் இவர்கள், புலி மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் மக்களை நோக்கி எப்படி என்ன அசைவைக் கொண்டு இருந்தார்கள் என்பதை மட்டும் ஆராய எந்த வக்கற்றும் கிடக்கின்றனர். ஓளிவட்டம் கட்டி, மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியலை விதைப்பது மார்க்சியம் என்கின்றனர். எதிர் வினையாற்றாது, தங்கள் கடந்தகாலம் சந்தர்ப்பவாதத்துடன் நடத்திய அரசியல் கூத்தை, மூடிமறைத்துக் கொண்டு  களமிறங்குகின்றனர்.  

 

கடந்தகாலத்தில் தங்களைச் சுற்றி நடந்த எல்லாவற்றையும் புலிக்குள் புதைத்து, அதற்கூடாக தம்மை புனிதப்படுத்த முனைகின்றனர். புலம், இலங்கை, தமிழகம் என்று எங்கும், திடீர்  கடைவிரித்து நிற்கின்றனர். இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக, மார்க்சிய அற்புதங்கள் தாம் நடத்தியதாக திடீர் சாட்சியங்கள் சொல்லுகின்றனர்.

 

புனித மார்க்சிய பட்டங்கள், புனித மார்க்சிய பட்டாடைகள் போர்த்த ஓடோடி வருகின்றனர். புதிய மேய்ப்பாளர்கள், மானிடத்தை மீட்பார்கள் என்று அருள் வாக்கு கொடுக்கின்றனர். அருள் உள்ளே இறங்க சொந்தப் பெயரில் புனித வே~ம் போட்டபடி, அவதூறு செய்ய பல போலிப் பெயரில் (இதில் சில முன்பு போராட்டத்தை நடத்தியவர்கள் பெயர்) பின்னோட்டம் மூலம் புரட்சி நடத்துகின்றனர். இப்படி மொட்டைக் கடதாசி மூலம், அவதூறு புரட்சி நடத்துகின்றனர்.

 

வெட்கம் கெட்ட அரசியல். கடந்த 30 வருடத்தில் புலியல்லாத மாற்றுத்தளத்தை ஆய்வு செய்யாத மார்க்சிய அரசியல், இப்படி தலைகீழாக நாட்டுவதன் மூலம் அரங்கேறுகின்றது. கடந்தகாலத்தில் நீ எங்கே நின்றாய் என்று கேட்பதுவும், நீ என்ன செய்தாய் என்று வினவுவதும், தனிமனித தாக்குதல் என்கின்றனர். இது "இன்று" அவசியமற்ற விவாதம் என்கின்றனர். இப்படி கூறி, மீண்டும் மக்களை ஏமாற்றும் வண்ணம், "புது" அரசியலை செய்வது தான் மார்க்சியம் என்கின்றனர்.

 

தம்மை மூடிமறைத்த பச்சோந்திகள், மக்களை ஏமாற்றுவதையிட்டு அலட்டிக் கொள்ளாது அதற்கு உடந்தையாக இருப்பது தான், இன்று இலங்கைப் புரட்சியாளர்கள் கையாளவேண்டிய யுத்த தந்திரம் என்கின்றனர். இலங்கை, இந்தியா முதல் புலம்பெயர் நாடுகள் வரை முன் வைக்கப்படும் மார்க்சியம், இந்த எல்லைக்குள் நின்று தான் எதிர்ப்புரட்சி அரசியலாக புகுந்து விளையாடுகின்றது.

 

கடந்தகால மாற்றுச் செயல் தளம், தன் பொறுப்பற்ற மக்கள் விரோத அரசியல் கூத்துகள் மூலம், மக்களை நோக்கி அது இயங்கவில்லை. அதை மறுத்து நின்றது. மக்கள் அனாதையான போது, அதை வழிகாட்ட அதனால் முடியவில்லை. 

 

பாரிய மனிதசிதைவுகளும், அழிவுகளும் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று  மக்கள் திசை தெரியாது தவிக்கின்றனர். உண்மையில் எந்த மாற்றமும், மாற்று வழியும் தெரியாது நிலையில் சமூகம் திகைத்து நிற்கின்றது.

 

இந்த நிலையில் கடந்தகாலம் பற்றியும், சிலர் பற்றிய இந்த விவாதம் அவசியமா? இப்படி எண்ணும் பலரின் முன் தான், நாம் இந்த அம்பலப்படுத்தலை செய்கின்றோம். இதனால் சமூகத்துக்கு என்ன நன்மை? அல்லது விடுதலை கிடைத்துவிடுமா? என்று எண்;ணுகின்ற சமூக அக்கறையாளர்களின் அக்கறைக்கு மத்தியில், இந்தப் போராட்டத்தை நாம் தொடருகின்றோம்.

 

தன்னை மூடிமறைத்தபடி, தங்கள் கடந்தகால சந்தர்ப்பவாத அரசியலுடன் தான், அரங்கில் மக்களை ஏமாற்றப் புகுகின்றது. புதிய எதிர்ப்புரட்சி அரசியலாக இருப்பதை, இங்கு நாம் இனம் காண தவறுகின்ற அறியாமை மீதான போராட்டமாக இது மாறி நிற்கின்றது.   

 

இவர்கள் புலிகள் இருந்தபோது, மக்கள் அரசியலுக்கு ஓய்வு கொடுத்து, அரோகரா போட்டபடி அதை பாடையில் ஏற்றியவர்கள். மக்கள் அரசியலுக்கு எதிராக ஓப்பாரி வைத்து    வம்பு விவாதம் நடத்திக் கொண்டிருந்த போது, நாம் தன்னந் தனியாக மக்கள் அரசியலை முன்னிறுத்தி போராடினோம். அன்று எதற்காக போராடினோமோ அதற்காக, இன்று திடீரென புதிய வே~ம் போட்டு மார்க்சியம் பேசும் எதிர்ப்புரட்சிக் கும்பலுக்கு எதிராகப் போராடுகின்றோம்.

 

பொய்யையும், புரட்யையும் முன்னிறுத்தி, அது எம்முன் ஆட்டம் போடமுனைகின்றது. அதை மட்டுமல்ல, அதனுடன் கூடி நிற்கின்ற அனைத்து இதன் அரசியல் கூத்துகளை நாம் முறியடிப்போம். எம்மிடம் உள்ள உண்மைக்கும், நேர்மைக்கும் முன்னால், யாரும் நிற்க முடியாது. அதை யாரும் தகர்த்து விட முடியாது. நீங்கள் இரயாகரன் என்ற தனிமனிதன், என்று முத்திரை குத்தலாம். நான் அல்ல நாங்கள், எம்மிடம் கூட்டு உழைப்பு உண்டு. 

 

கடந்த 25 வருட வரலாற்றில் அரங்கேற்றிய அனைத்து அரசியல் பித்தலாட்டங்களையும் மூடிமறைப்பதை மார்க்சியவாதிகளாகிய நாங்கள் எதிர்கொண்டு அம்பலப்படுத்துவோம்.  அரசியல் சந்தர்ப்பவாதத்தை கைக்கொண்டு, காலத்துக்கு காலம் சிதைத்து அதை அரசியலாக விழுங்கிய கூட்டம், இன்று கூடிக் கூத்தாடுகின்றது. அனைத்தையும் மூடிமறைத்து அதை அரசியலாக்கியவர்கள், இன்று அதை கக்குகின்றனர். 

 

கடந்த காலத்தின் புலியல்லாத தளத்தில் கட்டமைத்த தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைத்து, திடீர் புரட்சி அரசியல் பேச முற்படுகின்றனர். தங்கள் கடந்த வரலாற்றையே திரித்து காட்ட முனைகின்றனர். இதற்கு போராடியவர்கள் வரலாற்றை கொச்சைப்படுத்துகின்றனர்.

 

இதுதான் என்று சர்வதேசிய அரசியலுக்குள் இதை திணிக்க முனைகின்றனர். கோள் மூட்டுவது, அவதூறு சொல்வது, இட்டுக்கட்டுவது, தம்மை முனைப்பாக்கி காட்டுவது, பிரமுகர்கள் மூலம் சிபார்சு செய்விப்பது என்று, மார்க்சியத்தை வியாபாரம் செய்கின்றனர்.   

 

இந்தப் புதிய திடீர் "நேர்மையாளர்களுடன்", திடீர் "மார்க்சியவாதிகளுடன்" எம்மை புதிய விடுதலை அரசியலை செய்யும்படி கோருகின்ற அரசியல் பித்தலாட்டங்கள். இவை அனைத்தும் மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியல்தான்.

 

கடந்த காலத்தில் மக்களுடன் நிற்காத, மக்கள் விரோத அரசியலை அரசியலாக  கொண்டவர்கள் எப்படி மக்களுடன் நிற்பார்கள். அதற்கு வேண்டும் சுயவிமர்சனமும், விமர்சனப் பண்பும். தங்கள் கடந்தகால மக்கள் விரோத வரலாற்று பாத்திரத்தை இன்றும் சரியானது என்று கருதும் எந்த போக்குடனும், எவருடனும் நாம் அன்று போல் இன்றும் இணைந்து நிற்க முடியாது. இவர்கள் மக்களை ஏமாற்றும் மக்கள் விரோதிகள்.

 

இதற்கு எதிரான போராட்டம்தான், எதிர்காலத்தில் ஒரு சரியான அரசியல் திசை மார்க்கத்தை உருவாக்கி தரும். பிரபாகரன் செத்த நாள், மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி அதை தூய்மையாகி விடுவதில்லை. மக்கள் நலன் கொண்டதாக மாறிவிடுவதில்லை. ஒரு பாசிசத்தின் வீழ்ச்சிக்கு அப்பால், எதுவும் நடந்து விடவில்லை. கடந்தகால எல்லா எதிர்ப்புரட்சி கூறுகளும் தம்மை மூடிமறைத்துக் கொண்டு, மீண்டும் புதிய வீரியத்துடன் மக்களை ஏமாற்ற முனைகின்றது. இதை இனம் காண்பதும், இனம் காட்டுவதும், வரலாற்றின் புரட்சிகர அரசியலாகி விடுகின்றது.

 

நாங்கள் இங்கு எந்தத் தூய்மைவாதத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் கோருகின்றோம். இதைச் செய்ய முன்வராதவர்களுடன், நாம் எந்த அரசியல் நேர்மையையும் எதிர்பாhக்க முடியாது. இது அடிப்படையில், தன்னுள் மூடி மறைத்த கடந்தகால மக்கள் விரோதத்துடன்தான் இயங்கும். இதை இன்று மக்கள் முன் இனம் காட்ட மறுப்பது கூட, ஒரு வரலாற்றுத் துரோகம் தான்.

 

முன்னைய கட்டுரைகள்

 

  1.  

  2.  

  3.  

  4.  

  5.  

 

தொடரும்
 
பி.இரயாகரன்
05.12.2009