09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......

பற்ரிய துவக்கெலாம் வாரங்கள் மாதங்கள்
பகைகண்டு தரம்பிரிக்க வெட்டியமுடிகளாய்
விழவிழ மிதித்தேறி
விண்ணிலிருந்து வருவர் காக்கவென
எண்ணவைத்த புலத்தோனே--இன்னமுமா
ஆண்டொருக்காய் உரைகேட்கும் ஆவலொடு......

 

 

ஆயிரமாயிரமாய் இழந்தோம்
ஆத்தனையும் மாத்தளனில்
வெற்ராக்கி சத்தமின்றி அடங்கியது
சுடுகாடு மீண்டவர் சுற்ரிய வேலியுள்
விடுதலெலாம் வேகம்கொள்கிறது
தேர்தல் நெருங்க நெருங்க
தேனொழுகும் வார்த்தையாலம்.....

 

பத்துமாதங்கள் சுமந்த தாய்
நித்தம் நினைவிருத்தி கத்தியள வழியற்று
மற்ரய பிள்ளைகளை மனதிருத்தி மௌனமாய்
விதைத்த குழிமீது  வெடிகுண்டு வீழலாம்
பதித்த நினைவுக்கல் படைநகர்வில் இடிந்து நொருங்கலாம்
மண்ணின் கனவொன்றே எண்ணிய
மாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......

 

கழுத்தில் குப்பியுடன் சாவை துச்சமாய்
தோள்களில் இனத்தை சுமந்தவர்கள்....
வனத்தில் இளமைக்கால வாழ்வை
தம் சனத்திற்காய் ஈர்ந்தவர்கள்.......

 

எண்ணியிரார் தம் ஈகை
புலத்துப்போக்கிரிகள் பைநிரப்பும் காலமாய் நீழுமென
களத்துத் தியாகமெலாம்
காசாக்கி கொழுத்து வாழ்வரென.........

 

சினந்தௌhது இனியும் சிறுமையின் அடியொற்ரி
கனர்ந்தௌhது இனியும் கயமையுள் வீழ்தலும்-வாழ்வில்
கிளர்ந்தௌhது இனியும் போலிக்குள் கீழ்ப்பட்டு வாழ்தலும்
வீழ்ந்தௌhது இனியும் வீரமாய் நிமிர்தற்குதடை காண்.......


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்