01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

"இனியொரு" இணையம் தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை திரித்து, கலையரசன் மேல் நடத்தும் இழிவரசியல்

புலி அரசியலோ சமூகத்தை வெட்டியாக்கி விதைத்த விதைகள், புலியல்லாத தரப்பை அரசியலற்ற மக்கள் விரோத நக்கியுண்ணும் கும்பலாக்கியது. இப்படி மக்கள் விரோத அரசியலைக் காவித் திரிந்தவர்களின் ஒருபகுதி, இன்று இனியொரு இணையத்தில் கும்மியடிக்கின்றனர்.

இந்தக் கும்பல் தம்மை தூய்மையானவராக காட்ட, கலையரசன் மேலான ஒரு தாக்குதலை நடத்தியது. கடந்த காலத்தில் புலியல்லாத மாற்றுத்தரப்பின் பெயரில் நடத்திய இலக்கியச் சந்திப்புகள் முதல் புலம்பெயர் அரசியல் கூத்துகள் மக்கள் அரசியலை துறந்து நின்றதுடன், அதை கேவலப்படுத்தியது. குறிப்பாக மார்க்சியத்தை மறுத்தனர், திரித்தனர். இதன் மூலம் அனைத்து எதிர்ப்புரட்சிக் கூத்தையும் நடத்தினர். முன்னாள் இயக்க கொலைகாரர்கள், வலதுசாரிகள், தன்னார்வ கைக்கூலிகள், அரச எடுபிடிகள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்தே, புலியல்லாத ஒரு மாற்றை முன்னிறுத்தினர். இதைத்தான் புலிக்கு மாற்று என்றனர். மக்கள் விடுதலைக்கான அரசியல் பாதை என்றனர்.

 

இப்படி கூடிக் கும்மி அடித்து எதிர்ப்புரட்சி அரசியல் எல்லைக்குள் இயங்குவது தான் சரியானது என்று, முன்னின்று வழிகாட்டியவர்களில் இனியொரு ஆசிரியரான அசோக் முதன்மையானவர். மார்க்சியத்தை மறுத்து, மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைத்த புலியல்லாத கும்பலுடன் கூடி, மக்கள் அரசியலை நிராகரித்தவர் தான் இந்த இனியொரு அசோக். இப்படி இவர்கள் நடத்திய இழி அரசியல் கூத்தின் கீழ் தான், கலையரசன் முதல் பல இளம் தலைமுறையினர் தவறாக வழிகாட்டப்பட்டனர்.

 

மக்கள் விரோதிகள் நண்பர்களாக, தோழர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களின் மக்கள் விரோத அரசியல் தேவைக்கும் நோக்குக்கும் ஏற்ப, மக்கள் விரோத அரசியல் தளத்தில் பலர் பயன்படுத்தப்பட்டனர். இந்த வகையில் அரசியல் ரீதியாக பெண்ணியத்தை இனம் கண்டு கொள்ளாது புதிதாக அரசியலுக்கு வந்த இளம் பெண்களை, இதுதான் பெண்ணியம் என்று சொல்லி அவர்களை பாலியல் ரீதியாக அணுகினர். அரசியல் முரண்பாடுகளின் போது, அப்பெண்களை "விபச்சாரி" என்று புலியல்லாத மாற்று அரசியல் தூற்றியது வரை புலம்பெயர்  இலக்கிய கூத்துகள் பலவிதமாக அரங்கேறியது. எல்லாவற்றையும் ஏற்று, கூடிக் குலாவியவர்கள், இன்று தமக்கு அதில் பங்கில்லை என்பது சுத்த அரசியல் மோசடித்தனமாகும். இலங்கை அரச கூலிப் பிரதிநிதிகளுடன் கூடி கும்மியடிப்பது வரை, இவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் பலர்.  

 

உதாரணமாக இனியொரு ஆசிரியர் அசோக் யாரை சந்திக்க எங்கே செல்கின்றோம் என்று சொல்லாமல், பிரான்ஸ் இலங்கை தூதரகத்துக்கு கூட இளம் தலைமுறையை அழைத்துச் சென்றவர் தான். தமிழ் மக்களுக்கு மாற்றைத் தேடிய இளம் தலைமுறை இளைஞனை, இலங்கை தூதரகத்தில் தங்கியிருந்த டக்கிளஸ் முன் கொண்டு சென்று நிறுத்தியவர் தான் இந்த இனியொரு அசோக். இப்படி எத்தனை சம்பவங்கள் கடந்தகாலத்தில் நடந்தேறின. இந்தியா றோவின் கூலிக் கும்பலாக இன்று வளர்க்கப்படும் ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் வரை தொடர்பு கொண்டு, அவர்களின் ஐரோப்பிய ஏஜண்டுகள் கூடி ஒரு சதி அரசியல் வலைப் பின்னணியில் அரசியல் செய்தவர், செய்பவர் இந்த இனியொரு அசோக். 

 

இவர் தான் இன்று கலையரசன் மேல் குற்றம்சாட்டுகின்றார். கலையரசன் தன் மீதான அவதூறுக்கு பதிலளிக்க எழுதிய கட்டுரையில்,  http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_18.html தன்னார்வ பிரதிநிதியை அசோக் வீட்டில் வைத்து அறிமுகமாகியதாக கூறுகின்றார். படுபிற்போக்கான அரசியல் சதி அரசியல் பின்னணி கொண்டவர்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் போக்கின் ஏக பிரதிநிதிகளில், மிக முக்கியமான ஒருவர் தான் இன்றைய இனியொரு ஆசிரியர். புளாட் உட்படுகொலையை ஆரம்பத்தில் தொடக்கி வைத்த கொலைகாரனும், புளாட்டில் இருந்த பெண்களை அரசியலுக்கு ஊடாக பாலியல் ரீதியாக அணுகியவரும், பின் புலிகளுக்கு ஊதுகுழலாக மாறியவருமான சிவராம் அசோக்கின் உற்ற தோழன். பாரிஸ் வரும்போது இனியொரு அசோக்கோடு அவர் வீட்டில் தங்கி, அவருடன் சேர்ந்துதான் எல்லா எதிர்ப்புரட்சி அரசியலையும் செய்தவன். அரச பயங்கரவாத பாசிசத்துக்கு அஞ்சி தலைமறைவாக தங்க அபாயம் கோரிய பெண்ணின் உடலைக் கோரிய ஒரு அற்ப நாய் தான் இந்த சிவராம். இப்படித் தான் தேசியத்தை போற்றி, அதை தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்தியவர்கள் பலர். இப்படிப்பட்ட நாய்கள் முதல் தன்னார்வ ஏஜண்டுகள் வரை அசோக்கின் நண்பர்கள் தோழர்கள். இந்த பொறுக்கியை ஊடகவியலாளனாக, நண்பனாக, தோழனாக காணும் தங்கள் அரசியல் போக்கிரித்தனத்தை மூடிமறைத்துக்கொண்டு, யாரும் தம்மை தூய்மைப்படுத்தமுடியாது.  

 

இப்படிப்பட்ட பொறுக்கிகள் முதல் அரச எடுபிடியாக பாசிசக் கொலைகளை முன்னின்று செய்த டக்கிளஸ் வரை, இவரின் நண்பர்கள், தோழர்கள். எல்லா அரசியல் பொறுக்கிகளும், நண்பர்கள் தோழர்கள். தம்முடன் தம் தளத்துக்கு கலையரசன் உடன்பட மறுத்ததால், அவர் மீது குற்றச்சாட்டு. ஏன் சுசீந்திரனை தன்னார்வ பிரதிநிதியாக காட்டும் அசோக்கும் இனியொருவும், ஏதோ இப்போது தான் இது நடந்தது என்று புதுக்தையையே புனைகின்றனர். சுசீந்திரன் அன்று (இலக்கிய சந்திப்பு காலம் முதல்) முதல், தன்னார்வ நிதி பெற்று வருபவர் தான். அவருடன் சேர்ந்து 10, 15 வருடமாக அரசியல் கூத்தாடிய அசோக், இன்று கலையரசன் மீது சேறடிக்கின்றார். அரசியல் வேடிக்கையல்லவா!  

         

கலையரசன் போன்றவர்களை புலி எதிர்ப்பு அணிக்குள், எல்லா போக்கிலிகளுடனும் சேர்ந்து அரசியல் செய்ய வழிகாட்டியவர்கள் நீங்கள். அதை மறுத்த அரசியலை செய்தவர்கள் அல்ல நீங்கள். அன்று மக்கள் அரசியலை கைவிட்டு தம்மை பின்பற்ற, மற்றவர்களைக் கோரியவர்கள் நீங்கள். அன்று அதை செய்த நீங்கள், அதை செய்யச் சொன்ன நீங்கள், இன்று வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு கலையரசன் மேல் அவதூறை அள்ளித் தெளிக்கின்றீர்கள். உங்கள் கடந்தகால எல்லா எதிர்ப்புரட்சிகர நடத்தைகளையும், வாழ்வியல் செயல்களையும், தவறான வாழ்க்கை முறைகளையும், வெள்ளையாக்கி காட்ட முனைகின்றீர்கள்.

 

இதற்கு ம.க.இ.க தோழர் மருதையனை திடீரென முன்னிறுத்தித் காட்டுவதன் ஊடாக, தமக்குத்தாமே வெள்ளையடிக்க முனைகின்றனர். ம.க.இ.கவும், தோழர் மருதையனும் உங்கள் அரசியல் வரலாறு நீடித்த காலம் முழுக்க, அவர்களின் புரட்சிகர அரசியலில் நீடித்து இருந்தது என்பது எதார்த்தம். அப்போது நீங்கள் எங்கு யாருடன் சேர்ந்து என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்!? மார்க்சிய அரசியலா செய்தீர்கள். இல்லை, அதை கருவறுக்கும்  தூக்குமேடையில், அலுக்கோசுகளுக்கு நீதிபதிகளாக இருந்தீர்கள். அவை பற்றி விமர்சனம், சுயவிமர்சனம் என எதுவுமின்றி, இன்று திடீர் மார்க்சியம் பேசுவது சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமுமாகும். இந்த திடீர் மார்க்சியம் பேசும் சந்தர்ப்பவாதம் பிழைப்புவாதம் பற்றி  ம.க.இ.க தோழர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது எமக்குத் தெரியாது. ஆனால் நாம் இந்த நேர்மையற்ற அரசியல் போக்கை, எதார்த்தத்தில் எதிர் கொண்டேயாக வேண்டியுள்ளது என்பது உண்மை. தொடர்ச்சியான ஒரு இயங்கியல் போக்கற்ற திடீர் மார்க்சியம், சந்தர்ப்பவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் ஆதாரமாகக் கொண்டது.     

 

கடந்த காலத்தில் புலியின் அரசியல் செயல்களை ஆதரித்தவர்கள், விமர்சனம் சுயவிமர்சனமின்றி ஒருநாளும் மக்களுக்காக உண்மையாக இருக்கமுடியாது. அதுபோல் கடந்த காலத்தில் புலிகள் அல்லாத தரப்பில் நீடித்த மக்கள் விரோத அரசியல் போக்கை  சுயவிமர்சனத்தையும் விமர்சனத்தையும் செய்யாமல் நேர்மையாக எதையும் மக்களுக்காக செய்ய முடியாது.

 

புலிகளின் பாசிசத் தலைமையின் கீழ் இதுதான் விடுதலை என்று நம்பி சென்றவர்கள், தியாகம் செய்தவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் அப்பாவிகள். இதுபோல் உங்களை நம்பி வந்தவர்கள், அங்குமிங்கும் போயிருந்தால் அவர்கள் குற்றவாளிகள் அல்ல, நீங்கள் தான் குற்றவாளிகள். நீங்கள் சரியாக வழிநடத்த முனைந்தீர்களா!? அவர்களை இனம் காட்டினீர்களா? இல்லை, மாறாக அதை வழிகாட்டிவிட்டு, மற்றவனை குற்றம்சாட்டுவது இழிவான மலிவான அரசியலாகும்.

 

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதும், இவர்கள் என்ன செய்தனர் என்பதும் வரலாற்றின் உண்மையாக இருக்கின்றது. அதை யாராலும் மூடிமறைக்க முடியாது. திடீர் மார்க்சியம் பேசி, புரட்சி வித்தை காட்டலாம். இன்று நேரத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப, திடீரென திடீர் மார்க்சியம் பேசுவது என்பது, பச்சையான சந்தர்ப்பவாதமாகும்;. அரசியல் ரீதியாக நீட்சியற்ற, திடீர் மார்க்சியம் என்பது அரசியல் வே~மாகும். கடந்தகாலத்தில் தங்கள் வரலாற்றை மூடிமறைத்து, மக்களை ஏமாற்றுவதாகும். வரலாற்றின் எதிர்ப்புரட்சிகரப் போக்கை புலிகள் மட்டும் பிரதிபலிக்கவில்லை, புலியல்லாத தரப்பிலும் கூட அது இணைந்தே காணப்பட்டது.

 

மக்களைச் சார்ந்த அரசியலை முன்னிறுத்தாத கடந்தகால அரசியல் நடத்தைகளும், தனிமனித வாழ்வியல் சீரழிவுகளும், திடீர் மார்க்சியம் பேசுவதால் விமர்சனம் சுயவிமர்சனமாகிவிடாது. மாறாக அது மக்களை ஏமாற்றும் புது முகமூடி.

 

பி.இரயாகரன்
22.11.2009         

 


பி.இரயாகரன் - சமர்