தமிழ் மக்கள் மத்தியில் புதுவகை அரசியல் நடவடிக்கையாக நோர்வே ஈழத்தமிழர் அவை எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. எல்லாத்தமிழரையும் பிரதிநிதித்துவம் செய்வதாக, தமிழீழ மக்கள் துயர் நீக்கப் போவதாய் இந்த அமைப்பு அறிக்கையிட்டு வருகின்றது.


குறிப்பிட்ட அரசியல் நோக்கமொன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த அமைப்பு ஈழத்தமிழர்களையும் பாதுகாக்கும் என்பது பகற்கனவே. கடந்த காலங்களில் வெவ்வேறு அரசியல் வழிகள் முயற்சி செய்யப்பட்டு, மேமாதம் தோல்வியுற்ற கோரிக்கையின் கீழ் மீண்டும் அனைவரையும் இணைக்க இயலாது. வெவ்வேறு அரசியல் உள்ள தமிழ் மக்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தும் சூழல் உருவாகாமல், குறிப்பிட்ட மாயையான நோக்கம் காட்டி இன்னும் இழுத்துச் செல்வது பிழை. இந்த நோக்கத்திற்கு நாம் வழங்கின கோடிக்கணக்கான பணத்துக்குக் கணக்கும் இல்லை.


முந்தியே உள்ள அமைப்புகளால், பணத்தால் காப்பாற்ற முடியாத தமிழ் மக்களை ஈழத்தமிழர் அவை காப்பாற்றும் என்று நாங்கள் இனி ஏமாற மாட்டோம். வட்டுக் கோட்டைக்கு வாக்களித்த மை ஈரம் காயமுன் இந்தத் தேர்தல் எதற்கு? இதில் ஆருக்கு லாபம்?


இலங்கையில் தமிழ் அரசியற்கட்சிகள் நோர்வே தமிழ்த்தேர்தலை அங்கீகரிக்கவில்லை. கம்பிவேலிக்குள் இருக்கும் மக்களும் அங்கீகரிக்கவில்லை. இன்னும் காசு சேர்க்க நடக்கும் இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்போம். மற்றத் தமிழரையும் பகிஷ்கரிக்கத் தூண்டுவோம். மக்கள் துயரில் பதவிக்கு அடிபடுபவர்களைத் தோலுரிப்போம்.
 
விழித்துக் கொண்ட
தமிழ் மக்கள் அமைப்பு.

 

தொடர்புடைய கட்டுரை:

 

புலத்துப் புலிகள் போடும் "ஜனநாயகம்", மக்களை ஏமாற்றித் தின்னும் போக்கிலி அரசியலாகும்