சில நாட்களாக சென்னையில் பெய்து கொண்டிருக்கும் கண மழையின் காரணமாக வீட்டின் குளியலறையில் குளிக்கவில்லை. நேற்று எனது நண்பருடன் நேற்றைக்குள் முடிக்க வேண்டிய‌ ஒரு முக்கிய‌ வேலைக்காக‌ காலை வெளியே கிளம்பி தெருவில் காலை வைத்தவுடன் விழுந்த முதல் சொட்டிலிருந்து முழு மழையிலும் இரண்டு பேரும் மொத்தமாக‌ நனைந்து விட்டோம். 

 

 

மழையில் நனைந்தேனும் எப்படியாவது போக வேண்டிய இடத்திற்கு போய்விடலாம் என்று வண்டியை விரட்டிக்கொண்டிருந்தோம். உடல் குளிர்ந்து நடுங்கத் துவங்கிவிட்டது அதற்கு மேலும் நகர்ந்து ஓட முடியாது என்கிற நிலையில் பற்கள் தடதடக்க உடலுக்கு கொஞ்ச‌ம் சூடேற்றிக்கொள்ள‌ ஒரு தேனீர் கடை ஓரமாக ஒதுங்கி நின்றோம்.

தேனீர் சொல்லிவிட்டு காத்திருந்தோம். சிங்கார‌ சென்னையில் மழை பெய்தால் எவ்வளவு  அசிங்கமாகிப் போகும் என்பதை ஒவ்வொரு மழைக்காலத்திலும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.  எச்சிலும், இரத்தமும்,மலமும்,மூத்திரமும், சாக்கடை  நீரும் மழை நீருடன் கலந்து, குறிப்பிட்டளவுக்கு குடி நீருடனும் கலந்து அதன் பிறகு பல‌ நோய்களையும் பரப்பி சில‌ மாதங்களுக்காவது மக்களை படுக்க வைத்து விடுகிறது. இருந்தும் இந்த கேடுகெட்ட சமூகத்துக்கு எதிராக இவர்களுக்கு கொஞ்சமும் கோபம் வர மாட்டேன் என்கிறது, தடித்த தோல்களுக்கு கொஞ்சமும் உறைக்க மாட்டேன் என்கிறதே என்று நண்பர் தனது சலிப்பையும் வெறுப்பையும் என்னிட‌ம் கொட்டினார்.

சில நாட்களாக சென்னையில் பெய்து கொண்டிருக்கும் கண மழையின் காரணமாக வீட்டின் குளியலறையில் குளிக்கவில்லைமழை லேசாக விடத் துவங்கியது, கிளம்பலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது தான் அந்தச் சிறுவனை பார்த்தோம். சாத்தப்பட்டிருந்த‌ பக்கத்து கடையின் இரண்டடி கூட இல்லாத வாசற்படிக்கு முன்பாக குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு கையில் இரண்டு பஜ்ஜியை வைத்து பிய்த்து பிய்த்து தின்று கொண்டிருந்தான். அவன் கீழே அமர்ந்து கொண்டிருந்ததால் தரையில் விழுந்த‌ மழைத்துளிகள் மண்ணில் பட்டு அழுக்கு நீராக‌ அவன் முகத்தில் தெறித்தன.

கருத்த காடு போன்ற‌ கலைந்த கேசம்,அழ‌கான உருண்டை முகம், கட்டையான உறுதியான உடலை கொண்டிருந்த‌ அவனை பார்த்த போது வான்காவின் ஞாபகம் தான் வந்தது. அதிகப்பட்சமாக சொன்னால் கூட அவனுக்கு பத்து அல்லது பதினோரு வயது தான் இருக்கும். திரும்பிய பக்கம் எல்லாம் கூவத் தேனீர் சொல்லிவிட்டு காத்திருந்தோம். சிங்கார‌ சென்னையில் மழை பெய்தால் எவ்வளவு அசிங்கமாகிப் போகும் என்பதை ஒவ்வொரு மழைக்காலத்திலும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.எச்சிலும்,இரத்தமும்,மலமும்,மூத்திரமும், சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்து, குறிப்பிட்டளவுக்குதை விட கேவலமான‌ பிழைப்புவாத சாக்கடை ஓடும் இந்த மாநகரத்தில் இந்த சிறுவன் இப்படி அநாதையைப் போல ஓரமாக ஒதுங்கி நின்று இந்த இரண்டு பஜ்ஜிகளை இவ்வளவு வெறியுடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறானே, யார் இவன் என்று விசாரிக்கலாம் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அவனிடம் பேச‌ நானும் நண்பரும் அருகில் சென்று அவனுக்கு முன் நின்றோம். அருகில் சென்ற எங்களை அன்னாந்து பார்த்தவன் மீண்டும் குனிந்து கொண்டு சாப்பிடத் துவங்கினான். பிற‌கு மீண்டும் தலையை உயர்த்தி எங்களை பார்த்தான். என்னடா தம்பி பஜ்ஜி சாப்பிடுற, மதியானம் சாப்பிடலையா என்றோம். இல்ல பழய‌ சோறு தான் குடுத்தாங்க என்றான். எங்கே குடுத்தாங்க, நீ வேலையா செய்யிற ? எங்க வேல செய்யிற ? என்றோம்.  சில நொடிகள் யோசித்தவன் பிற‌கு கையை காட்டி, இந்தா இப்பிடியே போனா ஒரு பெட்ரோல் பங்கு இல்ல அதுக்கு அந்தாண்ட ஒரு வீட்டுல வேல செய்யிறேன். யாரு உன்னைய வேலைக்கு சேத்து விட்டது, பள்ளிக்கூடத்துக்கு போகலியா ? என்றோம். இல்ல போகல, எங்க பெரியப்பா தான் சேத்துவிட்டாரு என்றவன் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தான். நாங்கள் இருவரும் அவனை சுற்றி நின்றிருந்தோம், அவன் அதே பழைய நிலையிலேயே சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். அவனை சூழ்ந்து கொண்டு நிற்பதை போல இருக்கும் எங்கள் இருவருடைய நான்கு கால்களின் ஊடாக‌ வெளியில் சுற்றும் முற்றும் நோக்கினான். பெரியப்பா எங்கே இருகார் என்று கேட்டேன். கோயம்பேடு மார்க்கெட்ல வேலை செய்யிறாரு என்றான்.

ragpicker

அந்த வீட்ல எவ்வளவு சம்பளம் தர்றாங்க என்றதற்கு, ஆயிரம் ரூவா என்றான். உங்க ஊர் எது என்றோம். கள்ளக்குறிச்சி என்றான். அதுவரை உன்னுடைய பெயர் என்ன என்பதை நாங்கள் கேட்கவே இல்லை, அடுத்ததாக அதை கேட்கலாம் என்று வாயை திற‌ப்பதற்குள் எங்கள் இருவரின் கால் கவட்டிற்குள்ளும் நுழைந்தவன் சாப்பிடாத முக்கால் வாசி பஜ்ஜியை அப்படியே சாக்கடைக்குள் தூக்கி எறிந்து விட்டு தனக்கிடையில் இரு பக்கமும் சாக்கடை நீ தெறிக்க சாலையில் வேகமாக‌ ஒரே ஒட்டமாக ஓடி விட்டான். அவன் ஓடிய ஓட்டத்தில் ஒரு வித அச்சம் தெரிந்தது. அதன் பிற‌கு அவனுடைய பின் பக்கத்தை மட்டும் தான் எங்களால் பார்க்க முடிந்தது, ஓடிக்கொண்டிருந்த அவனை ஒன்றும் புரியாமல் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம்.

அவன் எங்களை கண்டு பயந்து விட்டான். அவனை சூழ்ந்து கொண்டு நின்ற எங்களை பிள்ளை பிடிப்பவர்கள் என்று எண்ணி பயந்து விட்டான், எனவே தான் எங்களிடமிருந்து தப்பிக்கும் விதமாக ஓடி விட்டான் என்பது சற்று நேரத்திற்கு பிறகு தான்  உறைத்தது.

சின்ன வயதில் அம்மா அப்பா நமக்கும் பிள்ளை பிடிப்பவர்களை பற்றி சொல்லியிருக்கிறார்கள். இவனுக்கும் இவனுடைய பெற்றோர்கள் பிள்ளை ‍பிடிப்பவனை பற்றியும், அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். எனவே தான் ஆசையாக வாங்கிய பஜ்ஜியை கால் வாசி கூட திங்காத நிலையிலும் எங்களை கண்டு ஓடி விட்டான். உண்மையில் பிள்ளைகளை பிடிக்கிற‌ மிகப் பெரிய  கொள்ளைக்காரன் இந்த மாநகரம் தான். இந்த சமூகம் தான் மிகப்பெரிய பிள்ளை பிடிக்காரன்.

அவனோடு என்னுடைய வாழ்க்கையை  ஓட்டிப்பார்த்தேன்.  அவனுடைய இந்த வயதுகளின் போது நான் எதையும் அறிந்திருக்கவில்லை.  ஜாலியாக சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தது, பண்டிகைகள் என்றால் இனிப்பும்,  புது உடைகளும் கிடைத்தன. இருபத்து ஐந்து வ‌யது வரை நான் துன்பத்தை அறியவில்லை.ஓடி மறைந்துவிட்ட அவனை எண்ணிய‌ போது என்னுள் ஒரு வித வலியுடன் துயரம் அப்பிக்கொண்டது. அந்த சிறுவனுக்கும் அம்மா உண்டு, அப்பா உண்டு, உற‌வுகள் உண்டு, பசி எடுக்கும் வயிறும் உண்டு. எனினும் அவன் பிழைப்புவாதிகளை போல கேடுகெட்ட, மானங்கெட்ட வாழ்க்கை வாழவில்லை.

வாழ்வில் துன்பத்தையும், துயரத்தையும், வலியையும் அறிந்திராதவர்கள், தன்னுடைய வாழ்க்கையில் தான் அறியாவிட்டாலும் இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் துயரத்தை பற்றியும் கவலைப் படாத அதை புறங்கையால் ஒதுக்கித்தள்ளி விட்டு நகருபவர்கள், தன்னையும் நாகரீக‌ மனிதன் என்று கருதிக்கொண்டு தின்பதையும் அதை வெளியேற்றுவதையும் தவிர வேறு எதையும் செய்யாமல் நடமாடிக்கொண்டிருக்கும் சில அற்ப பிறவிகள், புரட்சியா அதெல்லாம் நடக்காது, அதெல்லாம் அந்த காலம், அதெல்லாம் முடிஞ்சு போச்சு,கற்பனை கதை என்றெல்லாம் பேசுகிறார்கள்.

வான்காவை போல என் மனதில் பதிந்து விட்ட அந்த சிறுவனுக்கு வயது பத்து, அவன் வங்கும் சம்பளம் ஆயிரம், இவ்வளவு மழையிலும் குளிரிலும் நாம் சொகுசாக கதகதப்பாக படுக்கைக்குள் பதுங்கிக்கொள்கிற இந்த நாட்களிலும் அவனுக்கு அந்த இதயமற்ற‌ முதலாளி கொடுத்த உணவு சில்லிட்ட‌ பழைய சோறு.IndiaChildLabor450

புரட்சி வேண்டுமா வேண்டாமா என்பதை இந்த சிறுவ்ன் தான் சொல்ல வேண்டும். இவனைப் போன்ற நிலையிலுள்ள‌ சிறுவர்களும், முதியவர்களும், பெண்களும் தான் சொல்ல வேண்டும்.

வேலா வேலைக்கு தின்பவர்கள் எப்போதும் வேண்டாம் என்று தான் சொல்வார்கள்.

http://vrinternationalists.wordpress.com/2009/11/09/பெருநகரங்களில்-அதிகரித்/