Language Selection

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது சுந்தரவாண்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த 59 பேருக்கு 2000ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவிற்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிலத்தைப் பிரித்துக் கொடுக்காமல், இம்மக்களை அலைக்கழித்து வந்தது, அதிகார வர்க்கக் கும்பல்!

 

வீட்டு மனைப் பட்டா ஒன்றிற்கு தலா ரூ.5000· வரை ஏற்கெனவே "வசூலித்து' விட்ட இக்கும்பல், உள்ளூர் ஓட்டுக்கட்சி பிரமுகர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு, மேலும் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமென மிரட்டி வந்தது.

 

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு என்று கட்சி வேறு பாடின்றி அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும்þ கிராம நிர்வாக அதிகாரி தொடங்கி வட்டாட்சியர்þ வட்டார வளர்ச்சி
அலுவலர் வரையிலான அதிகார வர்க்கக் கும்பலும் கொண்ட இக்கூட்டு களவாணிகளின் கொள்ளையை ""வீதியிலிறங்கிப் போராடுவதன் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்'' என்ற அறைகூவலோடு களமிறங்கியது.


பு.மா.இ.மு.

முதற்கட்டமாகþ பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிþ
கடந்த 14.9.09 அன்று கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதி÷ர
கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுþ பு.மா.இ.மு. இதனைக்
கண்டுþ பீதியுற்ற மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மனுவைப்
பெற்றுக் கொண்டதுடன்þ தனிப்பட்ட விசாரணைக்கும் உத்த
ரவிட்டார். எனினும்þ இரண்டு வாரங்கள் கடந்த பின்னரும்
நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்þ பகுதி
மக்களை அணி திரட்டிய பு.மா.இ.மு.வினர்þ கடந்த
01.10.09 அன்று காலை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவல
கத்தை முற்றுகையிட்டனர். இச்செய்தியறிந்து உள்ளூர் செய்
தியாளர்களும்þ தொலைக்காட்சி நிருபர்களும் குவிந்தனர்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத மாவட்ட நிர்வாகம்þ
""அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பணி செய்ய
விடாமல் தடுத்து மிரட்டியதாக'' வழக்குப் போடுவோம் என
முன்னணியாளர்களை மிரட்டிப் பார்த்தது. முற்றுகைப்
போராட்டத்தில் கலந்து கொண்ட பகுதி மக்களோþ ""அப்ப
டியானால் எங்கள் எல்லோர் மீதும் அதே வழக்கைப் போட்டு
எங்களையும் சிறையிலடை'' என உறுதியாய் நின்று அதிகார
வர்க்கத்திற்குச் சவால் விட்டனர்.

நிலைமை கைமீறிப் போனதையடுத்துþ உடனே
நிலத்தைப் பிரித்து கொடுப்பதாக வாக்குறுதி தந்துþ பகுதி
மக்களிடம் அதிகாரிகள் சமரசம் பேசினர். அதன்படி அக்.2
காந்தி ஜெயந்தி அன்றுþ அரசு விடுமுறை என்றும் பாராதுþ
வட்டாட்சியர் தலைமையில் வந்த அதிகாரிகள் 59 குடும்பங்
களுக்கும் நிலத்தைப் பிரித்துக் கொடுத்தனர்.

""அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்'' என்ப
தற்கிணங்கþ புரட்சிகர அமைப்பினரின் தொடர்ச்சியான
போராட்டங்களால் கிடைக்கப் பெற்றுள்ள இவ்வெற்றி இப்
பகுதி மக்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


— பு.ஜ. செய்தியாளர்þ கடலூர்.